கருவுற்ற பெண்கள் செய்ய வேண்டிய சோதனைகள்

இப்போது பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

1) அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் :--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1)----- 11 லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.
2)-------- 20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.
______________________________________________________________________
2) மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங் :--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1)------ கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் சோதனையும்,
2)------- கருத்தரித்த15 முதல் 21 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் சோதனையும் செய்ய வேண்டும்.
இந்த சோதனையில் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

_________________________________________________________________________

3) கேரியர் ஸ்கீரினிங் சோதனை :--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1)------பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்

எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேகம் இது எனது நண்பி அனுப்பியதை நான் உங்களுக்கு தருகிறேன்...
நண்பிகளே...எனக்கு வேறு ஒரு சந்தேகமும் உள்ளது ...அது என்னவென்றால்...கர்ப்பமானது முதல் செய்யவேண்டிய டெஸ்ட்டுகள்
என்னஎன்ன என்பதுதான் ...சொல்லுங்களேன்....காத்திருக்கிறேன்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தோழி கர்ணா

எனக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது நானும் 5 மாத கர்பமாக இருக்கிறேன் ஏற்கனவே 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது இது 3ஆவது முறை கரு தரித்து உள்ளேன் கண்டிப்பாக இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்து ஆக வேண்டுமா?

ஏற்கனவே 2 முறை அபார்ஷன் ஆனதால் மாதம் ஒரு முறை ஸ்கேன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

மேலும் ஏதாவது டெஸ்ட் எடுக்க வேண்டுமா?நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் தயவு செய்து தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் தோழிகளே!

கருதரிந்து முதல் மூன்று மாதங்களில் தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டரிய, கீழிகண்ட பரிசோதனை

VARICELLA ZOSTER VIRUS
RUBELLA IGG
CHORIONIC GONADOTROPIN TEST

இரத்தசோகையை கண்டரிய
CBC
பரம்பறை சக்கரை நோய் இருந்தால்
Fasting Glucose
GLUCOSE, 1 HOUR, GESTATIONAL DIABETES
பிறகு 27-28 வாரங்களில் மீண்டும் கீழிகண்ட பரிசோதனை எடுப்பார்கள்.

CBC
INDIRECT COOMBS- To test RH-
GLUCOSE, 1 HOUR, GESTATIONAL DIABETES
நான் 36 வாரம் கர்ப்பம். இது அனைத்தும் US எனக்கு இதுவரை எடுத்த
பரிசோதனை
இதை தவிர கருணா சொன்ன பரிசோதனையும் செய்தார்கள் எங்களின் விருப்பப்படி

எனக்கு 3முறை அபார்ஷன் ஆய்டுச்சி முதல் முறை குழந்தைக்கு1வயதுகூட ஆகவில்லை என்று நாங்களே பன்னிடோம் 2முறை தானாகவே ஆய்டுச்சி சி.எம்.சிலதான் டி.என்.சி பன்னாங்க 3வது முறை3 மாதமாகி வயிற்றில்வள்ரும் குழ்ந்தைக்கு இதயம் வளரவில்லை என்று 4 மாத்திரை கொடுத்து வயிற்றில் வைக்கச்சொன்னார் பின் அபார்சன் 2வருடங்கள் ஆகி விட்டது இபோது 2வது குழந்தை வேண்டும் எனக்கு பயமாகவுல்லது நான் இதுவரை காப்பர்டி போடவில்லை எனக்கு உங்கள் கருத்து வேண்டும் தெரிந்தவர்கள் எனக்கு சொல்லவும்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்