ஜவ்வரிசி பொரி வடாம்

தேதி: March 11, 2011

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஜவ்வரிசி --- ஒரு கப்
பொரி -- 4 கப்
பச்சை மிளகாய் விழுது -- 4 டீஸ்பூன்
புளிப்பான தயிர் --- ஒரு பெரிய கரண்டி
தண்ணீர் -- 6 கப்
உப்பு -- தேவையான அளவு


 

தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும்.
அதில் ஜவ்வரிசியை அலம்பி சேர்த்து நன்கு வேக விடவும்.
கைவிடாமல் கிளறவும்.
இல்லைனா அடிப்பிடிக்கும்.
நன்கு ஆறிய பிறகு,மிளகாய் விழுது, உப்பு,தயிர், பொரி சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக்கலவை சிறிது கெட்டியாக இருக்கும்.
கைகளால் கிள்ளி, கிள்ளீ வெய்யிலில் நன்கு காய வைக்கவும்.


வயிற்றுக்கு குளிர்ச்சியான வடாம் இது. சாம்பார் சாதமுடன் தொட்டுக்கொள்ள
மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்