ஜப்பானில் நிலநடுக்கம்

தயவு செய்து,விபரம் சொல்லுங்கள். யாருக்காவது ஜப்பான் டோக்கியோவில் வசிக்கும் கதீஜாவின் நலன் தெரியுமா?அவளும் குடும்பத்தினரும் சுகம்னு யாராவது சொல்லுங்க.ரொம்ப கவலையாக உள்ளது. மர்ழி உனக்கு தெரியுமா?

தயவு செய்து,விபரம் சொல்லுங்கள். யாருக்காவது ஜப்பான் டோக்கியோவில் வசிக்கும் கதீஜாவின் நலன் தெரியுமா?அவளும் குடும்பத்தினரும் சுகம்னு யாராவது சொல்லுங்க.ரொம்ப கவலையாக உள்ளது. மர்ழி உனக்கு தெரியுமா?

கதீஜா நலம்.இப்போது தான் அவள் தங்கைக்கு போன் செய்து தெரிந்துக்கொண்டேன்.இன்னும் இது போல எத்தனை மக்கள் அவதி பட்டுக்கொண்டு இருப்பார்கள்.இது போன்ற இயற்க்கை சீற்றங்கள் ஏதும் நகழாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

கதீஜா நலம்.எப்பாடா இப்பதான் நிம்மதி.இன்னும் யாராவது இருக்கிரார்களா? சொல்லுங்கள்தோழீஸ் எல்லோரும் நலமுடனிருக்க கூட்டு பிரார்த்தனைப்பன்னுவோம்.

கதீஜா இப்பொழுது நலமுடன் இருக்கிறது,இப்பொழுது நான் கதீஜாவிடம் பேசினேன்,மேலும் இன்னும் லேசான அதிர்வுகள் இருப்பதாகவும் சொன்னது.பீதியுடன் தான் இருக்கமுடிகிறது,உங்கள் அனைவருடைய்ய ப்ரார்த்தனை வேண்டும்
உங்கள் அன்பு
ரஸியா

தோழிகளே அட்மின் அண்ணா ஏற்கனவே ஒரு இழை ஆரம்பிச்சுட்டாங்க .

உன்னை போல பிறரையும் நேசி.

என் பெயர் சுவென் . நான் ஜப்பான் ல இருக்கேன். இப்ப கொஞ்சம் பரவா இல்லை. இன்னும் லேசான அதிர்வுகள் இருக்கு. எல்லாரும் ஜப்பான் உள்ளவங்கலுக்கு ப்ரயர் பண்ணுஙக.

கே.ஆர். மற்றும் என்னை நலன் விசாரித்த எங்களுக்காக பிரார்த்தனை செய்த தோழிகளுக்கும் மிக்க நன்றி.இப்பொழுது நிலமை கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் நியூகிளியர் ரியாக்டரால் பாதிப்பு வரும் என்று எல்லாரும் பயப்படுவதால் ஊருக்கு நிறையபேர் போய்விட்டார்கள் நாங்களும் இந்தியா வருகிறோம் டிக்கெட் எல்லாம் புல்லாக இருப்பதால் வெய்ட்டிங்கில் இருக்கிறோம். அப்பப்ப எர்த் குவேக்கால் பில்டிங்க் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது. நிம்மதியா சாப்பிட, தூங்க முடியவில்லை குழந்தைகளை வைத்துக்கொண்டு ரெம்பவும் கஷ்டமாக இருக்கு. எங்களுக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் யாருக்கும் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இறைவன் உதவி செய்யனும். ஊருக்கு போய் இந்த எர்த்குவேக்பற்றி தனி த்ரெட் போடுகிறேன். எதுவும் டைப்பண்ண கைவரவில்லை.கண்ணீர் தான் முட்டுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாகிவிட்டது வாழ்வோமா சாவோமா என்ற நிலமையில் இருந்து மீண்டு வர இன்னும் முடியவில்லை பின்னாடி பேசுகிறேன் தோழிகளே.

அன்புடன் கதீஜா.

நீஙக ஜப்பான் ல எஙக இருக்கேஙக?
suven

கதீஜா... உங்கள் மன நிலை புரிகிறது. கவலை வேண்டாம்... இறைவன் துணை என்றும் இருக்கும். உங்களுக்காகவும் அங்கு உள்ள எல்லா மக்களுக்காகவும் எங்கள் பிராத்தனைகள் எப்போதும் உண்டு. நல்லபடியாக இந்தியா வந்து சேருங்கள். தைரியமாக இருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கதீஜா !!!கஷ்டமாகத்தான் உள்ளது கடவுள் நம்மை காப்பார்...நாங்கள் கண்டிப்பாக வேண்டுகிறோம்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்