பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

விருந்தாளிகள் வந்தா ரொம்ப சந்தோசம் காலைல வந்து சாய்ந்திரம் போய்டா அருமையான வாதங்களோடு வருகிறேன்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

நடுவர் அவர்களுக்கும் , மற்ற தோழிகளுக்கும் வணக்கம்.. நான் விருந்தினர்களால் மகிழ்ச்சியே எனும் அணியில் பேச வந்துள்ளேன்..

நடுவரே இப்போழுதுதான் நம்ம கலாச்சாரம் பண்பாடு பற்றி பேசினோம்.. விருந்தோம்பல் என்பது நம் பண்பாட்டின் முக்கிய அம்சம் இல்லையா?

உறவினர்கள் வருவதால் சங்கடம் என்பது விலைவாசி எனக் கொண்டால்... கொஞ்ச நாட்கள் மட்டுமே தங்க போகிற நம் சொந்தங்களால் என்ன பெரிய செலவு ஆக போகிறது.? கொஞ்ச நாட்கள் தங்குவதாலேயே விருந்தாளி என கூறுகிறோம்.. அவ்வாறு செலவழிக்கம் பணத்தைக் கொண்டு ஒரு கோட்டை கட்ட முடியுமா? இல்லை நமக்கு ஒரு வருடத்திற்கு சோறு போட போகிறதா நடுவரே? சிறிது பணமானாலும் ஒரு சின்ன செலவுக்கு பயன்படுமே எனக் கூறக் கூடாது.. ஏன் சினிமா, விளையாட்டு, ஆடை, மேக் அப் என பல விஷயங்களுக்கு நாம் செலவு செய்வதில்லையா? தொட்ட தொன்னூறு விஷயத்திற்கும் செலவு என்பது இருக்கத் தானே செய்கிறது.. அதில் ஏன் உறவினருக்கு செலவழிக்கும் பணத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.?

உண்மையை கூற வேண்டுமெனில் நாம் பிறர் வீட்டுக்கு போகும் போது நாம் உறவினர் ஆகுகிறோம் என்பதை மறக்கக் கூடாது..

யாராவது விருப்பப்படாதவர்கள் வீட்டிற்கு சென்று தங்க வேண்டும் என நினைப்பார்களா? ஒரு இல்ல திருமணத்திற்கு போனால் கூட.. பெரியப்பா வீடுனா போலாம்.. அத்தை கொஞ்சம் முசுடு கணக்கு பாப்பாங்க.. அங்க வேண்டாம்.. அந்த சித்திக் கூட நைனைனு பேசி குடும்பத்துல பிரச்சனை கொண்டு வந்திடுவாங்க.. அதனால பெரியப்பா வீடு தான் சரி.. இல்லைனா ஹோட்டல்.. என நாம் நினைக்கிறோமா இல்லையா.. நம்மை நல்லவிதமா கவனிப்பவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என தானே எல்லாரும் நினைப்பார்கள்.. அவர்களால் என்ன பிரச்சனை வரும்? நம்மை நம்பி தானே வருகிறார்கள்..

தோழிகளே அந்த சித்தி அத்தையா நீங்கள்..? இல்லை அல்லவா?

விருந்தினர்களை தவிர்த்து நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் போது, திடீரென நமது வீட்டில் ஒரு பிரச்சனை, கெட்ட காரியம் எனில் ஓடி வந்து அவர்கள் உதவும் போது ஒரு வித குற்ற உணர்ச்சி கண்டிப்பாக இருக்கும் நடுவரே..

ஏன்.. தள்ளி வெளி நாடுகளில் வசிப்பவர்கள் கெட் டு கெதர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில்லையா? தன் வீட்டின் அருகில் இருப்பவர்களை அழைத்து அறிமுகம் செய்து கொண்டு என எத்தனை உள்ளது.. மற்றவர்களை சார்ந்து இருப்பது அவசியம் . அனைவரது சப்போர்ட் வேண்டும் என நினைக்க வேண்டும் ...

ஊர் கூடித் தானே தேர் இழுக்க முடியும்...

கணவன் மனைவி இடையே அல்லது அப்பா பிள்ளை இடையே பிரச்சனை என்றால் உறவினர்கள் வரும் போது அவர்கள் வேறு வழியில்லாமல் பேச நேரிட்டு பிரச்சனையே தீர்ந்து போகுமளவு நடக்கும் நிகழ்ச்சி எல்லாம் நான் பார்த்திருக்கிறேன் நடுவரே...

சில நாட்கள் தங்க வரும் உறவுகள் கண்டிப்பாக தகவல் சொல்லிவிட்டு தானே வருவார்கள்.. அவர்களை முகம் வாடாது சமாளிக்க முடியாவிட்டால் இனி நான் என்ன கூறுவது நடுவரே?

சமைக்கும் போது கொஞ்சம் மிச்சம் இருக்கும்படி அந்த காலத்தில் சமைப்பார்கள்.. ஏன் எனக் கேட்டால் திடிரென யாராவது உறவினர்கள் வந்தால் வேண்டுமல்லவா எனக் கூறுவார்கள்.. சரி அதை நாம் செய்யமுடியவில்லை எனில் எப்படி நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தரப் போகிறோம்? கூறுங்கள் நடுவரே? பட்டி என்பதால் தான் மனதில் உள்ளதை கூறுகிறேன்.. பிள்ளைகளுக்கு உறவினரால் சங்கடம் என மனதில் விதைக்கமாட்டேன் எனக் கூறுவார்களானால் . என் வாதம் சரியாகுமா? ஆகாதா?

நமக்கு சரிப்படாத உறவானாலும்.. அவர்கள் எது பேசினாலும் நாம் சிரித்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்கிறோமே? அதில் தெரியவில்லையா நமது பெருமை?

திருக்குறளை நான் கோடிட்டு காட்டவில்லை.. ஆனால் விருந்தோம்பலுக்கு ஒரு அதிகாரமே உள்ளது என்பதை நினைவுக்கு கொண்டு வருகிறேன்..

எதிரணி தோழிகள் கூறுவது போல்.. நான் இது தான் சாப்பிடுவேன், இப்படி தான் இருப்பேன்.. அல்லது பாத் ரூம் சரியாக பயன்படுத்தாது என பல பிரச்சனை வந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும் நடுவரே.. அவ்வாரு நம்மிடம் நடந்துக் கொள்ளும் உறவினர்கள் குணத்தின் அடிப்படையியிலேயே கோளாறு கொண்டிருப்பவர்கள்.. அவர்களை நாம் திருத்த அவர்கள் நம் பிள்ளைகள் இல்லையே.. அதற்காக சொந்த பந்தமே இம்சை எனக் கூற முடியுமா? நம் உறவினர்கள் என்பதால் அவர்கள் அவ்வாறு நடந்துக் கொள்கிறார்களா என்ன? அவர்களால் அவர்கள் சொந்த வீட்டில் கூட பிரச்சனை இருக்கலாம்..

விருந்தாளிகள் நமது வீட்டிற்கு ஒரு ஒரு உயிரோட்டத்தை கொடுக்கிறார்கள் நடுவரே.. ஒரு ச்சேஞ்சுக்காகனு சொல்வோமே அது போல ;)

மீண்டும் வருவேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவர் அவர்களே, கல்யாணத்திற்கு முன்னாடி விருந்தினர் வந்தா தூங்காமல் அரட்டை அடிப்போம். சந்தோஷமாக இருக்கும். ஆனா, இப்ப அப்படி இல்லை. சரி அணியை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு வருகிறேன். நன்றி.

விருந்தோம்பல் நம்ம கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று அதை நாங்களும் ஒத்துகிறோம்,அதே சமயம்,விருந்தும்,மருந்தும் மூணு நாள் தான் என்று பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க ஏன்??அதுக்கு மேல் ஒரு வீட்டில் தங்ககூடாது என்பத்றகாக தான்.
********** கொஞ்ச நாட்கள் மட்டுமே தங்க போகிற நம் சொந்தங்களால் என்ன பெரிய செலவு ஆக போகிறது.? கொஞ்ச நாட்கள் தங்குவதாலேயே விருந்தாளி என கூறுகிறோம்.. அவ்வாறு செலவழிக்கம் பணத்தைக் கொண்டு ஒரு கோட்டை கட்ட முடியுமா? இல்லை நமக்கு ஒரு வருடத்திற்கு சோறு போட போகிறதா நடுவரே********************

ஒரு நபர் வருமானத்தில் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தை எடுத்து கொள்ளுங்கள்,வீட்டு வாடகை,பிள்ளைகள் ஸ்கூல் பீஸ்,மருத்துவ செலவு அது இது என்று அவங்களுக்கே ஆயிரம் செலவு இருக்கும் போது,விருந்தினர்கள் என்பது கூடுதல் சுமையாக தான் இருக்கும்,இப்போ காய்கறி ,பால் விக்கும் விலையில் அவங்களுக்கு கொஞ்சம் தண்ணிர் அதிகமா விட்டு சமாளிப்பாங்க,அதையே கெஸ்ட்க்கு குடுக்க முடியுமா?/அட்ஜெஸ்ட் பண்றவங்களை விட குறை சொல்றவங்க தான் அதிகம்.
வெளிநாடுகளில் கெட் டுகெதர் நடக்கும் போது பெரும்பாலும் ப்ரண்ட்ஸ்தான் வருவாங்க,ஆளுக்கொரு வேலையை பகிர்ந்துக்குவாங்க,ஆனால் உறவினர்கள் வரும் போது நம்மள தான் பெண்ட கழட்டுவாங்க.

உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும் என்பது என் வாதம்.

பட்டி மன்றத்தில் நல்ல பல கருத்துகளை சொல்லும் தோழர் தோழிகளே இன்று அரட்டை இலும் நமது பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் பற்றிய தலைபில் அரட்டை இல் ஆரம்பித்து உள்ளேன் .இங்கும் உங்களது கருத்துகளை பதிவு இடுமாறு அன்புடன் அழைப்பது உங்கள் தோழர் சௌமியன் .
இங்கு நான் வேண்டுகோள் விட்டதை தவறாக நினைக்க வேண்டாம் .உங்களின் நல்ல ஆலோசனைகள் பதிவு இடபட்டால் அனைவரும் நோய் அற்ற வாழ்வை பெற இயலும் என்பதால் இங்கு பதிவு இட்டு உள்ளேன்.

நடுவர் அவர்களே தோழிகள் சொன்ன மாதிரி விருந்தோம்பல் என்பது நம்ப கலாச்சாரம் தான் அதுக்காக தானே திருவிழாவுக்கு நாங்க போய்டு சொந்தபந்தங்கலயேல்லாம் அழைச்சோம் எல்லோரும் வருவாங்க எப்படி குந்சா நெஞ்சா யெல்லம் இழுதுக்குனு ஒரு வாரதுக்கு முன்னடியே வந்து 2 நாளைக்கு அவங்க வாங்கிட்டு வந்த பண்டங்கலயேல்லம் சாப்ட்டுட்டு ஜாலியா ஊர சுத்தி பாக்க கெளம்பிடுவாங்க அவங்க வரதுக்குள்ள சாப்பாடு ரெடி பன்னனும்
கடா வெட்டி பொங்கல் எல்லம் வெச்சி ஒரு வழியா திருவிழா முடிஞ்சிடும் வந்த விருந்தாளி சொல்லாமகொள்லாமகுட கெளம்பி போய்டுவாங்க போய்டு போன் பன்னுவாங்க பாருங்க உன் பொண்டாட்டி எங்கல சரியாவே கவனிக்கல டா அவ்லோ பெரிய கடா வெட்டி ஒரு பீஸ்குட என் இலைல விழல எல்லாம் எலும்புதான் கறியெல்லாம் அவங்க அம்மா வீட்டு ஜனத்துக்குதான் விழுது விழுந்து கவனிச்சா போதுமா எங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள பிரச்சன கெலப்பிவிடரதுக்கு
போதும்டா சாமி விருதாளிகள் வந்து படுத்தர பாடு ஒரு வாரமா சரியா சாப்டவும் முடியாம தூங்கவும் முடியாம நம்ம குழ்ந்தைய கவனிக்காம புருசன கவனிக்காம தேவயா இப்படி ஒரு விருந்தினர்கள் என்று நடுவர் யோசித்து முடிவு சொல்ல தேவயேயில்லஎன்னோட வாதத்துலயே இருக்கு
சொந்த செலவுல சூனியம் வசிக்கரதுனு கேள்விபட்டுஇருக்கீங்களா நடுவர் அவர்களே இதுதான் அது
தவறு ஏதேனும் இருந்தால் மண்ணிக்கவும்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

நடுவர் அவர்களுக்கு என்னுடய வணக்கம் நான் விருந்தினர்களால் சந்தோசமே என்று பேச வந்துள்ளேன்....

நடுவர் அவர்களே உறவினரின் வருகை என்றென்றும் சந்தோசம்தான் அவர்கள் எத்தனை நாட்கள் இருந்தாலும் சங்கடம் ஆகாது .

////ஒரு நபர் வருமானத்தில் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தை எடுத்து கொள்ளுங்கள்,வீட்டு வாடகை,பிள்ளைகள் ஸ்கூல் பீஸ்,மருத்துவ செலவு அது இது என்று அவங்களுக்கே ஆயிரம் செலவு இருக்கும் போது,விருந்தினர்கள் என்பது கூடுதல் சுமையாக தான் இருக்கும்,இப்போ காய்கறி ,பால் விக்கும் விலையில் அவங்களுக்கு கொஞ்சம் தண்ணிர் அதிகமா விட்டு சமாளிப்பாங்க,அதையே கெஸ்ட்க்கு குடுக்க முடியுமா?////

நடுவர் அவர்களே என்னதான் நடுத்தர குடும்பமாக இருக்கட்டும் எத்தனை செலவுகள் இருந்தாலும் வீட்டுக்கு வருகிரவர்களை வரவேற்று உபசரிப்பதுதானே நம் தமிழர் பன்பாடு அப்படி இருக்க அய்யோ அவங்க வந்தா சங்கடம் என்று இப்போதைய தலைமுறையே நினைத்தால் இனி வரபோகும் தலைமுறையின் நிலை எப்ப்டி இருக்கும்னு யோசித்து பாருங்க நடுவரே!!!!
(உதாரணத்துக்கு)நாம குடிக்கரது கூழாக இருந்தாலும் சரி கஞ்சியாக இருந்தாலும் சரி வீட்டுக்கு விருந்தினர் வராங்கன்னா அதயே அவங்களுக்கும் கொடுத்து கூடவே ஒரு அப்பளமோ,ஊருகாயோ வைத்து குடுத்தால் முடியாதுன்னா சொல்லபோறாங்க நன்றாக உபசரித்து அனுப்புவதுதான் நம்முடைய கலாச்சாரமே அப்படி இருக்க இது எப்படி சங்கடம் ஆகும் சொல்லுங்க, சங்கடமாவதும் சந்தோசமாக மாற்றிகொள்வதும் நம் கையில்தான் இருக்கு நடுவர் அவர்களே.

////உண்மைல பார்த்தீங்கன்னா அவங்க வீட்ல பச்சதண்ணி பால்ல கூட கடுங்காப்பி போட்டு குடிக்க கணக்கு பார்ப்பாங்க. ஆனா விருந்தாட போற இடத்துல அளப்பாங்க பாருங்க.. அய்யோ சாமி அவங்க அலப்பற தாங்காம அய்யனார் சாமியும் எழுந்து ஓடிடுவார். அந்த அளவு விடுவாங்க.... நான் பால் தான் குடிப்பேன். நைட்ல பச்ச பழம் தான் சாப்புடுவேன். முட்டை இல்லாம ஒருவாய் சாதம் கூட தொண்டைல இறங்காது. ப்ரூ காப்பி தான் குடிப்பேன் அப்படி இப்படின்னு...////

நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள்,நம் குடும்ப சூழல் அறிந்தவர்கள்,முக்கியமாக நம் குடும்பத்திற்க்கு நெருக்கமானவர்கள்தான் நம் வீட்டுக்கு வந்து தங்குவார்கள் அப்படி இருக்க இது சாப்பிடமாட்டேன் அது சாப்பிடமாட்டேன்னு நிச்சயம் சொல்லவே மாட்டாங்க நடுவர் அவர்களே....
இன்னும் நிறைய இருக்கு நடுவர் அவர்களே மீண்டும் வருகிறேன்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நடுவர் அவர்களே!

"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இது கௌரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும்" என்கின்ற பாட்டுத்தான் எனக்கு ஞாபகம் வருகின்றது. நம் இந்திய கலாச்சாரதில் விருந்தோம்மலும் ஒன்று! அது கசப்பென்று யாராவது சொல்ல முடியுமா?

///ஊருக்கு போய் வேற யோசிச்சு யோச்சி குற்றப்பட்டியல தயார் பண்ணி இன்லெண்ட் லெட்டர்ல எழுதி அனுப்பி வைப்பாங்க, அட்ரஸ் எழுதற இடத்துல கூட பேலன்ஸ் வைக்காம நுணுக்கி நுணுக்கி குட்டி குட்டியா எழுதி குறைய கொட்டியிருப்பாங்க////

அவர்கள் எதை வாங்கி வந்தால் நமக்கென்ன! விருந்தாளிகள் வந்தால் நாம் அவர்களை நல்ல முறையில் கவனித்தால் அவர்கள் ஏன் நம்மை புறம் சொல்ல போறாங்க! பாவம் எதிரணி தோழி ரொம்ப அனுபவம் பட்டிருப்பார்கள் போல.

நடுவரே இப்போதுள்ள சுழலில் விருந்து என்பது ரொம்ப இருப்பது கிடையாது. அவசர காலகட்டத்தில் கெட் டு கெதர் பார்ட்டி நைட் டின்னர் போன்று நாகரீங்கம் என்கிற புது விதமான விருந்துகள். இதில் ஒருவர் வீட்டிற்கு போய் தங்குவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது.

தினமும் நாமே செய்யும் சாப்பாட்டை நாமே சாப்பிட்டு அன்றாட வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாதத்தில் ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை நம் உறவுகள் நண்பர்களை கூப்பிட்டு அவர்களுக்கு பிடிச்ச உணவுகளை சமைத்து அவர்களுக்கு பரிமாறி அவர்களோடு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டு விளையாடி ஐயோ அந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. எப்பொழுதும் தனியாக இருக்கும் நமக்கு நம் விருதாளிகள் தான் புது ஆனந்தம்.

///அதாவது ஓரளவு சொந்தங்கள் சூழ தனிமை என்பதே இல்லாமல் இருக்கும் போது, அந்த விருந்தினர் வருகையை எதிர்கொண்டு பாருங்க. அப்ப இருக்கு சங்கதி உங்களுக்கு.///
தனியாக இருக்கும் போதே விருந்தினர் என்றால் சந்தோசம் என்று சொல்கிறோம். கூட்டமாக இருந்தால் சொல்லவே வேண்டாம் கலை கட்டும். தனியாக இருந்தால் வேலைகள் செய்வது கொஞ்சமாவது கஷ்டமா இருக்கு ஆனால் இதுவே கூட்டு குடும்பமாக இருந்தால் வேலைகளும் குறைவு அரட்டை சந்தோசமோ அதிகம். அதை அனுபவித்ததால் சொல்கிறேன்.

///நீங்க சாப்டீங்களா, சாப்பிடலயா? உங்களுக்கு இருக்கா? இல்லையா? அதை பத்தி தெரிஞ்சிக்கவும் பிரியப்பட மாட்டாங்க. சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு உங்க வீட்லயே உட்கார்ந்துட்டு உங்களையே சாப்பிட ஒரு முறை கூப்பிடுவாங்க. அப்புறம் அவங்க வேலைல கண்ணும் கருத்துமா இருப்பாங்க.////
விருதாளிகள் நம்மை ஏன் கவனிக்க வேண்டும் அவர்களை கவனிக்க வேண்டியதுதானே நம் வேலை. எதற்கு அவர்கள் வருகிறார்கள் நம் வீட்டில் நன்றாக உபசரிப்பார்கள் என்று தான் வருகிறார்கள் வந்தவர்களை நல்ல முறையில் கவனித்து அவர்களுக்கு எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டியது நாம் பொறுப்பு. வீட்டிருக்கு வந்தவர்கள் நம்மை கவனிக்கவில்லை என்று மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டால் அது நாகரிகமாக இருக்காது. ஒருவர் ஒருத்தர் வீடு தேடிவந்தால் அதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கு. அவர்கள் வீட்டுக்கு போனால் நமக்கு மரியாதையை கிடைக்கும். நன்றாக உபசரிப்பார்கள். நல்ல முறையில் வரவேற்பார்கள் என்று நினைப்பார்கள். இதுவே சுடுமூஞ்ஜாக இருந்தால் அந்த வீடா ஐயோ வேண்டவே வேண்டாம் என்று சொல்வார்கள். ஆகவே வரும் விருந்தினரை நல்ல முறையில் கவனித்து அவர்களை சந்தோசமாக வைத்துக்கொண்டால் அவர்களும் சந்தோசமாக இருப்பார்கள் நாமும் சந்தோசம் அடைவோம்.

நடுவர் அவர்களே!

விருந்தாளியின் வருகை என்றும் சந்தோசமே தவிர சங்கடம் ஆகாது என்று சொல்லி விடை பெறுகிறேன். திரும்பி வருவேன். (எழுது பிழை இருந்தால் மன்னிக்கவும்)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அருமையான தலைப்பு….சூப்பரான வாதங்கள்..

அவ்வப்போது வந்து போகும் நெருங்கிய உறவினர்கள் (விருந்தினர்கள்.).

மாமா,அத்தை,பெரியம்மா,பெரியப்பா,சித்தி,சித்தப்பா இப்படி சில உறவுகள்

அப்படி வந்துபோகவேண்டிய விருந்தினர்கள் வீட்டினராய் மாறி அதிகாரம்
செலுத்துவதும் எல்லாவற்றுக்கும் நம் பர்ஸையே எதிர்பார்ப்பதும் ,

கணவன்,மனைவிக்குள் சண்டை மூட்டுவதும்,சக்கையாய் வேலை வாங்கி

வக்கணையாய் சமைத்து போட சொல்வதும் அதை சாப்பிட்டுவிட்டு

பூதக்கண்ணாடி போட்டு இது ஏன் அப்படி அது ஏன் இப்படி ? என

தொணதொணப்பதும் …………??????

இல்லாதவரை விருந்தாளிகள் நமக்கு சந்தோசமே

நண்பர்களையும் விருந்தினர் லிஸ்ட்ல எடுத்துகிட்டா சிலபேர்

எல்லாநண்பர்கள் வீட்டிலும் வந்து தங்கி போக ஆசைப்படுவாங்க…ஆனா

அவர்கள் வீட்டுக்கு யாரும் போவதை முடிந்தவரை தவிர்த்து விடுவாங்க

நம்ம வீட்டில வந்து ஒருநொடி பொழுதில் எல்லாத்தையும்

அலங்கோலமாக்கிடுவாங்க

அவங்க பிள்ளைகள் என்ன அட்டகாசம் பண்ணினாலும் ஒன்றும் கண்டிக்காமல்

….”என் பிள்ளைகள் படு சுமார்ட்..எப்பவும் இப்படித்தான் துறுதுறுன்னு

இருப்பாங்கன்னு “

பில்டப் செய்பவர்கள் இல்லாதவரை விருந்தாளிகள் நமக்கு சந்தோசமே :-)

இது போன்ற நிறைய "இல்லாதவரை" கள் "இருக்கும்வரை" விருந்தாளிகள்

சங்கடமே :(

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//உறவினர்கள் வருவதால் சங்கடம் என்பது விலைவாசி எனக் கொண்டால்... கொஞ்ச நாட்கள் மட்டுமே தங்க போகிற நம் சொந்தங்களால் என்ன பெரிய செலவு ஆக போகிறது.? கொஞ்ச நாட்கள் தங்குவதாலேயே விருந்தாளி என கூறுகிறோம்.. அவ்வாறு செலவழிக்கம் பணத்தைக் கொண்டு ஒரு கோட்டை கட்ட முடியுமா? இல்லை நமக்கு ஒரு வருடத்திற்கு சோறு போட போகிறதா நடுவரே?//

நடுவர் அவர்களே, விருந்தாளிகள் வருகை வசதியான குடும்பத்தில் நிகழ்ந்தால் பரவாயில்லை அன்றாட வயிற்று பிழைப்புக்கு தகிடதத்தும் போடும் அடிமட்ட குடும்பத்திலோ, அல்லது மாத பட்ஜெட்டில் குடும்பத்தை ஓட்டும் மிடில் கிளாஸ் மாதவன் குடும்பத்திலோ நிகழ்ந்தால் எப்படி இருக்கும். நான் விருந்தாளிகளே கூடாது என்று சொல்ல மாட்டேன். அடிக்கடி வரும் அழையா விருந்தாளிகளை சொல்கிறேன்.அவர்களுக்கு செலவழிக்கும் பணத்தில் கோட்டை கட்ட முடியாது, மாறாக குடும்ப பெண்ணின் காதில், மூக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் பொட்டு தங்கமும் மார்வாடி கடையில் இந்தி கற்க மட்டும் மல்ல இந்தி டிகிரி வாங்கவே போயிருக்கும். ஏனென்றால் அது நிரந்தரமாக நீண்ட வருடங்கள் அங்கேயே தான் இருக்கும்.இதுபோன்ற அடுத்தவர் கஷ்டம் புரியாத விருந்தாடல் தேவையா?

//தொட்ட தொன்னூறு விஷயத்திற்கும் செலவு என்பது இருக்கத் தானே செய்கிறது.. அதில் ஏன் உறவினருக்கு செலவழிக்கும் பணத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.?//

நடுவரே, தொட்ட 90 விஷயத்திற்கு நாம் செலவழித்துக் கொள்வது நம் பணத்தை தான். விருந்தாளிகள் பணத்தை அல்ல. நீங்கள் செய்யும் நல்ல விஷயங்கள் அத்துனையும் சில நாட்கள் மட்டுமே அவர்கள் நினைவில் இருக்கும். ஏதாவது சிறு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டால் அத்தனையும் மறந்து போகும். இப்படி பட்ட மனிதர்களுக்காக உங்கள் ஆசாபாசங்களை துறந்து செலவு செய்ய வேண்டுமா? நீங்கள் செய்தவற்றிற்கு அவர்கள் பிரதிபலன் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை தூற்றாமல் இருந்தாலே போதுமே. இதுக்கு தான் ஒருபழமொழி ரெடியா இருக்கு "கடன்பட்டும் பட்டினி ; கல்யாணம் பண்ணியும் சந்நியாசி" :)

//உண்மையை கூற வேண்டுமெனில் நாம் பிறர் வீட்டுக்கு போகும் போது நாம் உறவினர் ஆகுகிறோம் என்பதை மறக்கக் கூடாது..//

என் அன்பான எதிரணி தோழியே, உங்களுக்கு அந்த சிரமத்தை அவங்க தரவே மாட்டாங்க. ஏன்னா, விருந்தாடல் ஒன்வே டிராபிக் அவங்க மட்டும் தான் வருவாங்க. உங்களை அவங்க வீட்டுக்கு போற சந்தர்ப்பத்தை உருவாக்கி தரவே மாட்டாங்க :)அவங்க எம்புட்டு சவுகரியமா உங்க வீட்ல இருந்திருப்பாங்க. அதே சவுகரியத்தை நீங்க அவங்க வீட்ல எதிர்பார்க்ககூடும் இல்லையா? அதனால உசாரா எஸ்கேப் ஆய்ருவாங்க.

//யாராவது விருப்பப்படாதவர்கள் வீட்டிற்கு சென்று தங்க வேண்டும் என நினைப்பார்களா? ஒரு இல்ல திருமணத்திற்கு போனால் கூட.. பெரியப்பா வீடுனா போலாம்.. அத்தை கொஞ்சம் முசுடு கணக்கு பாப்பாங்க.. அங்க வேண்டாம்.. அந்த சித்திக் கூட நைனைனு பேசி குடும்பத்துல பிரச்சனை கொண்டு வந்திடுவாங்க..//

உறவுகள்ல இளிச்சவாய்னு பேர் எடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க (எங்கள மாதிரி) அந்த மாதிரி ஆளுங்க வீடா பார்த்து தான் போவாங்க. பிச்சைக்காரன் கிட்டயே பிச்சை எடுக்க முடியுமா? அதனால தான் இவங்கள மாதிரியே இருக்க சிடுமூஞ்சி சித்தி வீட்டுக்கோ, நைநைன்னு பேசி சண்டை போடும் அத்தை வீட்டுக்கோ போறதில்ல. "பாம்பின் கால் பாம்பறியும்".

//தோழிகளே அந்த சித்தி அத்தையா நீங்கள்..? இல்லை அல்லவா?//

சே..சே நாங்கலாம் ரெம்ம்பப நல்லவங்க. வந்தவங்கள கவனிச்சு, கவனிச்சே இப்ப கவனிப்பாரற்று இருக்கறவங்க. எங்களுக்கு தான் இந்த மாதிரி சித்தியும், அத்தையும் அதிகம் :(

//திடீரென நமது வீட்டில் ஒரு பிரச்சனை, கெட்ட காரியம் எனில் ஓடி வந்து அவர்கள் உதவும் போது ஒரு வித குற்ற உணர்ச்சி கண்டிப்பாக இருக்கும் நடுவரே..//

எதிரணி தோழியே இதிலென்ன குற்ற உணர்ச்சி இருக்க போகிறது? நீங்கள் அவர்களை நன்றாக கவனித்தால் தான் அவர்கள் உங்களுடைய கெட்ட காரியங்களில் உதவி செய்வார்கள் என்றால் அது உறவு அல்லவே.. வியாபாரம் என்றுதானே பொருள் ஆகும். கஷ்டநேரத்தில் உதவுவது தானே உறவுகளின் பெருமை. அது நீங்கள் அவரை நல்லபடியா கவனித்திருந்தாலும் சரி, கவனிக்காவிட்டாலும் சரி.பிரச்சனையை இவர்கள் சரி செய்வார்களா? நல்ல ஜோக் தான் சொன்னீங்க. இருக்குற சின்ன பிரச்சனையையும் கிளறி கிளறி பெருசாக்கிட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க. இவங்க தலையிடாம இருந்தாலே சுமூகமா முடிஞ்சிருக்கும். இன்னைக்கு குடும்பங்கள்ல பார்த்தீங்கன்னா பிரச்சனை முற்றுவதற்கு முக்கால் பங்கு காரணமே இந்த விருந்தாளி உறவுகள் தான்.

//தன் வீட்டின் அருகில் இருப்பவர்களை அழைத்து அறிமுகம் செய்து கொண்டு என எத்தனை உள்ளது.. மற்றவர்களை சார்ந்து இருப்பது அவசியம் . அனைவரது சப்போர்ட் வேண்டும் என நினைக்க வேண்டும் ...

ஊர் கூடித் தானே தேர் இழுக்க முடியும்...//

நீங்கள் சொல்வது சரிதான். நமக்கு அனைவரது சப்போர்ட்டும் தேவை தான் முக்கியமாக உறவினரல்லாத நண்பர்கள், அக்கம் பக்கத்தினர். ஊர்கூடி தான் தேர் இழுக்க முடியும் உறவுகள் கூடினால்....

//கணவன் மனைவி இடையே அல்லது அப்பா பிள்ளை இடையே பிரச்சனை என்றால் உறவினர்கள் வரும் போது அவர்கள் வேறு வழியில்லாமல் பேச நேரிட்டு பிரச்சனையே தீர்ந்து போகுமளவு நடக்கும் நிகழ்ச்சி எல்லாம் நான் பார்த்திருக்கிறேன் நடுவரே...//

நடுவர் அவர்களே, எதிரணி பொண்ணு உலகம் புரியாத சின்னப்பொண்ணா இருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வையுங்க. என்னாது, மகனுக்கும், அப்பாவுக்கும் இடையே இருக்கும் உட்பூசலை இவங்க தீர்த்து வைக்கறாங்களா? பையனை தனியா கூப்ட்டு அப்பாவுக்கு எதிரா செயல்பட வைப்பாங்க. அப்பாகிட்ட பையனோட கேரக்டரை பத்தி ஏடாகூடாமா சொல்லி, அப்பா - பையனுக்கு நடுவுல நிரந்தர விரிசலை ஏற்படுத்திட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க. இந்த சிறு சண்டைக்கு முன்னாடி அப்பாவும் - பையனும் ஊர்மெச்சும் விதத்தில் இருந்திருப்பார்கள். அதை எப்படி கெடுப்பது என்று இந்த உறவுகள் ஏற்கனவே பண்ணின ப்ளானை சமயம் வரும்போது பயன்படுத்திக் கொள்வார்கள்.கணவன் - மனைவி பிரச்சனை என்றால் அவர்களுக்கு தகுந்த மாதிரி போட்டு கொடுத்து அவர்கள் திரும்ப சேர்ந்து வாழ முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்படுத்தி விட்டு செல்வார்கள்.

//சில நாட்கள் தங்க வரும் உறவுகள் கண்டிப்பாக தகவல் சொல்லிவிட்டு தானே வருவார்கள்.. அவர்களை முகம் வாடாது சமாளிக்க முடியாவிட்டால் இனி நான் என்ன கூறுவது நடுவரே?//

வரும்போது 4 நாள் தங்குற திட்டத்தோட தான் வருவாங்க. ஆனா எப்ப கிளம்புவாங்கங்குறது தானே முக்கியம். அது அந்த கடவுளுக்கே தெரியாது. இந்த மாதிரி பண்றவங்க போன் பண்ணிட்டு வந்தா என்ன? பண்ணாம வந்தா என்ன? நம் அறுசுவையில் என் அன்புக்குரிய தோழி ஒருவருடன் நான் எப்போது சாட்டில் பேசினாலும் சரி சமையலில் பிசியாகவே இருப்பார். என்ன காரணம் என்று கேளுங்கள். விருந்தாளிகளுக்காம். அதுவும் குடும்பத்தோடு வந்து தங்குவார்களாம். வியாபார விஷயத்திற்காக. எத்தனை நாட்கள் என்று கேட்கப்படாது. எத்தனை மாதம் என்று கேட்க வேண்டும்? எப்போது கேட்டாலும் சமையல் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். வந்திருப்பவர்கள் ஒருவேலையையும் அசைக்க மாட்டார்களாம். பத்தாததற்கு டிவி ஒரு நாள் முழுக்க இடைவேளை இன்றி ஓடிக்கொண்டே இருக்கும். ஃபேனும் அப்படியே. இதை பார்த்தால் இங்கிதக்குறைவாக தோன்றவில்லையா நடுவரே?

நடுவர் அவர்களே, வரும் விருந்தாளிகள் துணிப்பையை வைத்து அவர்கள் எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்று கணிக்க முடியாது. உதாரணமாக சிறிய பை என்றால், ஆஹா, இவர் 2 நாள் தங்கிவிட்டு போய்விடுவார் என்று நீங்கள் சந்தோஷப்படமுடியாது. அடுத்து வரும் நாட்களில் உங்கள் நினைப்பில் மண் தான் விழும். ஏனென்றால் வரும் விருந்தாளி படா உசார் பார்ட்டி. கழுதைக்கு போகும்போதும் சுமை வரும்போதும் சுமையா என்று நினைத்து தான் 2 செட் மட்டும் துணிமணிகளை கொண்டு வந்திருப்பார். அதையே துவைத்து துவைத்து ஒரு மாதம் வரைக்கும் கட்டிக் கொள்வார். இப்போது புரிகிறதா? இந்த மாதிரி ஆளுங்க டேஞ்சர். எப்ப கிளம்புவாங்கன்னே தெரியாது.

அடுத்து, பெரிய பை கொண்டு வர்றவங்க. இவங்களோட பையை முதல்ல பார்த்து பயந்திருப்போம். ஆனால் போக போக உங்களை சந்தோஷப்படும் விதத்தில் தான் வைத்திருப்பார்கள். இரண்டொரு நாள் இருந்துவிட்டு நாசூக்காக கிளம்பி விடுவார்கள்.

//விருந்தாளிகள் நமது வீட்டிற்கு ஒரு ஒரு உயிரோட்டத்தை கொடுக்கிறார்கள் நடுவரே//

விருந்தாளிகள் நம் உயிரைத்தவிர மற்ற அனைத்தையும் எடுத்துவிட்டு தான் செல்கிறார்கள் :(

மீண்டும் புலம்ப வருவேன் !

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்