பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

சந்தோசமே

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் தான் என கூறுவது,-------அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கூறுவது போல.. அந்த பழமொழியானது விருந்தினரை மட்டும் குறிப்பது அல்ல.. எல்லாவித விஷயத்திலும் நமக்கென ஒரு எல்லை வேண்டும் எனக் குறிப்பிட.. விருந்தை மட்டுமா கூறியுள்ளனர்.. மருந்தையும் தானே கூறியுள்ளனர்.. அப்போ மூனு நாளுக்கு மேல மருந்து எடுக்க கூடாதா? அப்பா லைஃப் லாங்க் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை என்ன சொல்வது.. அதனால் அந்த பழமொழி பொதுவாக எல்லா விஷயத்திற்கும் சொல்லப்பட்டது..

தோழி கோட்டை கட்ட முடியுமா என்ற வரியை குறிப்பிட்டு காட்டியுள்ளார்------------ அதற்கு கீழே நான் குறிப்பிட்ட வரியை பார்க்கவில்லை போலும்.. நமக்கென இருக்கும் கடமையை நாம் செய்து தான் தீர வேண்டும்.. அதற்காக வீட்டிற்கு வரும் விருந்தினரால் தான் செலவு எனக் கூற கூடாது..

ஏங்க கெட் டு கெதர் அல்லது விருந்துக்கு வரும் நண்பர்கள் உதவுகிறார்கள----------ஆனால் உறவுகள் உதவுவதில்லையா? இதையே எங்கள் அணியினரும் உல்டாவாக சொல்ல முடியுமே.. எடுத்துக் கட்டி வேலை செய்யும் ஒரு உறவுக் கூட உங்களிடம் இல்லையா? இது அநியாயம்ங்க..

சொந்த செலவுல சூனியம்------- எப்படிங்க உங்களால இப்படி சொல்ல முடியுது.. நான் ஆரம்பத்திலேயே கூறியது போல.. நம் உறவினர் என்பதால் அவர் அப்படி அநாகரிகாமாக நடந்திருக்க மாட்டார்.. அவர் குணத்திலேயே அப்படிப்பட்டவராக இருப்பார்.. உங்கள் வீட்டிற்கு வந்தவரிடம் இன்முகத்துடன் நடந்துக் கொள்ள வேண்டியது யார் பொறுப்பு?

விருந்தினர்கள் இல்லாதவரை சந்தோசம---------விருந்தினர்களிடம் நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் நடக்கத் தெரியாவிட்டால் சங்கடமே.. நம் வீட்டில் வந்து நம்மையே நோகடிக்கும் போது நாசுக்காக பதிலடி கொடுக்க தெரியவிட்டால் ( விருந்தினர் மட்டுமல்ல.. நண்பர் கூட... நமது வீட்டில் மட்டுமல்ல எந்த ஒரு இடத்திலும் ) சங்கடமே.. அதனால் குடும்பத்தில் பிரச்சனை அல்லது கனவன் மனைவி இடத்தில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை கையாளத் தெரியாவிட்டால் குடும்பத்தில் சங்கடமே.. மற்றவர்களின் ஆளுமைக்கு அடிமையாகி கோழையா இருந்தால் விருந்தாளிகளிடம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் சங்கடமே..

வசதியான குடும்பத்தில் விருந்தாடல் நிகழ்ந்தால் பரவாயில்லை---------- ஏழைக் குடும்பம் ஆனாலும் வரும் விருந்தாளி வரக்காப்பி தான் இங்கே கிடைக்கும் எனத் தெரிந்து தான் வருவான்.. அந்த குடிசை வீட்டில் அவன் ஸ்டார் பக்ஸ் காஃபி அல்லது போர்ன்விட்டோவை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கமாட்டான்.. அது முன்னுக்கு பின்னான முரண்பாடு என்பது படிக்காத ஒருவனுக்கும் தெரியும்.

ஆசாபாசங்களை தவிர்த்து விருந்தாடல்----- நடுவரே விருந்தாளிகள் வந்து செல்லுவதற்காக ஆசாபாசங்களை துறப்பது என பெரிய வார்த்தைகளை கூறவே தேவையில்லை.. நம் குடும்பத்திற்காக 90% மும் விருந்தாளி எனும் போது ஒரு 10% மும் மட்டுமே என வாழ்க்கை போகிறது.. அந்த 10% ஒரேடியாக ரியாக்ட் செய்யவே தேவையில்லை.. மூட்டை பூச்சிக்காக வீட்டை கொலுத்துவதை போல.. உடனே உறவை மூட்டை பூச்சி என எதிரணியினர் ஒத்துக் கொண்டார் எனக் கூற போகிறார்கள்.. அந்த பழமொழியானது சின்ன விஷயத்திற்கு ஓவரா பில்டப் கொடுக்க தேவையில்லை எனக் கூற நினைப்பது..

உங்களை அவங்க வீட்டுக்கு போற சந்தர்ப்பத்தை உருவாக்கி தரவே மாட்டாங்க------------ ரொம்ப சிரமம் நடுவரே.. சந்ரப்பத்தை உருவாக்கவில்லையா? இல்லை நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்கனு உருவாக்கிக் கொள்வதில்லையா?

உறவுகள்ல இளிச்சவாய்னு பேர் எடுத்தவங்க நிறைய பேர் இருக்காங்க/கவனிப்பாரற்று இருக்கறவங்க---------------இதெல்லாம் ரொம்ப ஓவர்.. இப்படி அடிப்படும் அளவுக்கு உறவுகள் இருக்கும் போது இருப்பது யாரின் குற்றம் எனத் தெரியவில்லை.. தன்னை சுற்றி நல்ல மனிதர்களை உருவாக்கவில்லை எனக் கூறுவதா? வீட்டிற்கு வந்து அட கொஞ்ச நாள் தங்க என்ன பாடுபட வேண்டியிருக்கு

.குற்ற உணர்ச்சி இருக்க போகிறது?-------------நான் கூறியதை எதிரணி தோழி புரிந்துக் கொள்ளவில்லை.. நாம் அவர்களை நல்லவிதமா கவனிக்காம இருக்கும் பட்சத்திலும் . ஒரு பிரச்சனை எனும் போது அவர்கள் நாடி உதவினால் கூச்சமாக இருக்காது? இதுலென்ன ஜோக் இருக்கு..

.உறவினர்கள் இல்லாத நண்பர்கள் -------- உறவினர் விருந்தாளியா வரும்போது ஏகப்பட்ட பிரச்சனை வரும் .. ஆனால் ஒரு நண்பன் வந்தால் ஏதும் வராது என தேவையில்லாத அசம்ஷன் எதற்கு நடுவரே. நடுனிலையாக இருந்து பாருங்கள்

.பையனை தனியா கூப்ட்டு அப்பாவுக்கு எதிரா செயல்பட வைப்பாங்க--------------எதிரணி தோழி விருந்தாளிகள் மீது இருக்கும் ஏக கான்டில் நான் சொல்ல வந்த பாயின்ட்டை திரும்பவும் புரிந்துக் கொள்ள தவறிவிட்டார் போல.. அப்பா மகனுக்கு இருக்கும் பிரச்சனை மற்ற மூன்றாவது நவருக்கு தெரியக் கூடாது என அவர்கள் நினைப்பதால் தான் .. மற்றவர்கள் முன் சண்டை இல்லாததை போல பேசிக் கொண்டு அப்படியே சமாதானம் ஆகும் வாய்ப்பும் உள்ளது எனக் கூர வந்தேன்.சண்டை இருப்பது உறவுக்கு தெரிந்து எச்சா பெருசு பண்ணுவாங்களாம்.. சண்டை இருக்குனு அவங்க காட்டிக்கனும்னா அப்பா மகனும் விருந்தாளி முன் பேசாமையா இருந்துப்பாங்களே. கஷ்டம் நடுவரே..

எதிரணி பொண்ணு உலகம் புரியாத சின்னப்பொண்ணா இருக்கு -----------உலகம் தெரிந்திருப்பதால் தான் பேலன்சாக நடந்துக் கொள்ள வேண்டும் எனக் கூவிக் கொண்டுள்ளேன்.. உங்களுக்கு பொறுக்க முடியாத பிரச்சனை கொடுக்கும் எவனாக இருந்தாலும் பொங்கி எழ வேண்டியது தானே.. அது யாராக இருந்தால் என்ன?( உறவோ நட்போ ) கணவனானாலும்.. .. ஐந்தறிவு கொண்ட ஜீவன்களே தன்னை தற்காத்துக் கொள்ள சீறி பாய நினைப்பதில்லை.. ?

.வரும்போது 4 நாள் தங்குற திட்டத்தோட தான் வருவாங்க. ஆனா எப்ப கிளம்புவாங்கங்குறது தானே முக்கியம்.---------தோழி சொல்வதை பார்த்தால் யாருமே வேலை வெட்டியே இல்லாமல் இருக்கிறார்கள் போல.. எனது அறுசுவை தோழியும் ஒருவர் அப்படித் தான்.. வீட்டிற்கு யாருமே வருவத்தில்லை.. போர் அடிக்கிறது.. எல்லா சொந்தத்தையும் விட்டு என்ன வாழ்க்கை என அலுத்துக் கொள்கிறார்.. இதற்கு என்ன சொல்லுவீர்கள் நடுவரே..

விருந்தாளிகள் நம் உயிரைத்தவிர மற்ற அனைத்தையும் எடுத்துவிட்டு தான் செல்கிறார்கள் ------------ஜப்பான் சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்று.. ஒரு சொடக்கு அவ்வளவு தான் வாழ்க்கை.. வெளியே செல்பவர் வீடு திரும்பினால் தான் நிச்சயம்.. அதற்குள் ஏன் இத்தனை.. எதிர்பாராத விதமாய் நமது அன்பு மிக்க ஒரு உயிர் பிரியும் போது நினைப்போம்.. யாரிடமும் சண்டை போடக் கூடாது.. எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை.. என.. என்றுமே அழகான சொந்தங்கள் விருந்தினராய் வந்து சென்றால் தான் அது வீடு நடுவரே

பெரியப்பாக்கு பிரச்சனையில்லை.. சித்தி அத்தைக்கும் தான்..--------- அடக் கடவுளே.. இதிலென்ன ஆண் பெண் என பிரிக்க.. சமையலாகட்டும் மற்ற விஷயமாகட்டும் செலவழிப்பவர்கள் ஆண்கள் தானே.. ஒரு உதாரனத்திர்கு சொன்னால் அதை பிடித்துக் கொண்டார்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எதிரணி தோழிக்கு விருதினர்கள் மேல் ஏன் இவ்வளவு கோவம் என்று எனக்கு தெரியவில்லை. பாவம் ரொம்ப அதிகமாக அவர்கள் இந்த விருதினர்களால் கஷ்டபட்டிருப்பார்கள் போல. விருத்தினர் சங்கடம் சங்கடம் என்று கூவி கொண்டே இருக்கின்றார்களே அவர்கள் போன வாரம் கூட தட புடலா விருந்து வைத்தார்கள் அது கூட ஞாபகம் இல்லை போல! விருந்தினர்கள் சங்கடம் என்று ஏன் நினைகிறார்கள் என்று புரியவில்லை. சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு நான் பல பேரை சொல்லவில்லை சில பேரை மட்டுமே சொல்கிறேன் என்றால் அதில் என்ன தர்மம் நீங்களே சொல்லுங்கள் நடுவரே!

////இந்த விருந்தாளிகளில் பெருமளவு தாளித்து போவது பெண்கள் தான். எப்படி என்றால் சரியான சாப்பாடு இருக்காது. தூங்க தலையணை, பாய் இருக்காது. இவங்களுக்கு தான் இப்படின்னா குடும்பத்தலைவருக்கும் அதே கதி தான். விதவித உணவுகள் சமைச்சிருப்பாங்க. ஆனா அவருக்கு கிடைப்பதென்னவோ ரசம் சோறு தான். சம்பாதிக்கற மனசு எத்தனை எரியும் பாருங்க?////

ஏங்க தினமும் வித விதமாக சமைத்து தான் சாப்பிடுகிறோம். ஒரு நாளைக்கு ஏன் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வரும் விருதினருக்கு சமைத்து போட்டு நாம் ரசமோ தயிரோ சாப்பிட்டால் என்ன நஷ்டம். பெரியவர்கள் ஒன்று சொல்வார்கள் இந்த உலகத்தில் எதையும் சுலபமாக சம்பாதித்து விடலாம் ஆனால் மக்க மனுஷாளை சம்பாதிக்க முடியாதென்று. அப்படி இருக்கும் போது ஏன் நம் வீடுதேடி வரும் உறவை நாம் சங்கடமாக நினைக்க முடியும். எங்கோ யாருக்கோ ட்ரிட் வைப்பதும் தேவையில்லாமல் லைப் ஸ்டைல் என்கிற பேரில் செலவு செய்வதை விட நாம் வீடு தேடி வருபவரை நல்ல முறைகள் கவனித்து கொண்டால் எப்படி சங்கமாக முடியும். நாம் இந்த மண்ணை விட்டு போகும் போது கூட நம்மை தூக்கி போடா நான்கு பேர் தேவை அந்த நான்கு பேரையாவது நாம் மதிக்க வேண்டாமா? நம் வீட்டுக்கு வருவது பெரும்பாலும் நம் உறவினர்கள் நண்பர்கள் அவர்களை கூட நாம் ஏன் சந்தமாக கருத வேண்டும். இன்முகத்தோடு வரவேற்று நல்ல முறைகள் கவனித்து அவர்களை திருப்பு அனுப்பும் வரை நன்றாக கவனித்து கொண்டால் அது நமக்கு சந்தோசம் இல்லையா.

எதிரணி தோழியை ஒன்று கேட்குறேன் உங்கள் வீட்டுக்கு விருதாளிகள் வந்தாலே ஐயோ வந்துடிச்சி சங்கடம் என்று நினைப்பீர்களா இல்லை சந்தோஷபடுவீர்களா!

///யார் வீட்டுக்கு போய் யாரை டார்ச்சர் பண்ணலாம் என காத்துக் கொண்டிருக்கும் மக்களை சொல்கிறேன்.///

எத்தனை பேர் இப்படி இருப்பார்கள் 10 % இருப்பர்களா? மீதியுள்ள 80 % பேர் அவர் அவர் வேலையை பார்பவர்கள். அவர்கள் ஒரு நாள் ஒருத்தர் வீட்டிற்கு வருவதால் எப்படி சங்கமாகும்.

///இங்குதான் வரவேண்டும் என்று இல்லை நம்மை கூட அவர்கள் வீட்டுக்கு அழைக்கலாமே. ஏன் அவ்வாறு செய்வதில்லை? வீணாக வாய் கொடுத்து வம்பில் மாட்ட விருப்பமில்லையா? இதுபோன்ற உபத்திரவமான விருந்தினர்கள் வராமல் இருப்பதால் தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு பங்கம் வந்துவிடாது.///

இப்போதெல்லாம் யார் அப்படி வருகிறார்கள்? (இந்த கேள்வி கேட்ட உடனே நீங்கள் லிஸ்ட் குடுப்பீங்க என்று தெரியும்.) முதலில் போன் பண்ணி நீங்கள் வீட்டில் இருகின்றீர்களா என்று கேட்டுட்டு அதற்கு அடுத்து தான் வருகிறார்கள். உங்களுக்கு சங்கடமாக தோன்றினால் போன் பண்ணும் போதே நான் இங்கு இல்லை வெளியில் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டியதுதானே? (இதற்கும் உங்கள் பதில் என்னவென்றால் அப்படி யார் செல்லிட்டு வருகிறார்கள் என்று இருக்கும். பாவம் அவர்களுக்கு தெரியும் போல நீங்கள் எப்போதும் வீட்டில் தான் இருப்பீர்களேன்று) .

///உங்களிடம் பணம் இல்லையென்றால் எந்த விருந்தாளிகள் உங்கள் வீடு தேடி வரப்போகிறார்கள்? லூசா அவங்க? ;) உங்களோட சேர்ந்து பழைய சோறும், வெங்காயமும் சாப்பிட :) நல்ல சாப்பாடு சாப்ட்டு, காலாட்டி ரெஸ்ட் எடுத்துட்டு போக தானே இன்னோரு வீட்டுக்கு போறாங்க. அங்கேயும் போய் கஷ்டத்தை அனுபவிக்கனும்னு தலையெழுத்தா என்ன? அன்பு எதிரணி தோழியே, நான்கு மக்கள் என்ன நான்காயிரம் மக்கள் நம் அறுசுவையில் உள்ளார்கள். அதற்கு இதுபோன்ற விருந்தாளிகள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை.///

பணத்தை பார்த்து விருத்தினர் வருவது கிடையாது. அப்படி வருவது என்றல் பணக்கார்கள் வீட்டில் தான் விருதாளிகள் கூட்டமே இருக்கும். அங்கும் விருந்து இருக்கும் ஆனால் அது விருந்தாக இருக்கிறது. பணத்தோடு பணம் சேரும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஏழை வீட்டிலும் விருதாளிகள் வருவார்கள். ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் தினமும் கூழ் கஞ்சி என்று குடித்துக்கொண்டிருந்தாலும் நம்மை தேடி வருபர்களை கண்டிப்பாக சங்கமாக நினைக்க மாட்டார்கள். அவர்களிடம் இருக்கோ இல்லையோ கடன் வாங்கியாவது நன்கு சமைத்து அன்போடும் பண்போடும் பரிமாறுவார்கள் ஒருபோது சங்கடமாக நினைக்க மாட்டார்கள்.

////இன்னமும் ஒருசில வீடுகளில் வாஷிங்மெஷின்,ப்ரிட்ஜ் மற்றும் இன்ன பிற மின்சார உபகரணங்கள் வாங்காமலே தான் உள்ளார்கள். அவர்களை போன்றவர்கள் என்ன செய்வார்கள்?வந்திருக்கும் விருந்தாளி அவர் வீட்டில் வேலைக்காரர் வைத்திருப்பார். அந்த நினைப்பில் வந்த இடத்திலும் குளித்துவிட்டு துணியை துவைக்காமலே வந்து விடுவார். பிறகென்ன அந்த துணி குடும்பத்தலைவி தலையில் தான் விழும். இதெல்லாம் இருக்காது. ஒருக்காலும் நடக்காது என்று மட்டும் சொல்லாதீர்கள். என் கண்களால் பார்த்ததை தான் சொல்கிறேன்.////

உங்கள் கண்ணில் பார்த்ததை நீங்கள் சொல்வது தவறு கிடையாது. ஒரு சில வீடுகளில் இருக்கலாம். அங்கு இருப்பவர் தினமும் அவர்கள் துணியை துவைப்பதால் கூட ஒருத்தர் துணி துவைப்பது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கறது என்று நினைவில்கொள்ள வேண்டும்.

/////நம் அறுசுவையில் பல தோழிகள் தங்களுக்கோ, குடும்பத்தினருக்கோ, குழந்தைகளுக்கோ உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டால் நம் தோழிகளையே அணுகி ஆலோசனை கேட்கிறார்கள். மனக்கசப்பு என்றாலும் அதற்கு மருந்தை தேடியும், இங்கு தான் வருவார்கள். வாழ்க்கையில் பிரச்சனை என்றாலும் சகோதர, சகோதரிகள் போல எண்ணி நம்மிடம் கொட்டி, பின் நாம் தரும் அன்பான ஆறுதல் வார்த்தைகளி மனம் உருகி கரைந்து போகிறார்கள். முகம் தெரியாத நட்புக்கே இத்தனை மகிமை என்றால், முகம் தெரிந்த உறவு இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? அதை தான் நாங்கள் இவர்களிடம் எதிர்பார்க்கிறோம். விருந்து கொடுப்பவர், வாங்குபவர் இருவரும் சக மனிதர்கள் தான் அவர்களுக்கென்று கவலைகள், நோய்கள்,உடல் அலுப்பு போன்றவை இருக்கும். அவற்றை புரிந்து அவற்றிற்கு மருந்தளிக்கும் விதமாக பேசி நடக்கலாமில்லையா? ஒரு வேலையை ஒரு ஆள் செய்வதை விட இருவரோ, பலரோ சேர்ந்து செய்யும் போது நேர விரயம், உழைப்பு விரயம் அத்துணையும் சேமிக்கப்படுகிறது./////

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால் ஒருத்தர் வீட்டுக்கு சென்று அவர்கள் மாங்கு மாங்கு என்று வேலை செய்து கொண்டிருக்கும் போது மனசாச்சி உள்ள ஒருவரும் கால்மேல் கால் போட்டு யாரும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். கண்டிப்பாக அவர்களும் கூட மாட வேலை செய்வார்கள். நீங்கள் பார்த்து இருப்பார்கள் மனசாட்சியே இல்லாதவர்களா இருப்பார்கள். அவர்கள் மனிதர்களே அல்ல. எல்லோரும் அப்படியும் கிடையாது. அதுவும் நீங்கள் சொல்வது அதே 10% சதவிதம்தான் இருக்கும்.

இப்படி ஒரு சிலரை வைத்து எல்லோரும் அப்படி என்று நினைக்க கூட நடுவரே! என்றும் நம் உறவுகள் சந்தோசமே என்று சொல்லி இப்போது விடைபெறுகிறேன். (இருங்க எதிரணி சொன்னுடன் ஓடி வந்துறேன்)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நடுவர் அவர்களுக்கு வணக்கம் ;)

ஒரு முக்கியமான விஷியத்தை இங்கு பதிவு செய்யதுவிட்டு என் வாதத்தை தொடரலாம் என்று நினைக்கிறேன்.

நடுவர் அவர்களே! விருந்தாளிகள் விருந்தாளிகள் என்று வருபவர்களை பற்றியே பேசி கொண்டுஇருக்கிற நாம் நம் உறவினர் வீட்டிக்கு போகும் போது நாமும் விருந்தாளிகள் என்ற எண்ணத்தை மனதில் வைத்து பேச வேண்டும் :)

எல்லாவற்றிலும் பெர்ஃபெக்ட் டை எதிர் பார்க்கிற நாம் நமது உறவினர் வீட்டிக்கோ தோழிகள் வீட்டிற்கோ செல்லும் போது சில விஷியங்களில் நாமும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.அவர்களும் நம்மை போல் மனிதர்கள் என்பதை இந்த பட்டியில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

****************************************************************************
இபோது என் வாதத்திற்கு வருகிறேன், நடுவர் அவர்களே! நம் எதிர் அணியினர் இந்த வாதத்தை போன பட்டியில் போட்டு இருந்தால் எனது அணி வெற்றி வாகை சூடி இருக்கும் என்று நெனக்கிறேன்.:))

வந்தாரை வாழவைக்கும் பூமி நம் பூமி நடுவர் அவர்களே! வீட்டிக்கு வருபவர்களை வாங்க என்று சொல்லி தண்ணீர் கொடுப்பதும் உணவு வழங்குவது நமது கடமை அது உறவினராக இருந்தாலும் சரி வேறு யாரக இருந்தாலும் சரி அதை நாம் மனரம்மியமாக (சந்தோசமாக) செய்யும் போது ''ஆசீர்வதங்களும்'' மனநிம்மதியும்,சந்தோசமும் கிடைக்கிறது.

நம் வீட்டிற்கு வரும் அனைவருமே விருந்தாளிகள் தான் நடுவரே , இதோ அறுசுவையில் தான் , சீக்கிரம் செய்யகுடிய குறிப்பு,எளிதாக செய்யும் குறிப்பு,விருந்தாளிகள் வந்தயுடனே டக்னு செய்யும் குறிப்பு என்று எல்லாம் பின்னூட்டம் இடுகிறோம். எதற்காக இப்படியெல்லாம் தேடி தேடி, யோசித்து யோசித்து செய்கிறோம். சந்தோஷம் இல்லாமல இப்படி செய்வோமா?????

நான் ஒன்னு கேட்கிறேன் நம் வீட்டில் திருமணம்,வளைகாப்பு,காதுகுத்து,மஞ்சள்நீராட்டு விழா என்றெல்லாம் விஷேசங்களுக்கு பத்திரிக்கை அடிக்கிறோம் சமையல் காரர்கள்களை அழைக்கிறோம் .மாமா,மச்சன் ,பெரியப்பா,சித்தப்பா,அக்கா, தங்கை,friends என்று அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று பத்திரிக்கை வைத்து அழைக்கிறோம். அவர்களிடம் என்னா சொல்லுகிறோம் கண்டிப்பா 2 நாளைக்கு முன்னாடியே வந்துடுங்க என்று சொல்லுகிறோம்.

அனைவரும் வந்து யாரோ ஒருவர் வரவில்லையென்னாலும் நமக்கு கோபம் வருகிறது.அப்படி வந்தவர்கள் யாராவது சாப்பிடாமல் போயிட்டால் கூட நாம் கோபப்படுகிறோம். அவர்கள் வீட்டு விஷேசத்திற்க்கு நாமும் போகமாட்டோம் சாப்பிடவுட்டோம்.
நமது பிள்ளைகள் கூட எங்க மாமா வருவாங்க சித்தி வருவாங்கனு சந்தோசப்படுராங்க. இப்படி விருந்தினர் வருகையால் சந்தோசம் மட்டுமே வரும் வரவில்லையென்றால் தான் சங்கடம் வரும்.

மீண்டும் வருகிறேன்:)

உன்னை போல பிறரையும் நேசி.

//அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கூறுவது போல.. அந்த பழமொழியானது விருந்தினரை மட்டும் குறிப்பது அல்ல.. எல்லாவித விஷயத்திலும் நமக்கென ஒரு எல்லை வேண்டும் எனக் குறிப்பிட..//

நடுவரே, அந்த எல்லை தான் எதுவரைன்னு நம்ம விருந்தாளிங்களுக்கு புரிய மாட்டேங்குதே. அதை பத்தி தானே இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கோம்.

//அப்போ மூனு நாளுக்கு மேல மருந்து எடுக்க கூடாதா? அப்பா லைஃப் லாங்க் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை என்ன சொல்வது.. //

என்னங்க அநியாயமா இருக்கே. மருந்தை கூட விரும்பி உண்ணும் ஜீவன்கள் பூலோகத்தில் உண்டா? அதுவும் லைஃப் லாங்க் மருந்தை. அப்படி ஒரு அவசியம் ஏற்பட்டால் கடனே என்று தான் உண்பார்கள். யாரும் ஆற அமர ரசித்து விரும்பி உண்ண மாட்டார்கள். அதே போல தான் லைஃப் லாங்க் விருந்தாளிகளின் நிலைமையும்.

//நமக்கென இருக்கும் கடமையை நாம் செய்து தான் தீர வேண்டும்.. அதற்காக வீட்டிற்கு வரும் விருந்தினரால் தான் செலவு எனக் கூற கூடாது..//

ஏங்க, விருந்தாளிகளுக்கு பணி செய்து கிடப்பதேவா நம்ம கடமை. இந்த காலத்தில் ஆசாபாசம், உறவு, பந்தம், சொந்தம் எதையும் விற்கும் விலைவாசி பார்க்க விடுவதில்லை. விருந்தினர் வருகை பேசவும் கேட்கவும் நன்றாகவே இருக்கும். அவர்கள் வந்து போன பிறகு தான் தெரியும்.அவங்களுக்கு செலவாகாதுன்னு எப்படி சொல்றீங்க? நாம நம்ம வீட்ல இருக்கறத, நேத்து பண்ண பழைய உணவை கூட சூடு பண்ணி சாப்பிடுவோம். வருபவர்களுக்கு அப்படி போட முடியுமா? மனம் இடம் கொடுக்குமா? வட்டிக்கு வாங்கியாவது நல்லபடியாக செய்து அனுப்புவோம். அத்தோடு முடிந்துவிடுமா விருந்து? அவர்களை வெறும் கையோடு அனுப்ப கூடாது என்று அவர்களுக்கு துணிமணிகள், கையில் பணம் இத்தனையும் கொடுத்து அனுப்ப வேண்டும். இதெல்லாம் செலவில்லையா?

//எடுத்துக் கட்டி வேலை செய்யும் ஒரு உறவுக் கூட உங்களிடம் இல்லையா? இது அநியாயம்ங்க//

அநியாயம் தான். என்ன பண்ண சொல்றீங்க? அதை கொட்ட தானே வந்திருக்கேன். இப்ப இருக்க உறவுகள் எது வேலையை எடுத்து கட்டிட்டு செய்யுது சொல்லுங்க.அவங்களுக்கு நாம பணிவிடை பண்ணாம இருந்தாலே போதுமே. உலகம் பெருசுங்க. அதுல உங்களுக்கு கிடைச்ச மகிழ்ச்சியான விருந்தாளிகளும் உண்டு. எங்களுக்கு கிடைத்த சங்கடமான விருந்தாளிகளும் உண்டு.மாத்தி மாத்தி சொல்லிக்க வேண்டியது தான். அதை மத்தவங்க கேட்டுக்க வேண்டியது தான் :)

//அவர் குணத்திலேயே அப்படிப்பட்டவராக இருப்பார்.. உங்கள் வீட்டிற்கு வந்தவரிடம் இன்முகத்துடன் நடந்துக் கொள்ள வேண்டியது யார் பொறுப்பு?//

நாங்க இன்முகத்தோடு நடந்துக்கலைன்னா அவங்க எங்க வீட்டுக்கு வருவாங்களாங்க? அதெல்லாம் கரெக்டா சிரிக்க வேண்டிய இடத்துல சிரிச்சு தான் வைக்கிறோம். அதானே பிரச்சனை. ஆஹா... நாம வந்தாவே சந்தோசமா இருக்காங்க. இனி அடிக்கடி வந்து குஷிபடுத்தவேண்டியது தான்னு. திடீர் திடீர்னு வந்து நின்னு ஷாக் குடுத்தது குடுத்தபடியே இருக்காங்க :((

//நம் வீட்டில் வந்து நம்மையே நோகடிக்கும் போது நாசுக்காக பதிலடி கொடுக்க தெரியவிட்டால் ( விருந்தினர் மட்டுமல்ல.. நண்பர் கூட... நமது வீட்டில் மட்டுமல்ல எந்த ஒரு இடத்திலும் ) சங்கடமே//

விருந்தாளிங்க எம்புட்டு மாசம் வந்து எங்க வீட்ல டேரா போட்டாலும் தாங்கிப்போம். அம்புட்டு நல்லவங்க நாங்க. அங்கே புலம்பி அவங்க மனம் ஏடாகூடாமா கோணிக்க கூடாதுன்னு தான் இங்கே வந்து கோழிகள் கிட்ட கொட்டி தீர்க்கறோம். எங்களைப்போயி விருந்தாளிங்களையே புடிக்காதவங்கன்னு சொல்லிட்டீங்களே...ஆவ்வ்வ்வ்வ்வ்

//அந்த குடிசை வீட்டில் அவன் ஸ்டார் பக்ஸ் காஃபி அல்லது போர்ன்விட்டோவை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கமாட்டான்.. அது முன்னுக்கு பின்னான முரண்பாடு என்பது படிக்காத ஒருவனுக்கும் தெரியும்.//

இப்ப காலம் மாறிப்போச்சுங்க. பிச்சை எடுக்கறவன் கூட ப்ளேன் ஏறி தான் பிச்சை எடுக்கறானாம். அப்படியிருக்க குடிசை வீட்ல போன்வீடா வாங்க மாட்டாங்களா என்ன? சரி போகட்டும்... அவங்க இவங்க சொல்ற அயிட்டங்கள் வாங்கலைன்னாலும், அவனே அடிமட்ட தொழிலாளியா இருப்பான். அவன் சம்பாதிக்கறது அவனுடைய வாய்க்கும் வயித்துக்குமே சரியா இருக்கும். இதுல மனைவி மக்கள கவனிக்கனும். இதுல மூணாவதா ஒருத்தர் வந்து பங்கு போட்டுகிட்டா அவன் வயித்துல ஈரத்துணிய தானே சுத்திக்கனும். இது படிச்சவனுக்கே கூட தெரியலனா...வாட் எ ஷேம்... வாட் எ ஷேம் :)

//அந்த பழமொழியானது சின்ன விஷயத்திற்கு ஓவரா பில்டப் கொடுக்க தேவையில்லை எனக் கூற நினைப்பது..//

எதுங்க சின்ன விஷயம்? கப்பலோட சின்ன ஓட்டை பெரிய கப்பலையே மூழ்கடிக்குது. உங்களுக்கு நல்ல விருந்தாளிங்க கிடைச்சிருக்காங்க. சந்தோஷம் தான். எங்களுக்கு கிடைச்ச மாதிரி குட்டைய கலக்கி விடுற ஆளுங்களா இருந்தா என்ன பண்றது? அவங்கள பார்த்து பயந்து தானே ஆகணும். எப்போ எந்த குட்டை குழம்ப போகுதோன்னு?

//நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்கனு உருவாக்கிக் கொள்வதில்லையா?//

அதுக்கான அவசியத்தை தான் அவங்க ஏற்படுத்தவே இல்லையே. அப்புறம் எங்கே நாங்க அவங்க வீட்டுக்கு போனா இங்கே வந்துடுவாங்களோன்னு பயப்படுறது? நாங்க போகாமலே தான் வந்துட்டு இருக்காங்களே. நாங்க போகனும்னு விரும்ப மாட்டோம்.

//அடிப்படும் அளவுக்கு உறவுகள் இருக்கும் போது இருப்பது யாரின் குற்றம் எனத் தெரியவில்லை.. தன்னை சுற்றி நல்ல மனிதர்களை உருவாக்கவில்லை எனக் கூறுவதா? வீட்டிற்கு வந்து அட கொஞ்ச நாள் தங்க என்ன பாடுபட வேண்டியிருக்கு//

எதிரணி தோழியே, உங்களுக்கும், எனக்கும் நாட்டில் அனைவரும் காந்தியாகவும், புத்தராகவும், ஏசுவாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை தான். அது ஏன் நிறைவேற வில்லை. சுற்றியிருப்பவர்களை நம்மால் திருத்த முடியுமா?ஏற்கனவே இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒரு முடிவோடு உருவாகியிருப்பவர்களை, புதிதாக நாம் எங்கே மாற்றி திருத்த முடியும்? தவிர அதுவல்ல நம் பணி.

//நாம் அவர்களை நல்லவிதமா கவனிக்காம இருக்கும் பட்சத்திலும் . ஒரு பிரச்சனை எனும் போது அவர்கள் நாடி உதவினால் கூச்சமாக இருக்காது?//

நடுவரே, நான் புரிந்து கொண்டு தான் பேசினேன். நாம் அவர்களை நன்றாக கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் பிரதிபலன் எதிர்பாராமல் பிரச்சனைகளில் உதவ வேண்டும். அதுதானே உறவு. அண்ணனுக்கு அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது, நாம் போன மாசம் அண்ணா வீட்டுக்கு போனோமே அவர் நம்மை சரியாவே கவனிக்கலையே. அவருக்கு எதுக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்தனும்னு ஒரு தம்பி அதுவும் உடன்பிறந்த தம்பி நினைத்தால் அப்புறம் அந்த உறவுக்கென்ன அர்த்தம் இருக்கப்போகிறது?அல்பம் இந்த விருந்தோம்பலை வைத்து தான் உறவு இழையே ஓடிக்கொண்டிருக்கிறதென்றால் அந்த உறவே வேண்டாமே. உடம்போட எந்த பாகத்துல அடிபட்டாலும் முதல்ல கண்ணீர் விடுவது கண்கள் தான். அதுபோல இருக்க வேண்டும். அதை தான் நானும் சொன்னேன். "கண்ல ஏதாவது தூசி விழுந்து கை வந்து அதை எடுத்து விடாத போது, கைக்கு அடிபட்டிருக்கும் போது கண் அழுவாம பழிவாங்குமா என்ன? அது கடமையை அது செய்யவே செய்யும்.

//ஒரு நண்பன் வந்தால் ஏதும் வராது என தேவையில்லாத அசம்ஷன் எதற்கு நடுவரே.//

நடுவரே, இதில் வீண் அசெம்ப்ஷன் எதுவும் இல்லை. எல்லாம் உண்மையாக நடப்பதே. இதிலென்ன சந்தேகம். ஒரு நண்பன் வந்தால் அந்த இடத்தில் என்ன பிரச்சனை வரப்போகிறது? நம் குடும்ப விஷயங்களை நாமே அவனிடம் சொன்னாலொழிய அநாவசியமாக மூக்கை நுழைக்க மாட்டான்.

//ஐந்தறிவு கொண்ட ஜீவன்களே தன்னை தற்காத்துக் கொள்ள சீறி பாய நினைப்பதில்லை.. ?//

அதுக்காக தானே உங்க எல்லாரோட அபிப்ராயத்தை கேக்க வந்திருக்கேன் :)

//சொல்வதை பார்த்தால் யாருமே வேலை வெட்டியே இல்லாமல் இருக்கிறார்கள் போல..//

மறுசுழற்சி முறைல வந்துட்டு இருப்பாங்க. முதல்ல ஒரு பேட்ச் வந்து போய்ட்டு மறு பேட்ச் வரும். அது முடிஞ்சு இன்னொன்னு கடைசியா பார்த்தா வர்றது முதல்ல வந்தவங்களே திரும்ப வருவாங்க. இப்படி போகும்போது அவங்க வேலையும் ஒரு பக்கம் ஓடிட்டு தான் இருக்கும்.

//யாரிடமும் சண்டை போடக் கூடாது.. எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை.. என.. என்றுமே அழகான சொந்தங்கள் விருந்தினராய் வந்து சென்றால் தான் அது வீடு நடுவரே//

இதைத்தான் நானும் கேட்கிறேன் நடுவர் அவர்களே. வாழ்க்கை ஒருமுறை தான் என்பது அவர்களுக்கு மட்டும் தானா? நமக்கும் தான் என்று ஏன் அவர்கள் நினைப்பதில்லை. விருந்தோம்பல் என்பது ஒருவழி பாதை தானா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

புவனா... அதென்ன காலையில் வந்து சாயந்திரம் போயிட்டான்னு ஒரு வரி!!!
//போதும்டா சாமி விருதாளிகள் வந்து படுத்தர பா// - பாவமா இருக்குங்க உங்களை நினைச்சா!
//சொந்த செலவுல சூனியம் வசிக்கரதுனு கேள்விபட்டுஇருக்கீங்களா // - கேள்விப்பட்டிருக்கேன், இப்போ தான் அது எதை சொன்னாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

ரம்யா... உங்களுக்கு குஷியா தான் இருக்கும்... நீங்க தான் விருந்தாளி வரலன்னாலும் சமைச்சு கொண்டு போய் கொடுக்குறவர் ஆச்சே ;)
//உண்மையை கூற வேண்டுமெனில் நாம் பிறர் வீட்டுக்கு போகும் போது நாம் உறவினர் ஆகுகிறோம் என்பதை மறக்கக் கூடாது// - கரக்டு. எதிர் அணி... நோட் தி பாயின்ட்டு.
//விருந்தாளிகள் நமது வீட்டிற்கு ஒரு ஒரு உயிரோட்டத்தை கொடுக்கிறார்கள் // - அப்படியா???!!!

பிரியா... கல்யாணத்துக்கு முன் பொறுப்புகள் இல்லை, அரட்டை அடிச்சீங்க. இப்போ சமைக்கனுமே. ;)

ரீம்.. //அட்ஜெஸ்ட் பண்றவங்களை விட குறை சொல்றவங்க தான் அதிகம்// - ரொம்ப மோசமான அனுபவம் போல. ;(

சௌமியன்... வாங்க. அரட்டை பக்கத்தில் நிறைய பதிவுகள் வந்தது என்று நினைக்கிறேன். :)

சுவர்ணா... வாங்க... //அவர்கள் எத்தனை நாட்கள் இருந்தாலும் சங்கடம் ஆகாது// - நல்ல உறவுகள், நண்பர்கள் போல.
//நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள்,நம் குடும்ப சூழல் அறிந்தவர்கள்,முக்கியமாக நம் குடும்பத்திற்க்கு நெருக்கமானவர்கள்தான் நம் வீட்டுக்கு வந்து தங்குவார்கள் அப்படி இருக்க இது சாப்பிடமாட்டேன் அது சாப்பிடமாட்டேன்னு நிச்சயம் சொல்லவே மாட்டாங்க // - புரிஞ்சுக்குறதில்லை, நொச்சு பண்றாங்கன்னு தானே எதிர் அணி சொல்றாங்க.

ரேவதி... //கசப்பென்று யாராவது சொல்ல முடியுமா?// - யாருப்பா எதிர் அணி சொன்னது??? ரேவதி'கு பிடிக்கல... கவனிங்க.
//நாம் அவர்களை நல்ல முறையில் கவனித்தால் அவர்கள் ஏன் நம்மை புறம் சொல்ல போறாங்க!// - எப்படி கவனிச்சாலும் சொல்றாங்களாமே!!!

இளவரசி... வருக வருக.
//வக்கணையாய் சமைத்து போட சொல்வதும் அதை சாப்பிட்டுவிட்டு

பூதக்கண்ணாடி போட்டு இது ஏன் அப்படி அது ஏன் இப்படி ? என

தொணதொணப்பதும் …………??????

இல்லாதவரை விருந்தாளிகள் நமக்கு சந்தோசமே
//
//இது போன்ற நிறைய "இல்லாதவரை" கள் "இருக்கும்வரை" விருந்தாளிகள்

சங்கடமே// - வழக்கம் போல உங்க ஸ்டைலில் கலக்கலான பதிவு. ஹஹஹா... சூப்பர்.

கல்பனா...
//அன்றாட வயிற்று பிழைப்புக்கு தகிடதத்தும் போடும் அடிமட்ட குடும்பத்திலோ, அல்லது மாத பட்ஜெட்டில் குடும்பத்தை ஓட்டும் மிடில் கிளாஸ் மாதவன் குடும்பத்திலோ நிகழ்ந்தால் எப்படி இருக்கும்// - கஷ்டம் தான்.
//விருந்தாடல் ஒன்வே டிராபிக் அவங்க மட்டும் தான் வருவாங்க// - ஹஹஹா... நீங்களும் போய் வேலை வாங்கிட்டு வரலாமே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா... //சரியான சாப்பாடு இருக்காது. தூங்க தலையணை, பாய் இருக்காது//
//விதவித உணவுகள் சமைச்சிருப்பாங்க. ஆனா அவருக்கு கிடைப்பதென்னவோ ரசம் சோறு தான்// - ஹஹஹா. பாவம் உங்க கணவர்.

ரீம்... //நவீன நாரதர்கள்,விருந்தாளிகளா வந்து வீட்டில் கலகம் மூட்டி விட்டுட்டு போவாங்க// - சிலர் இல்லை பலர்.

யாழினி... வாங்க பட்டி பக்கம் தலையை காட்டிருக்கீங்க :) மகிழ்ச்சி.
//நம்ம எல்லாரியும் பார்த்துட்டு போகலாமேனு வராங்க அவங்கள போய் சங்கடமா நினைத்தா எப்படிங்க// - எதிர் அணி கவனிங்க. அன்பா பார்க்க வரவங்களை குறை சொல்ல கூடாதாம்.

ஹர்ஷா... //விருந்தினர்க்கு வேளா வேளைக்கு உணவு தயாரிப்பது,வீட்டு வேலைகளை செய்வது,வந்தவர்கள் தங்குவதற்கு வசதி செய்து தருவது,தம் கணவர் மற்றும் பிள்ளைகளை கவனிப்பது என்று பெண்கள் தான் மூச்சு விட கூட நேரம் இல்லாமல் சிரப்படுகிறோம்// - எல்லாரும் இதையே தான் சொல்றீங்க. ஆண்களெல்லாம் கஷ்டபடுறதே இல்லையோ!!
//சாப்பாடு மற்றும் தங்குவதற்கான ஹோட்டல் செலவைக் குறைக்க உறவினர்களுக்கு சிரமம் தருவது நியாயமா// - நோ நோ. தப்பு.
//பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை வந்து விட்டால் போதும்.குடும்பத்தோடு உறவினர் வீடுகளுக்கு சென்று மாதக்கணக்கில் டேரா போடுறவங்களும் இருக்காங்க// - உண்மை... அந்த வீட்டில் உள்ளவர்கள் பள்ளி விடுமுறை முடியும் வரை எங்கும் போகாம இவங்களுக்கு சமைச்சு போடுவாங்க.
//கிச்சனுக்கு அடுத்தபடியாக நமக்கென இருக்கும் பெட் ரூமை கூட சில சமயம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது // - பாவம் தான். ;(

பிரியா... நல்ல விதமா சொல்றீங்களா, இல்லை சங்கடம் தான்னு சொல்றீங்களான்னே எனக்கு புரியல :(

லக்ஷ்மி... முதல் பட்டியா?? கலக்குங்க.
//விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் எப்போதும் சமைப்பதை விட சற்று அதிகமாக தான் சமைப்போம்.. அப்படி இருக்க ரசம் சோறு தான் மிச்சும் என்றால் என்ன அர்த்தம்// - என்னப்பா அர்த்தம்??
பரவாயில்லை புதுசுன்னு சொல்லிட்டு எல்லா பதிவுக்கும் எதார்த்தமான பதில் கொடுத்துட்டீங்க. வாழ்த்துக்கள்.

தேவி... //நம் உறவினர் வீட்டிக்கு போகும் போது நாமும் விருந்தாளிகள் என்ற எண்ணத்தை மனதில் வைத்து பேச வேண்டும் //- எல்லாரும் நினைவில் வைக்க நானும் சொல்லிட்டேன் :)
//அனைவரும் வந்து யாரோ ஒருவர் வரவில்லையென்னாலும் நமக்கு கோபம் வருகிறது.அப்படி வந்தவர்கள் யாராவது சாப்பிடாமல் போயிட்டால் கூட நாம் கோபப்படுகிறோம்// - என்னங்க எதிர் அணி... வரலன்னா கோச்சுக்கறீங்க, வந்தாலும் கோச்சுக்கறீங்க!!!

விடுறதாவே இல்லை யாரும்... எல்லாத்தையும் படிச்சு எனக்கு கையும் கண்ணும் வலிக்குது, சிரிச்சு சிரிச்சு வயிரும் வலிக்குது. நீங்க சண்டை போட்டு முடிங்க. நான் நாளை வருகிறேன்.

நல்லா சண்டை பிடிக்கும் டாப்பிக் கொடுத்துட்டு நான் மட்டும் நிம்மதியா தூங்குறேன்னு நினைக்காதீங்க. இன்னும் 4 நாளில் நான் பிச்சுக்க வேண்டியது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பெரியப்பாக்கு பிரச்சனையில்லை.. சித்தி அத்தைக்கும் தான்..--------- அடக் கடவுளே.. இதிலென்ன ஆண் பெண் என பிரிக்க.. சமையலாகட்டும் மற்ற விஷயமாகட்டும் செலவழிப்பவர்கள் ஆண்கள் தானே.. ஒரு உதாரனத்திர்கு சொன்னால் அதை பிடித்துக்கொண்டார்கள்.//
ஏங்க, பெண்கள் சம்பாதிப்பது இல்லையா?செலவழிக்க மட்டும் ஆண்கள்தான் வரணுமா?சரி விடுங்க.பாயிண்ட்டுக்கு வர்றேன்.

வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் கூட ஆண்கள் வேலைக்கு சென்று விடுவர்.வீட்டில் இருக்கும் பெண்கள் தானே விருந்தினரை கவனிக்க வேண்டும்.என்னதான் பார்த்து,பார்த்து
செய்தாலும் சந்தோஷப்படாமல், குறை சொல்லும் உறவினர்களிடம் வீட்டில் தனியே மாட்டிக்கொள்வது பெண்கள் தானே.

//ஏங்க தினமும் வித விதமாக சமைத்து தான் சாப்பிடுகிறோம். ஒரு நாளைக்கு ஏன் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வரும் விருதினருக்கு சமைத்து போட்டு நாம் ரசமோ தயிரோ சாப்பிட்டால் என்ன நஷ்டம்//
எதிரணி தோழி இதில் ஒன்று கவனிக்க மறந்துவிட்டார்கள் போலும். பெண்கள் தாங்கள் வேண்டுமானால் ரசமோ,தயிரோ போட்டு சாப்பிடுவாங்க.சாப்பிடாம கூட இருப்பாங்க.ஆனால் தன் கணவனும்,பிள்ளைகளும் நல்ல சாப்பாடு சாப்பிடணும்னு நினைப்பாங்க தானே?தான் பார்த்து,பார்த்து சமைத்ததை யார்,யாரோ சாப்பிடும்போது,கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தன் கணவன் சாப்பிட ஒன்றும் இல்லையே என்று ஆதங்கப்படுவதில் தவறில்லை நடுவரே!

//உங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலே ஐயோ வந்துடிச்சி சங்கடம் என்று நினைப்பீர்களா இல்லை சந்தோஷபடுவீர்களா//
விருந்தினர் வரும் போது சந்தோஷம் தாங்க படுறோம்.ஆனால் அதே விருந்தினர் நம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு நம்மையே அதிகாரம் செய்து,குறை சொல்வதை தான் சங்கடம் என்கிறோம்.

நல்லா சிரிங்க..உங்க வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்காங்களா?? :)

சூப்பராய் கலக்கும் என்னணி தோழிகளுக்கு ஒரு பெரிய பூங்கொத்து

//நம் வீட்டில் வந்து நம்மையே நோகடிக்கும் போது நாசுக்காக பதிலடி கொடுக்க தெரியவிட்டால் ( //

பதிலடி உடனுக்குடன் கொடுப்பது கூட விருந்தோம்பல் கலாச்சாரத்துக்கு முரண்பட்டதுதானே..:-)

நாங்க விருந்தோம்பலை முறையா கடைபிடிக்கறதாலதான் அவங்க அடிக்கடி விஜயம் ..செய்யறாங்க….

.//. மற்றவர்களின் ஆளுமைக்கு அடிமையாகி கோழையா இருந்தால் விருந்தாளிகளிடம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் சங்கடமே..//

அநியாயத்துக்கு கற்பனை குதிரையை ஓட விடுறீங்க…:)

விருந்தோம்பல் கலாச்சாரத்தை சொல்லி சொல்லி ஆதியிலேயிருந்து

பழக்கிட்டதாலே என்னதான்னாலும் நம்ம விருந்தாளிகள்ன்னு பொறுத்து போகும்

எங்கள் நாகரீகம் உங்களுக்கு .கோழைத்தனமென்றால் அப்படியே

வைத்துகொள்ளுங்கள்..:-

//விருந்தினர்களிடம் நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் நடக்கத் தெரியாவிட்டால் சங்கடமே.. //

ட்ரட்மில் வாங்கி,ட்யூசன் போயி கூட நடைபயிற்சி கத்துகிட்டோம் :-

அப்படியும் நடக்க மிடியல :(:(:((

இனிமே நாங்க ஒரு முடிவுக்கு வந்துட்டோம்…

வாக்கிங் ஸ்டிக் வச்சுக்கலாமின்னு அப்பவாவது தைரியம் வருதான்னு பார்க்கதாங்க 

எப்படியென்றாலும் எல்லாம் தெரிந்தவர்கள் எல்லாரும் இல்லைதானே..:-)

அது தெரிந்துதானே வர்றாங்க….வாரி வாரி தர்றாங்க…சங்கடங்களை..:-

//குடும்பத்தில் பிரச்சனை அல்லது கனவன் மனைவி இடத்தில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை கையாளத் தெரியாவிட்டால் குடும்பத்தில் சங்கடமே//

வேறுபாட்டை கையாளத்தெரிந்தாலும் வேறுபாட்டை உருவாக்கும் வேர்களை(விருந்தாளிகள்) சங்கடங்கள் இல்லா சந்தோசங்கள் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் சொக்க தங்கங்கள் இல்லை

//விருந்தாளிகள் விருந்தாளிகள் என்று வருபவர்களை பற்றியே பேசி கொண்டுஇருக்கிற நாம் நம் உறவினர் வீட்டிக்கு போகும் போது நாமும் விருந்தாளிகள் என்ற எண்ணத்தை மனதில் வைத்து பேச வேண்டும் :)//

எங்க விருந்தாளிகள் அநியாயத்துக்கு நல்லவங்க…அப்படி போகற சிரமத்தை கூடத்தராம வந்துடறதால எங்க மனதையே கொள்ளை கொண்டு விட்டார்கள் …அப்படி மனசையே தொலைத்துவிட்டதால்தான் மனதில் வைத்து பேச முடியவில்லை

//வீடுகளுக்கு சென்று பத்திரிக்கை வைத்து அழைக்கிறோம். அவர்களிடம் என்னா சொல்லுகிறோம் கண்டிப்பா 2 நாளைக்கு முன்னாடியே வந்துடுங்க என்று சொல்லுகிறோம்//

அதாங்க இதுமாதிரி மொத்தமா சூப்பரா கவனிக்கறோமே..அப்புறம் அடிக்கடி தவணைமுறையிலயும் அதே மாதிரி உபசரிப்பை எதிர்பார்த்தா எப்படிங்க?

.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவர் அவர்களுக்கும், பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்!

விருந்தினர் வந்தா சந்தோஷமா, சங்கடமான்னு கேட்டால்... எது அதிகமாக இருக்குதுன்னு யோசிக்கறப்போ - சந்தோஷம்தாங்க அதிகம்!!

வீட்டில் லாலி லாலியாக ஒட்டடை தொங்கிட்டு இருக்கும், பெட்ஷீட், கவர் எல்லாம் துவைக்கணும், அலமாரி அடைசல் சரி பண்ணனும் இப்படியெல்லாம் சொல்லிட்டே இருப்போம் , ஆனா செய்ய கை வராது. ஆனா, விருந்தினர் வர்றாங்கன்னு ஒரு தகவல் வந்தால் போதும், எல்லாம் ஜீபூம்பா போட்ட மாதிரி சரியாகிடும். அவ்வளவு ஏன், வாஷிங் மெஷினில் போட்டு எடுத்த துணிகள் கூட எப்ப பாத்தாலும் சேர், டேபிள் மேல கிடக்குமே, அதுக்கெல்லாமே விருந்தினர் வந்தாத்தாங்க விமோசனமே:)

அடுப்படி அலமாரில டேட் எக்ஸ்பைர் ஆனது, வண்டு வந்தது, உளுத்துப் போனது, இதெல்லாம் சுத்தம் பண்ணி, தூக்கிப் போட்டு, நல்ல பொருளா வாங்கி வைக்கிறது, அப்புறம் எண்ணெய் ஜாடி பிசுக்கு பிடிச்சுப் போய் இருக்கறதை கிளீன் பண்றது, ஃப்ரிஜ்ஜில் போன வாரம் பிசைஞ்சு வச்ச சப்பாத்தி மாவு, முந்தா நாள் வச்ச சாம்பார், நேத்து காலையில் அரைச்ச சட்னி, இவையெல்லாம் ஒரு வழியாக விடுதலை ஆவது, இதெல்லாம் விருந்தினர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்கற ஆர்வத்துல நடக்குதா, இல்லையா? அவங்க ஒண்ணும் உங்களை குறை சொல்லப் போறதில்லை, இருந்தாலும் அவங்ககிட்ட நல்ல பேர் எடுக்கணும்கற ஆசையில் இதெல்லாம் கரெக்டாக நடக்குது,அப்படிதானே!!

இதெல்லாம் கொஞ்சம் வயதில் பெரியவங்க, முக்கியமாக கணவர் வீட்டு உறவினர்களிடம் பாராட்டு வாங்கறதுக்காக செய்யும் நல்ல விஷயங்கள்!

நாம உரிமை எடுத்துக் கொள்ளும் உறவினர்கள் வந்தால் அது இன்னும் சந்தோஷம் - அவங்க செய்யற சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல், சுட்டுத் தர்ற முறுக்கு, அவ்வளவு ஏன் - அவங்க வந்திருக்கறப்ப எல்லோரும் சேர்ந்து, அவிச்ச பனங்கிழங்கு சாப்பிடறது, வெந்த மொச்சைக்காயை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி நடுவில் வச்சுகிட்டு எல்லோரும் சேர்ந்து, கதை பேசிகிட்டு சாப்பிடறது கூட ஒரு தனி ருசிங்க.

எல்லோருமாக சேர்ந்து வெளியில் போய்ட்டு வர்றப்ப டயர்டாகத்தான் இருக்கும், வந்ததும் ஆளுக்கொரு வேலையாக, தட்டு எடுத்து வச்சு, தண்ணீர் மொண்டு வச்சு, காலையில் செய்த மிச்சமிருக்கிற புட்டு, இட்லி, அப்புறம் மதியம் செய்ததில் மீதமிருக்கும் சாதம், கறி, அதோட வர்ற வழியில் வாங்கிட்டு வந்த மிக்ஸர், சிப்ஸ் இதெல்லாம் ஷேர் பண்ணி சாப்பிட்டுட்டு, வராண்டா அல்லது ஹாலில் பெரிய ஜமுக்காளத்தை விரிச்சு, அதிலே ஆளுக்கொரு போஸில் அனந்த சயனமாக சாய்ந்துகிட்டு, போன வருஷம் பார்த்த சினிமா, டி.வி.யில் லேட்டஸ்டாக வரும் விளம்பரம், ஸ்கூலில், காலேஜில் நடந்த கலாட்டா, சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாண முகூர்த்தப்பட்டுப் புடவையின் கலர் - இப்படி உலக விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டு, பாதி ராத்திரிக்கு அப்புறம் தூங்கி, காலையில் லேட்டாக எழுந்திருக்கிற சுகம் - இதெல்லாம் விருந்தினர்கள் வந்தால் கிடைக்கிற சந்தோஷங்கள் - நினைத்தாலே இனிக்குதே!!!

உள்ளூரிலே பல வருடங்கள் இருந்தாலும் பக்கத்திலேயே இருக்கிற பொழுதுபோக்கு பூங்காவுக்குப் போகணும்னு தோணவே மாட்டேங்குதே, அதே இடத்துக்கு விருந்தினர்கள் வரும்போது, நிறைய பேர் சேர்ந்து போகும்போது, கிடைக்கிற உற்சாகம் எத்தனை அருமையான விஷயம்!! அதற்கப்புறமும் அந்த இடத்தை பஸ்ஸில் கிராஸ் பண்றப்போ கூட அந்த இனிமையான நினைவுகள் மனசைத் தாலாட்டி, லேசாக்கிடுதே!!

மொத்தத்தில் விருந்தினர் வருகையால் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷமே!!!

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி... வாங்க வாங்க. அனியாயத்துக்கு மனசை சந்தோஷபட வெச்சுட்டீங்க. நீங்க சொல்ற மாதிரிலாம் உறவுகள் வந்து எஞ்சாய் பண்ணா சந்தோஷமா தான் இருக்கும். எதிர் அணி அப்படிலாம் எஞ்சாய் பண்ண விடுவதில்லைன்னு சொல்றாங்களே!!! உங்க பதிவை படிக்க் அபடிக்க சிறி வயதில் உறவினர்கள் வீட்டில் ஆனந்தமாய் கொண்டாடியது தான் நினைவுக்கு வருது. படிக்கும்போதே மகிழ்ச்சி வருது. தொடருங்க உங்க வாதத்தை. எதிர் அணி என்ன சொல்றாங்க பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்