பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

ஸந்தோசமே என்ற அணியில் வாதாட வந்துள்ளேன்.நமக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் விருந்துக்கு வந்தோரை நன்கு கவனிப்பதே நம் பண்பாடு.விருந்து அளிக்க ஒன்றும் இல்லாத நிலையில் பிள்ளைகறி கொடுத்த தேசம் நம் தேசம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நித்திலா... வாங்க. எங்கடா காணோம் என்றிருந்தேன்.

//நிறைய விசேஷங்களுக்கு ஹோட்டலில்தான் ஆர்டர் செய்கிறார்கள்.இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் நடுவரே.// - கரக்ட்டுகரக்ட்டு. என் நிச்ச்யதர்த்தத்துக்கு கூட விருந்தினருக்கு வெளியே இருந்து தான் உணவு வந்தது. நோட்டிஃபையிங் தி பாயிண்ட்டு.

//நீங்கள் வைக்கும் கொலுவை உங்கள் வீட்டினர் மட்டும் ரசித்தால் உங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைத்து விடுமா// - அதெப்படி?? தெரு தெருவா போய் எல்லாரையும் கூப்பிடுவாங்களே.

//ஒருவர் நோயில் வாடும் போது அவரைப் பார்க்க உறவோ,நட்போ வராவிட்டால் அந்த மனம் அதிகம் சோர்ந்து போகும்// - ரொம்ப சரி. அனுபவத்தில் கண்ட உண்மை.

//அழகாகயிருக்கும் வீடோ,இல்லை ஒட்டடை படிந்த வீடோ விருந்தினருக்காக சுத்தப்படுத்துவதில் தவறென்ன இருக்கிறது// - தப்பே இல்லை. என் அம்மா சொல்வார், "அறுசுவையில் இருந்து ப்ரெண்ட்ஸ் யாராவது வந்தா தான் வனி வீட்டை சுத்தம் பண்ணுவா... அதுக்காகவே யாராவது வரணும்"னு. ;(

//வீட்டில் உள்ளார்களா,இல்லையா என்று விசாரித்து கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்பவர்கள் உண்டா இல்லையா?// - நான் கேட்டுட்டுதான்பா போவேன்.

//நடுவரே,இவர்களை விருந்தாளிகள் பட்டியலில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.// - கஷ்டமான வேலையா கொடுத்துட்டீங்களே நித்திலா ;(

------------------

ரம்யா...

//திருமணத்திற்கு பின் நாம் நமது உடன் பிறந்த தங்கை, அக்கா , அண்ணன் என அனைத்து சொந்தங்களையும் பிரிந்து வாழ்கிறோம்.. என்றாவது அவர்கள் வீட்டிற்கு வர மாட்டார்களா என ஏங்கி தவிக்கிறோம்.. // - கரக்ட்டு. அவங்களும் வர தானே செய்வாங்க. அப்போ பிடிக்காம போகுமா??

//நமது வீட்டில் ஒரு விஷேசம் என வரும் போது எல்லா சொந்தங்களும் வர வேண்டும் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள்// - வரலன்னா "எவ்வளவு தூரம் கூப்பிட்டோம்... வந்தாங்களா பார்த்தியா??"னு குறை சொல்வோமே.

//இந்த டெக்ரேஷன் போன்ற விஷயத்திற்கெல்லாம் வனிதா வந்தா தான் சரியாகும்.. நல்ல ஒரு கிரியேட்டிவிட்டி அவங்களுக்கு , மெஹந்திக்காக புள்ளைக வேற வைட்டிங்.// - இது எந்த வனிதா???!!! ;) நானா?? நானில்லை நானில்லை.

--------------------

ஷேக்... வாங்க வாங்க. எங்கே வெகு நாட்களுக்கு பின் அறுசுவை பக்கம். வரும்போதே மகிழ்ச்சின்னு சொல்லிகிட்டே வரீங்க. தொடருங்க உங்க வாதத்தை காத்திருகோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

sandosham

நடுவர் அவர்களே மீண்டும் வருவேன்னு சொல்லிட்டு போனேன் ஆனால் வரமுடியவில்லை ஏன் என்றால் எங்கள் வீட்டில் விருந்தினர் இருக்காங்க அதனலாதான் வர முடியவில்லை......
(எதிர் அணி தோழிகள் உடனே நினைக்கவேண்டாம் இதுதான் சங்கடம் என்று)பட்டிக்கு பதிவு போடுவதைவிட எங்க வீட்டு கெஸ்ட்டை நன்றாக கவனிப்பதுதான் முக்கியம்னு தான் வரவில்லை :)
நடுவர் அவர்களே எதிர் அணி ஒரு பழமொழியை வச்சே விடாம பேசிட்டு இருக்காங்க விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு என்ன காரணத்துக்கு சொன்னாங்களோ தெரியல ஆனால் நம்ம மக்கள் தப்பா நினைச்சுகிட்டாங்கன்னுதான் நான் நினைக்கிறேன்.உதாரனத்துக்கு எங்க வீட்டுல நடக்குரதயே சொல்ரேன்....
ஒரு வாரமா எங்க வீட்டில் விருந்தாளி இருக்காங்க ஆனால் எனக்கு எந்த சிரமமும் இல்லை ரொம்ப சந்தோசமா இருக்கோம்...

////ஒரு பத்து நாட்களுக்கு மேல் தங்கும் விருந்தினர்கள் என்றால் கண்டிப்பாக உறவினர்களாகத்தான் இருப்பார்கள்.அந்த 10 நாட்களுமே நாங்கள் விருந்தினர்கள் என்ற முத்திரையுடன் தான் நடந்து கொள்வார்கள்.காய் நறுக்குவது,ஒன்று இரண்டு வேலை செய்வது,அட்லீஸ்ட் நம் பிள்ளைகளை பார்த்துக் கொண்டால் நமக்கும் ஒரு சந்தோஷம் வரும்.அவர்களை இன்னும் நல்லா கவனிக்கணும்னு தோணும்.
ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால்,ஏதோ ஹோட்டலில் வந்து தங்கி இருப்பது போலவும், நாம் வெறும் ரூம் சர்வீஸ் என்றும் நடந்து கொண்டால் அவர்களால் சங்கடம் தானே நடுவரே....////

யாருங்க சொன்னா வேலை செய்து தரமாட்டாங்கன்னு எங்க வீட்டுல வந்து பாருங்க நான் காலையில்(சமயத்தில நான் எழுந்து வரதுகுள்ள இட்லியே ஊத்திவச்சிடுவாங்க) டிபன் முடிக்கரதுக்குள்ள மதியத்துக்கு என்ன சமையல் என்று என்னிடம் கேட்டு அதுக்கான காய்களை நருக்கி தருவாங்க,கிரைண்டர்ல மாவு போட்டா பாத்து எடுத்துடுவாங்க,நான் சமையல் முடிச்சா நாத்தனார் பொண்ணு இலை கழுவி,தண்ணீர் எடுத்து வச்சிடுவா,அதைவிட அவங்களாம் வந்திருக்கும் வேளையில்தான் வெளி வேலையே வரும் நீங்க போய்ட்டு வாங்க நாங்க சமைத்து வைக்கிரோம்னு செய்து வைப்பாங்க நான் இல்லாம சாப்பிடவே மாட்டாங்க நீயும் வந்தாதான் சாப்பிடுவோம்னு காத்திருப்பாங்க இப்படிலாம் ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்து செய்து ஒன்றாக சாப்பிட்டு முடித்து விட்டு ஒரெ அரட்டைதான் என்னேரமும் நேரமே பத்தலங்க பேசுரதுக்கு தினமும் இரவு இரண்டு மணிவரைகூட பேசுவோம் :)
ஒவ்வொரு முறையும் விருந்தாளிகள் வரும்போது இப்படிதாங்க போகுது சந்தோசத்துக்கும்,உற்சாகத்துக்கும் பஞ்சமே இல்லங்க :)

இன்னும் நிறைய சொல்லவேண்டும் என்று ஆசைதான் நேரமில்லாத காரணத்தால் விருந்தினரால் சந்தோசமே சந்தோசமே என்று கூறி இத்தோடு எனது வாத்தை முடித்துகொள்கிறேன் நன்றி .............

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

விருந்தாளிகள் விருந்தாளிகளாக மட்டும் வந்து போவது ரொம்ப சந்தோஷம்தான், அழைத்தவர்களின் குடும்ப விஷயங்களில் அனுமதியின்றி தலையிடாமல் இருக்கும் வரை!

நடுவர் அவர்களே,

//இன்று,இருபது நிமிடத்தில் செல்லும் இடத்திற்கே இருபத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டும் ஒரு நபருக்கு.இதையும் யோசிச்சு பாருங்க நடுவரே.மாதம் முழுவதும் விருந்தினர் வருகை என்பது சத்தியம்தானா,சாத்தியம்தானா//

சாத்தியம் தாங்க.எல்லா பெண்களுமே வேலைக்கு போவதில்லை.பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறைனா,அதே இருப்பதைந்து ரூபாய் செலவு செய்து,உறவினர் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து இரெண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் மிச்சம் பண்றவங்களும் இருக்காங்க, நடுவர் அவர்களே.

//ஒரு கிலோ அரிசி ஐம்பது ரூபாய்,முருங்கைகாயும்,கத்திரிக்காயும் பத்துரூபாய் கொடுத்து வாங்கினால் சாம்பார் ரெடி,ஒரு சின்ன முட்டைக்கோஸை துருவினால் பொரியல் ரெடி,வெண்டைக்காயை நறுக்கினா கூட்டாச்சு.பத்து ரூபா கொடுத்து கடலைமாவு வாங்கினால் போண்டா ரெடி.ரவை,அதுவும் கம்மி விலைதான்.கேசரி தயார்
சமைச்சு முடிச்சிட்டு கடைக்கு போய் இலையும்,யூஸ் அண்ட் த்ரோ டம்ளர்(பாத்திரம் கழுவற வேலை இல்லை பாருங்க) வாங்கி பாயாசம் ஊத்தி பரிமாறினா விருந்து அமர்க்களமா முடிஞ்சுடும்.நடுவரே//

எதிரணிதொழி சொல்வது ஒரு நாள் விருந்து அல்லது ஒரு வேளை விருந்துக்கோ பொருந்தும்.ஆனால் பல நாட்கள் (குறைந்தது 2,3 நாட்கள்) விருந்தினர்கள் தங்கும் போது ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை நீங்களே கணக்கு பண்ணி பாருங்க நடுவரே.இது கண்டிப்பாக நடுத்தர வர்க்க குடும்பத்தின் பட்ஜட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனபது மறுக்க முடியாத உண்மை.

//தேநீருக்காக தினசரி ஒரு வீட்டிற்கு செல்லும் வீணர்களைப் பார்த்து//

தேனீருக்கு மட்டுமல்ல நடுவர் அவர்களே,தினமும் கரெக்ட்டா சாப்பாட்டு நேரத்துக்கு வருபவர்களும் உண்டு.சரி என்று அதிகமா சமைத்து வைத்தால் அன்று கண்டிப்பா வர மாட்டாங்க.

//நான் எழுந்து வரதுகுள்ள இட்லியே ஊத்திவச்சிடுவாங்க) டிபன் முடிக்கரதுக்குள்ள மதியத்துக்கு என்ன சமையல் என்று என்னிடம் கேட்டு அதுக்கான காய்களை நருக்கி தருவாங்க,கிரைண்டர்ல மாவு போட்டா பாத்து எடுத்துடுவாங்க,//

எதிரணி தோழி ரொம்பவே கொடுத்து வைத்தவர்.அவர் சொல்வதுபோல் விருந்தாளிகள் இருந்தால் அது சொர்கம்தான்.ஆனால் எங்களுக்கு தெரிந்த வரையில்,ஒரு காபி டம்ளர் கூட கழுவிவைக்காத விருந்தினர்களே அதிகம்.உடனே எதிரணித்தோழிகள் "விருந்தினர் வேலை செய்ய வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்" எனலாம்.ஒரு வீட்டுக்கு சென்று பல நாட்கள் தங்கும் போது அந்த வீட்டு பெண் தான் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் இவர்களும் வேலைகளை பகிர்ந்து கொண்டால்,வேலைப்பளுவும் குறையும்.அந்த பெண்ணுக்கும் வந்தவர்களுடன்உட்கார்ந்து பேச நேரமும் கிடைக்கும்.

விருந்தினர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வதால்தான் இவ்வளவு மகிழ்வாய் இங்க வந்து பதிவு போடுறாங்க.எல்லா வேலையும் இவங்களே செய்வதாய் இருக்கும் பட்சத்தில் இவங்களுக்குமே விருந்தாளிகளின் வருகை சங்கடமே.

வீட்டு வேலையையே பகிர்ந்து கொள்ளாதவர்கள் மற்ற விஷயங்களில் உதவுவார்கள் என்பது என்ன நிச்சயம்?

//”கனியிருப்ப காய் கவர்ந்தற்று”//

கனி இருந்தும் எங்களுக்கு என்று கிடைப்பது காய் தான் நடுவர் அவர்களே :((( .காய் தரும் கசப்பு மருந்தாய் வேண்டுமானால் இருக்கலாமே தவிர ஒரு போதும் மகிழ்வாய் இராது.அதனால் விருந்தினர் வருகை சங்கடமே என்று கூறி,வாய்ப்புக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன், நன்றி நடுவரே.

சுவர்ணா... கலக்குங்க. விருந்தாளிகளோடு நேரம் போவதே தெரியலயா???
//சமயத்தில நான் எழுந்து வரதுகுள்ள இட்லியே ஊத்திவச்சிடுவாங்க// - குடுத்து வெச்சவங்கங்க...

பிரபா... //குடும்ப விஷயங்களில் அனுமதியின்றி தலையிடாமல் இருக்கும் வரை// - ரொம்ப சரி.

ஹர்ஷா... //தேனீருக்கு மட்டுமல்ல நடுவர் அவர்களே,தினமும் கரெக்ட்டா சாப்பாட்டு நேரத்துக்கு வருபவர்களும் உண்டு// - ஹஹஹா.
//ஒரு காபி டம்ளர் கூட கழுவிவைக்காத விருந்தினர்களே அதிகம்// - இது தான் கொடுமை.

சரி... தோழிகள் எல்லாம் தீர்ப்புக்கு கொஞ்சம் காத்திருங்க. இன்று இரவுக்குள் வருகிறேன்... கோவிச்ச்க்காதீங்க, குழந்தைகள் வேலை அதிகமா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நடுவருக்கு காலை வணக்கம்.

இங்கு வாதங்கள் அனைத்தும் தினசரி விருந்தினர் வருகை,விருந்தினர் வேலை செய்ய வேண்டும்,பொருளாதாரம் பற்றியே கூறப்பட்டது.

நடுவர் அவர்களே,தினமும் விருந்தினர் வருகை-இதற்கான உண்மையான பதிலை நீங்கள் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்று,முந்நூறு ரூபாய் சம்பளத்தில் விருந்தோம்பலை சிறப்பாக செய்து,நன்றாக வாழ்ந்தார்கள்.இன்று,ஒரு கட்டிடத்தில் மணலை அள்ளிக் கொட்டினாலே அவர்களுக்கு சம்பளம் ஒன்பதாயிரம்.நான் வாதத்திற்காக கூறவில்லை,நிஜம்தான்.எத்தனையோ மாற்றங்கள்.எவை மாறினாலும் விருந்தோம்பல் மாறுவதில்லை.

விருந்தினர் வேலை செய்யலாமா? விசேஷங்களுக்கு வருபவர்கள் ஆளுக்கொரு வேலையை இழுத்து போட்டு செய்வார்கள்.அதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால்,நம் வீட்டுக்கு வருபவர்களை நாம்தான் கவனிக்க வேண்டும்.அதுதான் நமது தர்மம்.நடுவரே,நீங்கள் விருந்தினராக உங்கள் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.முதல் நாளே,சொல்லி விடுவீர்கள்.அப்போது தான் இருவருக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும்.நெடு நாட்களுக்கு பிறகு உங்களைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி,வீட்டிற்கு வருகை தரப் போகிறீர்கள் என்பது அடுத்த மகிழ்ச்சி,கணவர்,குழந்தைகளோடு உங்களைக் காண்பது இன்னொரு மகிழ்ச்சி.

நம் வீட்டிற்கு நான்கு பேர் வருகையில் நம் வீடு நீட்டாக இருக்க வேண்டும்,நன்மதிப்பு பெற வேண்டும்,நம் ரசனை,குணம் அதில் வெளிப்படும் என்று நினைப்போம்.

நம்வீட்டை அழகாகவும்,சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.அதில் நம் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது.விருந்தாளிகள் வரும் போது ஒரு கூடுதல் கவனிப்பு.இதற்கெல்லாம் சங்கடப்பட்டால் எப்படி? அழகாய்
அலங்கரிப்பது நமக்கும் மகிழ்ச்சிதானே.உங்களுடைய பெயிண்டிங்கை எது ஹாலிற்கு,பெட்ரூமிற்கு என்றெல்லாம் யோசித்து நீங்கள் வீட்டை அழகு படுத்துவதில்லையா நடுவரே.

இல்லையென்றால் என்ன சொல்வார்கள்,குழந்தை இருக்க வீடாயிருந்தா கூட பரவாயில்லை.இப்படியிருக்கே!!என்று பேசிக் கொள்வார்கள்.

அடுத்தது,வர்றவங்களுக்கு என்ன சமைப்பது,எதை விரும்பி சாப்பிடுவார்கள்,குழந்தைகள்,எவ்வளவு,பெரியவர்கள் எவ்வளவு
என்றெல்லாம் யோசித்தே தொடங்குவார்கள்.இல்லையென்று சொல்லாமல் பரிமாற நிறையவே சமைப்பார்கள்.தன் வீட்டினருக்கு இல்லாமல் சமைப்பதெல்லாம் கிடையாது.விருந்தின் போது சமைக்கப்படும் உணவு மீதமாகி வீணடிக்கப் படுவதாக சொல்லப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

நடுவரே,நீங்கள் என் விருந்தாளி.உங்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது.காபி டைம் என்றால் உங்களுக்கு காபி,குழந்தைகளுக்கு பால் என்று கவனித்து கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.உங்களுக்கு அறுசுவை விருந்து படைப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கும்,மனநிறைவிற்கும் அளவே இல்லை.உங்கள் இலையில் எது குறைகிறது என்று பார்த்து ஓடி வந்து பரிமாறும்போது எனக்கு ஆனந்தமே ஏற்படுகிறது.உங்களை எந்த குறையும் இல்லாமல் கவனிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்.

விருந்தாளிகளை கவனிக்கும் மனதில் அன்பு,அக்கறை,தாய்மை,மகிழ்ச்சி,எதிர்பார்ப்பும்(தன் சமையல்
பிடிக்குமோ,பிடிக்காதோ) நிறைந்திருக்கும்.

நடுவரே,உங்கள் வீட்டிற்கு எத்தனையோ விருந்தாளிகள் வந்திருப்பார்கள்.நீங்கள் ஒரு தரமேனும் சர்வராக உணர்ந்திருக்கிறீர்களா.சத்தியம் என்னவென்று சத்தமிட்டு சொல்லுங்கள்.

நீங்கள் எங்கள் வீட்டினருடன் மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருப்பீர்கள்.பழைய ஞாபகங்கள்,கலாட்டாக்கள்,நகைச்சுவை சம்பவங்கள் என்று பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்.நமக்குள் ஒரு புரிதல்,நெருக்கம்,அன்பு வளரவே செய்யும்.நமக்கான உறவு என்று இணைந்து மகிழ்கிறோம்.படிப்பு எப்படி போகிறது,தொழில் வளர்ச்சி எப்படி என்று பகிர்ந்து கொள்கிறோம்.

மொட்டை மாடியில் அமர்ந்து விடியவிடிய கதை பேசுவதெல்லாம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பக்கத்தில்தான் ஊட்டி இருக்கிறது,பிளாக் தண்டர் இருக்கிறது போய்வரலாம் என்று உங்களை அழைத்துச் செல்வோம்.உங்களுடன் பயணிப்பது இனிமையானதொரு பயணமாக இருக்கும்.நம்வீட்டுக்கு வந்தவங்களை நாலுஇடத்துக்கு நாமதான் கூப்பிட்டு போகனும் என்று கடமை,ஆசை,ஆர்வம் அனைத்தும் இருக்கும்.

நீங்கள் கிளம்பிச் செல்கையில் இன்னும் இரண்டு நாள் இருக்கலாமே என்றுதான் நான் கூறுவேன்.நீங்கள் மீண்டும் வரும் நாளுக்காக இனிமையான நினைவுகளுடன் காத்திருப்பேன் நடுவர் அவர்களே.உங்களை எப்படி கவனிப்போம் என்று விரிவாகச் சொல்ல ஆசைதான்.நேரமின்மையால் சுருங்கக் கூறியுள்ளேன்.

//விருந்தினர்களின் வருகையால் மனம் மகிழும் உள்ளங்கள் இன்னும் நாட்டில் உள்ளனரா?அவர்களை நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது////

அடக்கடவுளே!! என்ன அநியாயம்!! மிக உயர்ந்த பண்பான விருந்தோம்பல் சிறுபிள்ளை முதல் இருக்கிறதே.எப்படி நடுவரே இப்படியெல்லாம் பேசுகிறார்கள்?

//இன்லெண்ட் லெட்டர்ல எழுதி அனுப்பி வைப்பாங்க, அட்ரஸ் எழுதற இடத்துல கூட பேலன்ஸ் வைக்காம நுணுக்கி நுணுக்கி குட்டி குட்டியா எழுதி குறைய
கொட்டியிருப்பாங்க.//

இது எந்த காலத்தில் நடந்தது நடுவரே!!

/தனியா இருக்கறதால விருந்தாளிகளோட வருகை சந்தோஷம் தருதாம். வாஸ்தவம் தான். சாப்பாடு, தண்ணி கிடைக///

நடுவரே,தனிமை உணர்வால் பாதிக்கப்பட்டு மனவேதனைக்கு ஆளானவர்கள் கதைகள் உங்களுக்கு தெரியாதா என்ன? விருந்தினர் வருகை தனிமை உணர்வை போக்குகிறது,பாதுகாப்பு உணர்வை தருகிறது.

//விருந்தாளிகளால் சண்டை மட்டும் தான் வரும். சந்தோஷங்கள் எப்போதாவது தான் வரும். புரிந்தால் சரி.///

ஏங்க நடுவரே,விருந்தாளிகள் நட்போ,உறவோ.இவர்களால் சண்டைதான் வரும் என்றால் இவர்களை எதற்காக விசேஷங்களுக்கும்,பண்டிகைகளுக்கும் அழைக்கிறார்கள்.நல்ல நாளில் எதற்காக சண்டைக்காரர்களை விரும்பி அழைக்க வேண்டும்,வராவிட்டால் வருந்த வேண்டும்.

///உங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கறேங்க என்னதான் உலகம் நவீனமாகி போயிருந்தாலும், இன்னமும் ஒருசில வீடுகளில்வாஷிங்மெஷின்,ப்ரிட்ஜ் மற்றும் இன்ன பிற மின்சார உபகரணங்கள் வாங்காமலே தான் உள்ளார்கள். அவர்களை
போன்றவர்கள் என்ன செய்வார்கள்?வந்திருக்கும் விருந்தாளி அவர் வீட்டில் வேலைக்காரர் வைத்திருப்பார்.//

ஏங்க நடுவரே,தன் வீட்டில் வேலை செய்வதற்கு ஆள் வைக்கும் அளவிற்கு உள்ள ஒருவரின் உறவினர் வீட்டில் மிக்சி இருக்காதாம்,கிரைண்டர் இருக்காதாம்.நடுவரே,கேட்பதற்கே விந்தையாக இருக்கிறதே!

ஒரு வாரமா சரியா சாப்டவும் முடியாம தூங்கவும் முடியாம நம்ம குழ்ந்தைய கவனிக்காம புருசன கவனிக்காம தேவயா இப்படி ஒரு விருந்தினர்கள் என்று நடுவர் யோசித்து முடிவு சொல்ல தேவயேயில்லஎன்னோட வாதத்துலயே இருக்கு///

நடுவரே,உங்கள் வீட்டில் விருந்தினர் வருகை தந்துள்ள போது நீங்கள் உங்கள் கணவரையும்,பிள்ளையையும் கவனிக்காமல்தான் இருந்தீர்களா?நீங்கள் சாப்பிடாமல் இருந்தீர்களா நடுவரே.

//சொந்த செலவுல சூனியம் வசிக்கரதுனு கேள்விபட்டுஇருக்கீங்களா///

நடுவரே,இந்த அநியாயத்தை பார்த்தீங்களா?!!!இதைப் பார்த்து வேதனைப்படுவதா,அறியாமை என்று நினைப்பதா?

விருந்தினர் வருகை உறவிற்கும் நட்பிற்கும் பாலம் அமைக்கிறது.ஒற்றுமை வளர்க்கிறது.மகிழ்ச்சி அளிக்கிறது.கௌரவம் அளிக்கிறது.மிக உயர்ந்த பண்பை காக்கிறது.புண்ணியத்தை தேடித் தருகிறது.

குழந்தைகள் விடுமுறைக் காலத்தை ஒன்றாக கழிக்கும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள்.முக்கியமாக,டிவி பார்த்து கண்ணையும்,மனதையும் கெடுக்காமல் விளையாடிக் கழிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நடுவரே,சொல்ல எவ்வளவோ உண்டு.இந்த பதிவை போடுவதற்குள்ளாகவே 2 முறை பவர் போய்விட்டது.நிறைய விஷயங்களை விரிவாகச் சொல்ல முடியாதது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.சரியாக பங்கேற்காததற்கு மன்னிக்கவும்.

விருந்தினர் வருகையால் நாம் என்றுமே மகிழ்ச்சி மட்டுமே அடைவோம் என்றுகூறி எனது வாதத்தை நிறைவு செய்கிறேன்.நன்றி,வணக்கம்.

அன்புடன்
நித்திலா

****யாருங்க சொன்னா வேலை செய்து தரமாட்டாங்கன்னு எங்க வீட்டுல வந்து பாருங்க நான் காலையில் டிபன் முடிக்கரதுக்குள்ள மதியத்துக்கு என்ன சமையல் என்று என்னிடம் கேட்டு அதுக்கான காய்களை நருக்கி தருவாங்க ****
நடுவரே, கேட்டுக்குங்க, இவங்க எந்திரிக்கறதுக்குள்ள இவங்களுக்கும் சேர்த்து டிபன் செய்துட்டு, மதியம் என்ன சமையல்னு கேக்கறாங்க வர்ற விருந்தாளிங்க. குடுத்து வெச்சவங்க. நடுவரே, நாங்க இங்கே மிகைப்படுத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல. நான் சொல்வதெல்லாம் உண்மை. எங்க வீட்லலாம் இந்த அநியாயம் நடக்கவே நடக்காது. அது எத்தன மணி ஆனாலும், எங்க அம்மாவோ இல்ல பெண்களாகிய நாங்களோ மட்டும் தான் செய்யனும். ஏன்னா, எங்க வீட்ல மூணு பொண்ணுங்க இருக்கோமாம், நாங்க பார்த்துப்போமாம் அந்த வேலைய. கொடுமைய பாருங்க. இவங்களுக்கு காலம் முழுக்க வேலை செய்யவா பெண்ணா பிறந்திருக்கோம்?

*****கிரைண்டர்ல மாவு போட்டா பாத்து எடுத்துடுவாங்க,நான் சமையல் முடிச்சா நாத்தனார் பொண்ணு இலை கழுவி,தண்ணீர் எடுத்து வச்சிடுவா,அதைவிட அவங்களாம் வந்திருக்கும் வேளையில்தான் வெளி வேலையே வரும் நீங்க போய்ட்டு வாங்க நாங்க சமைத்து வைக்கிரோம்னு செய்து வைப்பாங்க நான் இல்லாம சாப்பிடவே மாட்டாங்க ******

என்னது மாவு போட்டு எடுக்கற வேலையா? அவங்க தட்டை அவங்க எடுத்து வச்சா அதுவே பெரிய வேலையாச்சே. உடனே சத்தம் போட்டுட்டு வந்துடாதீங்க எதிரணி, வந்திருக்கும் விருந்தாளி சாப்ட்ட தட்டை நாம தான் எடுக்கனும். அவங்க எடுக்க கூடாதுன்னு. அப்ப வீட்டுக்கு வர்ற விருந்தாளிகள வேலை மட்டும் செய்ய விடலாமா? விருந்தினரில் ஒரு சாரார் மட்டும் இப்படி எப்படி உள்ளனர்?

எங்க வீட்லயும் சொல்லுவாங்களே, நீ வந்தா தான் சாப்பிடுவோம்னு எப்படி? சாப்பாடு போட எங்களை தான் கூப்பிடுவாங்க. சமயத்துல பத்தாம போய்டுச்சினா டக்குன்னு உலை வைக்கனும்ல அதுக்கு. நீங்க வேற ஏங்க வயித்தெரிச்சலை கொட்டிட்டு :( நடுவரே, ஒண்ணு மட்டும் சொல்றேன் இதெல்லாம் செய்துட்டு வயிறு எரிஞ்சுட்டு இருக்க கொடுமைக்காரிகள்னு எங்களை நினைச்சுடாதீங்க. நான் பிறந்து, நினைவு தெரிந்த நாள் முதலாக எப்போதுமே எங்கள் வீடு விருந்தினர்களால் நிறைந்திருக்கும். எங்க அம்மாவை ரிலாக்சாகவே பார்க்க முடியாது. எப்பவும் சமையல் கட்டிலயே தான் இருப்பாங்க. விருந்தாளிகள் என்று பெரும்பாலும் வருபவர்கள் என் பாட்டி வீட்டில் இருந்து தான் (அம்மாவின் மாமியார்). மற்றும் அவரின் மகள்கள். பேரக் குழந்தைகள் இப்படி. என் அம்மாவின் சொந்த தாயாக இருந்தால் இது மாதிரி தன் மகள் அடுக்களையில் நாள் முழுவதையும் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பாரா? அவரும் உடன் வேலைகள் செய்திருப்பார். வந்திருக்கும் விருந்தாளி என் அம்மாவிற்கு, மாமியார், நாத்தனார்கள் ஆனதால் அந்த அருமை தெரியாமல் போய்விட்டது. என் பாட்டிக்கு தன் ஒரு வேலையும் செய்யாமல் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டிருக்க தான் பிடிக்கும். மூன்று பெண்களும் பிள்ளைகள் லீவில் வந்திருப்பதால் அவருடைய அம்மாவிடம் தத்தமது வீட்டு கதைகளை பேசியே கதை மாளாது. இது இப்படியிருக்க அவர்கள் எப்படி என் அம்மாவுடன் வேலை செய்வார்கள்?

இது என்ன கொடுமை என்றால் அம்மா அப்போது தான் சமையல் வேலை முடித்து இன்னொரு வீட்டு வேலை பார்க்க போயிருப்பார். உடனே பாட்டி குரல் கொடுப்பார். தெருவில் இறால் போகிறது பார். என் சின்ன பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்னு. அம்மா மறுக்க முடியுமா? உடனே அவரும் இறால் வாங்குவார். அந்த சமயத்தில கையில் பணம் இல்லையென்றால் கடனுக்கு வாங்குவார். அது முடிந்ததா? அத்தோடு மாலை நேரம் அனைவரும் பீச்சிற்கு செல்வார்கள். வெறும் கையோடா? அதுதான் இல்லை. பஜ்ஜி, போண்டா, காபி ஒரு பெட்ஷீட் இதெல்லாம் எடுத்துக்கொண்டு போவார்கள். இவர்கள் போன பிறகு தான் என் அம்மா சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு காத்திருக்கும் மீத வேலைகளை முடிப்பார். அதற்குள் பீச்சிற்கு சென்றவர்கள் வந்து விடுவார்கள். வரும்போது சும்மா வருவார்களா? அனைவரும் கடல் அலையில் காலை நனைக்கிறேன் பேர்வழி என்று ஆடைகளை நனைத்து கொண்டு வந்து போடுவார்கள். அதையும் அம்மா தான் துவைக்க வேண்டும். இத்தனையும் அடி பம்பில் தான் அடித்து செய்ய வேண்டும். இவ்வளவு வேலைகளுக்கும் பாட்டி வேறு யாரையும் அனுப்பி என் அம்மாவிற்கு உதவி செய்ய சொல்லவும் மாட்டார். வந்திருப்பவர்களுக்கும் அது தோணாது.

அம்மாவிற்கு தோட்ட கலையில் அதிக ஆர்வம் உண்டு. வீட்டை சுற்றி முருங்கை, தென்னை, மா, மற்றும் காய்கறி, பூச்செடிகளை வளர்த்து வருகிறார். இவர் கஷ்டப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தவைகளை வந்தவர்கள் கிளம்பிச்செல்லும் போது, ஒரு மரியாதைக்கு கூட கேட்க மாட்டார்கள். ஒவ்வொரு செடியை பிடிங்கிக் கொண்டு, முருங்கை, தேங்காய், மாங்காய்களை மருந்துக்கூட மரத்தில் ஒரு காய்களையும் வைக்காமல் சுத்தமாக அறுவடை செய்துக் கொண்டு, போகும் போதும் மீன்குழம்பு, இறால் வறுவல், மீன்வறுவல் போன்றவற்றை பெரிய தூக்குகளில் செய்துக் கொண்டு செல்வார்கள்.

அம்மாவிற்கு ஒருமுறை உடல் நிலை சீரியசாகி சுயநினைவே போய்விட்டது. இந்த சூழ்நிலையில் நான், என் அக்கா, தங்கை, அப்பா மட்டுமே எங்க வீட்டில் இருந்து அம்மாவை கவனித்து பாட்டிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னால், அவர் மலைக்கு மாலை போட்டுள்ளேன் என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டார். சரி, அவரால் முடியாவிட்டாலும் வேறு யாரையாவது அனுப்பி வைக்கலாமில்லையா? அதுவும் இல்லை. அப்போது தான் கடவுள் மேல் பாரத்தை போட்டு, நானும், என் அப்பாவும் மட்டும் அனைத்தையும் எதிர்கொண்டோம். மற்ற இரு சகோதரிகளும் பள்ளி, கல்லூரிக்கு செல்வதால் அவர்களால் விடுமுறை எடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் எனக்கு அந்த காலக்கட்டங்களில் சென்னையை பற்றி வெளி இட அனுபவங்கள் குறைவு. ஏதோ ஒரு மனதைரியத்தில் இறங்கி, அவருக்கு ஆபரேஷனையும் முடித்து விட்டோம். தனியாக நின்று. அப்போதும் அந்த உறவினர்கள் ஒருநாள் சுற்றுலாவிற்கு வந்து செல்வது போல ஆஸ்பத்த்ரியில் வந்து பேருக்கு பார்த்துவிட்டு அன்று இரவே சென்றுவிட்டார்கள். ஏன் இப்போது நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்று தோன்றவில்லையா?

என்ன விருந்தாளிகள்? என்ன உறவுகள்?

"அண்ணன் என்னடா? தம்பி என்னடா அவசரமான உலகத்திலே"

எதிரணி தோழிகளே நீங்கள் சந்தித்த சந்தோஷமான உறவுகளை பற்றி இங்கே பகிர்ந்து கொண்டீர்கள். அதை நான் இல்லை என்று மறுக்க முடியாது. அதற்காக உலகத்தில் உள்ள அத்துணை உறவுகளும், விருந்தாளிகளும் அப்படித்தான் என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். நான் சந்தித்த சங்கடமான உறவுகளை பற்றி நான் இங்கே சொன்னேன். அதை நீங்கள் மறுக்கவும் முடியாது. நான் இவர்களை வைத்து உலகமே அப்படித்தான் என்ற முடிவுக்கு வந்தால் நான் முட்டாள் என்றே அர்த்தம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//விருந்தினர் வேலை செய்யலாமா? விசேஷங்களுக்கு வருபவர்கள் ஆளுக்கொரு வேலையை இழுத்து போட்டு செய்வார்கள்.அதை ஏற்றுக் கொள்ளலாம்.//

அன்பு எதிரணி தோழியே, நானும் விருந்தாளிகள் வருகையை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டவள் தான், வருபவர்களுக்கு சோறும், வராதவர்களுக்கு உலையுமாக வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் தான். செய்ததை சொல்லிக்காட்டாதவர்கள் தான். எங்கள் வீடுகளில் யாருக்கு நோய் என்றாலும் எங்கள் வீட்டில் தான் வந்து தங்குவார்கள். காரணம் அன்பான, அணுசரனையான, வேளாவேளை கவனிப்புக்காகவே வருவார்கள்.

நாங்கள் சொல்வது ஒருநாள் விருந்தாளிகளை வேலை செய்ய வேண்டும் என்று அல்ல. சில நாட்களோ, பல நாட்களோ தங்கும் விருந்தாளிகளை தான். என் அம்மாவிற்கு உடலில் ஆயிரத்தெட்டு நோய்கள் உண்டு. இருந்தாலும் வந்திருப்பவர்கள் முன்பு அதையெல்லாம் காட்டாமல் இன்முகத்துடனே சேவை செய்து மகிழ்வார். இது போன்றவர்கள் எதிர்பார்க்காமலே செய்யலாமல்லவா? அதைத்தான் கேட்கிறேன்.

//அடக்கடவுளே!! என்ன அநியாயம்!! மிக உயர்ந்த பண்பான விருந்தோம்பல் சிறுபிள்ளை முதல் இருக்கிறதே.எப்படி நடுவரே இப்படியெல்லாம் பேசுகிறார்கள்?//

நடுவரே, பாரம்பரியமான விஷயங்கள் இன்றைய விலைவாசி ஏற்ற காலத்தில் எத்தனை காப்பாற்றப்படுகிறது சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு காலத்தில் கல்யாணம் என்றால் ஒரு வாரம் நடத்துவார்களாம். இன்று ஒருநாள் நடத்துவதற்கே முழி பிதுங்கி தள்ளுகிறது. இதில் விருந்தோம்பலையும் காலத்திற்கு தகுந்தமாதிரி இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம். விருந்தாளிகளே வேண்டாம் என்று சொல்லவில்லை.

இது செய்து செய்து ஏற்பட்ட வயிற்றெரிச்சல் இல்லை. என்ன செய்தும் அதையெல்லாம் நினைத்து பார்க்காமல், இன்று எந்த நல்லது கெட்டது நடந்தாலும் ஆறுதல் சொல்லாத அந்த நன்றியே இல்லாத உறவுகளை நினைத்து மனம் நொந்து போய் வரும் வார்த்தைகள்.

//இது எந்த காலத்தில் நடந்தது நடுவரே!!//

ட்வின் டவர் தகர்க்கபட்ட நாளை மறக்க முடியுமா? 2004ம் வருடம் சுனாமி வந்த நாளையும்,தற்போது வந்த நாளையும் மறக்க முடியுமா? அவையெல்லாம் மாறாத வடுக்களை ஏற்படுத்தின தினங்கள் அல்லவா? அதை திரும்ப நிகழ வேண்டும் என்று யாராவது எதிர்பார்ப்போமா? எதிரிக்கு கூட அதுபோன்ற நிலை எதிர்காலத்தில் நிகழ கூடாது.

அதை போல இல்லையென்றால் நடந்து முடிந்தவைகள் இல்லையென்று ஆகி விடுமா? அதற்காக சொன்னேன்.

//நடுவரே,தனிமை உணர்வால் பாதிக்கப்பட்டு மனவேதனைக்கு ஆளானவர்கள் கதைகள் உங்களுக்கு தெரியாதா என்ன? விருந்தினர் வருகை தனிமை உணர்வை போக்குகிறது,பாதுகாப்பு உணர்வை தருகிறது.//

நடுவரே, எதிரணி சொல்வதை போல இன்று பலரும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அதிலேயே அவர்கள் முக்கால் பொழுதும் கழிகிறது. மீதி இருக்கும் ஞாயிறு ஒருவார பெண்டிங்க வேலைகளை முடிப்பதிலேயே கழிகிறது. இதில் எங்கிருந்து அவர்களை தனிமை வாட்டப் போகிறது. நடுவில் மனமாற்றத்தில்ற்கும், இடமாற்றத்திற்கும் சுற்றுலா செல்வார்கள். அதிலேயே அவர்களுக்கு வேண்டிய புத்துணர்ச்சியும் கிடைத்து விடும்.

//ஏங்க நடுவரே,விருந்தாளிகள் நட்போ,உறவோ.இவர்களால் சண்டைதான் வரும் என்றால் இவர்களை எதற்காக விசேஷங்களுக்கும்,பண்டிகைகளுக்கும் அழைக்கிறார்கள்.நல்ல நாளில் எதற்காக சண்டைக்காரர்களை விரும்பி அழைக்க வேண்டும்,வராவிட்டால் வருந்த வேண்டும்.//

திருமணம் ஆயிரங்காலத்து பயிரில்லையா? இவர்களை அழைக்கவில்லையென்றால் அந்த ஆயிரம் காலத்திற்கு சொல்லி காண்பித்தே நம் உயிரை எடுத்துவிடுவார்கள். அதனால் போனால் போகட்டும் என்று ஒருமுறை அழைத்து விடுகிறோம்.

//ஏங்க நடுவரே,தன் வீட்டில் வேலை செய்வதற்கு ஆள் வைக்கும் அளவிற்கு உள்ள ஒருவரின் உறவினர் வீட்டில் மிக்சி இருக்காதாம்,கிரைண்டர் இருக்காதாம்.நடுவரே,கேட்பதற்கே விந்தையாக இருக்கிறதே!//

நடுவரே, ஒரு மரத்தின் கனிகள் அத்துணையும் இனித்து விடுமா? ஒரு கனியில் இருந்து வந்த அத்துணை விதைகளுமே செழித்தோங்கி மரமாகி விடுமா? அதில் பூச்சி பிடித்த,சத்தில்லாத விதைகள் வளரும்போதே கருகி விடும், அதையும் மீறி முளைக்கும் விதைகள் வளர்ந்து செழித்து பின்பு தோப்பாகி நிற்கின்றன. அதுபோல ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் மூவரில் ஒருவர் டாக்டராகி இருப்பார். மற்றுமொருவர் பொறியியில் வல்லுநராகவும் எஞ்சியிருக்கும் ஒருவர் சாதாராண ஆபிஸ் குமாஸ்தாவாக இருப்பார். அப்படியிருக்கும் போது அந்த குமாஸ்தாவின் வீட்டிற்கு இந்த டாக்டர் அண்ணனோ, பொறியியில் வல்லுநர் அண்ணனோ வராமல் இருப்பார்களா? இதில் என்ன விந்தை இருக்க போகிறது? கொஞ்சம் சொல்லுங்களேன். டாக்டர் அண்ணன் வசதியாக இருந்தால் தம்பியையும் வசதிக்காரராக மாற்றி விடுவாரா என்ன?

//நடுவரே,உங்கள் வீட்டில் விருந்தினர் வருகை தந்துள்ள போது நீங்கள் உங்கள் கணவரையும்,பிள்ளையையும் கவனிக்காமல்தான் இருந்தீர்களா?நீங்கள் சாப்பிடாமல் இருந்தீர்களா நடுவரே.//

எப்படி கவனித்திருக்க முடியும்? இதுபோன்ற வணங்காமுடி விருந்தினர்களை வைத்துக் கொண்டு. இத்தனை நாள் மனைவியின் கையால் சாப்பிட்டிருப்பவர், விருந்தினர் வந்தவுடன் தானே போட்டு சாப்பிட்டு, தன் வேலைகளை தானே பார்த்து கொண்டிருப்பார். குழந்தைகளுக்கு இத்தனை நாள் பார்த்து பார்த்து நேரம் செலவழித்து ஊட்டிக் கொண்டிருந்தவர் இப்போது ஏனோதானோவென்று அரைவயிறும், கால் வயிறும் ஊட்டியிருப்பார். அந்த குழந்தைக்கு காலையில் டிபன், 11 மணி வாக்கில் சூப், அப்புறம் சாப்பாடு, மாலை நேர சிற்றுண்டி, ஏதாவது ஒரு ஜூஸ் இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தவர் விருந்தினர் வந்தபின்பும் இத்தணையும் தொடரும் என்று நினைக்கிறீர்களா? ஒரு வேளை சாப்பாடு ஊட்டினாலே பெரிய விஷயம் தான்.

//விருந்தினர் வருகை உறவிற்கும் நட்பிற்கும் பாலம் அமைக்கிறது.ஒற்றுமை வளர்க்கிறது.மகிழ்ச்சி அளிக்கிறது.கௌரவம் அளிக்கிறது.மிக உயர்ந்த பண்பை காக்கிறது.புண்ணியத்தை தேடித் தருகிறது.//

இதெல்லாம் நடக்குனு தானே நாங்களும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தனை காலமும் செய்து வந்தோம். நீங்க சொன்ன இத்தனை விஷயங்களில் ஒன்று கூட நடப்பதாக தெரியவில்லை. அதுக்கு தான் நட்பிற்கு பாலம் போட்டு புதிய உறவுகளை தேடி இங்கே வந்துள்ளோம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்