பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

அன்பு நடுவரே, நான் தந்த தலைப்பை எடுத்ததற்கு மறுபடி ஒருமுறை நன்றி சொல்கிறேன். உங்களுடைய நீண்ட நெடிய தீர்ப்பை பார்த்து உண்மையாகவே மகிழ்ச்சி தான். என்னுடைய இந்த தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்ததன் மூலம் உங்களுடைய மலரும் நினைவுகளை மறுபடி புதுப்பித்து கொண்டீர்கள்.

நடுவரே, நீங்க சின்னபிள்ளையா இருந்தப்ப (இப்ப இல்ல ;)) உங்க சொந்தங்களோட மகிழ்ந்த நாட்களை சொன்னீர்கள். அதே போல தான் நானும் சொந்தங்கள் இடையே வளர்ந்து திளைக்க திளைக்க மகிழ்ந்த நாட்கள் பல உண்டு. என்ன ஒன்று கொண்டாட்டங்கள் தான் வேறுபடும். ஊரில் ஒரு திருவிழா ஆனாலும் சரி, பண்டிகை நாள் ஆனாலும் சரி பாட்டி வீடு திமிலோகப்படும். தாத்தாவுக்கு தாத்தா, பாட்டிக்கு பாட்டி, நண்டு, சிண்டு,நறுவானம்னு பாட்டி வீடே எள் விழ இடமில்லாமல் இருக்கும். இப்படி ஒருநாளா ரெண்டு நாளா 10 நாட்கள். அந்த காலக்கட்டங்களில் அவர்களுடைய பிள்ளைகள் சிறியவர்களாக இருந்ததால், பெரியவர்களின் நல்ல எண்ணங்களில் நஞ்சை கலக்காமல் இருந்ததால் எல்லா வேலைகளையும் அனைவரும் பகிர்ந்து செய்தனர். இப்போது அவர்கள் வளர்ந்து பெரியவர்களின் மனபோக்கையே மாற்றி விட்டதால் வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் போக்கிற்கு தங்களை மாற்றிக் கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். நானும் அந்த பொன்னான தருணங்களை அசை போடாத நாட்கள் இல்லை. எனக்கு திருமணம் ஆன போது எங்கள் வீட்டில் இந்த உறவினர் கூட்டம் இல்லாததால் அது கல்யாண வீடு போலவே இல்லை. அனைவரும் நீயா? நானா என்று போட்டி போட்டுக் கொண்டு வேலைக்கு பயந்து மண்டபத்திலேயே வந்து இறங்கி விட்டார்கள். இதில் என்ன ஒரு கொடுமை என்றால் இவர்கள் பெற்ற பிள்ளைகள் அத்தனை பேருக்கும் என் அம்மா முன்கூட்டியே சென்று வேலைகளை இழுத்து போட்டு செய்து, திருமணம் முடிந்த பிறகு இருந்து அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். இது போன்ற விருந்தினர்களை எப்படி வரவேற்பீர்கள்? சொல்லுங்கள். நான் கர்ப்பமாக இருக்கும் போது என் அம்மா வீட்டிற்கு செல்லவே பெரிதும் யோசித்தேன். ஏனென்றால் அங்கே அம்மா-அப்பா- தங்கையை தவிர தனிமை தானே துணையாக இருக்கப் போகிறது என்று, ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக என் பிரசவம் முடிந்தபிறகும் என்னை குதூகலமாக வைத்திருந்தனர் என் சுற்றத்தார். என் வீட்டின் மேலே குடிந்த ஒரு பெண்ணும், பக்கத்து வீட்டில் குடியிருந்த பெண்மணியும் என் மனவாட்டத்தையும், கவலையும் போக்கினார்கள். என் வீட்டுக்கு அடிக்கடி வந்து என்னை கலகலப்பான சூழ்நிலைக்கு மாற்றி சந்தோஷமாக வைத்திருந்தார்கள். எனக்கு 5ம் மாசம், 7ம் மாசம் பூ முடிப்பது முதல் கொண்டு பிரசவம் வரை உறவினர்களுக்கு மேலாக இருந்து பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் எதை திருப்பி தரப்போகிறேன். ஆனாலும் தந்தேன் அவர்கள் விரும்பியதை. நான் திரும்பவும் சொல்வேன் விருந்தினர்கள் என்றாலே எதிரிகள் என்று நினைக்கும் சுபாவம் கொண்டவள் அல்ல நான். அவர்களின் போக்கை பார்த்து பார்த்து மனம் வெறுத்து போனதால் இப்படி சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஆகவே தோழிகளே, கல்பனா பழைய விருந்தாளிகளுக்கு மட்டுமே பயந்தவள். எனதருமை அறுசுவை தோழிகளுக்கு அல்ல. அதனால் உங்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும். (வந்து நீங்களே சமைச்சு, சாப்ட்டு, எனக்கும் கொஞ்சம் வச்சுட்டு போங்க ;)))))

நடுவரே, இந்த பட்டியில் உங்கள் பங்களிப்பு அதிகம் தான். உடனுக்குடன் பதிவுகளை போட்டு எங்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினீர்கள். பெரிய்ய்ய்ய்ய் தீர்ப்பை தந்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். அதனால் அதனால் பிடிங்க ஒரு பெரிய ஜக் நிறைய பாதாம் பால். என் மலரும் நினைவை வேற தட்டி எழுப்பிட்டீங்க அதற்கு பிடியுங்க வாழ்த்துக்கள் பாராட்டுக்களோடு கலர் கலரான ரோஜா பூக்களால் நிரம்பிய ஒரு மலர் கூடை :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//கல்ப்ஸ் தான் கடைசி வரை விடல.. அம்மணி விருந்தெல்லாம் நல்லா நடந்ததுல்ல.. //

ரம்சு, நான் பட்டியில் பேசினத வச்சு நான் நண்பர்களுக்கு தந்த விருந்தையே சந்தேகப் பட்டுட்டீங்கல? உங்கள விடுறதா இல்ல. இந்தியா வருவீங்கல. அப்ப பிடிச்சு என் விருந்து விசாரிப்பை வச்சுக்கறேன் ;)

ரம்ஸ், உங்களோட கருத்தை நான் ஒத்துக்கறேன் பா.விருந்தினர்கள் எல்லாருமே நல்லவங்களும் இல்ல. எல்லாருமே கெட்டவங்களும் இல்ல. நமக்கு சந்தோஷம் அளித்த, இன்னைக்கும் திரும்பி பார்க்க வச்ச உறவுகளை நினைத்து சந்தோஷப்படுவோம். சங்கடப்படுத்திய உறவுகளின் செய்கைகளை புறம் தள்ளுவோம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ்..

விருந்தெல்லாம் நல்ல படியா நடந்ததுல்ல கேட்டதுக்கு அர்த்தம்.. நீங்க நல்ல படியா முடிச்சு இருபிங்கனு தான்.. நீங்க பிஸியா இருந்தது எனக்கு தெரியும்..

பத்தாம போயிருமோனு கவலைப்பட்டேன் ரம்ஸ்னு நீங்க சொன்னது கூட தெரியும்.. ;) எல்லாருக்கும் சூப்பரா தேவையான அளவு சமச்சு கலக்கிட்டிங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ், நீங்க அப்படி சொன்னீங்களா? எனக்கு கொஞ்சம் பெரிய கை தான் ரம்ஸ். கொஞ்சம்ங்கற விஷயமே நமக்கு ரொம்ப தூரம். சாதாரணமா தினப்படி சமைக்கறதே மீந்து போகும். அதனால விருந்தாளிங்க வரும்போது கண்டிப்பா எக்ஸ்ட்ரா தான் போடுவேன். மீதி ஆனாலும் சரி. பத்தலைன்னு மட்டும் இருக்க கூடாது. அன்னைக்கு பண்ணின ஐயிட்டங்கள் எனக்கே கிடைக்கலைன்னா பார்த்துக்கோங்க. அத்தனையும் கச்சிதமா காலியாய்டுச்சி பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே, உங்க பிள்ளைகள் மற்றும் வேலைகள் நடுவே பட்டிமன்றத்தை நன்றாக நடத்தி,அருமையா தீர்ப்பும் சொல்லிட்டீங்க.அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
வெறுமனே தீர்ப்பு மட்டும் சொல்லாமல்,பட்டியில் விடுபட்ட சில விஷயங்களையும் சுவைபட அழகா சொல்லிட்டீங்க.:-)

//நான் சிறு வயதாக இருக்கும்போது (இப்பவும் சின்ன பொண்ணு தான்... கொஞ்சம் முன்னாடின்னு சொல்ல வரேன்.)//
நடுவரே, நீங்க சின்ன பொண்ணு தான்,ஒத்துக்குறோம்.அதுக்காக இப்படி சொல்லி,சொல்லி காட்ட வேணாம். :-)))

வெற்றி பெற்ற எதிரணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.ரம்யா பெரிய,பெரிய பதிவுகள் போட்டு நல்லா வாதாடினாங்க.லக்ஷ்மி,தேவி,ஸ்வர்ணா,ரேவதி,யாழினி எல்லாம் கலக்கிட்டாங்க.நித்திலா பதிவு சூப்பர்.தெளிவா,அலசி ஆராய்ந்து போட்ட பதிவு திகைக்க வைத்துவிட்டது.சீதா லக்‌ஷ்மி,அவங்க பாணியில் அற்புதமா ஒரு பதிவு போட்டாங்க.அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

விடாமல்,வாதாடி எங்களணிக்கு வலிமை சேர்த்த “கல்தூண்”கல்பனாவுக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.பக்கம்,பக்கமாக போட்ட அத்தனை பதிவுகளும் நகைச்சுவையில் ஊறிய அல்வாதான் போங்க.பாராட்ட வார்த்தையே இல்லை. நான் ரொம்ப சிரிச்சு,ரசிச்சு படிச்சேன்.சூப்பர்.

இன்னொரு கல்தூண் இளவரசி.நீங்க நம்ம அணி’னு தெரிஞ்சதும் பெரிய சப்போர்ட்டா இருந்தது.பதிவுகளும் வழக்கம் போல் அருமை.எதிரணியை பயமுறுத்திட்டீங்க. ;-)

எங்கள் அணியின் சார்பா வாதாடிய தோழிகள் ரீம்,புவனா மற்றும் பிரபா சொல்ல வந்ததை நச்சுனு அழகா சொன்னாங்க.வாழ்த்துக்கள்.

ரம்யா,

//இந்த முறை ஹர்ஷா களத்தில் குதிச்சு பயமுறுத்திட்டாங்க.//

சொல்லப்போனால் நான் தான் ரொம்ப பயந்துட்டேன்.:-(( பட்டியை பொறுத்த வரையில் எல்லாருமே எனக்கு சீனியர்ஸ் தான்.

ரீம்... ரொம்ப நன்றி.

ரம்யா... மிக்க நன்றி.

புவனா... இது போல் உறவுகள் தான் இன்று அதிகம். இருந்தாலும் விருந்தினர் பட்டியலில் அவங்க மட்டும் இல்லையே ;) மிக்க நன்றி.

கல்பனா... பாதாம் பால் சுவையாக இருந்தது. கண்டிப்பா வந்து சமைச்சு கொடுக்கறோம் :) மிக்க நன்றி.

ஹர்ஷா.. திரும்ப திரும்ப சொன்னாலும் எல்லாரும் அக்கா, மேடம்'னு சொல்லி வயசை ஏத்திடுறாங்க. அதான் நினைவுபடுத்த வேண்டியிருக்கு. //“கல்தூண்”கல்பனாவுக்கு// - காங்கோக்கு புது பெயரா??!! நல்லா தான் இருக்கு. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல தலைப்பு. தீர்ப்பு இப்ப தான் படிச்சேன். சில வாதங்களையும் படித்தேன், மிஸ் பண்ணிட்டேன் வனி. என்னை பொறுத்தவரை சிறு வயதில் இருந்த உறவினர்களுக்கு இப்போ நான் பார்க்கும் அதே உறவுகளுக்கும் ஆயிரம் ஆயிரம் வித்தியாசம் இருக்கு:) அப்போ வெறும் அன்பு பாசம் மட்டுமே இடையில் இருந்தது. இப்போ எத்தனை எத்தனை விஷயங்கள், எத்தனை மனக்கஷ்டங்கள். ஆனாலும், வாழ்க்கை இதை கடந்து தானே போயாகனும். என் கல்லூரி காலங்களில் பெற்றோர் உறவுகளை எண்ணி வருந்தி பார்த்ததுண்டு, அப்போ அவர்களை கேலி செய்ததும் உண்டு. ஆனால் இப்போ அவர்களின் நிலை புரிகிறது. இன்னும் திருமணத்திற்கு பின் நினைத்தாலே இன்னும் பயமா இருக்கு.

பட்டியை பொறுத்த வரை நடுவர் என்ற சொல்லுக்கு பொருத்தமா நடுவு நிலை தவறாம பட்டியை நடித்தியிருக்கீங்க வனி, வாழ்த்துக்கள்:)

அன்புடன்
பவித்ரா

பவி... மிக்க நன்றி. எங்க உங்களை கொஞ்ச நாளா காணோம்? நலமா? உண்மையை சொல்றேன் பவி, நான் உறவுகளால் பல கஷ்டத்தை பார்த்திருந்தாலும் எல்லாரும் அப்படின்னு சொல்லிட கூடாதில்லையா?? நானே கண் முன் நல்ல உறவுகளையும் பார்த்திருக்கனே... அதான் அதை மனதில் வைத்து இந்த தீர்ப்பு. ஆனா நான் வாதாடி இருந்தா "சங்கடமே" அணி தான் நிச்சயமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டியில் வாதங்களும் அருமை,தீர்ப்பும் அருமை.நானும் கலந்துக்க நினைத்தேன் முடியவில்லை.(வீட்டிற்கு விருந்தினர் வந்திருந்தனர்.)வாழ்த்துக்கள்

செல்வி... மிக்க நன்றி. அவசியம் அடுத்த பட்டிக்கு வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்