பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.
இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:
வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?
விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.
மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.
ஹர்ஷா
//விடாமல்,வாதாடி எங்களணிக்கு வலிமை சேர்த்த “கல்தூண்”கல்பனாவுக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.பக்கம்,பக்கமாக போட்ட அத்தனை பதிவுகளும் நகைச்சுவையில் ஊறிய அல்வாதான் போங்க.பாராட்ட வார்த்தையே இல்லை. நான் ரொம்ப சிரிச்சு,ரசிச்சு படிச்சேன்.சூப்பர்.//
ஹர்ஷா (எ) 'அன்புக்கு' அரசி உங்களுடைய பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி. நான் ஏற்கனவே ஒருமுறை ரம்சிடம் சொன்னது போல இப்போதும் சொல்வேன். நானெல்லாம் வெந்ததை தின்று வாய்க்கு வந்ததை பேசும் ரகத்தினள். பிடிமானத்தோடு பேச தெரியாது. வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் வைத்து பேசியிருந்தேன். ஆனால் உங்களுடைய வாதங்கள் ரசிக்கும்படியாக உண்மை பொதிந்து காணப்பட்டது. உங்களுடைய வாதங்களை நிறைய இடங்களில் நான் ரசித்தேன். ஆஹா, இந்த கருத்தை சொல்லாமல் விட்டு விட்டோமே என்று உங்களுடைய வாதங்களை பார்த்து நினைத்தேன். இந்த பட்டியில் உங்களோடு இணைந்து வாதாடியது புத்தம்புது அனுபவத்தையே தந்தது. இத்தனை அருமையான வாதங்களை இத்தனை நாட்கள் எங்களோடு பகிராமல் எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? இனிவரும் பட்டிகளில் உங்களுடைய பொன்னான வாதங்களை எதிர்பார்ப்பேன். நீங்கள் எனக்களித்த பட்டமும் நன்றாக இருந்தது :)
உங்களுக்கும், என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
கல்ப்ஸ்,
கல்ப்ஸ்,
//ஆனால் உங்களுடைய வாதங்கள் ரசிக்கும்படியாக உண்மை பொதிந்து காணப்பட்டது.//
ஐய்யையோ என்னை வம்பில் மாட்டிவிடாதீங்க.எல்லாம் வாதத்துக்காக பேசியது என்று வைத்துக் கொள்ளுங்கள். :-))
//உங்களுடைய வாதங்களை நிறைய இடங்களில் நான் ரசித்தேன்.//
ஏதோ எனக்கு தோன்றியதை வாதிட்டேன்.சில நேரம் நாம் ட்ராக்ல தான் போறோமானு ஒரு டவுட் கூட வந்தது.இருந்தாலும் உங்க பாராட்டுக்கு நன்றி.
நேரமும்,குழந்தைகளும் ஒத்துழைத்தால் நிச்சயம் வரும் பட்டியிலும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
நல்ல தீர்ப்பு
அன்பு வனிதா,
சூப்பராக தீர்ப்பு சொல்லி அசத்திட்டீங்க!! பாராட்டுக்கள்!
இந்த தடவையும் தோழிகள் எல்லோரும் பிரமாதமாக வாதாடினாங்க. எல்லோருக்கும் பாராட்டுக்கள்! எல்லோருமே வாதத்துக்காகன்னு இல்லாம, அவங்க வாழ்க்கை அனுபவங்களில் இருந்து சொல்லியிருந்தாங்க, அந்த நிஜம் நெஞ்சைத் தொட்டு விட்டது:)
ஹர்ஷா, முதல் தடவை கலந்துகிட்டு அசத்திட்டீங்க, இனி தொடர்ந்து வாங்க!!
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாலஷ்மி
சீதாலஷ்மி... மிக்க நன்றி. உங்க பதிவை படிச்சு நான் என் சின்ன வயது நினைவுக்கு போயிட்டேன் ;( ஆனந்த காலமாச்சே அது. நல்ல பதிவோடு பட்டியை கலக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
தீர்ப்பு அருமை
வனிதா வழக்கம்போல கலக்கலான தீர்ப்பு...
இதுமாதிரி அருமையா தீர்ப்பு சொல்றதில உங்களுக்கு நிகர் நீங்களேதான்
வாழ்த்துக்கள்
எங்களணியில் வாதாடிய கல்பனாவின் உண்மைகலந்த நகைச்சுவை ரசிக்கும்படி
மிகசுவை {-
ஹர்ஷாவின் வாதங்களும் மிக அருமை...:-
நான் நினைத்த பல கருத்துக்களை அவங்க வாதத்தில் கண்ணாடியாய் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி..:-
எதிரணியில் நித்திலாவின் அருமையான அழகுத்தமிழ் வாதங்கள் படிக்க படிக்க
சுவை
ரம்யாவின் வாதங்கள் மிகவும் இனிமை....வாதங்களின் யாதார்த்தமும் உண்மையும் கைத்தட்ட வைத்தது
சீதாம்மாவின் மலரும் நினைவுகள் மயிலிறகால் மனசை வருடியதைப்போல்
இதமாக இருந்தது..
இதில் பங்கேற்ற ரீம்,புவனா,பிரபா,லக்ஷ்மி,தேவி,ஸ்வர்ணா,ரேவதி,யாழினி எல்லாருமே தங்களின் பாணியில் அருமையாய் அசத்திட்டாங்க
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இளவரசி
இளவரசி... மிக்க நன்றி. உங்கள் வாதமும் வழக்கம் போல ரொம்ப அருமை... இம்முறை சற்று நகைச்சுவையோடு படிக்க இனிமையாகவே இருந்தது. இனி வரும் பட்டிகளிலும் தொடர்ந்து உங்களுடைய பதிவுகளுக்காக காத்திருக்கோம். நல்ல வாதங்களே ஒரு பட்டிக்கு அழகு... அது இந்த பட்டியில் 100% உண்மை. எல்லாருடைய பதிவுமே ரசிக்கும்படி அமைந்தது. கல்பனாவின் தலைப்பும் ஒரு காரணம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நல்ல தீர்ப்பு :)
அருமையான தீர்ப்பு சொல்லி அசத்திட்டீங்க!! வாழ்த்துக்கள்!
தீர்ப்பை அன்றைக்கே படிச்சுட்டேன் பதிவு போடதான் நேரம் இல்லை தாமதமான வாழ்த்துக்கு சாரி வனி...
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவர்ணா
சுவர்ணா... மிக்க நன்றி. நானும் இன்று தான் பார்க்கிறேன்... நான் தான் சாரி சொல்லனும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி, இந்த பட்டியில் கலந்துக்க முடியலை, ஆனால் தீர்ப்பை படிச்சிட்டேன். நீங்க சொன்ன மாதிரி தீர்ப்பு பெருசுதான், ஆனால் எல்லா வரிகளுமே அபாரம், அருமை. குறிப்பா நீங்க சிறுவயதில் ஊருக்கு போனதெல்லாம் சொல்லி இருக்கீங்களே, நானும் அதையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். அது ஒரு அழகிய நிலா காலம்.... கனவுகள் தினம் தினம் உலா போகும்..... எல்லாம் flash back-இல் போகும் அழகிய நினைவுகள்.
இதுவும் கடந்து போகும்.
யோகலக்ஷ்மி
யோகலக்ஷ்மி... மிக்க நன்றி. இனி வரும் பட்டியில் அவசியம் கலந்துக்க பாருங்க... உங்களுடைய அருமையான வாதங்களை நாங்க மிஸ் பண்றோம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா