அன்புள்ள வம்புள்ள அரட்டை!!!

அரட்டை துவக்கி வைக்கன்னே நான் ஒருத்தி இங்க இருக்கேன்.... ;) அரட்டை அடிக்கிரனோ இல்லையோ அரட்டை பக்கம் 100'அ தாண்டினா மனசு கேட்காம ஓடி வந்துடறேன். இங்க வந்து அரட்டையை தொடருங்கப்பா.

இன்னைக்கு யாரையாவது வம்பிழுக்கலாமா??? உங்களுக்கு யாரை பிடிக்கும்'னு சொல்லுங்க அவங்களை எல்லாம் ரவுன்டு கட்டி வம்பிழுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
எனக்கு உங்களை தான் ரொம்ப பிடிக்கும்.

ஹர்ஷா... எனக்கு கூட உங்களை தான் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் :D

உங்களை அரட்டையில் பார்த்ததே அளவில்லா மகிழ்ச்சி. அப்பறம்... வேறென்ன சங்கதி?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
ஏன் காலை'ல இவ்வளவு பெரிய்ய்ய்ய பொய் சொல்றீங்க ?

குழந்தைகள் நலமா? வசுவின் குட்டி பாப்பா நலமா?

பொய் சொல்றவங்க தான் புலவராகலாம். :)

குட்டீஸ் எல்லாரும் நலம். வசு பாப்பா வளர்ந்துட்டா... பார்த்து சிரிக்கிறது, நக்கலடிக்கிறது, கவுத்துக்குறதுன்னு... அப்பப்பா அது அடிக்கிர லூட்டி தாங்கல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
பையனும்,பொண்ணும் தூங்குறாங்க.அதான் நிறைய டைம் இருக்குற மாதிரி இருக்கு.இப்போதைக்கு இதான் சங்கதி.

//வசு பாப்பா வளர்ந்துட்டா// ஓ அப்படியா? யாழினியும்,குமரனும் பாப்பா கூட நல்லா விளையாடுறாங்களா?என்ன சொல்றாங்க?

வனிதா,
சரிங்க... மணி இரவு 12.00 ஆக போகுது.நான் போய் தூங்குறேன்.பொண்ணு எழுந்துடுவா.. நாளை பார்க்கலாம்.

அன்பு வனிதா,

என்னதான் சொல்லுங்க, வனிதா வந்தாதான் அறுசுவை கலகலன்னு இருக்கு. எங்கே யாரையும் காணோம், எல்லோரும் நலமா?

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் தோழிஸ் நலமா.எல்லோரும் எப்படி இருக்கிங்கப்பா.என் கணினி சிகிச்சைக்கு சென்று இருந்தது இன்றுதான் திரும்பியது.உங்களை எல்லாம் எனக்கு ரெம்ப தேடுச்சுப்பா

எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா?? பேரன்,பேத்தி கூட ரொம்ப பிஸி ஹா இருக்கீங்களா? நல்ல இருக்கீங்களா? ஏன் இவளோ நாளா வரவே இல்ல?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்