மட்டன் கோஃப்தா பிரியாணி

தேதி: March 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (7 votes)

இது தஞ்சாவூர் பகுதியில் பல வீடுகளில் செய்யபடும் மிகவும் பிரபலமான பிரியாணி ஆகும். எனது அம்மா சாப்பிட்டு சொல்லி கேட்டதோடு சரி. நாங்கள் வெறும் கோஃப்தா கிரேவி மட்டுமே செய்ததுண்டு. இது எனது யோசனையோடு நானே செய்து பார்த்தது. அதை இங்கு அறுசுவையில் பகிர்ந்து கொள்கிறேன்.

 

கோஃப்தாவிற்கு:
எலும்பில்லா திக்கான மட்டன் - 4 துண்டுகள்
வெங்காயம் - சிறியதாக ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரித்தெடுக்க
மல்லிதழை - சிறிதளவு
பிரியாணிக்கு:
அரிசி - ஒன்றரை டம்ளர்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - மூன்று தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதியளவு
மல்லி, புதினா தழை - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 50 மிலி
பட்டை - சிறிய விரல் அளவு இரண்டு
ஏலக்காய் - மூன்று
கிராம்பு - இரண்டு
பிரிஞ்சி இலை - பாதியளவு


 

மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிரியாணி மசாலா தயார் செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்னெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின் தக்காளி, பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதக்கவும்.
அவை வதங்குவதற்குள் கோஃப்தாவிற்கு தயார் செய்ய மட்டனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொண்டு வெங்காயத்தையும் மல்லியையும் மிகவும் பொடியாக நறுக்கி சேர்த்து அதனுடன் இதர பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் கரம் மசாலாவை தவிர்த்து மற்ற தூள்களை சேர்த்து நன்கு வதக்கி விட்டு தயிரும் மல்லி புதினாவில் முக்கால் பகுதியும் நறுக்கி சேர்த்து அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயிலேயே மூடியை போட்டு பச்சை வாசனை போக வதங்க விடவும்.
அதற்குள் மற்றொரு சிறிய வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும் மிதமான தீயிலேயே கோஃப்தா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு நன்கு எண்ணெய் விட்டு பச்சை வாசனை இல்லாமல் மசாலா மணக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறை பிழிந்து கிளறி விட்டு பொரித்த உருண்டைகளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி வைக்கவும்.
அதன் பின் அரிசியை கழுவி வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் அரிசி வேக வைப்பதற்கான அளவு தண்ணீர் விட்டு அதற்கு தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதி வந்ததும், அரிசியை தண்ணீர் இல்லாமல் போட்டு முக்கால் பாகம் வேக வைத்து வடிக்கட்டி வைக்கவும்.
அடுத்து பாத்திரத்தில் வடிக்கட்டிய சாதத்தையும், மசாலாவையும் லேசாக கலந்து விட்டு மீதமுள்ள மல்லி புதினா தழையை பொடியாக அரிந்து தூவி கரம் மசாலாவையும் தூவி நெய்யும் சேர்த்து விரும்பினால் கலர் பவுடர் சிறு துளி ஒரு பக்கமாக போடவும்.
மூடியில் அலுமினிய ஃபாயில் போட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் தம் போடும் ப்ளேட் வைத்து சூடு வந்ததும் இந்த பாத்திரத்தை வைத்து மூடியின் மேல் கனமான பொருளை வைத்து அடுப்பை குறைந்த தீயில் விட்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தம் போடவும். பிறகு மூடியைதிறந்து ஒரு முறை கிளறி விட்டு மூடி மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான மட்டன் கோஃப்தா பிரியாணி ரெடி. வெங்காயம், தயிர் ரைத்தாவோடு பரிமாறலாம்.

கோஃப்தாவிற்கு வெங்காயம் பொடியாக நறுக்க முடியவில்லை என்றால் அரைத்தும் சேர்க்கலாம். ஆனால் தண்ணீர் சேராமல் பார்த்து கொள்ளவும். மட்டன் துண்டாக இல்லாமல் கைமாவிலும் இதேபோல் அரைத்து செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ரெசிப்பி,நிச்சயமா செஞ்சு பார்க்கிறேன்.கோப்தா மசாலாவில் போட்டால் உடைந்து விடாதா?/

மண்(ண)மணக்கும் தஞ்சை ரெசெபி குடுத்திருக்கிங்க ,சீக்கிரமே செய்ய வேண்டியதுதான் ,சூப்பர் குறிப்பு வாழ்த்துக்கள் .

ஹாய் அபஸ் அஸ்ஸலாமு அழைக்கும் நலமா கோஃப்தா பிரியாணி பார்க்கும் போதே சுபர இருக்கு வாழ்த்துக்கள் அபஸ் அபஸ் என்று சொல்லலாமா

அப்சரா... தஞ்சாவூர் ஸ்பெஷலா??? கலக்குங்க. பார்க்கவே சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்சரா.. பிரியாணி சூப்பரா இருக்கு.. பார்க்கும் போதே செய்து பார்க்கனும் போல இருக்கு .. செய்து பார்த்துட்டு சொல்றேன்..வாழ்த்துக்கள்..

மட்டனை வேக வைத்து அரைக்க வேண்டுமா அல்லது அப்படியே அரைக்கலாமா....

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

சலாம் அப்சரா நலமா?குழந்தைகள் நலமா? தஞ்சாவூர் ஸ்பெஷலா சூப்பரா இருக்கு
விருப்பபட்டியில் சேர்த்தாச்சு வாழ்த்துக்கள்டா

ஆஹா அப்சரா அக்கா .. பார்ததுமே உங்கள் குறிப்பாதான் இருக்கும் என்று நினைத்து திறந்தேன் .. உங்கள் குறிப்பே தான் . ரொம்ப வித்யாசமான குறிப்பு .. வாழ்த்துக்கள் ..!! :)

Express Yourself .....

சூப்பரான வித்தியாசமான குறிப்பு நான் கேள்விப்பட்டதே இல்லை ரொம்ப அருமையா இருக்கு படங்களும் சூப்பர்

அன்புடன்
ஸ்ரீ

அப்சரா...

பார்க்கவே சூப்பரா இருக்குங்க.... கண்டிப்பா இந்த வீக் என்ட் செய்து பார்த்துடறேன்.... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

எனது குறிப்பை வெளியிட்டுள்ள அட்மின் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சலாம் ரீம்.. நலமாக இருக்கின்றீர்களா..?
முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மா....
கோஃப்தாவை பொறித்து சேர்ப்பதால் ஒன்று கூட உடையாது.
முடிந்த போது செய்து பாருங்க.
நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் கல்பனா...,தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் நஸ்ரின்.நான் நலமாக இருக்கின்றேன்.
நீங்கள் நலம்தானே..?
தங்கள் கருத்திற்க்கும்,வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி மா...
உங்கள் விருப்பப்படியே என்னை அழைக்கலாம்.தவறில்லை.
எங்க வீட்டிற்க்கும்,என் பிறந்த ஊரின் பாதி பேருக்கும் மேல் என்னை அழைக்கும் ஒரு செல்ல பெயர் கூட உண்டு.கண்டுப்பிடிங்க பார்க்கலாம்.(எல்லோருக்கும் நிச்சயம் இந்த பெயர் தெரியும்..)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் வனி நலமா?
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் லட்சுமி...,நலமா...?
தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.
மட்டனை வேக வைக்காமல் தான் அரைக்க வேண்டும்.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க லட்சுமி.
தங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ஃபாத்தி அக்கா...,
நானும் ,குழந்தைகளும் நலம் அக்கா...நீங்களும் வீட்டில் உள்ள அனைவரும் நலம்தானே...?
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ஷாகியா...,நலமா?
ஃபோன் பேசியே நாளாச்சு இல்ல?
தங்கள் பின்னூட்டத்திற்க்கும்,வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி ஷாகியா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ஸ்ரீமதி நலமா..?
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் வித்யா...,தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க வித்யா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் அப்சரா சுகமா.உங்க குறிப்பு சூப்பப்ப்ப்ப்பர்.

வ அலைக்கும் சலாம் ஃபெரோஸ்.நான் நலம்.
நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா..?
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ஃபெரோஸ்.நான் நலம்.
நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா..?
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா,

வழக்கம் போலே கம கம பிரியாணி மட்டன் தான் எனக்கு இங்கு சரியாக அமைய வில்லை அமைந்தால் சமைத்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பார்க்கவே நாக்கு ஊருது ஒரு பிரியாணி பார்சல். ரொம்ப நல்ல இருக்கும் என்று நினைக்கிறன். சீக்கிரம் அனுப்புங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அப்ஸ், உங்களோட பேசியே ரொம்ப நாளாச்சு பா. எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் சவுக்கியமா?

கோப்ஃதா பிரியாணி மிகவும் வித்யாசமான முயற்சி. எனக்கு உங்களை பார்க்கவே பொறாமையா இருக்கு அப்ஸ். எங்களுக்கு அன்றாட சமையலை செய்யவே மூச்சு முட்டுது. இத்தனைக்கும் சிம்ப்ளா தான் பண்ணுவோம். நீங்க சமையலை முடிச்சுட்டு, மற்ற வேலைகளையும் செய்துட்டே எப்படி இப்படி எல்லாம் வித்தியாசமாக யோசித்து செய்ய முடிகிறது? உங்களை சுற்றியுள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். எப்ப இந்தியா வருவீங்கன்னு சொன்னீங்கன்னா உங்களை ஏர்ப்போர்ட்லயே பிடிச்சுடறேன் :)

படங்களும், செய்முறை விளக்கங்களும் அருமையோ அருமை. பார்க்கும் போதே அதன் ருசியையும் உணர முடிகிறது. சாதாரணமாக மட்டன் பிரியாணி என்றால் அதில் எலும்பு, தோல் என்று பார்த்து பார்த்து சாப்பிட வேண்டி வரும். நீங்கள் செய்தது போல் கோப்ஃதா செய்து பிரியாணி செய்தால் கண்ணை மூடிக்கொண்டே ருசியில் திளைத்து உண்ணலாம் போலுள்ளது.

வாழ்த்துக்கள் அப்ஸ் :) தொடர்ந்து இது போல பல வித்தியாசங்களை அள்ளி தந்து கொண்டே இருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கவிதா நலமா?
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி பா.
முடிந்தபோது சமைத்து பாருங்க....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ரேவதி நலமாக இருக்கின்றீர்களா...?
பார்சல் அனுப்பினால் பிரியாணி ஆறி போய்விடுமே...
வீட்டுக்கு வாங்க சுட சுட செய்து கொடுத்திடுறேன்.
அதை சந்தோஷம் வேறு என்ன இருக்கு?
தங்கள் கருத்துக்கு நன்றிங்க ரேவதி...
எப்ப வர்றீங்கன்னு மறக்காம சொல்லுங்க சரியா?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் கல்பனா..... எப்படி இருக்கீங்க?வீட்டில் அனைவரும் நலமா?
நானும்,மற்றவர்களும் மிகவும் நலம்.
ஆமாம் பா நாம் பேசியே.... ரொம்ப நாளாச்சு.கல்பனாவை அடிக்கடி பார்க்கமுடியவில்லையேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
உங்கள் வருகையையும்,கருத்தையும் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டேன்.
வழக்கம்போல் தங்களின் பாராட்டுக்கள் மிகுந்த சந்தோஷத்தை அளித்தது கல்பனா....
அடுத்த மாதம் முதல் நான் இந்தியாவிலேயே ஐக்கியமாக போகிறேன் கல்பனா....
இன்னும் விரிவாக நாம் பேசலாம்.விரும்பினால் உங்கள் ஐடி கொடுங்கள்.
இல்லையேல் என் ஐடி பராசாப்பம் குறிப்பில் உள்ளது.அதன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நாம் மனம் விட்டு நிறைய பரிமாறி கொள்ளலாம்.
நாம் சந்தித்தால் அந்நாள் எனக்கு மிகுந்த சந்தோஷம் தரும் நாளாகும்.

தங்களுடைய ஊக்கமளிக்கும் கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கல்பனா..

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கம கமனு சூப்பர் பிரியாணி.. இப்போ தான் பார்த்தேன்..
நாக்கில எச்சி ஊற வெச்சுட்டிங்களே.;)
கண்டிப்பா ஒரு நாள் செய்து பார்க்கிறேன்
படங்களுக்கும் விளக்கமும் தெளிவா இருக்கு
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உண் கண்டு பிடிதுட்டேன்அப்புக்குட்டினுதனே கூப்பிடுவாங்க தப்ப இருந்தா நீங்களே சொல்லிடுங்க அப்ஸ்

ஹாய் நஸ்ரின் நீங்க எந்த ஊர் என்னை எப்படி தெரியும்?
ஆமாம் என்னை முக்கால்வாசி பேர் அப்புன்னுதான் சொல்லுவாங்க.
இதுல தப்பு என்ன இருக்கு?
ஆனால் நீங்க யாருன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.