தேதி: March 16, 2011
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மசூர் தால் -- ஒரு கப்
தக்காளிக்காய் -- 6
சாம்பார்பொடி -- 3ஸ்பூன்
மஞ்சபொடி -- அரைஸ்பூன்
துருவிய தேங்காய் -- அரை கப்
கடுகு -- அரை ஸ்பூன்
கறி வேப்பிலை -- சிறிதளவு
எண்ணை -- 2 ஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு
மசூர் தால், சின்னதாக நறுக்கிய தக்காளிக்காய்,சாம்பார் பொடி, மஞ்சபொடி
எல்லாம் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
மிகவும் ருசி யான குழம்பு இது.