பரங்கி, பூசணி அவியல்

தேதி: March 16, 2011

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பரங்கிக்காய் -- 100 கிராம்
பூசணிக்காய் -- 100 கிராம்
துருவிய தேங்காய் -- ஒரு மூடி
பச்சை மிளகாய் --- 4
ஜீரகம் -- அரைஸ்பூன்
தயிர் -- ஒரு கரண்டி
தேங்கா எண்ணை -- 2 ஸ்பூன்
கறி வேப்பிலை -- சிறிதள்வு
உப்பு -- தேவையான அளவு


 

பரங்கி, பூசணிக்காய்களை, விரல் அளவு நீள துண்டங்களாக நறுக்கி வேக விடவும்.
தேங்காய், ஜீரகம் , பச்சை மிளகாய் மிக்சியில் அரைத்து தயிரில் கலக்கி வெந்த காய்களுடன் சேர்த்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி
மேலாக தேங்கா எண்ணை ஊற்றி, கறிவேப்பிலை கிள்ளிப்போலவும்.


எல்லா காயும் போடாமல் இந்த ரெண்டு காய்களிலுமே சுவையான அவியல் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்