வேப்பிலை இஞ்சிசாறு

தேதி: March 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (9 votes)

குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடிவிட்டு அதே கையை வாயில் வைப்பதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும், பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும். அதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது, இதே இயற்கை உணவு முறையிலும் நாம் வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து மிகவும் உகந்தது.

 

இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் - தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - சிறிது


 

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேப்பிலையை சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
சுத்தம் செய்த வேப்பிலை, இஞ்சியுடன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.
வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும். அடியில் நஞ்சு தங்கி இருக்கும். தெளிந்த சாறை மட்டும் மேலோடு எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.
மற்றொரு வகை: இஞ்சி சாறு தனியாக நஞ்சை தெளிய வைத்து எடுக்கவும்
வேப்பிலையை ஆறிய வெந்நீர் ஊற்றி அரைத்து சாறு பிழியவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு, சர்க்கரை, தேன் கலந்து குடிக்கவும். தேன் அதிகமாக கலக்கவும், கசப்பு தெரியாது.

ஆறு மாதம் முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைப்பட்டால் படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு சங்கு முழுவதும் கொடுக்கலாம். அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும். இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பிலையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு மூன்று முறை குடித்தால் வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டாம். கர்ப்பம் தரிக்கும் முன் (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Thank you very much for very good medical recipe. this recipe very helpful to my daughter.i added my favorite list.regards.g.gomathi.

நல்ல தேவையான பயனுள்ள குறிப்பு ஜலீலா. இன்று பலருக்கும் தெரியாத விஷயம். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜலீலா மேடம்,

இந்த குறிப்பு ரொம்ப பயனுள்ளது

எனக்கு வேப்பிலை கிடைக்காது ஆனால் வேப்பிலை பொடி என்னிடம் உள்ளது அதை வைத்து இந்த சாறை எப்படி செய்வது?சொன்னால் என் மகளுக்கு உடனே செய்து தருவேன்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஜலீலா அக்கா
வேப்பிலை சாறு ஆண்பிள்ளைகளுக்கு அதிகம் கொடுத்தால் விந்து அணுக்கள் குறையும் என்கிறார்களே உண்மையா?

சுசித்ரா

food

குறிப்பு. காலத்தில் செய்த உதவி ஞாலத்தின் மானப் பெரிது.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இதுபற்றி இதுவரை தெரிந்திருக்கவில்லை. நல்ல பயனுள்ள குரிப்பு.

ஜலீலா

நல்ல பயனுள்ள குறிப்பு ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஜலீலா

நல்ல பயனுள்ள குறிப்பு ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hi, it was very good. It will be very useful for my kids.
thank u

TOP 1 வாழ்த்துக்கள்
அறனூறு குறிப்பு குடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோமதி, உங்களுக்கு பயன் படுவது குறித்து மிகுந்த சந்தோஷம்.

ஜலீலா

Jaleelakamal

ஆமாம் வனி இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

Jaleelakamal

கவிதா வேப்பிலை இஞ்சிக்கு சாறு எடுக்க சொன்னது போலவே வெரும் இஞ்சி சாறு எடுங்க, அதில் வேப்பிலை பொடி, தேன் கலந்து கொடுங்கள்,
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கவிதா.

ஜலீலா

Jaleelakamal

//வேப்பிலை சாறு ஆண்பிள்ளைகளுக்கு அதிகம் கொடுத்தால் விந்து அணுக்கள் குறையும் என்கிறார்களே உண்மையா?..//

சுசித்ரா அது பற்றி எனக்கு தெரியல,

ஆனால் அதிகம் கொடுக்க போவதில்லை
ஆறு மாதம் ஒரு முறை பூச்சி மருந்துக்கு பதில் கொடுத்தால் போதும்

இன்னும் கேட்டா வேப்பிலை காலை தினம் வெரும் வயிற்றில் சாப்பிட்டால், ஹிமோ குளோபின் அளவு 13 நில் நிற்கும்,

Jaleelakamal

//குறிப்பு. காலத்தில் செய்த உதவி ஞாலத்தின் மானப் பெரிது//

பூங்காற்று இது உங்களுக்கு பெரிதும் உதவி இருக்கு பழமொழியாலே சொல்லிட்டீங்க்

ரொம்ப சந்தோஷம்.

Jaleelakamal

மிஸஸ் கோமு, ரம்யா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleelakamal

அனிதா அன்னா துரை உங்களுக்கும் இந்த குறிப்பு பயன் படுவது குறித்து மிக்க மகிழ்சி,

Jaleelakamal

தேவ் 123 உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

Jaleelakamal

நல்ல‌ பயனுள்ள‌ குறிப்பு.....பகிர்வுக்கு நன்றி

Anbudan,
Viji