மல்டிபர்பஸ் பாக்ஸ்

தேதி: March 17, 2011

5
Average: 4.3 (12 votes)

 

பழைய அட்டை பெட்டி - ஒன்று
துணி - வெள்ளை அல்லது விரும்பிய நிறம்
விரும்பும் டிசைனுக்கு ஏற்ற ஸ்டோன்ஸ்
ஃபெவிக்கால்
வெள்ளை பேப்பர்
கத்திரிக்கோல்
பென்சில்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பெட்டியின் அளவுக்கு ஏற்றபடி வெள்ளை பேப்பரையும், துணியையும் வெட்டி எடுக்கவும்.
பெட்டி முழுவதும் மறைக்கும்படி முதலில் பேப்பரை ஒட்டவும். இப்படி ஒட்டிவிட்டு துணி ஒட்டினால் அட்டை பெட்டியில் இருக்கும் ப்ரிண்ட் எதுவும் மேலே தெரியாது. (இல்லை என்றால் துணியே இரண்டாக மடித்தும் ஒட்டலாம்.)
அதன் மேல் துணியையும் ஒட்டவும். துணி பெட்டியின் உள் பக்கமாக மடித்து ஒட்டினால் வெளியே ஃபினிஷிங் அழகாக இருக்கும்.
இப்போது டிசைன் செய்வதற்கு தேவையான பெட்டி தயார். இதன் மேல் நீங்கள் டிசைன் வரைந்து கொள்ளவும்.
வரைந்த மூன்று வட்டத்தில், முதலில் உள் வட்டத்திலிருந்து ஸ்டோன்ஸை ஒட்ட ஆரம்பிக்கவும்.
இதே போல் விரும்பிய ஸ்டோன்ஸ் ஒட்டி முதல் வட்டத்தை முடிக்கவும்.
அதன் பக்கத்திலேயே இன்னொரு வட்டம் ஒட்டி வருவது போல் வரைந்து அதையும் ஸ்டோன்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
இப்போது அலங்கரித்த பெட்டி தயார். இதை நகைகள் வைக்க, மேக்கப் சாமான் வைக்க, பரிசுப்பொருள் வைத்து கொடுக்க, அல்லது போன் பக்கத்தில் விசிடிங் கார்டு போட்டு வைக்க பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

multi purpose box super.i think you also multi talent person.regards.g.gomathi.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

கோமதி.. முதல் ஆளாய் பின்னூட்டம் தந்து மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ரொம்ப சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்...............

உன்னை போல பிறரையும் நேசி.

வனி ஸ்டோன் ஒட்டி இருக்கிற டிசைன் சூப்பரா இருக்கு. மல்டிபர்பஸ் பாக்ஸ் மாதிரி மல்டி டேலண்ட் வனி கரெக்டா.

கோமதி எல்லோருடைய கைவினையிலும் உங்க பதிவ பார்க்கிறேன். தமிழல மட்டும் பதிவு போட மாட்டுறீங்களே. எப்போ தமிழில் பதிவு போட போறீங்க.

in school i was studied in english medium in CBSE pattern. in school my language paper english and hindi. in colleage days only i was tried to read tamil.but reading also not properly o.k. i know this is tamil blog . my colleage days some friends to teach me how to read tamil after i will read tamil here only.you see my profile i dont mention i know hindi because i love tamil.anyway as soon as i will try to write in tamil.regards.g.gomathi.

in school i was studied in english medium in CBSE pattern. in school my language paper english and hindi. in colleage days only i was tried to read tamil.but reading also not properly o.k. i know this is tamil blog . my colleage days some friends to teach me how to read tamil after i will read tamil here only.you see my profile i dont mention i know hindi because i love tamil.anyway as soon as i will try to write in tamil.regards.g.gomathi.

தேவி... மிக்க நன்றி.

வினோஜா... மிக்க நன்றி. ஆமாம் கோமதி ஒரு கைவினை பகுதி விடாம எல்லாத்துலையும் பதிவு போட்டிருப்பாங்க, அவங்களா தமிழில் போடுவாங்கன்னு நான் கேட்பதே இல்லை.

கோமதி... நீங்க தமிழில் டைப் பண்ண அறுசுவையிலேயே கத்துக்கங்க... :) நாங்க யாரும் எழுத்து பிழைக்கு கோவிக்க மாட்டோம். என் எழுத்து பிழையைவிட அதிகமா யாரும் செய்ய முடியாது. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு

do or die

அழகா செய்திருக்கீங்க வனிதா.

‍- இமா க்றிஸ்

அம்மு... மிக்க நன்றி

இமா... மிக்க நன்றி. செபா ஆன்ட்டி நலமா? வெகு நாட்களாக வரகாணோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் வனி நல்ல ஐடியா வாழ்த்துக்கள்...நானும் ட்ரை பண்ணிட்டு உங்களுக்கு மெயில் பண்ணுறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

எனக்கு இப்ப ஒரு gift box ready பன்னனும். என் கணவர் மாலை ready பன்னி வை நு சொல்லிட்டு போயிருக்கங்க. ஒரு முக்கியமான நபரோட function. வித்தியாசமாக என்ன பன்னலாம்முனு யோசிசிட்டு ஒன்னும் தெரியல. சரி நம்ம அருசுவைல பார்க்கலாமுனு நெட் ஐ திரந்த இன்றைய கைவினை ய நான் தேடினது. very very thanks vanitha akka.

குமாரி... முயற்சி செய்ஹ்டு சொல்லுங்க. மிக்க நன்றி.

நித்யா... அப்படின்னா இன்னைக்கே செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. உங்க கணவர் என்ன சொன்னாருன்னும் சொல்லுவீங்க தானே? மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் அறுசுவைக்கு புதிது, ஆனால் பல மாதங்களாக உங்களுடை குறிப்புகளை பார்த்து வருகிறேன். school, college படிக்கும்போது எனக்கும் கைவினை செய்யும் ஆர்வம் உண்டு. தற்போதுதான் நேரம் போதவில்லை.

உங்களுடைய ஒவ்வொரு குறிப்பும் அருமையோ அருமை. மேலும் பல குறிப்புகளை தந்து அசத்த வாழ்த்துக்கள்.

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.

என் கணவருக்கும் function க்கு வந்திருந்த மற்றவர்களுக்கும் இந்த gift box ரெம்பவே பிடித்திருந்தது. எல்லாரும் அந்த பாக் ஷ் எப்படி செய்வது என்ரு என்னிடம் கேட்டுட்டு போனாங்க. very very thanks vanitha akka.

ஹாய் வனி நலமா..?
எப்படி வனி இப்படி சூப்பராக யோசிக்கிறீங்க?
எவ்வளவோ அட்டை பாக்ஸை வேஸ்ட்டாக கிடக்குன்னு தூக்கி போடுறோம்.
(முக்கியமா செல்ஃபோன் பாக்ஸ்)
அதை இப்படி கூட அழகுபடுத்தி உபயோகிக்கலாமுன்னு நல்ல யோசனை சொல்லி இருக்கீங்க....இனி விட்டுடுவோமா என்ன...?
உங்க உதவியால் அசத்திட வேண்டியதுதான்....
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் வனி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அங்கை (பெயர் சரியா??)... மிக்க நன்றி. உங்க பின்னூட்டமும் வாழ்த்தும் அளவுகடந்த மகிழ்ச்சி தருகிறது. உங்கள் அனைவறது ஊக்கமும் நிச்சயம் என்னை இன்னும் பல கைவினை கற்றுக்கொள்ள வைக்கும்.

நித்யா... செய்துட்டீங்களா?? ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷங்க. எல்லாருக்கும் கற்று கொடுத்து கலக்குங்க. இன்னும் இதுலையே வேறு வேறு வகைகள் செய்து உங்களுக்கேயுரிய டச் கொடுங்க... இன்னும் நச்சுன்னு அசத்துங்க. :) மிக்க மகிழ்ச்சி.

அப்சரா.. மிக்க நன்றி. எல்லா பெட்டியும் கூட பரிசு கொடுக்க அழகா அலங்கரிக்கலாம். இதுல சொல்லி இருக்குறது ரொம்ப சிம்பிள் டிசைன் தான். நேரம் ஒதுக்கி செய்தா இன்னும் அருமையா செய்யலாம். செய்து பாருங்க. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் மாலை வணக்கம்.ரொம்ப அழக இருக்கு.சிக்கிரம் முடிக்கலாம்.5 வருஷம் முன்னாடி பையன் சட்டையில் பெயின்டிங் பன்னினேன். இப்ப பன்றதில்லை.ஆனால் இதைப் பர்த்தவுடன் பன்னனும் நினைக்கிறேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

அன்பு நித்யா... மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு நாம் எதாவது செய்தாலே நமக்கு மனசுக்கு நிறைவா இருக்கும்... அனுபவம் உண்டு. :) விடாதீங்க... நேரம் கிடைக்கும்போதெல்லாம் எதாவது செய்யுங்க. நமக்கும் நம்ம உருவாக்கினா ஒரு திருப்தி. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சாப்பிட்டாச்சா .நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட். என் பையன் இன்னும் அதை வைத்துள்ளன். என் பொன்னுக்கு ஏதாவது செய்யனும்.இந்த பாஸ் செய்துக் கொடுக்கப்போறேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

நித்யா... சாப்பிட்டாச்சுங்க. ரொம்ப சந்தோஷம், அவசியம் செய்து கொடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

fantastic idea.thanks for sharing

ஏஞ்சலின்... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா க்யூட்டா இருக்கு

அன்புடன்
பவித்ரா

மிக்க நன்றி பவி

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very nice akka,thanks kandipa na try panren

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா