வெங்காய கொஸ்த்து

தேதி: March 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பெரிய வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
வரமிளகாய் - 2
எண்ணை - ஒரு குழி கரண்டி அளவு

வறுத்து அரைக்க

வரமிளகாய் - 5
கடலைபருப்பு - 1 1/2 ஸ்பூன்
தனியா (கொத்துமல்லி விதை) - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறு துண்டு


 

வாணலியில் எண்ணை விட்டு கடுகு, கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். புளியை சற்று நீர்க்க கரைத்து ஊற்றவும். புளி வாசனை போனதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும். சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சைட்டிஷ் இது.


மேலும் சில குறிப்புகள்


Comments

மஞ்ச்ளா கொத்சு இன்னிக்கு இரவுக்கு பண்ணியாச்சு. நல்லா இருந்தது.

கோமு உங்க பின்னூட்டதிற்கு நன்றி.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு