ஒரு மாசமாக சளி

என் கணவருக்கு ஒரு மாசமாக சளி பிடித்துள்ளது.அதனால் அவருக்கு காது அடைத்துக் கொண்டு இருக்கிறது.மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் சரியாக வில்லை.அவருக்கு கேன்ஸர் அதற்கு அவர் சித்த எடுத்துக் கொண்டு இருக்கிறார். யாராவது எனக்கு மருந்து சொல்லுங்களேன். ப்ள்ஸ்......

என்ன பிரண்ட்ஸ் யாருமே என்னக்கு சொல்லலை.ப்ளிஸ் சொல்லுங்க.

இன்று வேளையை இன்றை முடிப்பது

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ரு தெரிந்து கொள்ளலாமா நீங்கள் விரும்பினால் சொல்லலாம்.உங்கள் கணவருக்கு, நீளமான குழம்பு மஞ்சள் (கொம்பு மஞ்சள்)எடுத்து, அதன் ஒரு நுனியை ஆமணக்கு எண்ணெயில் தோய்த்து அந்த எண்ணெயில் தோய்த்த நுனியை விளக்கில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகரச் சொல்லுங்கள். சளி கரைந்து வரும்.அதேபோல் சுக்கு கஷாயம் வைத்து குடிக்கலாம். மேலும் சுக்கு, கடுக்காய் சேர்த்து உப்பு கொஞ்சம் கூடுதலாக சேர்த்து நன்கு துவையல் போல் அரைத்து சாப்பிட, சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அவருக்கு வாந்தி வரலாம், அப்படி வரும்போது அதோடு சளியும் சேர்ந்து வரும். இதனால் எந்த பயமும் வேண்டாம். இதனால் ஜீரண சக்தி அதிகரிக்கும். கேன்சர் இருப்பதால் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டும். இதனால் அதற்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று தெரியவில்லை எனக்கு. சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? உங்களை எப்படி தொடர்பு கொள்வது? விரும்பினால் சொல்லுங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ஹாய் மாலை வணக்கம்.எனக்கு இப்ப தான் கணிப்பொறி கிடைத்தது.நான் பழனியில் உள்ளேன்.என்னோடு நம்பர் 9944456781.ரொம்ப நன்றி.நிங்கள் சொன்ன மாதிரி செய்றேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

உங்களுடைய அந்த நம்பருக்கு உங்களை அழைக்கலாமா?

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ஹாய் அண்ணா தராளமாக அழைக்கலாம்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்