”கோல்ட் ஸ்டார்- கோமு”வுக்கு வாழ்த்துக்கள்!!!

தோழிகளே தினமும் புது புது,வித்தியாசமான குறிப்புகள் கொடுத்து,அசத்தும் நம்ம அறுசுவையின் “அசத்தல் ரணி-கோமு”கூட்டாஞ்சோறு பகுதியில் 100 சமையல் குறிப்புகள் கொடுத்து,கோல்ட் ஸ்டார் வாங்கிட்டாங்க.அவங்களுக்கு நம் வாழ்த்துக்களை சொல்வோம்,வாங்க தோழிகளே!!!

தேங்க்யூம்மா.

ஹாய் கோமு வாழ்த்துக்கள் கோல்ட் ஸ்டார் வாங்கியதற்கு.....மேலும் பல குறிப்புகள் கொடுத்து மேலும் பல ஸ்டார் வாங்க எனது வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

கோமு,
கோல்ட் ஸ்டார் வாங்கியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்க குறிப்புகள் தரும் வேகத்துக்கு எங்களால் பின்னூட்டம் தர முடிவதில்லை.கலாட்டா கிச்சனிலும் ஏகப்பட்ட குறிப்புகள் சமைத்து அசத்துறீங்க.(உங்க கணவர் ரொம்ப கொடுத்து வைத்தவர்தான்.)உங்களின் சமையல் ஆர்வம் கண்டு கொஞ்சம் பொறாமையும் வருகிறது.

உங்க கிட்டேந்து இப்படி பாராட்டெல்லாம் கேக்கும்போது ரொம்ப சங்கோசமா இருக்கு.

வாழ்த்துக்கள்,இன்னும் பல ஸ்டார்கள் வாங்கணும்.

கோல்ட் ஸ்டார் வாங்கியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் குறிப்பு கொடுக்கும் வேகமே வேகம்.எங்களால் பதில் அவ்வளவு வேகமா கொடுக்க முடியவில்லை.உங்கள் குடும்பத்தில் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.உங்கள் சமையல் திறமை சூப்பரோ சூப்பர்.என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.நீங்கள் அடுத்தவர்கள் படைப்புகள் எல்லாவற்றையும் பார்த்து விமர்சிக்க நேரம் ஓதுக்கக்கூடியவர்.

Expectation lead to Disappointment

வாழ்த்துக்கள் கோமு. அது எப்படி உங்களால் மட்டும் முடியுது? அசத்தல் ராணி பட்டம், எந்த ஒரு புது குறிப்பு வந்தாலும் உடனே செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தரீங்க, புது புது குறிப்புகள் அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்......கலக்குங்க.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தங்க நட்சத்திர விருது பெற்ற தாரகை கோமுவிற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

கோமு

தங்கம் வென்ற கோமுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்