கார்லிக் கத்திரி பிரட்டல்

தேதி: March 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிஞ்சு கத்திரிக்காய் - 1/2 கிலோ
பூண்டு உரித்தது - 100 கிராம்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு
தாளிக்கும் வடகம் - 1
(அல்லது)
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு,வெந்தயம்,கறிவேப்பிலை - சிறிது


 

கத்திரிக்காயை நீள வாக்கில் சற்று கனமாக நறுக்கவும்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்பொடி, சாம்பார் பொடி கத்திரிக்காய் பூண்டு சேர்த்து கிள்ளு பதமாக வேகவைத்து எடுக்கவும்

பின் கடாயில் எண்ணை விட்டு தாளிக்கும் வடத்தினை உதிர்த்துப்போட்டு வறுத்து, வேகவைத்த கத்திரிக்காய், பூண்டு கலவையை சேர்த்து 2 நிமிடம் பிரட்டவும்.

சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சம்பழ சாதம் இவற்றிற்க்கு ஏற்ற சரியான ஜோடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.