குடைமிளகாய் பொரியல்

தேதி: March 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (12 votes)

 

குடைமிளகாய் - ஒன்று
உருளைக்கிழங்கு - 4 சிறியது (பெரியதாக இருந்தால் 2)
வெங்காயம் - ஒன்று
தக்காளி - கால் பகுதி
பூண்டு - 3 அல்லது 4 பல்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து தட்டி வைத்துள்ள பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
காய் சிறிது வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். உப்பின் அளவை சரிப் பார்த்துக் கொள்ளவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
தண்ணீர் வற்றியதும் சுருள கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான குடைமிளகாய்-உருளைக்கிழங்கு பொரியல் தயார்.

ஒரு முழு தக்காளி சேர்த்து கிரேவியாக செய்து சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Step by step photos are very colourful.iam also prepare like your recipe but not included potatos.next time iam added potatos.keep it up. regards.g.gomathi.

ரொம்ப colourfulla இருக்கு keep it up

ரொம்ப நல்லா இருக்குது.ஈசியாகவும் இருக்குது.வாழ்த்துக்கள் ஹர்ஷா.

Expectation lead to Disappointment

பார்க்கவே நன்றாக இருக்கு செய்து பார்த்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் ஹர்ஷா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹர்ஷா

சுடு சாதத்திற்கு சூப்பரா இருக்கும் போல.. எனக்கு டிபன் விட சாதம் தான் பிடிக்கும்..;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பரசி,

இதே போலே கிராவி தான் செய்வேன் இனி பொரியலும் செய்ய வேண்டியது தான்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

கோமதி, முதலாய் வந்து பதிவு போட்டதற்கு நன்றி.உருளைக்கிழங்கும் சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

ganelia,உங்க பதிவுக்கு நன்றி.

மீனாள்,உங்க வாழ்த்துக்கு நன்றி.

குமாரி,உங்க பதிவுக்கு நன்றி.செய்து பாருங்க.

ரம்யா, எனக்கும் சாதம் தான் பிடிக்கும்.:-) இந்த பொரியல் சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்.ட்ரை பண்ணி பாருங்க.பதிவுக்கு நன்றி.

கவிதா,பதிவுக்கு நன்றி.பொரியல் நல்லா இருக்கும்.செய்து பாருங்க.

அன்பரசி..

நல்ல குறிப்பு. கண்டிப்பா இன்னைக்கு நைட் சப்பாத்திக்கு க்ரேவியா பண்ணிப்பாத்துட்டு சொல்லிடுறேன். ஹர்ஷா எப்படி இருக்கான்? நீங்க எப்படி இருக்கீங்க.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா,
எப்படி இருக்கீங்க?சங்கரன் குட்டி நலமா? உங்க பதிவு பார்க்க சந்தோஷமா இருக்கு.ஹர்ஷாவும்,பிரஜ்னாவும்(பொண்ணு பிறந்து 3 மாசம் ஆகுது)நல்லா இருக்காங்க.

குடை மிளகாய்,உருளைக்கிழங்கு கிரேவி கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு நன்றி.

சப்பாத்தியுடன் பெஸ்ட் காம்பினேஷன்.

குடைமிளகாய் பொரியல் குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு ,வாழ்த்துக்கள் !

superb dish. very nice

Very Nice. I am also try to do this.

அன்பரசி, மீண்டும் ஹர்ஷாவா? :) குட்டி பாப்பா என்ன சொல்றா? எப்படா சமைக்க வருவோம்னு காத்துட்டு இருந்தீங்களா பா? குடைமிளகாய் என்னோட பேவரட் காய். அதோட உருளைகிழங்கு வேற சேர்த்து என்னை இம்சை பண்ணி இப்பவே பண்ற மாதிரி வச்சுட்டீங்க. நான் நாளை செய்து சாப்ட்டு உங்களுக்கு சொல்றேன் பா. இதுல நீங்க போட்டிருக்கும் பொருட்களை பார்க்கும் போதே இப்பவே சாப்ட்ட ஒரு உணர்வு கிடைச்சுடிச்சி. நல்ல சுவையா இருக்கும் போல. வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

super pa

LIFE IS LONG LIVE IT UP

ஹர்ஷா பார்க்கவே சூப்பரா இருக்கு செய்துட்டு கண்டிப்பா சொல்றேன் வாழ்த்துக்கள்
குழந்தைகள் எப்படி இருக்காங்க சின்ன குட்டி என்ன செய்றா?

உங்களுடைய குடைமிளகாய் ரெசிப்பி சூப்பர் பா நாண் செய்து பார்த்துவிட்டேன் நேற்று பார்த்தவுடனே முடிவுபன்னிட்டேன் இரவு சப்பாத்திக்கு சைடு டிஷ் இது தாண் அப்படின்னு நாண் க்ரேவி மாதிரி பன்னேன் பா அத்துடன் உருளைக்கிழங்கையும் வேக வைத்து மசித்து போட்டேன் சூப்பரோ சூப்பர் என்னவர் விரும்பி சாப்பிட்டாங்க நன்றி. விருப்பபட்டியலிலும் சேர்த்தாச்சு நேற்றே செய்துட்டு இன்னைக்குதான் பதிவு போடனும்ன்னு நினைத்தேன்

அன்புடன்
ஸ்ரீ

கோமு,அதுக்குள்ள செய்துட்டீங்களா? நன்றி.

கல்பனா,உங்க வாழ்த்துக்கு நன்றி.

ரம்யா,ரொம்ப நன்றி.

சுதா,செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

கல்ப்ஸ்,
ஹர்ஷா என் பையன். பிரஜ்னா பொண்ணு. :-)
இது ரொம்ப சிம்பிள் ரெசிப்பி தான்.ட்ரை பண்ணி பாருங்க.

கோகிலா,பதிவுக்கு நன்றி.

ஃபாத்திமா,கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.குழந்தை நல்லா இருக்கா.முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சுட்டா. :-)

ஸ்ரீமதி,செய்துட்டீங்களா?உங்களவர்க்கு பிடித்ததில் மகிழ்ச்சி.இது ரொம்ப சிம்பிளான டிஷ் தான். நீங்க செய்து பார்த்து பதிவு போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு.ரொம்ப நன்றி பா.

நான் இந்த காம்பினேஷனில தக்காளி சேர்க்காம ட்ரையா இது போல் பொரியல் செய்வேன்..உங்க குறிப்பு பார்த்தவுடன் இதுபோல் செய்யலாம்னு இருக்கு
பார்க்கும்போதே செய்யதூண்டும் அழகான படங்கள்..
வாழ்த்துக்கள் ஹர்ஷா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் ஹர்ஷா...,நலமா..?
பார்க்கும் போதே சூப்பராக இருக்கு...
எனக்கு இரண்டு காயுமே மிகவும் பிடிக்கும்.
அழகாக செய்து காட்டியிருக்கீங்க...
வாழ்த்துக்கள் ஹர்ஷா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பார்க்க ஆசையா இருக்கு ஹர்ஷா. செய்து சாப்பிட்டுர வேண்டியதுதான். ;)

‍- இமா க்றிஸ்

நீங்க சூப்பர் ஹ பண்ணி காட்டி இருக்கீங்க. ஆனா, எனக்கு ஒரே ஒரு டவுட், நான் இது வரைக்கும் குடைமிளகாய் சாப்பிட்டது இல்லை, ஹோட்டல் ல நூட்லஸ் ல வந்தா கூட, தனியா வெச்சுடுவேன். என்னே தெரியல, உங்க டிஷ் ல குடைமிளகாய் க்கு அப்திலா வேற ஏதாவது போட்டா, நல்லா இருக்குமா? அப்படி பண்ணலாமா? குடைமிளகாய் ஒரு வாசனை வர மாதிரி எனக்கு ஒரு பீலிங் :-)

குடைமிளகாய் ரசிகர்கள் சண்டை க்கு வந்தடாதீங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இளவரசி, நீங்களும் இதுபோல் பொரியல் செய்வீங்களா?சேம் பின்ச். ;-) உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

அப்சரா,எனக்கு உருளைக்கிழங்கு மட்டும் தான் பிடிக்கும்.இப்படி இரண்டும் சேர்த்து செய்யும் போது,குடைமிளகாயும் சாப்பிடுவேன்.உங்க வாழ்த்துக்கு நன்றி.

இமா,சாப்பிடவும் நல்லா இருக்கும்.ட்ரை பண்ணி பாருங்க.உங்க பொன்னான முதல் பதிவுக்கு நன்றி.;-)))

சுகி குட்டி,
உருளைக்கிழங்குடன் நிறைய காம்பினேஷன்ஸ் - ல் பொரியல் பண்ணலாம்.
1. உருளைக் கிழங்கு - கத்தரிக்காய்,
2. உருளைக்கிழங்கு - கத்தரிக்காய் - முருங்கைக்காய்,
3. உருளைக்கிழங்கு - காலிஃப்ளவர்,
4. உருளைக்கிழங்கு - பட்டாணி,
5. உருளைக்கிழங்கு - பலாக் கொட்டை,
6. உருளைக்கிழங்கு - மஷ்ரூம்,
7. உருளைக்கிழங்கு - மீல்மேக்கர் (சோயா),
இவையனைத்தும் இதே முறையில் செய்யலாம்.நல்லா இருக்கும்.இந்த குறிப்புகள் எல்லாமே நம் அறுசுவையில் இருக்கு.பாருங்க.
8. உருளைக்கிழங்கு - குடைமிளகாய்,
இந்த குறிப்பு இல்லாததால், நான் அனுப்பிட்டேன்.:-))
உங்க பதிவுக்கு நன்றி.

parkavey romba nalla eruku kandipa seithu parkaren

Hi, It was really a nice recipe

ஹர்ஷா ரொம்ப நல்லா இருந்தது வித்தியாசமான குறிப்பு குடுத்ததுக்கு நன்றி
நேற்றே செய்துவிட்டேன் நெட் கனெக்‌ஷன் கட்டாகிவிட்டது அதனால் இன்று பதிவிட்டேன்

குடைமிளகாய் போரியல் செய்தேன் ரோம்ப பிடித்தது சூப்பர் வாழ்த்துக்கள்

உமா,
கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.

அனிதா,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

ஃபாத்திமா அம்மா,
என் குறிப்பை செய்து பார்த்து,மறக்காமல் வந்து பதிவு போட்டதற்கு ரொம்ப,ரொம்ப நன்றி.

ரோஜா,
பொரியல் செய்துபார்த்து உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.உங்க பதிவுக்கு நன்றி.

Capsicum porial gravya chappatiku senjen.super.photos very colorful.