பாவ்பாஜி மசாலா

தேதி: May 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 2
சிறிய கேரட் - ஒன்று
பீன்ஸ் - 6 அல்லது 7
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
மாங்காய்ப் பொடி - அரைத் தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி


 

கேரட் மற்றும் பீன்ஸை துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை தனியே வேகவைத்து எடுத்து, தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் தாளித்து நறுக்கின வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் வேக வைத்து எடுத்துள்ள காரட், பீன்ஸ் மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை சேர்த்துப் பிரட்டவும்.
அதில் சிறிது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, உலர்ந்த மாங்காய்ப் பொடி ஆகியவற்றை தூவி நன்கு வதக்கவும்.
விரும்பினால் சிறிது கரம் மசாலாப் பொடியும் தூவலாம்.
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கி கெட்டியான குழம்பு பதத்திற்கு வந்தவுடன் பன் உடன் சேர்த்துப் பரிமாறவும்.
பன்னின் இரண்டு புறமும் வெண்ணெய் அல்லது நெய் தடவி தோசைக்கல்லில் சிறிது நேரம் வேகவைத்து சூடாக பரிமாறவும்.


பாவ் என்றால் பன் என்று பொருள். பாஜியில் சிறிது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதினையும் சேர்த்து வதக்கினால் சுவை இன்னும் கூடும். சற்று வித்தியாசமாய் செய்து பார்த்து வெற்றியும் கண்ட எனது அனுபவக் குறிப்பு இது.

மேலும் சில குறிப்புகள்