வெல்ல போவது யாரு? - 2

இன்று முதல் கிரிக்கெட் கால் இறுதி ஆட்டங்கள் தொடங்குவதால் புதிய திரட்டி.

முதல் சுற்று போட்டிகள் நடக்கும் போது நாம் கணித்த அணிகளே கால் இறுதிக்கு வந்து உள்ளனர். முன்பே கூறியது போல் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் அதிசயம் நிகழ்த்த முயன்றனர். மொத்தம் 6 போட்டிகள் என்பதால் அவர்களால் ஜொலிக்க முடியவில்லை. பங்களாதேஷ் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் வெளியெறியது. அயர்லாந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த இரண்டும் அணியினரும் தங்களால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டனர். கென்யா & நெதர்லாந்து ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியவில்லை. ஜிம்பாவே இரண்டு போட்டிகளிலும், கனடா ஒரு போட்டியிலும் ஆறுதல் வெற்றியுடன் திருப்தி அடைந்தனர்.

குரூப் பி யில் நாம் கணித்தப்படியே

1. தென் ஆப்பிரிக்கா 2. இந்தியா 3. இங்கிலாந்து 4. வெஸ்ட் இண்டிஸ்

இடங்களை பிடித்து உள்ளனர்.

குரூப் ஏ யில் நம் கணிப்பு தவறியது (வரிசையில்) ஆனால் நாம் பாகிஸ்தானை கருப்பு குதிரையாக குறிப்பிட்டு இருந்தப்படியால் நம் கணிப்பு சரியே ;)

1. பாகிஸ்தான் 2. இலங்கை 3. ஆஸி 4. நியுஸிலாந்து

ஆக கால் இறுதியில்

பாக் Vs மே.இந்திய - 23.03.11 - தாகா
இந்தியா Vs ஆஸி - 24.03.11 - ஆகமதாபாத்
இலங்கை Vs இங்கி - 25.03.11 - தாகா
தென். ஆப் Vs நியுஸி - 26.03.11 - கொழும்பு

அணிகளின் விபரம்

பாக் - எதிர்பாத்தது போல் இந்த போட்டியில் கருப்பு குதிரையாக வலம் வந்து மற்ற அணிகளை மிரட்டியது. இது வரை அவர்களின் பலமாக இருப்பது அவர்களின் பந்து வீச்சு. பலவீனம் - பீல்டிங், சில வீரர்களின் பேட்டிங். கருப்பு குதிரை விசயங்கள் எல்லாம் முதல் சுற்றோடு போச்சு. வெ. இண்டிஸ் க்கு எதிராக தன் திறமையை நிருபித்தால் மட்டுமே அடுத்து சுற்றுக்கு போக முடியும். பெரும்பாலும் ஆடுகளங்கள் பேட்டிங் மட்டும் சுழற்பந்துக்கு சாதகமாக இருப்பதல பாக் தன்னுடைய பேட்டிங்கை வலுப்படுத்தினால் மட்டுமே மேற்கொண்டு சாதிக்க முடியும். இன்றைய போட்டியில் அக்தரை களம் இறக்குவதும், அப்ரிடி பேட்டிங் சில ரன்கள் எடுப்பதும் நலம் அளிக்கும்.

வெ. இண்டிஸ் - இது வரை ஒரளவு சுமாராகவே விளையாடி வந்து உள்ளது. ஒவ்வொரு போட்டியின் போதும் எதாவது ஒரு வீரர் சிறப்பாக விளையாடி வருவது இந்த அணிக்கு ஒரு பெரிய ப்ளஸ். ஆனால் பேட்டிங்கில் யாரவது ஒருவர் சொதப்புவது ஒரு பெரிய மைனஸ். கிரிஸ் கெய்ல், ரோச், சந்தர்பால் மீண்டும் உள்ளே கொண்டு வந்தால் பலமான அணியாக காட்சி அளிக்கும். பரோவோ, போலார்ட் பேட்டிங்க் ஜொலித்தால் அடுத்த கட்டத்திற்கு போகலாம்.

மற்ற அணிகளை பற்றி அடுத்து அடுத்து கமெண்டில் பாப்போம்.

இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் கை தேர்வு செய்யும். முதலில் பேட் செய்யும் அணி வெற்றி வாகை சூடும் வாய்ப்புகள் அதிகம். என் கணிப்பு - வெஸ்ட் இண்டிஸ். பார்ப்போம்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

வெஸ்ட் இண்டிஸ் டாஸ் வென்று பேட்டிங் கை தேர்வு செய்து உள்ளது. அணியில் சந்தர்பால், கெய்ல், ரோச் மீண்டும் இடம் பிடித்து உள்ளார்கள். பாக் அணியில் அக்தர் சேர்க்கப்படவில்லை.

Its gonna be a good contest. தாகா பேட்டிங் பிட்ச் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் வெஸ்ட் இண்டிஸ் வெல்லும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

இது நடந்தால் இம்முறை உலக கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு வழி கிடையாது.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

Quarter finals

West Indies Vs Pakistan = Pakistan will win
India Vs Australia = India will win
South Africa Vs New Zealand = New Zealand will win
Srilanka Vs England = Srilanka will winn

Semi finals
India Vs Pakistan = India will win
New Zealand Vs Srilanka = Srilanka will win

Final
India Vs Srilanka = ????????
I wish India to win but let see on 2nd April

Be happy

என்ன சிவா அண்ணா, வெஸ்ட் இண்டீஸ் 16 ரன்னுக்கு 3பேரு அவுட்... இந்தியா - பாகிஸ்தான் மாட்ச் நடந்துரும் போல இருக்கே.... :)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

முதல் பாதியில் பாக் அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெஸ்ட் இண்டிஸ் 112 க்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்ற சிறப்பான வாய்ப்பை கோட்டை விட்டது வெஸ்ட் இண்டிஸ். சுலபமாக எடுக்க கூடிய இலக்கு தான் இது. பாக் சொதப்பாமல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து பாப்போம்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

@ விஷ்வா

இந்தியா Vs இலங்கை. என்று ஏற்கனவே சொன்னது தான். Lets see how it goes

@ சரண்யா

அப்படி தான் தெரியுது. இந்தியா Vs பாகிஸ்தான் மோதினால் அதை விட இந்த உலக கோப்பையில் வேற எந்த போட்டி பரபரப்பாக இருக்க போகிறது. அப்படி நடந்தால் அது தான் இறுதி போட்டியை விட மக்கள் ஆர்வமாக பார்க்கும் போட்டியாக இருக்கும்

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

இன்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது போலவே வெற்றியை தழுவியது. ஆனாலும் வெஸ்ட் இன்டீஸ் சொர்ப்ப ரன்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது.

நாளை நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றியை தழுவுமா?? தலைவர் சிவா இதை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

//India Vs Australia = India will win// என்னால் இப்படி உறுதியாக கூற முடியலை. பாண்டிங் சரியான ஃபார்மில் இல்லையென்பதாலும், பாகிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோல்வியை கண்டதாலும் இந்தியாவுக்கு தான் வெற்றி என்று சொல்ல முடியவில்லை. இதுவரை உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியதில்லை என்றே நினைக்கிறேன். நாளைய போட்டி கிட்டத்தட்ட ஒரு இறுதி போட்டி மாதிரிதான்.

சிவா அண்ணா, நாளைய போட்டி பற்றி உங்களின் கருத்து என்ன???

அன்புடன்
பவித்ரா

நாளை நடக்கும் இந்தியா, ஆஸ்த்ரேலியா இடையேயான ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்பை பெற்றுள்ளது.

நாளை இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

நாளை இந்நேரம் இந்திய ரசிகர்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கலாம்...

அது
ஆனந்தக்கண்ணீரா? இல்லை

அழுவாச்சிக் கண்ணீரா???

தெரியலையே!!!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

//வெம்பி அழத்தேவையில்லை, தோல்வி மட்டும் வாழ்க்கையில்லை...//:))

அன்புடன்
பவித்ரா

சொற்ப இலக்கை பாக் மிக சுலபமாக எடுத்து அரையிறுதி சென்று விட்டது. டாஸ் வென்று நல்ல இலக்கை எடுத்து ஆட்டத்தை சுலபமாக வென்று இருக்க வேண்டிய வெஸ்ட் இண்டிஸ் தன்னுடைய பேட்டிங் சொதப்பலால் மண்ணை கவ்வியது. பாகிஸ்தானின் பவுலிங் இன்று சிறப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நடைபெற இருக்கும் இந்தியா Vs ஆஸ்திரேலியா அணியில் ஒன்றை பாக் அரையிறுதியில் சந்திக்க வேண்டும். கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு அரையிறுதி ஆட்டம் சவாலான ஆட்டம் தான்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

மேலும் சில பதிவுகள்