சொல்ல விரும்பினேன் - 4 !!!

நம்ம முந்தைய சொல்ல விரும்பினேன் 100 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

இனி எதாவது சொல்ல விரும்பினா இந்த இழையில் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

* இலையுதிர் காலம் போகும்
வசந்த காலம் வந்து சேரும்
குளிர் காலம் வேண்டுமென்றால்
கோடை விடை கொடுத்தாக வேண்டும்.

* திரு முகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விழகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ
அதுசுடுவதைத்தாங்க முடியுமோ.

* ப்ரியமுள்ளவளே இரண்டு
என்றால் தானே பிரிவதும்
பிரியாமல் இருப்பதும்
எல்லாம் ஒன்று என்றான பின்னே
ஏனடி நீ எனக்காய் அழுதல் வேண்டும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

தோழிகளே... நம்ம அறுசுவையில் பல குறிப்புகள் கொட்டி கிடக்கு... அதை எல்லாம் செய்யும்போது சில விஷயத்தை மனதில் வைக்க வேண்டும். ஒருவரது சமையல் அவருடைய ருசிக்கு ஏற்றபடி தான் இருக்கும். அதனால் அதை அப்படியே செய்துவிட்டு நமக்கு இந்த காரம் சரி வரல, இந்த சுவை சரி வரலன்னு தோணலாம். சில நேரம் நமக்கு அவங்க சொன்ன காரம், புளிப்பு எல்லாம் கம்மி, அதிகம்'னு தோணும்... நாம மாற்றி சமைப்போம்... அதனாலும் சில நேரம் அது அவங்க சொன்ன அதே ருசி கிடைக்காம போகலாம். அதனால் ஒரு குறிப்பை ஒரே முறை செய்துட்டு சரியா இல்லையான்னு சொல்லாம, முதன் முறை செய்யும்போது குறைவா செய்து, கொஞ்சம் என்ன தப்பு நடந்திருக்கு முதன் முறை செய்தப்போன்னு கவனிச்சு, அடுத்த முறை அதை மாற்றி செய்து பாருங்க... நிச்சயம் மற்றவர் அவர் சுவைக்கு ஏற்றபடி செய்த ஒரு குறிப்பு உங்க சுவைக்கும் ஏற்றபடி அமையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மையான நட்பிருக்கு பிரிவு நிரந்தரம் அல்ல....சில நொடிதான் ......... ..சில நொடி பிரிவும்.. நட்பில் கனக்கிறது..

நான் எழுதினது........

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என் வீடு என் மொட்டை மாடி...
பறப்பது என் பட்டம்???
உன் பார்வை ஏன் இந்த பக்கம்??

- ப்ளாட்ஃபார்மில் பட்டத்துடன் சிறுவன்

சமீபத்தில் பார்த்த காட்சியின் தாக்கம்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விட்டுப் பிரிந்த நினைவுகளும்
தொட்டு தொலைந்த கனவுகளும்
கையை விட்டு கரைந்தாலும்,
காலங்கள் போட்டு வைத்த
கணக்கில்லா புள்ளிக் கோலங்களில்
கரைந்து காணாமலே போகிறேன்...
என்றாவது என் சொற்கள்
உன் நினைவலைகளை மோதிச் செல்லும்...
அந்த நொடியினில் அரைகுறையாய்
என் நியாபகம் வந்து செல்லும்..
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
எப்படியும் நான் இருந்தேன் என்று
உனக்கு சொல்லி விடும்
அந்த கணம் அருகமர்ந்து
ஆறுதல் சொல்ல நானிருக்க மாட்டேன்..
அகமும் புறமும் உணர்ந்த நாம்
முகமே பார்க்க முடியாது போயிருக்கும்..
சுழலும் கால சக்கரத்தில்
என் நினைவு தூசிகளும்
எங்கோ சென்றிருக்கும் உன்னை விட்டு

படித்ததில் பிடித்தது.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பூங்காற்று எங்க பிடிக்கறீங்க இது போல் அழகான வரிகளை எல்லாம்? ரசிக்கும்படி இருக்கின்றது.

குமாரி... நல்லா எழுதி இருக்கீங்க. நட்பும் நண்பர்களும் ரொம்ப விருப்பமோ?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மையான நட்பு கிடைக்குமா என...ரொம்ப பிடிக்கும் வனிதா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனி, பட்டியில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தான் இங்க கூப்பிட்டேன். நான் நலம் வனி, நீங்க நலமா இருக்கீங்க தானே!! நேரம் சரியா வரலை வனி, ஈவ்னிங் அறுசுவைக்கு வந்தால் யாரும் இருப்பதில்லை பார்த்திட்டு அப்படியே ஓடிடுவேன். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பட்டி ஞாபகம் மட்டும் மறக்காம வந்திடும்:) இந்த முறை பட்டியை நீங்க காப்பாத்திட்டீங்க, பழைய படி அறுசுவைக்கு வரணும்’னு ரொம்ப ஆசையா இருக்கு வனி:) பட்டிக்கு நடுவரா இருக்கனும்னு இன்னும் ஆசை, நேரம் ஒத்துழைத்தால் கண்டிப்பா வருகிறேன்.

அன்புடன்
பவித்ரா

பவி நடுவரா வர விருப்பம் என்று இங்கு சொன்னால் போதாது... நேரம் ஒதுக்கி வாங்க. முடிந்த வரும் வாரமே வாங்க. நாங்களும் ரொம்ப சந்தோஷபடுவோம்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்