தேதி: March 24, 2011
தேன்மெழுகு ஷீட்ஸ் (beeswax sheets) - விரும்பிய நிறங்களில்
கட்டிங் போர்ட்
மெட்டல் ஸ்கேல்
க்ராஃப்ட் நைஃப்
கத்தரிக்கோல்
தேன்மெழுகு மெழுகுவர்த்திகள் செய்வதற்கு அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

உருளை வடிவ மெழுகுவர்த்தி செய்வதற்கு, மெட்டல் ஸ்கேல் க்ராஃப்ட் கத்தி கொண்டு ஒரு நீள்சதுரத் துண்டு மெழுகு வெட்டி எடுக்கவும். திரி, அதைவிட ஒரு சென்டிமீட்டர் உயரம் கூடுதலாக இருக்க வேண்டும்.

திரியை மெழுகின் மேல் வைத்து ஓரத்தை அதன் மேல் மடித்து மெதுவாக அழுத்தி விடவும்.

இனி நடுவே இடைவெளி வராத மாதிரி மெழுகு ஷீட்டினை நேராகச் சுற்றிக் கொண்டே வர வேண்டும்.

சுற்றி முடிந்ததும் மெதுவாக ஓரங்களை அழுத்தி விட்டால் ஒட்டிக் கொள்ளும்.

கத்தரிக்கோலால் வேறு நிற மெழுகில் மெல்லிய கோடுகள் வெட்டி மேலும் கீழும் பார்டர் போல் ஒட்டி விடவும்.

விரும்பினால் அதன்மேல் முத்துக்கள் வைத்து அழுத்தி விடலாம்.

இப்போது உருளை வடிவ மெழுகுவர்த்தி தயார்.

விரும்பிய வேறு எந்தப் பொருளையும் ஒட்டி மெழுகுதிரியை அலங்கரிக்கலாம்.

அடுத்து டேப்பர் மெழுகுவர்த்தி செய்யும் முறை: மெழுகில் ஒரு முக்கோணம் வெட்டி எடுக்கவும். அதன் நேரான ஒரு பக்கத்தை விட ஒரு சென்டிமீட்டர் அதிகமாக வருமாறு திரியை வெட்டி எடுக்கவும்.

திரியை மெழுகின் ஓரமாக வைத்து அதன்மேல் மெழுகை மடித்து அழுத்தி விடவும்.

அடிப்பக்கம் நேராக இருப்பது போல் வைத்துச் சுற்றிக் கொண்டே வர வேண்டும்.

உடைந்துவிடாமல் கவனமாக முழு மெழுகையும் சுற்றி முடித்து ஒரு முறை அழுத்தி விட்டால் ஒட்டிக் கொள்ளும்.

திரி தேவைக்கு மேல் இருந்தால் வெட்டிவிடவும்.

அழகான மெழுகுதிரி நிமிடங்களில் தயார். சென்ற வருட இறுதியில் ஏஞ்சல் தன் பாடசாலையில் கற்றுக் கொண்ட இந்த மெழுகுவர்த்திக்கான செய்முறையை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Comments
இமா
இமா... இமா... இது நம்ம ஏஞ்சல் தானே??? ரொம்ப அழகான சிரிப்பு... அழகான சுலபமான மெழுகுவர்த்திகள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
imma
Super craft. step by step easy method to make candle.keep it up. regards.g.gomathi.
ஏஞ்சல்
ஏஞ்சல் ரொம்ப அழகா இருக்கு. கண்டிப்பா குட்டீஸ் எல்லாம் சுலபமா செய்யமாதிரியான க்ராஃப்ட். தேன்மெழுகு கிடைத்தால் நானும் செய்து பார்க்குகிறேன்.
இமா
சூப்பரா இருக்கும்மா..உங்க ஐடியாவும் உங்க ஏஞ்சல் பண்ணியுள்ளதும் சூப்பர்ங்க...தொடர்ந்து இதுபோல் பிள்ளைகள் செய்ய இலகுவான குறிப்பை அனுப்புங்கம்மா..நன்றி...
வாழ்த்துக்கள்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
HELLO ANGEL,
YOUR CRAFT IS VERY EASY AND VERY USEFUL.. WHERE DID WE CAN BUY THE BEESWAS SHEET IN TAMILNADU.. PLEASE TELL ME..
ஏஞ்சல்,
தேன் மெழுகுதிரி அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஏஞ்சல் டியர்
ஏஞ்சல் சூப்பரா இருக்குடா உன்னுடைய மெழுகுவர்த்திகள், வாழ்த்துக்கள்.
hello
hi angel very nice candle my best wish for u..
ellaam kadavul seyal...
தேன்மெழுகு
இளவரசி, இக்குறிப்பில்... ஃபோட்டோ எடுத்ததும் தமிழில் தட்டச்சு செய்ததும் தவிர என் பங்களிப்பு எதுவும் இல்லை. ;)
ஹேமலதா, கைவினை சிறப்பு இழையில் உங்கள் கேள்வியைப் பதிவு செய்திருக்கிறேன். யாராவது பதில் சொன்னால் இங்கு பதிவிடுகிறேன்.
- இமா க்றிஸ்
ஏஞ்சல்,
ஏஞ்சல்,
வாழ்த்துக்கள்!!! நீங்க இன்னும் நிறைய செய்யுங்க
இமா மேடம் குழந்தைகளே செய்வது போலே crafts தெரிந்தால் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும்
என்றும் அன்புடன்,
கவிதா
ஏஞ்சல் குட்டி,
ஏஞ்சல் குட்டி,
தேன்மெழுகு மெழுகுவர்த்தி,அழகா செய்து காட்டி இருக்க டா.வாழ்த்துக்கள்.
தேன்மெழுகு மெழுகுவர்த்திகள்
ஏஞ்சல் ரொம்ப அழகா இருக்குடா....வாழ்த்துக்கள் குட்டிமா...
ஏஞ்சல்
ஏஞ்சல் தேன்மெழுகு மெழுகுவர்த்தி,அழகா செய்து இருக்க .வாழ்த்துக்கள்.
excellent,good job, it is
excellent,good job, it is very easy to make and we will use it our own purpose also.
try untill ur victory