சூரிய காந்தி விதை போட்டு

சூரிய காந்தி விதை போட்டு இப்போது செடி வந்துள்ளது. தயவு செய்து அதற்கான் தட்ப வெப்பம் ம்ற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா. செடிகள் வளைந்து கொண்டிருக்கின்றன. ப்ளீஸ் ஹெல்ப்.அண்ணாமார்கள் உதவுங்களேன்

சகோதரி, செடி பூ வைக்க ஆரம்பித்துவிட்டதா

அன்புடன்
THAVAM

..pooங்காற்று சூரியகாந்தி செடியை பொருத்தவரை அதை எந்த மண்ணிலும் பயிரிடலாம்.ஆனால் அந்த இடம் அதிக சூரிய ஒளி படுமாறு இருக்கவேண்டும்.அதிகம் ஈரப்பதம் ,னைட்ரஜன் உள்ள இடமா பார்க்கவேண்டும்.மூன்று அரை அடி ஆழத்தில்தான் செடியோ,விதையோ இட வேண்டும்.குறிப்பாக மார்ச் டூ ஏப்ரலுக்கு இடைப்பட்ட நாட்களில் nada வேண்டும்.ஏனெனில் அதிக பனி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.இன்னும் உனக்கு விபரம் வேண்டுமெனில்www.e how.com என்ற வெப்சைட்டுக்க் போய் how to grow sun flowerஎன டைப் பன்னி விபரம் தெரிந்து கொள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கெதியா வந்து தவமணி கேட்டதற்குப் பதில் சொல்லுங்க; உதவி கிடைக்கும்.

எனக்குத் தெரிந்தது... சூரியகாந்திச் செடிகளுக்கு ஆரம்பத்திலேயே தடி ஊன்றிக் கட்டினால் நல்லது. மொட்டுக்கள் வளர தலைப்பாரம் அதிகமாகி, மேலும் வளையப்பார்க்கும். இறுக்கிக் கட்ட வேண்டாம். தண்டு மொத்தமாகும் போது கட்டி இருக்கும் இடத்தில் முறியப் பார்க்கும். பழைய 'ஸ்டொக்கிங்ஸ்' கொண்டு கட்டினால் வளர்ச்சியோடு விட்டுக் கொடுக்கும்.

தண்டு முழுவதாக மடிந்துவிட்டால் கூட இப்படிக் கட்டி வைத்தால் காயம் ஆறி நன்றாகப் பூக்கும்.

‍- இமா க்றிஸ்

.பூங்காற்று பாத்திங்களா?இதுக்குதான் அது அதுக்கு ஆள்கள் வேண்டும் என்பார்கள்.இமா ஆசிரியர்,தாவரக்கவி தவமணி அண்ணா இவங்க ரெண்டுபேர்தான் இந்த இழைக்கு சரியான ஆள்கள்.நான் மேலே இட்ட பதிவுகூட ஒரு வெப்சைட்டில் படித்ததுதான்.சரியன நேரத்தில் அருமை சகோதரி பூங்காற்றுகு உதவிய இமா ஆசிரியருக்கு என் நன்றிகள் பல

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அய்யோ அண்ணா இப்போதுதான் விதையிலிருந்து கிளம்பி இரு இலைகள் வந்துள்ளது. மண்ணை சாதாரணமாக கொத்தித்தான் விதை தூவியுள்ளேன். பூங்காற்றுக்கு பூக்கள் என்றால் ரொம்ப இஷ்டம். முன்னெல்லாம் நிறைய பூச்செடி வள்ர்த்தேன் இப்போ பிள்ளைங்கள வளர்க்கவே நேரம் சரி .என் சிஸ்டர் இப்போ ஸ்டார்ட் பண்ணியிருக்கா.அவ தான் சொன்ன உங்க அறுசுவையில் கேட்டா பதில் கிடைக்கும் என்று. அவ்வுடைய வுட்பீ கடாரில் இருந்து பூ விதைகள் அனுப்பியிர்க்கார். ஆலோசனை தந்த ஷேக் அண்ணா .இமா தவமணி அண்ணா நன்றி ந்ன்றி..மேலும் தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்