முளைக்கீரை சப்பாத்தி

தேதி: March 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

முளைக்கீரை - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
காரட் - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப


 

தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
கீரையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை வதக்கவும்.
பின்பு வதக்கிய கீரை, காரட் துருவல், கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
சிறிதளவு மாவை எடுத்து சப்பாத்தி போல் இட்டு அதன் மேல் சிறிது எண்ணெய் தடவவும்.
பின் முக்கோணமாக மடித்து மீண்டும் சப்பாத்தி போல் இட்டு சுட்டு எடுக்கவும். இப்படி செய்வதால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள பனீர் பட்டர் மசாலா, சன்னா மசாலா, சிக்கன் கிரேவி, ரைத்தா வைத்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எங்க அம்மா இப்படி தான் பண்ணுவாங்க, அதே மாதிரி இருக்கு. மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

முதல் குறிப்பா லெஷ்மி ரொம்ப ஹெல்தியான குறிப்பா சொல்லி இருக்கீங்கபா. வாழ்த்துக்கள் ஈஸியாவும் இருக்கு நாளைக்கே முயற்சிக்க போறேன். இன்னும் நல்ல நல்ல குறிப்புகள் கொடுங்க என் வாழ்த்துக்கள்.

ஹாய் லட்சுமி...,தங்களின் முதல் குறிப்பிற்க்கு வாழ்த்துக்கள்.
மிகவும் அழகான தெளிவான படங்களுடன் கூடிய குறிப்பை கொடுத்திருக்கீங்க...
நன்றாகவே இருக்கும் என பார்க்கும் போதே தெரியுது....
பாராட்டுக்கள் லட்சுமி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

லக்ஷ்மி மேடம்,
ஆரோக்கியமான சப்பாத்தி மற்ற கீரையில் செய்யலாமா?
மேலும் பல குறிப்புகள் தர
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லஷ்மி ஆரோக்கியமான குறிப்பு மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

நல்ல ஆரோக்கியமான சப்பாத்தி. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லக்ஷ்மி,
முதல் குறிப்பா?முளைக்கீரை சப்பாத்தி பார்க்கவே நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.மேலும் நிறைய குறிப்புகள் அனுப்புங்க.

ரொம்ப நல்லா இருக்கு.
இதை முலைக்கீரையில் தான் செய்யானுமா இல்லை எல்லா கீரையுலும் செய்யாலாமா. இங்கா spinach தான் கிடைக்கும்.

vidhya

vidhya

லஷ்மி முதல் குறிப்பா ரொம்ப சத்தாண குறிப்பா குடுத்துருக்கீங்க வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி. இங்க net problem அதனால் தாமதமாகி விட்டது.

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

Suganthi86 ,yazhinimukil,appufar ,uk5mca,hameed fathima ,Vanitha Vilvaar,harshaa ,vidhyadakshin ,swarna vijayakumaar என்னை வாழ்த்திய தோழிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சப்பாத்தியை அரைக்கீரை,சிறுகீரை,வெந்தயக்கீரை எல்லா கீரையிலும் செய்யலாம். கீரை விரும்பாதவர்கள் கூட இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவாங்க..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.