தோழிகளே, பட்டி ஆரம்பித்தாகிவிட்டது:) எல்லாரும் ஓடியாங்கோ!!!
இந்த வார தலைப்பு நம்ம சுகி அவர்கள் கொடுத்த தலைப்பு
****************************************************************
காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோ??சமூகம்?? பாசமா??
****************************************************************
ஈகோ - ஜாதி, மதம், அந்தஸ்து போன்றவை
சமூகம் - சமுதாயத்தில் உள்ள சூழ்நிலை, மனோநிலை குறித்து
பாசம் - மகன்/மகள் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்கிற பயம் கலந்த பாசம்
வந்து உங்கள் அனல் பறக்கும் வாதங்களை பதிவு செய்யுங்கள்:)
பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)
பட்டி ஆரம்பிச்சாச்சு
தோழிகளே, பட்டியை துவக்கியாகிவிட்டது. வாங்க வந்து வாதங்களை தொடருங்கள்:) விதிமுறைகளை நினைவில் வைத்து பட்டியை நல்லபடியாக நடத்தி கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். வரும் ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலையில் தீர்ப்பு அறிவிக்கப்படும்:)
அன்புடன்
பவித்ரா
காதலை பெற்றோர்கள்
காதலை பெற்றோர்கள் பறுப்பதற்க்கு காரணம் ஈகோ,பாசமே என்ற அணியில் வாதிட வ்ந்துள்ளேன்.அருமையான தலைப்பை கொடுத்த சுகிக்கும்,தேர்ந்தெடுத்த நடுவர் பவி அவர்களுக்கும் நன்றி.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்
வாங்க வெகு நாட்களுக்கு பிறகு பட்டிக்கு வந்திருக்கீங்க, மிக்க மகிழ்ச்சி:)
//காரணம் ஈகோ,பாசமே // ஈகோவா?? பாசமா?? எனக்கு புரியலை அண்ணா, பாசமே என்பதற்காக தானே வந்திருக்கீங்க? சீக்கிரம் வாதத்தோடு வாங்க. ஷேக் அண்ணாவுடன் கூட்டணி சேரப்போகிறவர்கள் யார் யார்?? சீக்கிரம் வாங்க!!
என்ன எதிரணி சீக்கிரம் வாங்க
அன்புடன்
பவித்ரா
பட்டிமன்றம்
வணக்கம் நடுவர் அவர்களே, ஈகோ என்றால் ஆணவம், கௌரவம் [அ]அந்தஸ்து, அடுத்து ஜாதி இப்படி பல அணுகு முறைகளில் ஈகோ அளவிடப்படலாம். இந்த பட்டியில் இவற்றில் எதை எடுத்து வாதம் செய்வது?.
அன்புடன்
THAVAM
தவமணி
தவமணி அவர்களே, முதலில் பட்டிக்கு வரவேற்கிறேன். எனக்கு தெரிந்த மட்டும் நீங்கள் தமிழில் சொன்ன அனைத்து வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் கேட்டால் பெரும்பாலான மக்கள் சொல்லும் சொல் ஈகோ. தலைப்பில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கேன். இப்போ தங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். கட்டாயம் பட்டியில் வாதத்தோடு வாங்க
அன்புடன்
பவித்ரா
பாசமே அணியில் poongkatru
பாசமே அணியில் கூட்டுச்சேரலாம்னு இருக்கேன்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம்
ஈகோ,சமூகம்,பாசம் இவை மூன்றையும் பொருளாதாரம் சரிகட்டிவிடுகிறது என்பது வேடிக்கையான விஷயம்.
ஈகோ-பிள்ளைகள் சரியான முடுவுதான் எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அதை ஏற்க பெற்றோர் மறுக்கிறார்கள்.காரணம் இதுவரை நம்மை சார்ந்து இருந்தவர்கள் தனியாக செயல்பட துவங்கியுள்ளனர் , இனி தனக்குமுக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்ற பயம்.
சமூகம்-பிள்ளைகளின் முடிவு தங்களுக்கும் ஓகே என்றாலும்,இந்த விசயத்தை எதிர்த்தே ஆகவேண்டும் என்று பழகிவிட்டார்கள்.இல்லையெனில் தாங்களே பிள்ளைகளை ஊக்கபடுதியதாக மற்றவர்கள் பேசுவார்கள் என்ற பயம்.
B Good,C Good
பாசமே
அளவுக்கு அதிகமான பாசமே மற்ற இரண்டு விசியங்களை காரணமாக காட்டுவதாக நான் நினைக்கிறேன்
”கடவுளிடம் சொல்லாதே உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று”
பவித்ரா
வணக்கம் நடுவரே
வணக்கம் நடுவரே!
(மன்னிக்கவும் தவறாக அடித்துவிட்டேன் அதற்கு தான் இந்த மாற்றம்)
அருமையான தலைப்பு. போட்டி ஆரம்பம் மாகி விட்டது மோதி பார்த்துவிடலாம் என்கின்ற முடிவோடு வந்திருக்கின்றேன். நிச்சயமாக பொற்றோரின் பாசம் தான் இதற்கு காரணம் என்கின்ற தலைப்பில் பேச வந்திருக்கின்றேன். இதற்கு அடிப்பதற்கு பதில் ஏதோ அடித்துவிட்டேன். ஏன் இதில் என் திருமணமே ஒரு எடுத்துக் காட்டு. என் திருமணமும் காதல் திருமணம் தான். அதில் நான் பட்டவை சொல்லி மாள முடியாது. இதோ விரைவில் வருகி்ன்றேன். எதிரணியில் வீச பல அணுகுண்டுகளை தயார் செய்து கொண்டு வருகின்றேன். இப்பொழுது விடைபெறுகின்றேன். இப்பொழுது உங்களை நன்றாக குழப்பி விட்டேன் என்று நினைக்கின்றேன். நிச்சயமாக பாசம் தான் இதற்கு காரணம் காரணம் என்று தற்சமயம் விடைபெறுகின்றேன்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
பாசமே
வணக்கம் நடுவரே!
ஜாதி, மதம் போன்றவற்றை காரணமாக காட்டுவதும் கூட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமுகத்தில் தனித்துவிடபட்டுவிடுவர்களே, அவர்களின் பிள்ளைகளின் வருங்காலத்தில் இச்சமுகத்தினால் பிரச்சனைகளும், உரிமைகளும் மறுக்கபட்டுவிடுமே என்ற அக்கறையினாலும்,தங்களின் வாழ்நாளுக்கு பிறகு தங்களின் இனம்,மதம் சார்ந்தவர்களின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் வாழும் போதும்,தங்களின் வாழ்க்கைக்கு பிறகும் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பாசத்தினாலும் மட்டுமே பெற்றோர் காதலை மறுப்பதற்கு காரணம்
”கடவுளிடம் சொல்லாதே உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று”
பவித்ரா