நான் தற்காலிகமாக விடை பெறுகிறேன் -சௌமியன்

நான் தற்காலிகமாக விடை பெறுகிறேன்..தோழர் மற்றும் தோழிகளே எங்களது அலுவலகம் இப்ப இருக்கும் இடத்தில இருந்து புதிய இடத்திற்கு மாறுவதாலும்,அங்கு இனைய தளம் use செய்ய கட்டுபாடுகள் அதிகம் விதிகபடுவதால் தினமும் அறுசுவை கு வர இயலாது .என் மேல் ப்ரியம் வைத்து என்னை காணோம் என்று யாரும் நினைக்க கூடாது என்பதற்காக இப் பதிவு .இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது அறுசுவை வருகிறேன் .நல்ல தோழிகள் மற்றும் தோழர்கள் இங்க அதிகம் .உங்களுடைய தோழமை எனக்கு எப்பவும் இருக்க ஆசை .அதற்காக தான் இப் பதிவு .எனது நிறைய சந்தேகம் களை தீர்த்து எனது மண வாழ்வும் அலுவலக வாழ்வும் இன்று இனிமை ஆக செல்கிறது .இதற்கு அறுசுவை இன் அனைத்து தோழிகள் மற்றும் தோழிகள் ,அறுசுவை இணைய தளம் ,மற்றும் நமது பாபு சார் அனைவர்க்கும் எனது நன்றிகள் .எங்களது இல்லத்தில் இட வசதி குறைவு .எங்களுக்கு குழந்தை வந்தவுடன் சற்று பெரிய இல்லம் செல்ல பிளான் .அப்ப கம்ப்யூட்டர் வாங்கி விடுவோம்.. அப்பறோம் அறுசுவை வர தடை இராது.அது வரை முடிந்தால் பார்வையாளராக அல்லது சமயம் கிடைத்தால் பதிவுகளும் இடுகிறேன். எனது நன்றிகள் .என்றும் உங்களது தோழமை விரும்பும் சௌமியன்

சொளமியன், நீங்க திருப்பூர்தான?
நானும் திருப்பூர் தான். ஆனா இப்ப கோவையில் இருக்கிறேன். என் தோழி அங்கு சென்ட்வின் -ல் வேலை செய்கிறாள்.நீங்க எங்க வேலை செய்கிறீர்கள்?நீங்க எங்க வேலை செய்கிறீர்கள்?

idhuvum kadandhu pogum.

நான் திருப்பூரில் தனியார் byeing agency இல் பணி புரிகிறேன்.சௌமியன்

நன்றி, செளமியன், சென்ட்வின் தெரியுமா? அங்கதான் என் தோழி கடந்த இருபது வருடங்களாக வேலை செய்கிறாள்.

idhuvum kadandhu pogum.

கவலை வேண்டாம் நண்பரே.
உங்கள் புது பணி...இனிதே அமைய வாழ்த்துக்கள்...

இயலும் எனும் போதெலாம் மன்றம் வாங்க... படியுங்கள், படையுங்கள்.

என்றும் வெற்றித்திருமகணாக திகழ வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் செளமியன் அண்ணா, நிச்சயமாக உங்களை மறக்க மாட்டோம் உங்களை. புதிய வேலை புது சூழ்நிலை நல்ல முறையாக அமைய நல்வாழ்த்துக்கள். முடியும் போது வந்து ஒரு முறை எங்களை எல்லாம் கண்டுகிட்டு போங்க அண்ணா அடுத்த முறை நீங்க வருவதற்குள் ஒரு நல்ல செய்தியை கொண்டுகிட்டு வாங்க அதற்கு என்னுடைய பிராத்தனைகள் அண்ணா.

அண்ணா கவலை வேண்டாம் இங்குள்ள தோழிகள் அனைவரும் அவ்வளவு சீக்கிரம் யாரையும் மறக்க மாட்டார்கள் மறக்கவும் முடியாது நீங்கள் புது வேலையை நன்றாக பாருங்கள். எந்த கலக்கமும் வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக ஒரு ஹாய் சொல்லுங்கள் போதும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அண்ணா,உங்கள் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள். சீக்கிரம் நல்ல செய்தியோட திரும்ப வரணும். மீண்டும் சந்திப்போம்.

ஹாய் அண்ணா, என்னா அண்ணா திடீர்னு இப்படி சொல்லுரிங்க. இப்பதான் அரட்டைக்கு தொடந்து வந்துகிட்டு இருந்திங்க.அதுக்குள்ல யார் கண்ணு பட்டிச்சோ தெரியலையே.......................... :) சரி அண்ணா கவலைபடாதிங்க.நேரம் கிடைக்கும் போது எங்கள வந்து பாருங்க. நாங்க உங்கள மறக்கமாட்டோம் சரியா?

நீங்க வந்தயுடனே முதல் வேலையா உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடுரேன் சரியா அண்ணா.ஹிஹி

உன்னை போல பிறரையும் நேசி.

Dont worry .be happy. you will surly come again back. here everybody dont forget you. regards.g.gomathi.

ஹாய் சௌமியன் அண்ணா கவலைப்பட வேண்டாம்....நாங்கள் உங்களை கண்டிப்பாக மறக்க மாட்டோம்...உங்கள் ஆசைகள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்....முடியும் போது அறுசுவைக்கு வந்து போங்க...

மேலும் சில பதிவுகள்