நெல்லிக்காய் ஊறுகாய்

தேதி: March 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

நெல்லிக்காய் - 5
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு
பெருங்காய தூள்
மஞ்சள் தூள்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - சிறிது


 

நெல்லிக்காயை 3 நிமிடம் நீரில் வேக வைத்து அழுத்தினால் விதை இல்லாமல் வரும். வேக வைக்க விரும்பாவிட்டால் அப்படியே சிறு துண்டுகளாக நறுக்கியும் எடுக்கலாம்.
இந்த நெல்லிக்காய் துண்டுகளில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
வெந்தயத்தை வறுத்து பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து நெல்லிக்காய் கலவை சேர்த்து மிளகாய் தூள் வாசம் போக பிரட்டவும்.
கடைசியாக வெந்தய தூள் கலவை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்.
உடனே செய்ய கூடிய சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.

நெல்லிக்காய் வேக வைத்த நீரில் சூப் செய்யலாம். ஒரு தேக்கரண்டி நெய்யில் பட்டை, லவங்கம் தாளித்து நீரை ஊற்றி கொதிக்க விட்டு மிளகு தூள் உப்பு சேர்த்து ஆரோக்கியமான சூப் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி சூப்பர் ரொம்ப ஈஸ்சியா இருக்கு...கண்டிப்பா செய்து பார்கிறேன்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஈசியான சத்தான டேஸ்டி ஊறுகாய் இப்போவே சாப்பிடனும் போல இருக்கே..!!
இந்த வீகென்ட் செஞ்சுட்றேன் வனி..

படங்கள் மிக அருமை நன்றாக உள்ளது சீக்கிரமே செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

படங்கள் மிக அருமை நன்றாக உள்ளது சீக்கிரமே செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமாரி... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீபா... மிக்க நன்றி. ஆமாம்... ஈசியா செய்யலாம். அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளையா... மிக்க நன்றி. செய்து பாருத்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

superrrrrrrr.picture partha udan nakkil neer varuhirathu.nellikai enaku romba pidikum.

வனிதா மேடம்,
எனக்கு ரொம்ப பிடித்த ஊறுகாய் ..எனக்கு தான் நெல்லிக்காய் கிட்டாது.
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பசீனா... மிக்க நன்றி. எனக்கும் நெல்லிக்காய் ரொம்ப பிடிக்கும். சேம் பின்ச்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி... ரொம்ப நாளா உங்களை காணோமே... ஏற்கனவே ஒரு குறிப்பில் கேட்டேன்... நீங்க பார்க்கல போல. நலமா இருக்கீங்களா? ஊருக்கு வந்த பிரகு ஆசைக்கு செய்து சாப்பிடுங்க... இப்போ பார்சல் அனுப்பிடறேன் :) உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I have a doubt. Is this pickle instant.
Does it possible to store it and use it?

வனி நானும் இப்படித்தான் செய்வேன் நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

வனிதா எனக்கு நெல்லிக்காய் பிடிக்கும்,வெருமனே சாப்பிடுவேன்,உப்பு போட்டு அவித்து சாப்பிடுவேன்,அவித்த காயை சர்க்கரைப்பாகில் ஊற வைத்து சாப்பிட்டால்....அடாடடா என்ன ஒரு சுவை!உங்க குறிப்பு வித்தியாசமா இருக்கு,ஃப்ரான்ஸில் நெல்லிக்காய் கிடைத்தால் செய்து பார்க்கிறேன் வனி,வாழ்த்துக்கள்!

Eat healthy

சசி... இது இன்ஸ்டன்ட் தான், வெகு நாட்கள் வைத்திருக்க இயலாது. அதிகபட்சம் 3 நாட்கள் வைத்திருக்கலாம். எண்ணெய் அதிகம் இல்லாததால் கெட்டு போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாத்திமா... உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரசியா... நானும் சர்க்கரை பாகில் போட்டு எடுப்பேன். எனக்கும் ரொம்ப பிடிக்கும். :) அவசியம் கிடைச்சா செய்து பாருங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி.. எளிமையான ஊர்கா.. அப்படி தான் சொல்லுவோம்..;)
நாக்கில் எச்சி ஊறுது.. கிடைச்சா கண்டிப்பா செய்துடறேன்.. ரெண்டு பேருக்கு ஊறுகாய்னா ரொம்ப பிடிக்கும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. கிடைக்கும் அங்கே என்றே நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா செய்து இருக்கீங்க....
நாங்க இதேப்போல் புளிமாங்காவில் சிறிது சீனி சேர்த்து செய்வோம்.
நெல்லிக்காயில் செய்ததில்லை.செய்யனும்..
படங்கள் அருமையாக வந்திருக்கு.........
வாழ்த்துக்கள்..

ஹசீன்

ஹசீனா... மிக்க நன்றி. மாங்காயும் இது போல் செய்யலாம்... சுவையாக இருக்கும். நினைவுபடுத்திட்டீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very very nice recipe vanitha...keep it up

vazhga valamudan

சுதா... மிக்க நன்றி

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;)) பார்க்கவே வாய் ஊறுது.

‍- இமா க்றிஸ்

இமா... சாப்பிட்டாலும் சுவையாவே இருக்கும் ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிடத் தூண்டுது.முகப்பில் வந்துள்ள படம் சூப்பர்.வாழ்த்துக்கள்.

ஹர்ஷா... ரொம்ப ரொம்ப நன்றி... செய்து சாப்பிடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா