கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே

ஹாய், அனைவருக்கும் வணக்கம், நான் ஒரு பாடலின் முதல் வரியை எழுதுகிறேன் அந்த பாடல் நல்ல அர்த்தமுள்ள ஒரு பாடல் அந்த பாடல் இடம் பெற்ற படம் அல்லது முழுப்பாடலும் தெரிந்தவர்கள் அதன் வரிகளை தர முடியுமா? கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே அன்பு எனும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்வினிலே என தொடங்கும்.

படம்- எதிர்காற்று (கார்த்திக்,கனகா)

kavitha.

anbe sivam

http://www.musicplug.in/songs.php?movieid=16606

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனித ஜாதி தான்
பழகிப்பார் பாதி பேர் மிருக ஜாதி தான்

கூண்டை விட்டு வெளியில் வந்து

நான் வளர்க்கும் பூச்செடியில் முற்கள் மட்டும் பூப்பதென்ன... பாவமா சாபமா காலத்தின் கோலமா?
கால் நடக்கும் பாதை எல்லாம் கற்கல் குத்தி வலிப்பதென்ன? யாரிடம் காரணம் தெய்வம் தான் கூரனும்

வைரக்கலை நான் கொடுத்தால் வாங்கி கொல்லும் உலகமே... உப்பு கல்லை எனக்களித்து ஒப்புகொள்ள சொல்லுமே

நெய்யை விட்டு தீபம் ஏற்றினால்... கையை சுட்டு நன்றி காட்டுதே

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனித ஜாதி தான்
பழகிப்பார் பாதி பேர் மிருக ஜாதி தான்

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே

தெய்வத்துக்கு 6 முகம்
மானிடர்க்கு 100 முகம்
மெய் எது பொய் எது யார் அதை கண்டது

பாலும் இங்கு வெள்ளை நிறம்
கல்லும் இங்கு வெள்ளை நிறம்
பால் எது கல் எது பேதம் யார் கண்டது

நேசம் வைத்த யாருக்குமே நெஞ்சமெல்லாம் காயம் தான்
பாசம் வைத்த கண்களிலே காண்பதெல்லாம் மாயம் தான்

எறிவிட்ட பாசம் ஒதைக்குது // - not very sure
ஏற்றிவிட்ட ஏனி சிரிக்குது // - not very sure

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனித ஜாதி தான்
பழகிப்பார் பாதி பேர் மிருக ஜாதி தான்

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே

- உங்களுக்காக இந்த பாட்டை கேட்டு வரிகள் தட்டுறதுக்குள்ள எனக்கு பாட்டு மனப்பாடம் ஆயிட்டுது... ;) காலையில் இத்தனை சோகமா?? வனிக்கு ஒரே ஃபீலிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இந்த பாட்டு எனக்கும் ரொம்ப பிடித்தபாட்டுப்பா....
காரணம் எனக்கு K.J.ஜேசுதாஸ் குரல் மிகவும் பிடிக்கும்...
அவரது குரலில் பாடிய "பூவே செம்பூவே உன் வாசம் வரும்"வாசல் என் வாசல் உன் பூங்காவனம்......"மிகவும் அருமையாக இருக்கும்...முழுப்பாடல் தெரிந்தால் அனுப்பவும்ப்பா.......

Poovae sempoovae,
Unn vaasam varum,
Vaasal yen vaasal oru poongavanam,
Vaay pesidum pullangulal,
Needhanoru poovin madal,
Poovae sempoovae unn vaasam varum,
Poovae sempoovae,

Nilal poala naanum...
Nilal poala naanum,
Nadai poda neeyum,
Thodargindra sondham, nedungaala bandham,
Kadal vaanam kooda, niram maara koodum,
Manam konda paasam, thadam maaridaadhu,
Naan vaalum vaalvae, unnakaagathaanae,
Naan dhoarum nenjil, naan aendhum thaenae,
Ennaalum sangeetham, santhoshamae,
Vaay paesidum pullangulal,
Needhanoru poovin madal,

Unnai pola naanum oru pillaithaanae,
Palar vandhu konjum kili pillai naanae,
Unnaipola naalum malarsoodum penmai,
Vidhi ennum noolil vilaiyaadum bommai,
Naan seydha paavam ennodu pogum,
Nee vaalnthu, naanthaan paarthalae podhum,
Ennaalum ennaalum oollaasamae,
Vaay paesidum pullangulal,
Needhanoru poovin madal,

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் வனி ரொம்ப தாங்ஸ், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எல்லோருமே வாழ்க்கை வேற சினிமா வேற என்றுதான் சொல்லுவினம் ஆனால் அப்படியில்லை, வாழ்க்கையும் சினிமாவும் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று இணைந்து தானிருக்கு, சினிமாவில் எல்லாவற்றையும் மிகையாக காட்டுவதால் அது வேறுபட்டு தெரிகிறது. சில பாடல்கள் மனதிற்கு போடும் மருந்து. அப்படித்தான் எனக்கு இந்த பாடல்,மனதில் ஏற்பட்ட காயங்கள் மாறாது என்று தெரிந்தும் மருந்தை தேடுகிறேன், வாழ்க்கையே ஒரு தேடல்தானே!

நேசம் வைத்த யாருக்குமே நெஞ்சமெல்லாம் காயம் தான்
பாசம் வைத்த கண்களிலே காண்பதெல்லாம் மாயம் தான்

மேலும் சில பதிவுகள்