முதல் பிள்ளையை சமாளிப்பது எப்படி?

அனைவருக்கும் காலை வணக்கம் .....

எனக்கு 2.4 வயதில் ஒரு மகன் இருக்கிறான் ... இப்போது நான் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளேன்.
அவனை மனம் கோணாமல் சமாளிப்பது எப்படி? அவனை தூக்கவில்லை,அவனோடு
விளையாடவில்லை என்றால் சில சமயம் .
அவன் மிகவும் வருந்துகிறான் .

தூக்க சொல்லும்போதெல்லாம் மடியில் உட்கார வைத்து உட்காருங்கள்..அடிக்கடி நல்ல விளையாடுங்கள்...விளையாட்டு ஆர்வம் வந்தால் தூக்க சொல்வதை விடுவார்கள்..நிறைய பேசுங்கள்..நல்லபடியாக குழந்தை பிறந்து எல்லாம் சமாளிக்கும் பக்குவத்துக்கு வந்ச்துடுவீங்க..எல்லாரும் இந்த நிலையை கடந்து பல குழப்பத்தோட வந்தவங்க தான்....அதனால் குழம்பாம அமைதியா குழந்தையோடு செலவிடுங்க..சின்னது வந்தாலும் அவருக்கு பசி போக்குவதோ நிறுத்திடுங்க அதிகம் கொஞ்ச வேண்டாம்

என் மகன் கொஞ்சம் போச்சசிவி ....அதன் என் மன குலபர்திற்கு காரணம்

உங்களுக்கு எப்படி பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.நான் எப்படி சமாளித்து கொண்டுஇருக்கிறென் என்றால்,என் முதல் மகனுக்கு வயது 5,முதலில் என் பையன் கூட தூக்கலைன்னு வருத்தப்பட்டான்.எனக்கு வொமிட் வரும்,எப்பவுமே படுத்தேகிடப்பேன்.அம்மாக்கு காய்ச்சல் அடிக்குதும்மா,காய்ச்சல் போனவுடன் தூக்கிறேன் சொல்லுவென்.வொமிட் வந்தவுடனே அவ்னே புரிந்துட்டான்.காய்ச்சல் அடிக்குது வேனம்மா என்று சொல்லுவான்.இப்ப எனக்கு 6 வது மாதம்,4 வது மாதம் வயித்துலே பாப்பா இருக்குமா பாப்பாவுக்கு வலிக்குமா என சொல்லுவேன்.3 வது மாதம் ஸ்கேன் எடுக்கும் போது அவன் என் பக்க்த்திலே இருந்தான் அப்ப டாக்டர் அவனிடம் பேசினாங்க அப்ப டாக்டர் சொன்னது அவனுக்கு புரிந்துடுச்சு.இப்ப வரைக்கும் ஸ்கேன் பொடும் போது அவனை பக்கத்திலே வைத்து பாபா குட்டி கை,கால்,ஹார்ட் அன்று சொல்லும் போது பார்த்துகிட்டே இருப்பான்.
ராஜி உங்க பையனுக்கு 2.4 வயது கொஞ்சம் கஷ்டம் தான்.அனுபவம் மிக்க தோழிகள் வந்து பதில் தருவார்கள்.

மேலும் சில பதிவுகள்