நான் vog ஒருவரை கன்சல்ட் பண்ண வேண்டுமா

எனக்கு உதவவும் ப்ளீஸ், நான் கருத்தடை சாதனம் (லூப்) போட்டுள்ளேன். மார்ச் 26வரவேண்டிய பீரியட் இன்னும் வரவில்லை. யூரின் செக் பண்ணிபார்த்தேன் pregnancy negative
என்றுதான் உள்ளது. இது போல் யாருக்காவது ஏற்பட்டிருக்கா. நான் vog
ஒருவரை கன்சல்ட் பண்ண வேண்டுமா. தயவு செய்து எனக்கு பதில் தரவும்.

என் கேள்விக்குப் பதில் தரவும் ப்ளீஸ்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று நலமா

உடம்புல தெம்பு இல்லாட்டாலும் இப்படி தான் நாள் தள்ளி போகும் 5 நாள் தானே எக்ஸ்ட்ரா போயிருக்கு கவலை வேண்டாம். 4 நாள் பாருங்க வரலைனா மருத்துவரிடம் போய் காட்டுங்க நானும் இது போல அனுபவிச்சிருக்கேன் ஆனால் மருத்துவரிடம் போனதில்லை தானாகவே வந்து விடும் உங்களுக்கு பயமிருந்தால் மருத்துவரிடம் காட்டுங்க

ஸாஹிதா பானு உங்களுக்கு நன்றி அப்படியும் இருக்கலாம்தான் 2நாள் பார்த்துவிட்டு டாக்டரிடம்தான் போக வேண்டும்.
ம்ற்ற தோழிகள் இது போல் அனுபவம் இருந்தால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கூறவும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சந்தேகம் இருந்தால் எதுவானாலும் நாட்களைத் தள்ளிப் போடாமல் உங்கட ஃபமிலி டொக்டர்ட்ட போய்க் கதைங்க. VOG ட்ட காட்டவேணும் எண்டால் அவர் சொல்லுவார்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்