ஸ்பெஷல் சுழியன்

தேதி: April 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கடலைப்பருப்பு - ஒரு கப்
சீனி - 1 1/4 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் - 4
எண்ணெய் - பொரிப்பதற்கு
மாவிற்கு:
மைதா - முக்கால் கப்
இட்லி மாவு (புளிக்காதது) - ஒரு கப்
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கடலைப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். (தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிவது போல் வடித்தால் அந்த தண்ணீரில் ரசம் வைக்கலாம். ரசம் நன்றாக இருக்கும்.)
அதே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ மிதமான சூடாக இருக்கும் போதே வடிக்கட்டிய பருப்பை போட்டு கரண்டியால் மசித்து அதனுடன் சீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் விதையை பொடி செய்து அதையும் சேர்க்கவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து மசிய பிரட்டி விடவும். சீனி நன்கு இளகி தளர்வாகும். வாயில் வைத்துப் பார்த்து உப்பு சுவை இன்னும் வேண்டுமெனில் இன்னும் சிறிது சேர்த்து கொண்டால் சீனியின் சுவை எடுத்து காட்டும். அவற்றை அவ்வப்போது கிளறி கொண்டே இருந்தால் நன்கு இறுகி சுருண்டாற்போல் இறுகலாக ஆகும்.
அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மரவையில் கொட்டி ஆறவிடவும். ஆறிய கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதன் பிறகு மைதாவுடன், இட்லி மாவையும் இதர சாமான்களையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் மிகவும் தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக கலக்கி வைத்துக் கொள்ளவும். (கட்டி கட்டியாக இருப்பது போல் தோன்றினால் மிக்ஸியில் ஊற்றி ஒரு சுற்று ஓடவிட்டோமேயானால் ஸ்மூத்தான கலவையாகும்.)
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக மாவில் முழுவதும் படும்படி தோய்த்து எண்ணெயில் மெதுவாக போடவும்.
அடி சிவந்தது போன்று ஆனதும் மெதுவாக அவற்றை திருப்பி விடவும். ஒரே நிறமாக சிவந்ததும் எடுத்து டிஷ்யு பேப்பரில் வைக்கவும். சுவையான ஸ்பெஷல் சுழியன் தயார். நன்கு மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

நன்கு கிளறி உள்ளடம் வைப்பதால் ஒரு நாள் முழுக்க வெளியே இருந்தாலும் கெடாது. சுவையில் நல்ல வித்தியாசம் தெரியும். அனைவரும் ரசித்து சாப்பிடுவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அப்சரா அஸ்ஸலாமு அழைக்கும் பார்க்கும் போதே சாபிடனும் போல இருக்குபா ரொம்ப அருமையா செய்து இருக்கீங்க நாங்க செய்வது அடுப்பில் கிளற மாடோம் இட்லிமாவும் செர்கமாடோம் மைதா மட்டும் தான் நான் செய்யும் போது முதல்தடவ போட்டு எடுக்கும் போது நல்லா இருக்கும் அடுத்தது போடும் போது கருப்பு கருப்ப ஒட்டுது பா அதுக்கு என்ன செய்றது பா

அப்சரா ரொம்ப அழகா செய்து இருக்கீங்க வித்தியசமாவும் இருக்கு இட்லி மாவு சேர்பதனால்...........வாழ்த்துகள்.....

ஹாய் அப்சரா எப்படி இருக்கீங்க??

ஸ்பெஷல் சுழியன் சூப்பரான ஸ்பெசலா இருக்கு....இட்லி மாவு சேர்ப்பது வித்தியாசமா இருக்கு ..பார்க்கும் போதே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரான குறிப்பு..
அடுத்த நாள் வைத்து சாப்பிட நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்சரா,

நல்ல சுவையான குறிப்பு
ரொம்ப நாட்களாக இந்த குறிப்பை தேடி கொண்டு இருந்தேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல குறிப்பு..
எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க.ஆனால் இட்லி மாவு சேர்க்க மாட்டாங்க. நான் செய்து பார்த்துட்டு செல்றேன்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

சுழியன் எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட். இதில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாமா?உங்கள் படங்கள் அழகாக வந்துள்ளன. இட்லி மாவு சேர்ப்பது புதுமை. சத்தானதும் கூட.

இது போல பல பட குறிப்புகளை கொடுத்து எங்களை மென்மேலும் 'ஜொள்ளு' விட வைக்க வாழ்த்துக்கள் :)

அஸ்ஸலாமு அலைக்கும் அப்சரா
வீட்டில் அனைவரும் நலமா?ஸ்பெஷல் சுழியன் சூப்பரா இருக்கு இட்லி மாவு சேர்ப்பதுவித்தியாசமா இருக்கு முடியும் பொழுது செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்டா

ஹாய் அப்சரா நல்ல குறிப்பு எனக்கு பிடித்த சுழியன் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அப்சரா... எனக்கு எப்பவுமே சுழியன் அவ்வளவு பெர்ஃபெக்ட்டா வருவது இல்லை... எதனாலன்னு தெரியாது. அதே சுழியனை என் அண்ணன் சூப்பரா பண்ணுவான். உங்க முறை அருமை. அவசியம் செய்து பார்க்கிறேன். நல்லா இருக்குங்க. மாவிலும் இனிப்பு சேர்ப்பதால் சுவையும் கூடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்சரா... நான் முதலில் போட்ட பதிவையே நீங்க இன்னும் பார்கலயா??? ;) நான் செய்து சாப்பிட்டே ஆச்சு. ரொம்ப சூப்பர். சீனி தான் எனக்கு கொஞ்சம் அதிகமா தோனுச்சு, நான் அதிக இனிப்பு சாபிடாத காரனம்'னு நினைக்கிறேன். வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுது. நல்ல வாசம், நல்ல சுவை. அட்டகாசமா வந்தது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்சரா,
ஸ்பெஷல் சுழியன் செய்முறையும்,படங்களும் அசத்தலா இருக்கு.நீங்க செய்தாலே அது ஸ்பெஷல் தானே.சுழியன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.