தெரிந்தவர்களின் ஆலோசனை,விளக்கம் தேவை...

நமது தளத்தில் அனுபவம் மிக்க பெரியவர்களும்,மருத்துவர்களும் இருப்பீர்கள்.
எனக்கு தங்களது விளக்கமும்,ஆலோசனையும் தேவைப்படுகின்றது.
என் மகனுக்கு (2.6)வயதாகிறது.நாங்கள் ஊட்டியில் உள்ளோம்.கடந்த நான்கு மாதங்கள் முன்பு அவனது கன்னம் மற்றும் காதின் பின்புறம் (விளையாட்டு அம்மை போல)வீக்கம் இருந்தது.இங்கு வேம்பு இலைகிடைக்கவில்லை டாக்டரிடம் காட்டினோம் மருந்து கொடுத்தார்.அடுத்த நாளில் வீக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது. 3வது நாள் குளிக்கவைத்தேன்.
கடந்த மாதம் 13 அன்று என் அம்மா வீட்டில்(பிளையின்ஸ்)இருந்தான் நானும்தான்.அப்போதும் இதே போல வலது பக்கம் வீக்கமிருந்தது,அம்மா இலை அரைத்து போட்டுவிட்டார்கள்.அடுத்தநாள் வீக்கம் மறைந்துவிட்டது.3வது நாள் குளிக்க வைத்தேன்.. அடுத்த நாள் காய்ச்சல் வந்தது டாக்டரிடம் இந்த விவரத்தையும் சொல்லி பார்த்தோம் மருந்து கொடுத்தார்.பின்பு அவன் நன்றாக இருந்தான்.
அடுத்த 22ல் இங்கு(ஊட்டி)வந்துவிட்டோம்,25ஆம் தேதியில் அவனுக்கு மீண்டும் அதேபக்கம் வீக்கம்,வலி இருந்தது உடனே மருத்துவரிடம் சென்றொம் வளரும் பிள்ளைகளின் சுரப்பிகளின் இம்பேலன்ஸ் என்று கூறி மருந்து கொடுத்துள்ளார்.இப்போது "பொதுவான வீக்கம் குறைந்திருந்தாலும் ,காதுமடலின் கீழ் நெறி கட்டியது போல வீக்கம் இருக்கிறது"மருந்து கொடுக்கிறேன் .இன்னும் ஒருவாரம் பார்த்துவிட்டு மேலும் இப்படியே இருந்தால் மீண்டும் மருத்துவரை அனுகலாமென்று இருக்கிறோம்.
எனக்கு இதில் தெரிய வேண்டியது என்னவென்றால்
1. 'விளையாட்டு மாரியாக இருந்தால்'இப்படி அடிக்கடி வருமா?
2.ஹார்மோன் இம்பேலன்ஸ் எனில் எனக்கு அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
3.சளி இருந்தால் காதின் முன்புறம்தான் நெறிகட்டும்.(அனுபவம்)இப்படி பின்புறம் கட்டுமா?சலியால் இப்படி வருமா?
இதைப் பற்றி தெரிந்தவர்கள் கூறவும்.
பையன் நன்றாக விளயாடுகிரான்,தூங்குகிரான்,துறுதுறுப்பு,ஓட்டம்,மற்ற ஆக்டிவிட்டீஸில் எந்த தளர்வோ,வித்தியாசமோ இல்லை.

என்னப்பா யாரும் இந்தப் பதிவைப் பார்க்கலையா?அல்லது அதைப் பற்றி தெரியலையா? பதிலே இல்லையே....

theriyalai

வேறு யாருக்கேனும் தெரியுமாப்பா?

ரேனு,பயப்படாதீங்கபா,எல்லாம்சரியாயிடும். டாக்டரிடமே காட்டுங்கள்.

எனக்கு இதை பற்றி தெரியாது இருந்தாலும் ஹார்மோனல் இம்பேலென்ஸ் என்பதால் சொல்கிறேன் உடல் எடை சரியாக இருக்கிறதா என்று பாருங்க..எடை கூடுதலாக இருந்தாலும் கவனிக்கவும்..சத்தான ஆகரம் கொடுக்கவும் ஜன்க் தவிர்க்கவும்

தளிகா,வனி
வாரத்தில் 2,3முறை நூடில்ஸ் தவிர வேறு தருவதில்லைப்பா.........
வனி,ரம்யா,சீதாம்மா,ராதா யாருக்கும் இதுபற்றி தெரியாதா?

குழந்தைக்கு நூடில்ஸ் கொடுப்பதை நிறுத்துங்க. அது உடலுக்கு நல்லதில்லை. விளையாட்டு அம்மை தெரியும், ஆனா இப்படி திரும்ப திரும்ப வருமான்னு தெரியல. வராதுன்னு தான் தோனுது. வலி இருக்கா? வேறு மருத்துவரை பார்த்து ஆலோசனை கேட்டு பார்ப்பது நல்லது. நான் அம்மா மற்றும் என் அத்தையிடம் கேட்டு பார்க்கிறேன்... தெரிஞ்சா இன்னும் 3 நாட்களில் பதில் போடுறேன். ஒன்னும் கவலை வேண்டாம்... சரியாகிடும், நாங்க பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி....
கடந்த வாரத்திலிருந்து நூடில்ஸும் கொடுப்பதில்லை.வீக்கம் ஒரு நாளில் வற்றிவிட்டதுப்பா......ஆனால்,நெறிகட்டியது போலகாதின் பின்னால் இருக்குப்பா.....அவ்வப்போது வலி இருக்கும்போல் தெரிகிறது,அவனுன்க்கு சரியாக சொல்லத்தெரியலைப்பா...மருந்து கொடுக்கிறேன்... பார்த்துவிட்டு வேறு மருத்துவரைத்தான் அனுக வேண்டும்...

வலி இருக்கான்னு கேட்காதீங்க.. அழுத்தி பாருங்க வலி இருந்தா அவன் கத்துவான். ஏன்னா எங்க வீக்கமா இருந்தாலும் அது எதனாலன்னு தெரிய முதல்ல வலி இருக்கான்னு தெரியனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அவனிடம் சொல்லாமல் நானும் அந்தமாதிரி ட்ரை பண்ணிட்டேன்ப்பா. சில சமயம் வலிக்குது கையெடுங்கரான்,சில சமயம் கண்டுக்காம விட்டுடரான்.அதனாலதான் சொன்னேன் சரியா தெரிஞ்சுக்க முடிலனு.....

மேலும் சில பதிவுகள்