ஆரோக்கிய வாழ்வு (Healthy Lifestyle) - ‍ நான் ரெடி, நீங்க ரெடியா?!!

ஹாய் தோழிகளே,

எல்லாரும் நலம்தானே? எல்லாரும் வீக்கெண்ட்க்காக ஜாலியா காத்திருப்பிங்க, சிலர் வீக்கெண்டை ஆரம்பிச்சிருப்பிங்க. நல்லது. இப்ப விஷயத்துக்கு வரேன்.

ரொம்ப நாளாவே இந்த இழையை ஆரம்பிக்க நினைத்து, இன்றுதான் சந்தர்ப்பம் அமைந்தது. நம்ம அறுசுவையில சமையல், குழந்தைப்பேறு, அழகு குறிப்புகள் பகுதிகளுக்கு அடுத்தபடியா நிறைய வலம் வருவது, இந்த உடல் எடை குறைப்பு பற்றிய இழைகள்தாங்க. இதை பற்றி நிறைய பேர், நிறையவே பேசி, சொல்லி, நாமளும் படித்தும் இருக்கோம். சிலர் அதை கடைப்பிடிக்கவும் முயற்சி செய்து, வெற்றியும் கண்டு இருப்பாங்க!. சிலர் ஜோரா ஆரம்பித்து, தொடர்ந்து பின்பற்ற முடியாமல், நேரம் கிடைக்காமல், அப்படி, இப்படி என்று குழம்பி கொண்டு இருப்பார்கள் (சுருக்கமா சொன்னா என்னை மாதிரி! :))

அது சரி, அப்ப இருக்கிறது பத்தாதுன்னு இந்த புது த்ரெட் எதுக்குன்னு நினைக்கிறீங்க இல்லையா?! ஓக்கே, இந்த த்ரெட் முக்கியமா நம்மளை நாமளே ஊக்கப்படுத்தி கொள்வதற்காக!, சரி, விரிவா சொல்றேன். பல நேரங்களில், சரியான மோட்டிவேஷன் இல்லாமல்தான் இந்த மாதிரியான முயற்சிகள் தோல்வி அடைகின்றன. அதனால், நாம ஏன், ஒன்றாக கூடி நம்ம இல‌க்கை அடைய முயற்சிக்க கூடாது?! ஊர் கூடி இழுத்தால் தேர்கூட நகரும் இல்லையா?!

நான் இங்கே இலக்கு/லட்சியம் என்று குறிப்பிடுவது ஸ்ட்ரிக்ட்டாக உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லை. இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். சிலருக்கு, ஆரோக்கியமான வாழ்வை கடைப்பிடிக்க, சிலருக்கு உடலின் சில பகுதிகளை சரி செய்துக்கொள்ள/ உறுதிப்படுத்திக்கொள்ள, சிலருக்கு மொத்த உடல் எடையை சற்று குறைக்க‌ இப்படி.... பலவிதமா இருக்கும்.

ஓகே, இப்ப நாம செய்ய வேண்டியது எல்லாம் இதான். முதலில் ஒரு Goal செட் பண்ன வேண்டியது. அதற்கு தினமும் எந்த மாதிரியான முயற்சிகள் எடுக்கிறோம், எந்த விதத்தில் சரியாக செய்தோம் என்பது போன்ற விஷயத்தை இங்கே வந்து உரையாடுவோம். உதாரணத்துக்கு, எந்த மாதிரியான உணவு ஐட்டம்ஸ் எடுத்துக்கொள்கிறோம்... என்ன உடற்பயிற்சி மேற்க்கொள்கிறோம், வேறு என்ன மாதிரி அடுத்தவர் செய்ததை முயன்று பார்க்கலாம்... இந்த மாதிரியான விஷயங்கள்.

என்ன தோழிகளே, நான் சொல்ல வந்ததை சரியாக சொன்னேனென்றே நினைக்கிறேன். அப்புறம் என்ன?! வாங்க, வந்து யாரெல்லாம் கலந்துக்க விருப்பம் என்று சொல்லுங்க பார்க்கலாம்... (விதிமுறைகள் இன்னும் சில நாட்களில் சொல்கிறேன்.)

இப்போ யாரெல்லாம் பங்குகொள்ள விருப்படுகிறீர்கள் என்று சொல்லுங்கள் தோழிகளே. நன்றி!

நிறைய உடற்பயிற்சி சம்பந்தமான கேள்விகளும், பதில்களும் நம்ம தோழி பாப்ஸ் உமா அவர்கள் தந்திருக்கும்.... தோழிகள் கவனதிற்கு பகுதிகளில் இருக்கின்றன.
அதற்கான லிங்ஸ் சட்டென்று இப்ப கிடைக்கவில்லை. கிடைத்ததும் இங்கே இணைத்துக்கொள்ளலாம். தோழிகள் மன்றத்தில் தேடிப் பாருங்கள்.

வாருங்கள் தோழிகளே... உற்சாகமான ஒரு பகுதியாக இதை மாற்றுங்கள். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

நல்ல இழை..நானும் உடலற்பயிற்சி செய்யோனும் செய்யோனும்னு நினைக்கிறேன்.. ஆனா மிடியலை.. இது மூலமா ஏதாவது பண்ணி உடல் எடையை குறைக்க ட்ரை மாடறேன். ஒரு கலாட்டா கிச்சன் மாதிரி கலாட்டா ஜிம்மா இது பொலிவு பெற வாழ்த்துக்கள்..

நான் செய்யற்து.. தவறாமல்.. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஃஹானர்... தினமும் காலை ஒரு வேக வைத்த முட்டை.. ஹோல் வீட் பிரட் 2 ஸ்லைஸ் வித் ஃபேட் ஃப்ரீ சீஸ் & ஸ்ட்ராபெரி ஜாம்.. ஒரு கப் பால் வித் பிரவுன் சுகர் ..தவறாக நினைக்க வேண்டாம்.. நாட்டு சக்கரை.. ஹீஹீஹீ..இரண்டு நான் ஓட் மீல், ஒரு நாள் கெலாக்ஸ்...

மத்த நேரம் ஃபுல் கட்டு.. அவ்ளவே தான்.. இனி தான் இந்த இழை மூலம் யோகா செய்ய ஆரம்பிக்கனும்.. என்னை பண்ண வைக்க வேண்டியது உங்க பொறுப்பு.. சொல்லிட்டேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பதிவு போட்டுட்டு வீட்டுக்கு வந்து கொஞ்சம் பழச்சாறு பிள்ளைகளுக்கு போட்டு கொடுத்து, கூடவே நானும் குடித்துவிட்டு, சரி, சும்மா அறுசுவை செக் பண்ணலாமென்று வந்தேன். ஆஹா... உடனேயே முதல் ஆளாய் வந்து பதிவு போட்டதற்கும், உங்க வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ர‌ம்யா!

இப்போதிருந்தே ஹெல்தி ஃபுட் பழ‌க‌ நீங்க‌ முய‌ற்சிப்ப‌து ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் ர‌ம்யா. உங்க‌ ப்ரேக்பாஸ்ட் ந‌ல்லாவே இருக்கு! :) நானும்கூட‌ ஒரு கால‌த்தில் த‌வ‌றாம‌ல் காலைல‌ ஓட்ஸ் சாப்பிட்டு வந்தேன். அதற்கு முன்னாடி கட்டாயம் ஒரு டீ! (வித் ரெகுலர் சுகர்தான்!) அப்புற‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா, அவ‌ச‌ர‌த்துக்கு தகுந்தா மாதிரி, ப்ரெட் ஸ்லைசஸ் வித் ஜாம், ப்ரேக் பாஸ்ட் பார் (இதுதான் கல்ப்ரிட்!:(), இப்ப‌டி இஷ்ட‌த்துக்கு மாத்திகிட்டேன். என்னன்னா, கையில எடுத்துட்டு ஓட வசதியா இருக்கேன்னுட்டு! : )

உங்க‌ முறைப்ப‌டி இனி, வேக‌வ‌த்த‌ முட்டையை சேர்த்துக்கப் பார்க்கிறேன். ஆக்சுவ‌லா நிறைய‌ இட‌த்தில் ப‌டிச்சிருக்கேன். காலைல‌ ந‌ல்லா, ஹெல்தியான‌ ஐட்ட‌ம்ஸ் சாப்பிட்டுக்கிட்டா, ம‌தியான‌ம் சீக்கிர‌ம் ப‌சிச்சு, க‌ன்னாபின்னான்னு சாப்பிட‌ற‌த‌ த‌விர்க்க‌லாமென்று! :) ம‌ற்ற‌ நேர‌ம் உண‌வு ப‌ழ‌க்க‌ங்க‌ளைப் ப‌ற்றியும் இனி அடுத்த‌டுத்த‌ ப‌திவுக‌ளில் பார்க்க‌லாம்.

யோகா க‌ற்றுத்த‌ர‌ வேண்டிய‌து உங்க‌ பொறுப்பு என்று நீங்க‌ செல்ல‌மா உரிமை கொ‌ண்டாடிய‌து என‌க்கு பிடிச்சிருக்கு! கண்டிப்பா ரம்யா!. இப்ப‌ விஷய‌ம் என்ன‌ன்னா, என‌க்கும் யோகா கத்துட்டு, தொடர்ந்து ப‌ண்ண ரொம்ப ஆசை! சோ, நானே கொஞ்ச‌ம் த‌டம் மாறினாலும் நீங்க‌ என்னை விடாம‌ கூப்பிட்டுபோங்க‌! ச‌ரியா?! : ) மீண்டும் சந்திக்க‌லாம். பை!

அன்புடன்
சுஸ்ரீ

சரிதான்.. எனக்கு யோகா செய்ய தெரியும் ஆனா.. செய்றது தான் இல்லை.. காலைல சாப்பிடும் முட்டையை நைட்டே வேக வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது சத்தானது.. காலைல முட்டை ஓட்ஸ் வித் ஹனி வித் ஃபுரூட்ஸ் ரொம்ப நல்லது.சுகர் சேத்தக் கூடாது.. கிரீன் டீ சாப்பிடலாம்.. காபி அறவே கூடாது.

பழகளை சாப்பிட முன்பு எடுத்துக் கொள்வது தான் நல்லது.. அதிக சாப்பாடு இழுக்காது.. சாப்பிடும் போது குடலும் இலகுவாக செரிக்க உதவும்.. ஆனா சாப்பிட்டின் பின் எடுத்தால் உடல் எடை ஏறும்..

ஓட்ஸ்ல.. ஃபைபர், ப்ரோட்டீன், மினரல்ஸ்னு அதிகமான சத்து இருக்கு.. ஃபைபர் இருப்பதால் பவுல் மூவ்மண்டுக்கும் நல்லது.. வயிறு ஒரு ஸ்டோரேஜ் வேர் ஹவுஸ் மாதிரி தெவையில்லாத கசிவுகளை வைத்திருக்கும். அதை வெளியே துரத்தினாலேயே உடல் எடை லேசன மாதிரி இருக்கும்.. இன்னும் நிறைய பேசலாம் .... ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கே எனக்கா??? நானும் ரொம்ப நாளாவே உடல் எடையை குறைக்கணும்னு நினைத்து ஏதோ செய்யலாம் அதோ செய்யலாம்னு ஆரம்பிக்கவே யாரவது நம்மை தூண்ட மாட்டாங்களான்னு பார்த்தேன்.....நல்ல வேலையா இப்படி ஒரு இழை....ரொம்ப சந்தோஷம்.
என் பிரச்சனை என்னவெனில் என் குழந்தைகளுக்கு செய்து மிச்சம் ஆகிற (நெய், வெண்ணை சேர்த்த) உணவை நான் தான் சாப்பிட வேண்டும். (குறைவாய் செய்ய மனம் இருக்காது.....ஒரு வேளை இன்னும் வேண்டும் என்று கேட்டுவிட்டால்.....அது நடந்ததாய் சரித்திரமே இல்லை..) மத்தபடி ஜனக் பூட்ஸ் எதுவுமே சாப்பிட மாட்டேன்.
காலையில் முக்கால் வாசி சண்ட்விச் தான். பிரவுன் பிரட், அல்மென்ட் பட்டர் மற்றும் எதாவது ஜெல்லிவுடன், அது இல்லையென்றால் ஸ்க்ரம்புல்ட் எக் என்னைக்காவது ஆசையாக இருந்தால் உப்மாஆஆஆஆஆஆ.......ஒரு பதினோரு மணி போல் ஒரு காபி (2% மில்க் தான்....என் கணவருக்கு பாட் ப்ரீ பிடிப்பதில்லை)
மதியம் எப்பொழுதும் போல் சாப்பாடு...சாதம் கம்மியாகவும் காய்கறி நிறைய சாப்பிடுவேன். குழந்தைகளுக்கு ஊட்டிட்டு மிச்சம் உள்ள நெய் சாதத்தையும் சேர்த்து.
மாலையில் சில நேரம் காபி இரவில் தோசை அல்லது சப்பாத்தி தான். வாரத்தில் இரண்டு மூன்று தடவையாவது வெளியில் சாப்பிடுவோம்.
முன்பெல்லாம் குறைந்தது 3 மைல் நடந்தேன்....இந்த குளிர் காலம் வந்தபின் எல்லாமே புஸ்....இப்பொழுது திரும்ப ஆரம்பிக்கொனும்.....அதுவும் இல்லாமால் வீட்டில் சும்மா இருக்கும் போது நானும் யோகா செய்யனும். சரி ஜூட்....எப்போ ஆரம்பிக்கலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

nanRi

கஷ்டம் தான்.. மீதமுள்ள சாப்பாடு அதுவும் நெய் சாதம்னா சொல்லவே வேண்டாம்..நான் வீட்டுல வெட்டியா தான் இருக்கேன். எப்ப வேணாலும் ஆரம்பிக்கலாம்.. நான் ஸ்லிம் ஃபிட் தான்.. இருந்தாலும் மெயிண்டெயின் பண்ணனும் இல்லை ;(..

பரவாயில்லை நீங்க காய்கறி அதிகம் சாப்பிடுவது நல்லது... முடிந்தவரை எண்ணேய்யின் பொறிக்காமல் வேக வைத்து சாப்பிடனும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தொடரும் பதிவுகள்... அதைதான் சொன்னேன் எனக்கு பிடிச்சிருக்கு என்று!

ஹாய் லாவண்யா,

நீங்களும் நம்ம கட்சிதானா? அதாங்க, பசங்களுக்கு என்று சமைத்துவிட்டு, வீணாபோகக்கூடாதுன்னு சாப்பிடறது! :) இப்பப்ப கொஞ்சம் உஷாரா இருக்க முயற்சிக்கிறேன். ஆனாலும் எல்லா நேரமும் முடியமாட்டேங்குது! :(
உங்க டயட் முறைகள் எல்லாம் நல்லா இருக்கு!.

நாங்க எப்பவும் லன்ச்க்கு சாதம்+காய். இரவு டின்னருக்கு டிபன்தான். இட்லி, தோசை, சப்பாத்தி, நாண், பொங்கல், கிச்சடி...இப்படி ஒரு ரவுண்ட் வருவோம். நானும் இனிமேல் சாதத்தை குறைத்து, காய்கறி நிறைய சேர்த்துக்கொள்ள பார்க்கிறேன். என்னோட வீக்னெஸ்சே, ஸ்னாக்ஸ்தான். எப்பவும் கிடையாது, ஈவினிங் வேலை முடிந்து, பசங்களை ஸ்கூல் விட்டு அழைத்து வந்ததும், அவங்களுக்கு ஸ்னாக்ஸ் எதாவது கொடுக்கும்போது, எனக்கு இருக்கும் சோர்வு, டயர்ட்டுக்கு நானும் சேர்ந்து சாப்பிட்டு விடுவது. சில நாட்கள், முன்னதாகவே சுண்டல் எதாவது செய்து வைத்துவிட்டு ஆபிஸ் போவதுண்டு. ஆனாலும் எல்லா நாட்களும் இது ஒத்துவருவது இல்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க தோழிகளே.

அன்புடன்
சுஸ்ரீ

ரம்யா

நீங்க சொன்ன வேக வைத்த முட்டை பற்றிய விஷயம் புதிது. நைட்டே வேகவைத்துகொள்வதில் வேலையும் சுலபம்!
ஆமா, நைட் ப்ரிட்ஜ்சில் வைத்துவிட வேண்டுமா? இல்லை வெளியிலேயே இருக்கலாமா ரம்யா?

ஓட்ஸ் -‍ ஆமா நிறைய நல்ல விஷயங்கள், அதனால்தான் மறுபடியும் எப்படியாவது கன்டினியூ செய்ய‌ ட்ரை பண்ணறேன். உடனே, செயலிலும் இறங்கியாயிற்று! :)

இரவு டின்னருக்கு, நம்ம அறுசுவை குறிப்பான, ஓட்ஸ் டயட் இட்லி செய்து சாப்பிட்டாச்சு. நிஜமாவே சூப்பரா இருந்தது!

ட்ரை செய்து பார்க்க விரும்பினால், இதோ.... இங்க இருக்கு. http://www.arusuvai.com/tamil/node/17231

(பி.கு. நாளைக்கு எப்படியும் வெளியில் சாப்பிட ப்ளான் - பர்த்டே ஸ்பெஷல்!. அதனால் இன்னைக்காவது கொஞ்சம் நல்லபிள்ளையா இருந்துக்கறேன்! : ))

மீண்டும் பிறகு பேச‌லாம். நாளைக்கு சீக்கிர‌ம் எழுந்து க்ரிக்கெட் ஃபைன‌ல்ஸ் வேற‌ பார்க்க‌னும்! குட் நைட்!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் தோழிகளே நலமா??
எனக்கு பிடித்த ரொப்பிக், ஆனால் எதையும் தொடர்ந்து ரை பண்னுவதில்லை.:) எனக்கும் யோகா பண்ண விருப்பம்,ஆனால் முடிவதில்லை.(குழந்தைக்கு எதிர்பார்த்திட்டிருக்கோம் அதனால் உடற்பயிற்சி செய்ய தட,)
எனக்கு ஒரு டவுட், நான் காலையில் தொடர்ந்து ஒட்ஷ் எடுத்திட்டு வந்தேன்,இப்ப கட்.தொடர்ந்து ஒட்ஷ் சாப்பிட்டால் இரத்தச்சோகை வர வாய்ப்பிருக்கு என்று என் பக்கது பிளட் தோழி சொன்னா(ஏதோ மகசீனில் இருந்ததாம்), அதனால் தற்போது கிழமையில் ஒருதடவை சப்பிடுவேன்.
அதைவிட,வீட் றஷ்க், ரைஷ் கேக்(சுகர் சேர்க்காதது),பிரட்,எடுத்துப்பேன்.+ வழைப்பழம்.
வெயிட் அளவாக உள்ளது,ஆனால் அதிகமாகுதோ என் மனப்பயம்,(வெயிட் வார்ச்சரில் ஒரெ அளவுதான் இருக்கும்)
11 மணியளவில் ஒரேஞ் சாப்பிடுவேன், அத்துடன் மதியம் சாப்பாட்டுக்கு முன் நிறைய தண்ணி குடிப்பேன், பின் மதியம் புள் கட்டுத்தான்,ஈவினிங் டீ குடிக்கிற பழக்கம் கிடையாது,பசித்தால் நட்ஷ்,பழங்கள் சப்பிடுவேன்.இரவு பழையபடி புள் தான்:)
(குறைக்கமுடியுதில்லை)
மற்றம்படி வாக்கிங் கிழமையில் 2,3 நாட்கள் தான்
வீக்கெண்டில் கண்டதெல்லாம் வாயில் போடுவது மாதிரி தோணுது, :) ஆத்துக்காரரை கவனிக்கிற சாட்டில் நானும் கட்டு கட்டிடுவேன்.வெளியில் போய் சாப்பிடுவது கிழமையில் ஒரு தடவைதான்.
ஓகே தோழிகளே , நான் ஏதாவது மாத்திக்கனுமா??

மேலும் சில பதிவுகள்