Amway & herbal life products

ஹாய் தோழி,
சிலர் Amway and herbal life products
விற்பதன் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கீன்றனர்.அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?.
தயவு செய்து உங்கள் ஆலோசனை கூறவும்.

ஹாய் பத்மா, எப்படி இருக்கீங்க? உங்களுக்கு இதில் ஆர்வம் உள்ளாதா? இதை பற்றி நீங்கள் விவரமாக அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் - sbrjothi@gmail.com,ekmravi@gmail.com. உங்களுக்கு வேண்டிய விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ரவி... சொல்வதை இங்கயே சொன்னா எல்லாரும் தெரிஞ்சுக்குவாங்களே... ஏன் மெயிலில் கேக்கனும்??? ஏன்னா இங்க வருகிறவர்கள் நிறைய பெண்கள்... இதை விரும்ப மாட்டாங்க. கூடவே நீங்க சொல்லும் தகவல் அறுசுவையில் இருந்தா எல்லாருக்கும் பயன்படும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Yes ravi vanitha madam solradum sari dan enga elarukum purigira madiri ingaye sollungalen

நான் அறிந்த வரை இது ஒரு ஏமாற்றும் வேலை .Just selling the product to whoever believes us without knowing that exact useful and heard that people who have marketing skill they will sell the costly product to us. Due that so many people suffered after losing so much money.
How far is it true? Is it like MLM work?

Br,Padma

All is Well

நீங்கள் சொல்வதுபோல் இது ஒன்றும் ஏமாற்று வேலை இல்லை.நீங்கள் விரும்பினால் பொருட்களை வாங்கிகொள்ளலாம். பொருட்கள் கேட்பவர்களுக்கு மட்டும் நீங்கள் வாங்கி கொடுக்கலாம். it is not a MLM, its a franchising business.இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதேபோல் நீங்கள் கூறியதுபோல் அதிக விலையுள்ள பொருளும் இல்லை. பொதுவாக organic farming (தாவர முறையில்) முறையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருளுமே, ரசாயன கலவையுள்ள பொருளைவிட சற்று கூடுதலாக் இருக்கும். நீங்கள் பொருளின் தரத்தை மட்டும் பார்க்கவேண்டுமே தவிர இதை மற்ற ரசாயன கலவை உள்ள பொருளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அதே போல் அவர்கள் குறிப்பிடும் அளவு போல் சரியாக பயன்படுத்தினால் இதை விட மலிவான ஒன்று கிடையாது என்று தான் நான் சொல்வேன். இந்த பொருட்களை உபயோகிப்பதால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது. உடல் நலத்திற்கு தீங்கும் கிடையாது. அதேபோல் உடல் நலத்திற்கு தேவையான இணைஉணவுகளும் உள்ளன. இதுவும் organic farming (தாவர முறையில்)முறையில் செயற்கையான ரசாயன கலப்பு இல்லாமல் அவர்களின் சொந்த நிலத்தில் பயிரடப்பட்ட தாவரத்திலிருந்து பொருட்களை தயார் செய்கிறார்கள். இதற்காக அவர்கள் சொந்தமாக 6000 ஏக்கர் நிலம் வைத்துள்ளார்கள்.அமெரிக்காவில் மூன்று இடஙகளிலும் ,பிரேசில் ஒரு இடத்திலும் சேர்த்து மொத்தம் 6000 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலங்களுக்கு அவர்கள் அங்கேயும் ரசாயன உரங்களை பயன்படுத்துவதே கிடையாது. பொதுவாகவே allopathy மருந்துகளை விட homeopathy மருந்துகள் விலை அதிகமாகத்தான் இருக்கும். இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நிறைபேர் விஷயங்கள் முழுமையாக தெரியாமல், தவறுதலான வழிகாட்டுதலால் நீங்கள் கூறியதுபோல் நடக்கிறது. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது தெரியபடுத்த. எனவே தவறானவற்றை விட்டுதள்ளுங்கள். இதில் சம்பாதிக்க நிறைய பணம் இருக்கிறது. நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கலாம். இதில் தலைமுறை (Royalty Income) வருமானமும் உண்டு. இது தான் இதில் உள்ள மிகப்பெரிய advantage.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

As ravi said it was not a cheating one. I am a amway dealer. I have earned lot of money through this bussiness. This is the only bussiness who can earn and makes others to earn. Those who are useing this product can know the value of the product. I had made so many peoples to earn a lot. i am not at all going anywhere i am doing this bussiness from the home only.

With Regards,
P.Devipriya

Hai Ravi & Devimaran,

Thanks for your clarification.

Br,Padma

All is Well

இப்போவாவது புரிந்து கொண்டீர்களே ரொம்ப நல்லது. உங்களை போன்று எல்லோரும் புரிந்துகொண்டால் நல்லது. நல்ல விஷயங்களை நாலு பேருக்கு சொல்லலாம் இல்லையா...... மேலும் அனைவரும் இதில் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கலாம்.......

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள உணவு முறை உலகத்தில் வேறெங்கும் இல்லாத அற்புதமான உணவு முறைகள்.
கீரைகள்,
ஒரு நாளைக்கு ஆணுக்கு 300கிராம், பெண்ணுக்கு 200கிராம் சாப்பிட வேண்டும். அது போல துவரம் பருப்பில் இல்லாத புரதமா?. முளை கட்டிய பயறு வகைகள், சிறு தானியங்களான சோளம், கம்பு கேழ்வரகு முதலானவற்றை உணவில் பழக்கப் படுத்தி கொள்ளுங்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிடுங்கள். இதை விடுத்து பாஸ்ட் புட் என்ற பெயரில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடும் பொழுது நாம் நாக்குக்கு அடிமையாகி விடுகிறோம். இயற்கையாக உணவில் கலந்து சாப்பிடும் பொழுதுதான் அது நமக்கு நல்லதே தவிர மூலிகைகளை மாத்திரை வடிவில் சாப்பிட்டால் அது செயற்கைதான். நமது சித்தர்கள் கண்டு பிடித்த வைத்திய முறைகளை மேலை நாட்டு பித்தலாட்டகாரர்கள் நம்மை ஏமாற்றி ஒரு ரூபாய் மாத்திரை அல்லது பவுடரை அதிக விலைக்கு விற்று கொள்ளை அடிக்கிறார்கள்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?.

அன்புடன்
THAVAM

தவமணி அவர்களே....நீங்கள் கூறுவதை நான் முற்றிலும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் இன்றைய சூழ்நிலையில் நீங்கள் கூறியதுபோல் இயற்கையான முறையில் பயிர் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லையென்று தான் கூறுவேன். அனத்தும் ரசயான உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்யபடுகிறது. மேலும் இயற்கை உரங்கள் பயன்படுத்துவதே கிடையாது. இன்னும் சில வருடங்கள் கழித்து கேட்டால், இயர்கை உரமா? அது என்ன என்று கேட்கும் நிலை வரும். உதாரணமாக முன்பெல்லாம் நெற்பயிரிடப்பட்டு 90 நாட்களுக்கு பிறகு தான் அறுவடை செய்வார்கள். அதற்கு பிறகு அது அரிசியாக்கப்ப்பட்டு நாம் சாப்பிட கிடைக்கும்போது 100 நாட்களுக்கு மேல் ஆகிவிடும். ஆனால் இப்பொதெல்லாம் அப்படி கிடையாது.நானும் எனது சொந்த ஊரில் இருக்கும் வரையில் இயற்கையில் கிடைக்கும் காய்கனிகள் மற்றும் பழங்களை உண்டு வந்தேன். அன்று அங்கு எனக்கு சக்தி, ஆனால் இங்கு இன்றைய சூழலில் அதே காய்கனிகளை உண்ணும்போது அதற்கேற்ற சக்தி கிடைக்கவில்லை.
எல்லா வளமும் இருந்தது இந்த திருநாட்டில், எப்போது? இந்த பாடலை எழுதிய அந்த காலத்தில். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அனைத்து விவசாய நிலங்களும் இன்று கட்டிடங்களை தாங்கி நிற்கின்றன. அதேபோல் தான் எனது சொந்த ஊரில், 20 வருடங்களுக்கு முன்பு ஊரைசுற்றி விளை நிலங்களாகத்தான் இருந்தது. ஆனால் இன்று அனைத்தும் வீடுகளாக மாறி உள்ளது. பிறகு எப்படி நமக்கு இயற்கை உணவு கிடைக்கும். உதாரணமாக, பழைய சாதம் இது எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த பழைய சாதத்தில் எந்த அளவிற்கு புரதம் மற்றும் விட்டமின் B உள்ளது என்று நிறைய பேருக்கு தெரியாது. அப்படியே சாப்பிட்டாலும், அன்றைய கைகுத்தல் அரிசியில் இருந்த சக்தி இன்று கிடையாது. இன்று அரிசியில் எத்தனையோ ரகங்கல் வந்து விட்டன. அனைத்தும் அதனுடைய சக்தி நீக்கப்பட்ட பின்பு தான் நம்மிடையே வந்து சேர்கின்றன. அதே போல் அந்த பழைய சாதத்தில் இருக்கும் தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தால், வயிரு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். இது என்னுடைய அனுபவம். நான் அன்று சாப்பிட்டதற்கும் இன்று சாபிடுவதற்கும் நிறைய மாற்றங்களை உணர்கிறேன்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

மேலும் சில பதிவுகள்