rocher almond

egg macaroon/almond rochers செய்ய ஆசை..எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.இதை எப்படி செய்வது...ஒவ்வொரு கட்டமாக சொல்லித் தந்தால் உதவியாக இருக்கும்..சில தளங்களை பார்த்து ஒரு ஆர்வத்தில் செய்தேன்..எழுந்து நின்று கொண்டிருந்த வெள்ளை மலைகள் அப்படியே சோகத்தில் படுத்துக் கொண்டது கடைசி வரை எழும்பவே இல்லை.

ஹாய் தாளிகா
முட்டையின் வெள்ளை கருவை நன்கு பீட்டரால் அடிக்கவும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக சீனியை சேர்த்து அடிக்கவும் அப்படி அடிக்கும்போது பனி போன்று பொங்கி வரும் சட்டியை கவிழ்த்தால் அது கீழே விழாது சட்டியோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் அந்த பதம் வந்ததும் பாதாம்,முந்திரியை வறுத்து கொர கொரப்பாக மிக்ஸியில் அரத்துக் கொள்ளவும் அதை முட்டை கலவையுடன் சேர்த்து கலக்கவும் பிறகு ஒரு ஸ்பூனால் எடுத்து பேக்கிங் ட்ரேயில் வைக்கவும் கூம்பு வடிவமாக அழகாக வரும் ட்ரை செய்து பாருங்கள்

ஹாய் நஃபி

இப்படி தான் செய்தேன் ஆனால் நட்ஸ் சேர்க்கவில்லை..அது ஏன்னே தெரியலை நல்லா பொங்கி தான் இருந்தது ஆனால் அவனில் சூடு ஏறும்பொழுதும் கூட பொங்கி இருந்தது ஆனால் க்ரிஸ்பியா ஆகவே இல்லை..அவனில் இருந்து எடுத்தபின் அப்படியே சோகமாகிவிட்டார்கள்.

மேலும் சில பதிவுகள்