இந்தோனேசியாவில் சுனாமி அலர்ட்

தோழிகளே... இந்தோனேசியாவில் பூகம்பம், சுனாமி அலர்ட் என்று செய்திகளில் பார்த்ததாக சொன்னார்கள். யாருக்கேனும் தெரியுமா? கவிசிவா... நீங்க அங்க தானே இருக்கீங்க? நலமாக இருக்கீங்களா? முடிஞ்ச்ஹா தெரியப்படுத்துங்க.

ஜாவா தீவில் நிலநடுக்கம் 7.1 என்று பதிவாயிருக்காம். சுனாமி அலர்ட் கொடுத்திருப்பதாக செய்தி. கவிசிவா எங்க இருக்கீங்க? நலமாக இருக்கீங்களா?? தோழிகள் யாருக்காவது தெரியுமா?? வேறு யாராவ்து அந்த நாட்டில் இருக்காங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நாங்க இருக்கும் தீவில் பிரச்சினை இல்லைப்பா. எனக்குத் தெரிந்து பூகம்பம் நடந்த இடத்தில் அறுசுவைத் தோழிகள் யாரும் இல்லை.

சுனாமி எச்சரிக்கை வாபஸ் வாங்கிட்டாங்க. இந்த பூகம்பத்தால் அதிக சேதம் இல்லைன்னுதான் சொல்றாங்க.

நன்றி வனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்பாடி... நிம்மதி. தொடர்ந்து இது போல் செய்திகளையே கேட்டு பயமாகி இருக்கு. உங்க பதிவை பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா வனி! இந்த நாட்டில் பூகம்பம் எரிமலை வெடிப்பு நிலசரிவுன்னு இயற்கைப் பேரிடர்கள் அதிகம். பொருளாதாரமும் மெச்சும் நிலையில் இல்லை. ஊழலுக்கும் பஞ்சம் இல்லை. ரொம்பவே பாவப்பட்ட மக்கள் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கேள்விபட்டிருக்கேன் அந்த நாட்டை பற்றி. செய்திகளில் பார்க்கும் போது கூட பாவமா தோனும்... எப்படிடா இங்காலாம் இருக்காங்கன்னு கூட நினைப்பேன். எதுக்கும் நீங்க ஜாக்கிறதையா இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நாங்க இருக்கும் தீவு பாதுகாப்பானது! அதானே இங்கேயே இருக்கோம் :). சிங்கப்பூரிலிருந்து கண்ணுக்கெட்டும் தொலைவில் (உண்மையிலேயே இங்குள்ள கடற்கரையில் நின்றால் சிங்கப்பூரின் கட்டிடங்கள் தெரியும்) இருக்கும் ஒரு தீவு. சிங்கப்பூருக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வரையில் எங்கள் தீவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்