hi,
I'm 8 week pregnancy,today ultrasound scan panna sollirundhanga.adhula baby age 4weeks 4days thaan irukkunu sonnanga.Dr 1 week wait panni marubadium scan pathutu baby growth irundhuchunna ok,otherwise adha clean pannidanum nu solraanga.
but enaku today mrng la irundhu light spotting irukku.enna panradhunea theriyala.kastamavum kavalaiyavum irukku.ippadi yarukkavadhu irundhurukka????pl tell me
suji24
சுஜி
டாக்டரை பாருங்க உடனே. கவலைபடாம இருங்க. எல்லாம் நல்லபடி நடக்கும். எங்கள் பிராத்தனைகள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Suji ..!!!
ச்பொட்டிங் இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுகுங்கள் ..தைரியமாக இருங்கள் ..!! தைராய்டு , ஹார்மோன் ப்ரோப்லம் ஏதும் உள்ளதா என்று செக் செய்யுங்கள் ..கவலை படாதீர்கள் ..!!!
Express Yourself .....
enakku thyroid problem
enakku thyroid problem irundhuchu,adhukku treatment eduthu adhu control aaiduchu
Suji
Hai Suji
இன்னும் ஏன் டாக்டரை கன்சல்ட் பன்னாம இருக்கீங்க,, சீக்ரம் போஇ பாருங்க.
ஆரோக்யமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
feotal growth
எனக்கு இதை பற்றி தெரியாது..ஆனால் ஸ்பாட்டிங் இருந்து ஒரு வேளை இந்த டாக்டர் க்லீன் பன்னனும்னா எதுக்கும் இன்னொரு டாக்டர்டயும் போய் கேளுங்க..எதுவும் ஆகாம நல்லபடியா எல்லாம் நடக்கட்டும்
டாக்டரை பாத்தோம் அவங்க தான்
டாக்டரை பாத்தோம் அவங்க தான் வெயிட் பண்ண சொன்னாங்க.இப்படி யாருக்காவது இருந்துதா ????
ப்ளீஸ் யாரவது சொல்லுங்க
suji ..!!
ஸ்பொட்டிங் ஆன பின் டாக்டரை பார்தீர்களா .. இல்லையெனில் உடனே செல்லுங்கள் .. !!
Express Yourself .....
Hai Suji (Nafi)
ஹாய் சுஜி
எனக்கு ப்ரெக்னென்ட் டெஸ்ட் செய்து 2 வாரம் கழித்து டாக்டர் ஸ்கேனுக்கு வர சொன்னாங்க டாக்டர் அபாயின்மென்ட்க்கு ஒரு நாள் முன்னாடி எனக்கு ஸ்பாட்டிங் ஆனது ரெம்ப பயந்து போய் அடுத்த நாள் ஸ்கேனுக்கு போனோம் பார்த்து விட்டு உங்களுக்கு கரு எதுவுமே இல்லைனு சொல்லிட்டாங்க எனக்கு ரெம்ப தாங்க முடியல ஏன்னா எனக்கு ஏர்கனவே 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது இது 3ஆவது முறை
மீண்டும் 2 வாரம் கழித்து டாக்டர் வர சொன்னார் அதற்க்கு இடை பட்ட காலத்தில் ஸ்பாட்டிங் ஆகிக் கொண்டு இருந்தது என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என் கணவர் மட்டுமே எனக்கு ஆறுதல் அந்த 2 வாரத்தில் அதிகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் 2 வாரம் கழித்து ஸ்கேன் பார்த்தோம் குழந்தை நன்றாக இருந்தது ஹார்ட்பீட்டும் வந்து இருந்தது
டாக்டர் சொல்வதை கேட்டதும் எனக்கு அவ்வளவு சந்தோஷம் டாக்டராலேயே நம்ப முடியவில்லை
உங்களுக்கு அதிகமாக ப்லட் வருகிறது என்றால் உடனே டாக்டரை பார்ப்பது நல்லது கடவுள் நமக்கு அந்த குழந்தயை தந்தே ஆக வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் தருவார் அதை யாராலும் தடுக்க முடியாது நீங்கள் மனதை தளர விட வேண்டாம் எது நடக்கிறதோ அது நன்மைக்கு மட்டுமே! நீங்கள் அடுத்த முறை டாக்டரிடம் செல்லுங்கள் நல்ல விஷயத்தயே கூறுவார் எதை நினைத்தும் கவலை பட வேண்டாம் நிச்சயம் நான் உங்களுக்காக பிரார்திக்கிறேன்
Hai nafi, wednesday enakku
Hai nafi,
wednesday enakku spotting irundhadhu nu doctor kitta ponom.annaiku night hospital'a admit aaga sollitanga.yesterday enakku D&C pannitanga.bcos baby valravea illayam,so appadiyea vitta future la problem aagum nu sonnanga.
enakku orea kavalaiya irukku.bcos engalukku marriage aagi 10months aachu,ippa thaan 1st time conceive aagi irundhean.
but kadavul enga meala karunai kaatavea illa.kudutha kuzhandaiya kooda udanea parichukittar!!
Regards,
Suji24
ஹாய் சுஜி
மிகவும் வருந்துகிறேன், கடவுள் கண்டிப்பாக துணையிருப்பார் கவலைப்பட வேண்டாம். இதற்கு காரணம், உங்கள் உடல்நிலை மற்றும் உடலில் தேவையான சத்துக்கள் இல்லாதது தான் என்பது என்னுடைய கருத்தாகும்.மேலும் எதிர்காலத்தில் இந்த மாதிரி வராமல் எவ்வாறு தடுக்க முடியும் இதற்கான காரணங்கள் என்ன என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. அதற்கு கீழ்கண்ட இணையதள முகவரியை பாருங்கள். மேலும் என்னுடைய blog - ல் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறேன். அது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த இணைய தளத்தை பார்த்து படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
www.ekmravi.blogspot.com
http://cdc.gov/ncbddd/folicacid/about.html
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.