அடம் பிடிக்கும் குழந்தை

என் பொண்ணுக்கு 2 வயது 8 மாதம் ஆகிறது. அவ ரொம்ப சமர்த்தா இருந்தா. நல்லா பேசுவா. நல்லா குறும்பு பண்ணுவா. ஆனா சொன்னா கேட்பா. இப்ப ரொம்ப அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டா.ரொம்ப ரகளை செய்யும் போது திட்டிட்டா ஒரே அழுகை.அப்புறம் சமாதானம் செய்யறதுக்குள்ள எனக்கு தான் அப்பாடானு இருக்கும்.

பொறுமையா சொன்னாலும் கேட்க மாட்டேங்கறா.இப்ப 2 மாதமா தான் இந்த மாற்றம். அதும் அழுது சமாதானம் ஆகி விளையாடும் போது கூட நடுவுல சினுங்கி கிட்டே இருப்பா. சில நேரம் எனக்கு சிரிப்பா வரும்.ஏன்னா எதுக்காவது திட்டி சமாதானம் ஆகி நல்லா விளையாடிட்டு இருப்பா. அரை மணி நேரம் கழித்து வந்து சினுங்குவா.என்னமா ஆச்சுனா, அம்மா திட்டிட்டீங்கனு சொல்லுவா.

அடம் பிடிக்க கூடாதுமானு பொறுமையா சொன்னா நல்ல பொண்ணா கேட்டுட்டு, பாப்பா நல்ல பாப்பா, அடம் பிடிக்க மாட்டேன், அழ மாட்டேன், சாரிமானு சொல்வா. அப்புறம் மறுபடியும் அதே பழைய கதை தான்.
எப்படி அவள மாத்தறதுனு தெரியலை.ஜூன்ல இருந்து ஸ்கூள் போக போறா. அங்க போய் அழுது அடம் பிடித்தா என்ன செய்யறது கவலையா இருக்கு.உங்க அனுபவங்களை வந்து சொல்லுங்க.

அன்புடன்
திவ்யா அருண்

ஹஹஹா..போக போக பழகிடும்;-)..இதெல்லாம் சகஜமப்பா..அட்லீஸ்ட் உங்க வாண்டு செய்தது தப்புன்னு சொல்ற பொறுமையாவது இந்த வயசில வந்ததே திவ்யா...எங்க வீட்ல என்னை முக்கால் பைத்தியமே ஆக்கியாச்சு.
எல்லாம் சரியாகும்....வளர் வளர ஒவ்வொரு குணமாக தொற்றிப் பார்க்கும்..அது நிரந்தரமாவதும் மறந்துபோவதும் எல்லாம் நம்மை பார்த்து தான்...பொறுமையா இருக்க இருக்க அவங்க நம்ம கிட்ட பழகுவாங்க..அதுக்குன்னு ரொம்பவே குத்துக்கல்லு போலவும் கேப்பதையெல்லாம் சாதிச்சு கொடுக்காமல் நல்ல விஷயம் கெட்ட விஷயத்தை பொறுமையா சொல்லி கொடுங்க..கண்டிப்பா மாறும் திவ்யா
மட்டுமல்ல 2.5 வயசு தானே போக போக இனியும் அதிகமாகும்..ஒரு 5/6 வயசு போல தான் பொறுமை பழகுவார்கள்.எஞாய்

என் பொண்ணு கையில் அடிச்சு ப்ராமிஸ் பண்ணுவா இனி அடம் பிடிக்க மாட்டேன் வனிதா நீ சொல்றதை கேக்கறேன்னு... [குழப்பிக்காதீங்க, அவ என்னை பெயர் சொல்லி தான் கூப்பிடுவது வழக்கம்] அடுத்த 1 மணி நேரத்தில் சொன்னதை காத்துல பறக்க விடுவா. நான் மறுபடியும் கெஞ்சுவேன்... ப்ராமிஸ் பண்ணியே செல்லம்னு... மெதுவா தலையை கவுத்துகிட்டு “ஆமா”னு ஆட்டுவா. இது எவ்வளவோ மாற்றம் தான்... இன்னும் ஒரு 6 மாசம் முன்னாடி பிடிச்சா பிடிச்ச பிடியில் நிப்பா. புரிஞ்சுக்குவாங்க... கொஞ்ச நாள் போனா. அவளும் 2 வயது வரை அடம் பிடிச்சதே இல்லை. 2 வயசுக்கு பின் தான் பிடிவாதம். சரியாயிடும் பயப்படாதிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஹஹஹா..போக போக பழகிடும்//

அப்ப சரியாகாது :-(

தளிகா எல்லா வீட்டுலயும் இதே கதை தானா. நான் கொஞ்சம் பயந்துட்டேன்.ஏன் இப்படி மாறிட்டானு.தினமும் எதை எல்லாம் சமாளிக்க வேண்டி வருமோனு ஒரு பயத்தோடயே என்னை வச்சுக்கறா.வீட்டில் நானும் அவளும் விளையாடும் வரை எந்த பிரச்சனையும் இல்ல.மத்த குழந்தைங்களோட toys share பண்றது பெரிய பிரச்சனை.எத்தனை முறை பொறுமையா சொன்னாலும் சரி, கண்டிப்பா சொன்னாலும் சரி ஏத்துக்கவே மாட்டேங்கறா இல்லாட்டி அழ ஆரம்பிச்சிடுவா.அவ
toys மட்டுமில்ல வீட்டுல இருந்து எதையும் எடுக்க கூடாது.பெரியவங்களுக்கு குடுக்க எந்த பிரச்சனையும் இல்ல.ஆனா கூட விளையாடும் மத்த குழந்தைகளுக்கு தான் குடுப்பது இல்ல.

//கண்டிப்பா மாறும் திவ்யா
2.5 வயசு தானே போக போக இனியும் அதிகமாகும்..ஒரு 5/6 வயசு போல தான் பொறுமை பழகுவார்கள்.//

கண்டிப்பா மாறும்னு நம்பிக்கை குடுத்துட்டு இன்னும் அதிகமாகும்னு வயித்துல புளிய கரைக்கிறீங்களே! என்னுடைய பொறுமைக்கு பெரிய சோதனையா!ம்ம்ம் போக போக பழகிடும் சரியா ரூபி. சரியா சொல்லியிருக்கீங்க.எனக்கு முக்கால் பைத்தியமா இல்ல முழு பைத்தியம் ஆவேனோ தெரியலை.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஆஹா உங்க வீட்டிலும் அதே நிலைம தானா. நல்லவேளை! நான் தனி ஆள் இல்லை.என்ன மாதிரியே பெரிய கூட்டமே இருக்கும் போலிருக்கு. உண்மையிலே உங்க பொண்ணுக்கு பெரிய மாற்றம் தான்.பிடிச்ச பிடியில் இருந்து மாறி செஞ்சதை தப்புனு புரிஞ்சுக்குறாங்களே! அந்த அளவு பொறுமையா இருந்து மத்திருக்கீங்க.உங்க டெக்னிக் என்னனு கொஞ்சம் சொல்லுங்க.

ஒவ்வொரு வயதும் ஒவ்வொரு மாதிரி போல.மாத்த முடியும்னு நம்பிக்கையோட இருக்கேன்.பார்க்கலாம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா

வெல்கம் டு தி "terrible two's mothers club". இதை terrible two என்று சொல்லுவார்கள். பொதுவாக இரண்டு வயது முடிந்த குழந்தைகள் இந்த மாதிரி தான் தான் அடம் பிடிப்பார்கள். அது வரை அவர்களுக்கு ஒன்றும் தெரியாது இப்பொழுது அவர்களுக்கு புரியும் ஆனால் புரியாது அப்படி ஒரு பருவம். நாம் என்ன (பொறுமையாக) சொன்னாலும் மண்டையை மண்டையை ஆட்டி கேட்பார்கள். ஏதோ அவர்களுக்கு புரிந்தது போல இருக்கும் இருந்தாலும் மறுபடியும் அப்படி தான் செய்வார்கள். இது அவர்களின் வயது ஒண்ணுமே பண்ண முடியாது. இந்த வயதில் அவர்களுக்கு தெரிந்த (பிடித்த) ஒரே வார்த்தை " NOOOOOOOOOO".

இது அவர்கள் வேண்டுமென்றோ பிடிவாதத்தாலோ பண்ணுவது கிடையாது. இது அவர்களின் வளர்ச்சியின் ஒரு அறிகுறி. அவர்களால் நன்றாக பேச தெரியாது அதனால் அவர்களின் செய்கை அப்படி இருக்கிறது. அவர்களுக்கு அதிகம் சாய்ஸ் கொடுக்க கூடாது. என்ன வேண்டும் என்று கேட்க கூடாது உனக்கு வாழைப்பழம் வேண்டுமா இல்லை ஆரஞ்சு. அவர்களுக்கு பொறுமையாக வரைமுறை சொல்லிக்கொடுக்கவும். தப்பு செய்தால் பொறுமையாக எடுத்துக்கூறி ஒரு இரண்டு நிமிடம் ஒரு இடத்தில ஒட்கார வைக்கவும். இரண்டு நிமிடம் முடிந்தவுடன் அவர்களிடம் சென்று எதனால் அங்கு உட்கார வைத்தீர்கள், இனி அப்படி செய்ய கூடாது, மன்னிப்பு கேட்க சொல்லி கொடுங்கள். முதலில் உட்கார மாட்டார்கள் இருந்தாலும் பொறுமையாக முயற்சி செய்து உட்கார வைக்க பழகுங்கள். தப்பு செய்தால் அவர்களுக்கு தரும் சலுகைகளை குறைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள்.

இதெல்லாம் நான் என் குழந்தையிடம் கடைபிட்டிக்கும் உத்திகள். நீங்களும் கையாண்டுப் பாருங்கள். பலன் கிடைக்கலாம். வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா சொல்றது கரக்ட்டு... நானும் ரொம்ப கோவமா அடிச்சுடுவேன். அப்பறம் அழும் குழந்தையை மெதுவா கொஞ்சி சமாதானம் பண்ணுவேன்... [நமக்கே கொஞ்ச நேரம் ஆனது ஏண்டா அடிச்சோம்னு தோனுதே] அப்ப்டி பண்ணும்போது அவ பண்ண தப்பை மெதுவா சொல்வேன்... அதாண்டா அம்மா அடிச்சுட்டேன்.. கோச்சுக்காத, நல்ல பொண்ணா இருந்தா அம்மா அடிக்கவே மாட்டேன்னு சொல்வேன். அடம் பிடிச்சா வெளியே கூட்டிட்டு போகாம விட்டுடுவேன்... கேப்பா நான் வரேன்னு... நீ அழுத, அடம் பிடிச்ச... பேட் கேர்ள், கூட்டிட்டு போகமாட்டேன்னு சொல்லி உம்முன்னு மூஞ்ச வெச்சுக்குவேன். உடனே வந்து சாரி சொல்வா. பண்ணமாட்டேன் இனினு சொல்லிடுவா. சாரி சொல்லும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்து வளர்த்து விட்டேன்... கோவமா தம்பியை அடிச்சுட்டா கூட “போய் தம்பிகிட்ட சாரி சொல்லி, ஐ லவ் யூ சொல்லு... நீ தானே தப்பு பண்ண...”னு சொல்வேன். கோவம் போனதும் தானா போய் சொல்லிடுவா. ஆனா இது எதுவும் சுலபத்தில் வந்ததில்லை... நான் பொறுமையை பல முறை இழந்திருக்கேன். அடிச்சுட்டு நானே அழுவேன்... ஏண்டா பிஞ்சு குழந்தையை அடிச்சோம்’னு. அம்மா என்னை அடிச்சுடுவாங்க... அவளை அடிச்சா அவ்வளவு கோவம் வரும் அவங்களுக்கு. வீடே இரண்டாயிடும். இப்படிலாம் இருந்தது 1.5 வயதில் இருந்து 2.5 வயது வரை... இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா மாற்றம் வருது. அடுத்து இப்போ என் மகன் 1.5 வயதில் இருக்கான்... அவனிடமும் இந்த பிடிவாதம் தலை தூக்குது. ;( எப்போ அவன் புரிஞ்சுக்க ஆரம்பிப்பானோ...!! இறைவா உலகில் உள்ள எல்லா அம்மா’கும் பொறுமையை கொடு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திவ்யா, வனி,லாவன்யா,தளிகா அனைவர் சொன்னதும் சரியே......என் மகனுக்கு(2.6)சாக்லட் தரமாட்டன்னா மட்டும் கோவம் வந்துடும்.ரொம்ப அடம்பிடிப்பான்.மத்தபடி அவனுக்கு இஷ்ட்டப்பட்டதை செய்யவிடலைனா அதை செய்துமுடித்த பின்னால்தான் அவனுக்கு திருப்த்தி.அதுவரை அதை மறக்காமல்(அழமாட்டான் )அதே சமயம் "16வயதினிலே கமல் போல, திரும்பத் திரும்ப கேட்டுக்கேட்டு பொறுமையிழக்க வைப்பான்........."
சில சமயம் அடித்துள்ளேன்,கன்னத்தில் கைவைத்து சும்மா உக்காந்துப்பான்,அவன் தப்பு செய்திருந்தால்(அம்மாக்கு பிடிக்காதுன்னு தெரிவதை) அழமாட்டான்.....பட் அவனுக்கு பிடிச்சிருந்து அதை செய்யவிடலைனா அழுவான் sooooo சென்சிட்டிவ்ப்பா.............
ஆனால் மற்ற பழக்கங்கள்,வரவேற்பது,வீடு சுத்தம் செய்ய ஹெல்ப் பண்றது, மத்தபடியெல்லாம் செய்வான்ப்பா......
உடல் சரியில்லைனா அவன் காலை நீட்டி என்னை படுக்க சொல்லி தட்டிக் கொடுப்பான்,மருந்து போடுவான்.... அவர்கள் புதிது புதிதாய் கற்றுக் கொள்கிறார்கள் இந்த வயதில் ஆகவே அதனை செயல் படுத்தவே பார்ப்பார்கள்.......நாம்தான் அனுசரித்து புரியவைக்க வேண்டும்ப்பா........
"பாசமாய் பழகி புரிய வையுங்கள் , எல்லாம் சரியாகிவிடும்......"
மற்ற பசங்களுக்கு விளையாட்டு சாமான் தருவதிதான் பிரச்சனைனு சொல்லியிருக்கீங்க.......குழந்தைக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன்,வீட்டிலேயே இன்னொரு பாப்பா இருந்தா இந்த பிரச்சனை சரியாவது சுலபம்ப்பா(புரியுதுள்ள..),நீங்கள் சொல்லிக் கொடுங்கள் அவர்களுக்கு கொடுத்துவிளையாடினாள் உனக்கும் அவர்கள் சாமான் கொடுத்து விளையாடுவார்கள்.உன்னுடையதை யாரும் எடுத்துக் கொண்டு போகமாட்டார்கள் விளையாடுவிட்டு உன்னிடமே தந்துவிடுவார்கள் என்று சொல்லி புரிய வையுங்கள்ப்பா........

//வெல்கம் டு தி "terrible two's mothers club". இதை terrible two என்று சொல்லுவார்கள்//

இவங்க அட்டகாசத்தை சமாளிக்க club போதும்னு தோணலை.

//இந்த வயதில் அவர்களுக்கு தெரிந்த (பிடித்த) ஒரே வார்த்தை " NOOOOOOOOOO". //

ரொம்ப சரியா சொன்னீங்க.என் பொண்ணுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வார்த்தை அது.அதை எத்தனை modulationல்ல சொல்வா தெரியுமா? சில சமயம் அவ சொல்றதை ரசிச்சிட்டு மிரட்ட நினைச்சதை விட்டுவேன். அவகிட்ட கண்டிப்பா இருந்தாலோ இல்ல கோவிச்சிட்டு உம்முனு இருந்தாலோ வந்து கட்டி பிடித்து அவள நான் கொஞ்சற மாதிரியே என்னை கொஞ்சி சிரிக்க வைச்சுடுவா.
சாய்ஸ் நான் அதிகம் கொடுக்க மாட்டேன்.ஆனாலும் இட்லி வேணுமா தோசை வேணுமானு கேட்டா பூரி வேணும்னு சொல்வா.

நீங்க சொல்லும் உத்தியை கடைபிடித்து பார்க்கிறேன்.

வனிதா உங்க மாதிரி தான் நானும் நடந்துக்குவேன்.அவளும் தப்பு தானு புரிஞ்சுக்கிட்டு சாரி சொல்வா.ஆனா அடுத்த 10வது நிமிடம் திரும்ப பழையபடி தான் நடக்கும்.
//இறைவா உலகில் உள்ள எல்லா அம்மா’கும் பொறுமையை கொடு.
//
கண்டிப்பாங்க. கடவுள் அது மட்டும் குடுத்திட்டா வேற பிரச்சனையே இல்ல.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாஹாஹா..உங்க எல்லாரோட பதிவையும் படிக்கலை நல்லா ஜாலியா இருக்கு.. உங்க கஷ்டம் புரியுது..ஆனாலும் குட்டியா குட்டியா இருந்துட்டு இதுங்க பண்ற சுட்டி தனம் இருக்கே.. எங்க அக்காவும் பொறுமை இழப்பா..ஆனா நான் எப்பவும் குட்டிஸ்க்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்.. ஆளு இருக்குற சைசுக்கு எல்லாரையும் ஆட்டிபடச்சிடுதுங்க இல்லையா..;) கூல் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்க சொல்வது சரி தான். இந்த அடம் பிடிக்கறதை தவிர்த்து மத்தபடி ரொம்ப சமர்த்து தான். //மற்ற பழக்கங்கள்,வரவேற்பது,வீடு சுத்தம் செய்ய ஹெல்ப் பண்றது, மத்தபடியெல்லாம் செய்வான்ப்பா......//
இவளும் அப்படி தாங்க.அம்மாக்கு உடல் சரியில்லைனா முத்தம் குடுத்து சரியாயிடும்மா.மருந்து சாப்பிடுங்கனு சொல்வா.அவங்க அப்பா அலுவலகம் கிளம்பும் போது சாப்பிடுங்கப்பா, பார்த்து போங்கனு சொல்வா.
//"பாசமாய் பழகி புரிய வையுங்கள் , எல்லாம் சரியாகிவிடும்......"//
நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன்.

உண்மையில்ல குழந்தைங்க மிகப்பெரிய அதிசயம், ஆச்சர்யம்.சின்ன குழந்தைக தான அவங்ககிட்ட சொன்ன உடனே அத follow செய்யனும்னு எதிர்பார்க்க முடியாது தான்.என்ன செய்வது பொறுமைய ரொம்ப சோதிக்கறாங்க.

//"16வயதினிலே கமல் போல, திரும்பத் திரும்ப கேட்டுக்கேட்டு பொறுமையிழக்க வைப்பான்........."//
இவ கேள்வி கேட்டு ரொம்ப சோதிப்பா. எத சொன்னாலும் உடனே ஏன்? எதுக்கு?எந்த பதில் சொன்னாலும் அதில் இருந்து ஒரு கேள்வி.சில சமயம் பதில் சொல்ல முடியாத மாதிரி கேப்பா.

எல்லாரும் என்ன மாதிரி தான் நல்லா அணுபவிக்கறீங்க போலிருக்கு.நான் தான் தாங்க முடியாம பதிவு போட்டிருக்கனா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்