பால் குடிக்க மாட்டுகிறாள்

என் குழந்தை(41/2 month) நேற்று மதியதிலிரிந்து பால் குடிக்க மாட்டுகிறாள்...பால் பாட்டிலை வாய் அருகே கொண்டு சென்றால் தள்ளி விடுகிறாள்..நான் ஒரு வேலை மட்டு rice ceral குடுக்கிறேன் ... rice ceral தவிர பால் சாப்பிட மாட்டுகிறாள் )......எனக்கு கவலையாக உள்ளது ...வழிசொல்லுங்கள்

hi sathya eppadi errukinga sollrannu thappa eduthukathinga milk kudikalana palladai vaithu uthuinga.illana ginger,vallam sarthu boil pani antha watera kuduthu try pannunga nan eppadi than seivan ok.

rajalakshmi

தேங்க்ஸ் லக்ஷ்மி ...பாலாடை வைத்து உதுவது என்றால் என்ன ??????

நீங்கள் குழந்தைக்கு குடுக்கும் பார்முலாவில் எதாவது மாற்றம் செய்தீர்களா? பாட்டலில் ஏதாவது மாற்றமா? தாய் பால் புகட்டுறீங்களா? இப்படி இருந்தால் தாய் பால் குடிக்கிறாளா இல்லையா?
நீங்கள் வேற பார்முலா ட்ரை பண்ணிப்பாருங்க. பாட்டில் இல்லாமல் ஸ்பூனில் அல்லது கப்பில் அல்லது சங்கில் கொடுத்து பாருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாலாடை என்பது சங்கடை. சங்கு மாதிரி அமைப்பில் இருக்கும். அதில் குழந்தைக்கு பால் குடுப்பாங்க.(பெரும்பாலும் ஒழுங்கா பால் குடிக்காத குழந்தைக்கு கட்டாயாபடுத்தி குடுக்கும் முறை.பாலாடையில் சரியா குடுக்க தெரியனும்.இல்லாட்டி குழந்தைக்கு புரை ஏறும்).USA ல்ல பாலாடை கிடைக்காதுனு நினைக்கிறேன்.
நீங்க ஸ்பூன்ல்ல குடுத்து பாருங்க. எந்த பால் குடுக்கறீங்க? ஃபார்முலானா டேஸ்ட் பிடிக்காட்டி மாத்தி குடுத்து பாருங்க.பால் பாட்டில் சரியாயிருக்கா? பால் சரியா வருதா?அதிகமா பால் வந்தாலும் குடிக்க சிரம்ப்படுவாங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

Thanks for the reply Vr Scorp AND Dhivya....
Enfamil Formula தான் குடுக்கிறேன் . 2 நாளாக தூங்கும் போது பால் பாட்டிலை வாயில் வைத்தால் குடிக்கிறாள் . சங்கடை எங்கு கிடைக்கும் என்று தெரியாது .... solid food ஒரு நாளைக்கு எந்தனை தடவை குடுக்கலாம் (41/2 months now)....?

sila narengalil kulandai ippadi seiyum. piragu sariaidum.

தூங்கும் போது பால் குடுப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் பாலை வாயில் வைத்துக் கொண்டே சில நேரங்களில் தூங்கி விடுவதால் காவிடீஸ் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அதை பழக்கபடுத்தாதீர்கள். பாலாடை / சங்கு எல்லாம் நம் ஊரில் தான் கிடைக்கும். இங்கு கிடப்பது அரிது. இருந்தாலும் நீங்கள் இந்தியன் ஸ்டோரில் விசாரித்து பார்க்கவும். (நீங்கள் இது வரையில் இதை கேள்வி பட்டதே இல்லையா ???!!!!) அது இல்லையென்றால் பரவாயில்லை நீங்கள் ஸ்பூனில் ட்ரை பண்ணி பார்க்கவும்.

வேறு பார்முலா ட்ரை பண்ணி பார்த்தீர்களா? முடிந்தால் ட்ரை பண்ணி பார்க்கவும். இல்லையென்றால் உங்களின் பீடியாட்டிரிஷியனிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் உங்களை எதாவது consultant இடம் அனுப்புவார்கள்.

பொதுவாக நான்கு மாதம் குழந்தைக்கு ஒரு நாளிக்கு இரண்டு முறை தான் திட உணவு கொடுக்க வேண்டும். அதுவும் முதல் முறை தரும் போது தண்ணியாக தர வேண்டும். அதாவது ஒரு டீஸ்பூன் சீரியல்ஸ் எடுத்து நான்கு அல்லது ஐந்து டீஸ்பூன் பார்முலா விட்டு கரைத்து கொடுக்கவும். போக போக அதிகப் படுத்தவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்