வழிகாட்டிகள்

அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம்
நம் குடும்பத்தில் நம் அலுவலகத்தில் இந்த சமுதாயத்தில் என்னற்றோரை சந்திக்கிறோம் .அவர்களால் நமக்கு நன்மையையும் விளைந்திருக்கலாம் ,தீமையும் விளைந்திருக்கலாம் .நாம் நமக்கு தீமை செய்தவரை என்னும் பொது நமக்கு எதெல்லாம் தீய குணம் எனச்சொல்லப் படுகிறதோ (கோபம் ,வருத்தம் ,பழிவாங்கும் எண்ணம் ,சாபமிடும் எண்ணம்) எல்லாம் வரும். அதுவே நமக்கு நன்மை செய்தவரை நினைக்கும் போது நமக்கு மகிழ்ச்சி , சந்தோசம் ,அவர்களுக்காக வேண்டும் எண்ணம் எல்லாம் வரும் .இங்கு நாம் அதை தான் செய்யப்போகிறோம் .
நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் ,நமக்கு தகுந்த நேரத்தில் உதவியவர்கள் இவர்களைப் பற்றிதான்.
1.நம் அம்மா அப்பா ,உடன்பிறந்தவர்கள் ,கணவர், மாமனார் மாமியார் ,கணவனின் உடன்பிறப்புகள்,நண்பர்கள் ,நாம் சந்தித்த மனிதர்கள் ,
2. நாம் படித்த பிறரின் வாழ்க்கை வரலாறுகள்
3.பருப்பு மடித்து வரும் பேப்பரில் உள்ள சிறிய கதை .
4.சின்ன குழந்தைகளிடம் கூட கற்றுக்கொண்ட விசயங்கள்
இப்படி எதாக வேண்டுமானாலும் இருக்கலாம் .அதனால் நாம் மாற்றிக்கொண்ட நம் குணங்கள் ,பழக்கவழக்கங்கள் ,நாம் தீர்த்துக்கொண்ட நம் பிரச்சனைகள் இவற்றைப் பற்றி நாம் இங்கு பகிர்ந்து கொள்ளலாமா?நாம் நம் வாழ்க்கையில் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டி இருக்கும் அதற்கான சந்தர்ப்பம் அமையாமல் இருக்கும் .அவர்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதால் மனதிற்கு திருப்தி கிடைக்கும் என எண்ணுகிறேன், நம்புகிறேன் .
அன்புடன்
காமினி

அன்பு தோழிகளே இது போன்ற இழை ஏற்க்கனவே இருக்கிறதா என தேடிப்பார்த்தேன் எனக்கு கிடைக்க வில்லை .இருந்தால் அதன் லிங்கை தரவும் .அதில் பதிவிடுகிறேன் .இல்லை என்றால் இதில் பதிவிடவும் நாம் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் அனைவருக்கும் பயன் தரும் அல்லவா ?
அன்புடன்
காமினி

ரொம்ப நல்லதொரு இழை..நேற்று தான் மனதில் இது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்..பிறகு வருகிறேன்

நான் எனது பெரிய அப்பா விடம் இருந்து சிறு வயதில் பிறருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது என்ற நல்ல பழக்கத்தை எனது ஆறாவது வயதில் கற்று கொண்டேன் .இன்றும் என்னால் ஆனா சிறு உதவிகளை செய்தும் வருகிறேன் .குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எனது கல்லுரி படிப்பிற்கான சீட்டு எனக்கு மெரிட் இல் கிடைத்தது. அனால் ஒரு பொருளாதரத்தில் பின் தங்கிய மாணவருக்கு அதை முழு மனதுடன் சட்ட பூர்வமாக அவருக்கு மாற்றி கொடுத்து நான் நிர்வாக சீட்டில் பெரும் தொகை கட்டி படிப்பை நிறைவு செய்தது மாறாக முடியாது. இன்று அவர் படிப்பு முடித்து நல்ல பணி இல் உள்ளார்.அவரது குடும்ப பொருளாதார மேலான நிலை இல் உள்ளது. பலன் எதிர்பாராமல் நாம் செய்யும் உதவிகள் எதிர் காலத்தில் நாம் வளர எதாவது விதத்தில் நமது தேவைகள் நிறைவு பெற உதவும் என எனது பெரிய அப்பா சொல்லுவார்கள் .அது உண்மை என நிருபிக்கும் வண்ணம் எனக்கான தேவை வரும் பொழுது எங்கிருந்தாவது உதவிகள் வரும்......இப்படி ஒரு நல்ல பதிவை ஏற்படுத்தி தந்த தோழி காமினி செல்வி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். சௌமியன்

இங்கு நான் நன்றி கூற கடமை பட்டுஇருபது என் கல்லுரி படிப்பிக்கு உதவிய ஆன்டி -யை. இன்று என் குடும்பத்தை மேலான நிலைல் உள்ளது என்றால் அதக்கு அவர் காரணம். துளி கூட தற்பெருமை இல்லாதவர். மிகவும் எளிமையானவர். அவரிடம் இர்ருது பிறருக்கு உதவி செய்யும் குணத்தையும், எளிமையும் கட்டுகொண்டேன். நானும் என்னால் ஆனா உதவிகலை செய்து வருகிறேன். என்றும் என் உதவிகள் தொடரும் அவர் பெர்யர் சொல்லி.

காமினி - கு என் மனமாந்த நன்றிகள். எனக்கு உதவிய கடவுளை நினைவு கூற வாய்ப்பு அளித்தமைக்கு...

வாழ்க வளமுடன்

தளிகா அக்கா முதல் பதிப்பிட்டதர்க்கு மிக்க நன்றி .ரொம்ப ரொம்ப யோசித்து தான் இந்த இழை யை ஆரம்பித்தேன் .எனக்கு உற்சாகம் கொடுத்ததற்கு நன்றி மீண்டும் சீக்கிரம் வாங்க

அண்ணா தங்களின் இந்த உயர்ந்தய குணம் யாருக்கு வரும் . ஒரு ருபாய் கொடுக்கவே தயங்கும் இந்த காலத்தில் நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் .நான் அறிந்து கொண்டதுடன் இல்லாமல் என் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பேன் .நன்றி அண்ணா .மீண்டும் தங்கள் அனுபவங்களை கூறவும் .
அன்புடன்
காமினி

தங்கள் பதிப்விற்கு நன்றி நித்யா . தங்கள் அனுபவம் பலருக்கு உதவும் என நம்புகிறேன் . தங்கள் சேவை தொடர ஏன் வாழ்த்துக்கள் .
அன்புடம்
காமினி

அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம் .இந்த இழை ஆரம்பித்ததின் நோக்கமே ஒரு முக்கியமானவங்க்களை பற்றி சொல்லத்தான் . அவங்க என் அம்மா .

என் அம்மா விடம் இருந்து நான் கற்றுக்கொண்ட நல்ல குணங்கள் பல அதில் மிக முக்கியமான அனைத்து திருமணமான பெண்ணிற்கும் தேவையான ஒன்று. தன் குடும்பம் ,கணவர் குடும்பம் என் வேற்றுமை பார்க்காதது. நிஜமா சொல்றேங்க எனக்கு 8,9 வகுப்பு படிக்கும் வரை யார் யார் என் அம்மாவின் சொந்தங்கள் யார்யார் அப்பாவின் சொந்தங்கள் என தெரியாது .அப்படி எல்லோரையும் ஒன்றுபோல் உபசரிக்கும் குணம் .இன்றும் நான்கு தலைமுறை உறவுகளும் வந்து செல்கின்றனர் .என் தாத்தா , ஆச்சி இப்போது உயிருடன் இல்லை .இருந்தும் இத்தனை உறவுகளும் வந்து போவதற்கு காரணம் என் அம்மா .எங்க ஆச்சி இறந்தபின் என் தாத்தாவிற்காக அந்த சிறிய கிராமத்திலேயே இருந்தோம் .அப்பாவிற்கு நேவியில் வேலை அங்கு சென்றிருந்தால் நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் .என் தாத்தா கிராமம் ,தோட்டத்தை விட்டு வர மறுத்த காரணத்தால் கிராமத்திலேயே தங்கி அரசு பள்ளியில் படித்து வளர்ந்தோம் .எத்தனை பேர் மாமனாருக்காக தன் சந்தோசத்தை இழப்பார்கள்.

என் அம்மவிர்க்கே 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது .இன்றும் என் தந்தையின் சித்தி(அப்பாவினுடைய அம்மாவின் சித்தி பொண்ணு )க்கு உடல் நிலை சரியில்லை என்று வீட்டுக்கு அழைத்து வந்து மூன்று , நான்கு மாதம் மருத்துவம் பார்த்து அனுப்பி வைத்தார்கள் (அவர்கள் சொந்த மகள் கவனிக்கவில்லை) இதை பார்க்கும் பொது என் மாமியார் மாமனாரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நானும் அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும் நான் அவர்களை என் முழு மனதுடன் கவனித்துக்கொள்கிறேன் .

இன்று நான் அவர்களிடம் நன்றாக நடந்துக்கொல்வதால் என் மாமியாரும் என்னிடம் நன்றாக நடந்துக்கொள்கிறார்கள் .என் நாத்தனார்கள் என்னை முன்பு நிறைய பெசிக் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் இன்று அதற்காக வருந்துகிறார்கள் .இப்போதெல்லாம் வந்தால் என்னுடன் நன்றாக பேசுகிறார்கள் . எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள் .

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அம்மாவும் அப்பாவும் நிறைய வாதம் செய்வார்கள் ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்க மாட்டார்கள் .ஈகோ அவர்களிடம் கிடையாது .நானும் அப்படிதான் என் கணவரிடம் உடனே பேசி விடுவேன் .அது என் மேல் தவறு இல்லாவிட்டாலும் . பேசாமல் இருப்பதாலையே பல குடும்பங்கள் கோர்ட்டுக்கு வருகிறது .கணவரிடம் ஈகோ வேண்டாமே .

நான் கற்றுக்கொண்டது நான் கடைபிடிப்பதையே தங்களுக்கு கூறினேன் .என் அம்மாவை பற்றி சொன்னதில் எனக்கு மகிழ்ச்சி .நாம் நம் மாமியார் நம்மை மகளாக நினைக்க வில்லை என்கிறோம் .நம்மில் எத்தனை பேர் மாமியாரை தாய் போல் எண்ணுகிறோம் ?

அன்புடன்

காமினி

பெரும்பாலும் நான் சாப்பிடும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்....என்னுடைய சிறு வயதில் என்னுடைய பெரியம்மாவின் மகன் குடும்பத்தில் நல்ல பிள்ளை என்று சொல்லப்படுபவர் அவர்...ஒரு நாள் நான் சாப்பிடுகையில் சொன்னார் நீ சுத்தமாக சாப்பிடுகிறாய் ஆனால் இன்னும் சுத்தமாக சாப்பிட வேண்டுமென்று..நான் முழித்தேன் ஏனென்றால் நானே ஒழுங்கா மிச்சம் வைக்காமல் சாப்பிடுகிறேன் ஏன் இவர் இப்படி சொல்கிறார் என்று..புரியாமல் கேட்டேன்
அவர் சொன்னார் "சாப்பிடாமல் தூக்கிப் போடும் கறிவேப்பிலை,தக்காளி பச்சை மிளகாய் போன்றவற்றில் சாதமும் சேர்த்து போடக் கூடாது...அதனை குடைந்து குடைந்து சாதமில்லாமல் போட வேண்டுமெ .ஒரு பருக்கை சாதமில்லாமல் சில நாடுகளில் குழந்தைகள் உயிரிழக்கிறார்கள் ..நாம் வேஸ்ட் பண்ணலாமா "என்றார்.
அதன் பின்பு நானும் அப்படியே செய்ய தொடங்கினேன்...அதுவே என் பழக்கமாகியது.
எனக்கு திருமணமான புதிதில் என் மாமனார் சொன்னார்..என் மருமகளை பார்த்து எல்லாரும் கத்துக்குங்க எவ்வ்ளவு சுத்தமாக சாப்பிடுறாங்க பாருங்க என்றார்.ரொம்ப சந்தோஷமாக இருந்தது.என் கணவர் கூட என்னை பார்த்து தான் சுத்தமாக சிந்தாமல் சிதறாமல் சாப்பிட பழகினார்..
சின்ன குழந்தைகளின் நாம் சொல்லும் ஒரு சின்ன விஷயம் அவர்கள் மனதில் எவ்வளவு ஆழமாக பதியும் என்பதும் அது அவர்களது வாழக்கையில் எவ்வளவு முக்கியமாகும் என்பதையும் அடிக்கடி சிந்தித்துப் பார்ப்பேன்

இப்படி ஒரு இழை ஆரம்பித்ததற்கு தோழி காமினிக்கு என் நன்றி.என் வாழ்வில் மறக்க முடியாதவர் என் அம்மா,அப்பா,ஆண்ட்டி.

என் அம்மா பொறுமையே உருவானவர்.வீட்டில் முதல் குழந்தையாக பிறந்து பல கஷ்டங்கள் பட்டு வளர்ந்து வந்தவர்.எங்களை ஒரு கஷ்டமும் தராமல் வளர்த்தவர்.என்னை அம்மா பிள்ளை என்று தான் சொல்லுவார்கள்.அவ்வளவு அம்மா செல்லம்.ஆனால் எனக்கு 15 வயது இருக்கும் போது அம்மா இறந்து விட்டார்கள்.எனக்கு நிறைவேறாத ஆசை என்னவென்றால் நான் சமைத்து என் அம்மா சாப்பிடணும்,என் குழந்தைகளை,என் அம்மா பார்த்து மகிழ்ந்து கொஞ்சி விளையாட வேணும் என்று.ஆனால் அது நிறைவேறவில்லை.அடுத்த பிறவி என்று இருந்தால் நான் என் அம்மாவிற்கு மகளாக பிறக்க வேண்டும்.இந்த பிறவியில் என் அம்மாவிற்கு மறு ஜென்மம் இருந்தால் என் அம்மா எனக்கு மகளாக பிறக்க வேண்டும்.

என் அப்பா,அவரும் அம்மாவை போல பொறுமையே உருவானவர்.சிறிய வயதில் கஷ்டங்கள் பல கண்டவர்.ஆனால் தைரியசாலி.அவரிடமிருந்து எனக்கு தைரியம் வந்தது என்று சொல்லலாம்.என் அப்பா சொல்லுவார் பிரச்சனைகளில் இருக்கும்போது உடனே முடிவு எடுக்காதே.அவசரத்தில் எடுக்கும் முடிவு தப்பாகிவிடும்.ஒரு சில மணி நேரம் அல்லது ஒரு நாள் கழித்து யோசித்து பார் உன் தவறு என்னவென்று புரியும்.அதே போல் எல்லா விஷயத்தையும் மனசில் போட்டு குழப்பாமல் இக்னோர்(மறந்துவிட்டு)பண்ணிட்டு போ,மனதை வேறு திசையில் செல்லுத்து என்று சொல்லுவார்.அதே போல் அவர் என்ன விதமான கஷ்டத்தில் இருந்தாலும் நாம் போன் பேசினால் காட்டிக் கொள்ளவே மாட்டார்.மிகுந்த உற்சாகத்துடன் பேசுவார்.கேட்டால் நம் கஷ்டம் நம்முடன் போகட்டும் முடிந்தவரை அடுத்தவரை சந்தோஷப்படுத்த வேண்டும்.சங்கடப்படுத்தக்கூடாது என்பார்.நானும் அதை பின்பற்றுகிறேன்.

என் ஆண்டியை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.தோழிகளின் பதிவுகளை எதிர் நோக்கியுள்ளேன்.நன்றிகள் பல.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்