பட்டிமன்றம் - 39 - ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா?

அறுசுவை தோழர் தோழிகளே.. பட்டிமன்றம் விடாமல் தொடர்ந்து நடக்க மீண்டும் நான் நடுவராக பொறுப்பேற்கிறேன்.

நம் அறுசுவை பட்டியில் நெடுநாட்களாக மிகவும் விறுவிறுப்பான மற்றும் சீரியஸான தலைப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.எனவே இம்முறை கொஞ்சம் நகைச்சுவை கலந்த பட்டியாக நடத்தலாம் என, அறுசுவையில் முக்கிய இழையாக சென்றுக் கொண்டிருக்கும் தலைப்பும் மற்றும் நம் தோழி ஹேமி கொடுத்த தலைப்புமான உணவை பற்றி எடுத்துள்ளேன்..

நமக்கு ரொம்ப பிடித்த தலைப்பு.. அதுவும் அறுசுவை தோழிகள் பேசாவிட்டால் யாரால் பேச முடியும்?

விரிவாக....

இக்காலத்தில் உணவில் சுவையை அதிகம் எதிர்ப்பார்க்கின்றனரா? அல்லது அரோக்கியத்தை அதிகம் எதிர்ப்பார்க்கின்றனரா? மேலும் உங்களின் கருத்துப்படி உணவில் சுவை வேண்டுமா? ஏன்..அல்லது அரோக்கியம் வேண்டுமா ஏன்?

பட்டியை தூங்கவிடாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி ..வணக்கம்..ஹேமிக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.
வாங்க எல்லாரும்:)

நடுவர் இல்லாமல் தத்தளித்து கொண்டிருந்த பட்டிமன்ற படகை சரியான நேரத்தில் அமர்ந்து சீராக்கிய ரம்யா மேடத்திற்கு முதற்கன் என் வாழ்த்துக்கள்.விரைவில் அணி தீர்மானித்து வாதாட வருகிறேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வாங்க.. தொடக்கமே உவமையோட பேசிட்டிங்க.. உங்க பலமான வாதம் பற்றி சொல்ல வேண்டாம்..எடுத்து விடுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவராகப் பொறுப்பேற்றிருக்கும் அன்புதோழி ரமிக்கு வாழ்த்துக்கள், பட்டியை சிறப்பாக நடத்தி வெற்றியுடன் முடிக்க வாழ்த்துக்கள்,

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நடுவராக அமர்ந்திருக்கும் தோழிக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்.......
இன்றுநமது மக்கள் உணவில் அதிகம் எதிர்பார்ப்பது ஆரோக்யம்தான்......... தோழிகளின் வாதங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்........நேர்வாதங்களுடன்.......

ஆரோக்கியத்திற்க்கே என்ற அணியில் வாதாட வந்துள்ளேன் மனிதர்கள் ஆரோக்கிய உணவை கடைபிடித்தால் மருத்துவர்கலும்,மருத்துவமனைகளும் தேசம் கடத்தபட்டுவிடுவார்கள்.
ருசி என்பது நாவின் மூட நம்பிக்கை.பசிக்கு சாப்பிடுவதே தர்மம்.ருசிக்கு சாப்பிடுவது அதர்மம்.அந்த பசிக்கு ஆரோக்கியமான உணவே சிறந்தது.இங்கே நிறைய பேருக்கு உணவு வழக்கமுறை தெரிந்திருக்க நியாயம் இல்லை.அதனால்தான் வைரமுத்து"மனிதர்களே!நீங்கள் இறைச்சியை சாகடித்து சமைக்கிறீர்கள்.காய்கறிகளை சமைத்து சாகடிக்கிறீர்கள் "என்றார்.இதுதான் ருசிக்கு சாப்பிடுபவர்களின் நிலை.மேலும் ஒரு ஜோக் இதற்கு உதாரணம்.

டாக்டர்:உங்களுக்கு கொழுப்புசத்து குறையவேண்டுமெனில் டெய்லி இரவு ரெண்டு சப்பாத்தி மட்டும் எடுங்க.
நோயாளி:சாப்பாட்டிற்கு முன்னாடியா?பின்னாடியா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பட்டி மன்ற தலைவிக்கு வணக்கம். பட்டிமன்றத்தினை தொடர்ந்து நடத்த முன் வந்தமைக்கு வாழ்த்துகள்

உணவில் அதிகம் தேவைப்படுவது ருசி தான் என்ற தலைப்பில் நான் என் வாதங்களை முன் வைக்கிறேன்.
நடுவர் அவர்களே! மனுஷன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறது எதுக்குங்க! எண்ஜான் வயிற்றுக்கும், உடைக்கும் தாங்க.
வீடு ,நகை நட்டு எல்லாம் அதுக்கப்புறம் தான். அடிப்படை தேவைகளில் முதலிடம் வயிற்றுக்கு தான். அறுசுவைல எந்த சுவையுமே இல்லாமல் சாப்பிடமுடியுமா? ஆரோக்கியம் என்ற பேரில் உப்பு சப்பில்லா சாப்பாட்டால் எத்தனை நாளுக்கு பசியாற முடியும். நன்றாக சாப்பிட்டால் தானே உற்ச்சாகமாய் வேலை செய்யமுடியும்.

ஆரோக்கியத்திற்காக சாப்பிடுபவர்களால் செயற்கை சுவையில்லாமல் சாப்பிட முடியுமா? இந்த மாதிரி பேசி தன்னை தானே ஏமாற்றிக்கொள்பவர்கள் அதிகம் செலவழிப்பது செயற்கை சுவையூட்டிகளுக்கு தான். செயற்கை சர்க்கரை, கொழுப்பில்லா பிஸ்கட்ஸ், கொழுப்பில்லா எண்ணை, சோடியம் இல்லா உப்பு, (Artificial sweetner, closteral free biscuts, closteral control oil, sodium free salts, sugar free rice,) இது மாதிரி பொருட்களை ஏகப்பட்ட காச கொடுத்து செயற்கை சுவையை வாங்கி சாப்பிடறவர்கள் தான் நாங்க ஆரோக்கியத்திற்கு தான் சாப்பிடறதா பேசுறாங்க. நீங்களாவது இவங்க பேசறத கேட்டு ஏமாறாதீங்க நடுவர் அவர்களே!

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அன்பு நடுவர் அவர்களே, தக்க சமயத்தில் கைகொடுத்து பட்டியை தொடர்ந்து நடக்க உதவியதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். தொடக்கமே ஆரோக்கியமான, ருசிமிக்க தலைப்பான தான் உள்ளது. நான் ருசியின் பக்கமே பேச ஆசைப்படுகிறேன். கொஞ்சம் இருங்க ருசியோடு (சும்மா ஒரு பேச்சுக்கு தான்) சமைத்துவிட்டு வந்து பேசுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே, ஆண்கள் இரண்டு விஷயங்களுக்கு அடிமைகள் முதலாவது அன்பு இரண்டாவது ருசிமிக்க உணவு. அப்படியென்றால் பார்த்துக்க் கொள்ளுங்கள் ருசியின் மேன்மையை. எந்த வீட்டிலும் ஆண்பிள்ளைகளுக்கு வரன் தேடினாலும் முதலில் அவர்கள் பார்க்கும் அம்சம், "வாய்க்கு ருசியா சமைச்சி போடுற பொண்ணா இருக்கனும்" என்பதையே தான். ஆரோக்கியமான நாடுபவர்கள் பெரும்பாலும் நோயாளிகளாக இருப்பார்கள். அல்லது அவர்கள் எதாவது நோயால் பீடிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆரோக்கிய உணவை உண்ணும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இன்று ஆறிலிருந்து அறுபது வரை ருசிக்கு தான் அடிமையாக இருக்கிறார்கள். உதாரணமாக நீரிழிவு நோயாளியாக இருந்தால் வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியாமல் இனிப்பு பண்டங்களை வெளுத்து வாங்குவார்கள். கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட நோயோடு இருப்பவர்கள் மட்டும் வாயை கட்டுவார்களா என்ன? எண்ணெயிலும், நெய்யிலும் குளித்து எடுக்கப்பட்ட உணவுகளையே வயிற்றிற்கு வாரி வழங்குவார்கள் பின் விளைவை பற்றி கவலைப்படாமல். எந்த நோயும் இல்லாதவனும் சாகத்தான் செய்கிறான். அவன் மட்டும் என்ன ஐநூறு வருடங்கள் உலகை ஆரோக்கியமாக ஆண்டுகொண்டா இருக்கிறான்? அனைவரும் அதே மண்ணுக்கடியில் தான் விதைக்கப்பட போகிறோம். இருக்கும் வரை ருசியோடு உண்டு களித்திருப்போம்.

மருத்துவமனையில் நீண்ட நாள் நோயாளியாக இருந்து வீட்டிற்கு வந்தவரிடம் அருகம்புல் ஜூஸை கொடுத்து பாருங்களேன் குடிக்கிறாரா என்று பார்க்கலாம். ஆஸ்பத்தரியில் தான் உடம்புக்கு இது நல்லது அது நல்லதுன்னு மரம் செடி, கொடி எல்லாத்தையும் ஜூஸா பிழிஞ்சி கொடுத்துட்டாங்க. இங்கேயும் இப்படியா? நான் செத்தாலும் பரவாயில்லை எனக்கு ருசியான உணவாக கொடுங்கள் என்று ருசியான உணவுக்காக உண்ணாவிரதமே இருக்க தொடங்கி விடுவார்.

சித்தர்,புத்தர் நிலைக்கு போனவர்களும், உணர்வுகள் மருத்துபோனவர்கள் மட்டுமே இது போன்ற ஆரோக்கிய உணவிற்கு போகலாம். சாமான்யமானவர்கள் ருசிமிக்க உணவுக்காக அது எங்கே கிடைத்தாலும் சென்று உண்பார்கள். அந்த அளவிற்கு ருசிக்கு அடிமையாகி இருப்பார்கள். நம் மக்களை கேட்டுப் பாருங்கள் தமிழ்நாட்டில் எந்த ஹோட்டலில் எந்த உணவு வகை ருசியாக இருக்கும் என்று. ஒரு பெரிய பட்டியலையே விரல் நுனியில் வைத்திருப்பார்கள். ஆனால் ஆரோக்கிய உணவை பற்றி கேட்டு பாருங்கள். ஒன்றுமே தெரிந்திருக்காது. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு வாழை தண்டு ஜூசும், காய்கறி சாலட்டும், ஊற வைத்த பச்சை பயறு வகைகளையும் தட்டில் வைத்து தந்து பாருங்கள். உங்களை உறவு முறையில் இருந்தே தள்ளி வைத்து விட்டு மறுவேலை பார்ப்பார்.

அட இவ்வளவு ஏன்ங்க, இதோ எலக்சன் வர போகுது. அதில பாருங்க ஒரு வோட்டுக்கு ஒரு பார்சல் பிரியாணியும், ஒரு நூறு ரூபாயும் வச்சு தரப்போறாங்க. அந்த கட்சி தான் ஜெயிக்க போகுது ;) அரசியல் கூட்டத்துக்கு கூட்டம் சேர்வதும் இந்த பிரியாணிக்கு தானே. அப்ப எவ்வளவு பவர் பாருங்க இந்த ருசிக்கு. அரசியல்வாதிங்க தப்பா புரிஞ்சுண்டு இருக்காங்க. கூட்டம் என்னவோ அவங்களுக்காக கூடினதுன்னு.தேர்தல்ல ஜெயிச்சதும் அவங்கன்னும். அதான் இல்லை அங்கே ஜெயிச்சது பிரியாணி என்னும் ருசிமிக்க அஸ்திரம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எதிர்வாதம் புரிந்த அணித்தோழிக்கு நன்றிகள்..........
எங்களை யோகிகள் என்று சொன்னதர்க்கு,ஏனென்றாள் இவர்கள் வெறும் போகிகள்ப்பா.......
நடுவரே ஆரோக்ய உணவு - என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும் நமது எதிரணியினர்.
வேண்டாதவற்றை முற்றிலும் தவிர்க்கச் சொல்லவில்லை நாங்கள்.
உணவில் சுவை,புரதம்,கால்சியம்,போன்ற அனைத்தும் தேவையே...ஆனால் சுவை மட்டுமே பிரதானமல்ல.....
சுவைக்காக எதை ஊற்றினாலும் சாப்பிடுபவர்கள் குறைவு நம்மில்......
"வேண்டியவற்றை அளவோடு சாப்பிட்டால் வளமோடு வாழலாம் என்றுதான் கூறுகிறோம்........"
பின்னே, ஆரோக்ய உணவை ஆதரித்து பேசுபவர்கள் எல்லாரும் நோயாளியுமல்ல......சுவையைப் பற்றி பேசும் அனைவரும் ஆரோக்யமாகவும் இல்லை.......
உண்மைதான் கடுமையாக உழைத்து வேலை செய்வது உடைக்கும்,உணவுக்கும்தான் இதில் வஞ்சம் வைப்பதா என்று சுவையை பிரதானப்படுத்தி ஒரு நாள்போல இனிப்பை மட்டுமே உண்டுவந்தால் அடுத்த நாள் வேலைக்கு விடுப்புதான் போடவேண்டிவரும்...,அதோடு ஊசியும் போடவேண்டிவரும்....
"அளவான சாப்பாட்டை சுவைபட தூய்மையாக சாப்பிட்டால் சீரான வாழ்க்கை இருக்கும் நடுவர் அவர்களே........"

நோயின் காரணமாய் மருந்து சாப்பிடுகிறோம்.மருந்து சுவையாக இருந்தால்தான் சாப்பிடுவோம் என்றால் எப்படி?அந்த காலத்தில் இளமை பருவத்தில் பாட்டி பத்து பிள்ளைகளை பெத்துவிட்டு கிழங்கு மாதிரி அடுத்த குழந்தைக்கு தயாராகிவிடுவாள்.காரணம் அன்றைய உணவுமுறை.இன்றைய பெண்களின் நிலை என்ன?
ஆரோக்கிய உணவுமுறை முதலில் நெல்லிக்காய் போல் கசந்தாலும் அதன் பலன் நெல்லிக்காயின் இனிப்புக்கு சமம்.(கசப்புக்குபின்).
ஒரு மகான் "நீங்கள் நோயின்றி வாழ வேண்டுமா?பசியோடு அமருங்கள்.பசியோடு எழும்புங்கள்"என்றார்.இந்த கூற்று ஆரோக்கிய உணவை உட்கொள்பவர்களுக்கே சாத்தியம்.ருசிக்காக சாப்பிடுபவர்களால் அதை செயல்படுத்த முடியாது.வாழ்வதற்காக சாப்பிடலாம் என்பது ஆரோக்கிய உணவின் வழிமுறை.சாப்பிடுவதற்காக வாழலாம் என்பது ருசிக்காண உணவின் வழிமுறை.இதில் எதை எடுப்பது?எதை விடுப்பது?முடிவு நம்மிடம் உள்ளது.தீர்ப்பு உங்களிடம் உள்ளது.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்