கன்சீவ் ஆக வழிகள்

எனக்கு கல்யாணம் ஆகி 14 மாதங்கள் ஆகின்றன. எனது சொந்த ஊர் ராம்னாட். எனது கணவர் ஹைதராபாத்தில் பணி புரிகிரார். நானும் தற்பொழுது ஹைதராபாத்தில் தான் எனது கணவருடன் இருக்கிறேன். 7 மாதங்கள் முன்பு நான் கன்சீவ் ஆனேன். கன்சீவ் ஆன 3 மாதத்தில் நாங்கள் எங்களது சொந்த ஊருக்கு சென்றோம். ஊருக்கு சென்ற 10 நாட்களில் எனக்கு அபார்சன் (கரு கலைந்து விட்டது) ஆகி விட்டது. அப்பொழுது தான் நாங்கள் உணர்ந்தோம் லாங் ட்ராவல் பன்னக் கூடாது என்ட்ரு. திரும்ப 3 மாதங்கள் பிறகு ஹைதராபாத் வந்தேன். தற்பொழுது 4 மாதங்களாக இங்கு தான் இருக்கிறேன். இது வரை கன்சீவ் ஆக வில்லை. இந்த மாதம் தங்கும் என்று எதிர்பார்த்தோம். 2 நாட்கள் தங்கி 3 ஆம் நாள் ப்லீடிங் ஆகி விட்டது. நாங்கள் திரும்ப ஊருக்கு போகி டாக்டரிடம் செக் பன்னலாம் என்று இருக்கிறோம். தோழிகள் யாராவது எனக்கு சரியான வழி முறைகள் சொல்லுங்களேன். நாங்கள் சரியான நேரத்தில் தான் உறவு வைத்துளோம். கடைசி 10 நாட்களில் நான் எந்த சூடு உள்ள உணவையும் எடுத்துக்க வில்லை. கனமான வேலைகள் எதுவும் செய்ய வில்லை. இருந்தாழும் எங்களுக்கு இது வரை குழந்தை இல்லை. தோழிகள் தயவு செய்து பதில் கூறவும்.

கவலை கொள்ள வேண்டாம்.. என் தோழிக்குக் கூட இது போல் ஆனது.. அவள் இப்போது திரும்ப கருத்தரித்து உள்ளாள்.. இன்னும் கருத்தரிக்க வில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டே இருக்காமல் இயல்பாக இருங்கள்.மனதளவில் ரிலாக்ஸாக இருக்க வேண்டியது முக்கியம்.. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்..தவிர உங்கள் மருத்துவர் மருந்துகள் ஏதும் பரிந்துரைக்க வில்லையா? பொதுவாக இந்த மாதிரி ஆனால் கருப்பை வலிமை பெற ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் பரிந்துரைப்பார்கள்.. உங்கள் மருத்துவர் ஏதேனும் பரிந்துரைத்திருந்தால் அதன் படி பின் பற்றுங்கள்.விரைவில் உங்களுக்கு கரு உருவாக வாழ்த்துக்கள்.. :)

ஹாய் சாந்தினி நலமா நீங்க சொன்னது ரொம்ப ஆருதலா இருக்கு இதுவரை மத்திரை ஒன்னு எடுக்கலை (அதுக்குதான்) அடுத்த வாரம் ஊருக்கு போரம் ஃபோலிக் ஆசிட் மாத்திரை ட்ரை பண்னி பாக்ரென் சாந்தினி......

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ஹாய் ஷிரின், நலமாக இருப்பிர்கள் என்று நம்புகிறேன், உங்களுக்கு தேவையான பதில் குழந்தை வரம் வேண்டும் பகுதியில், என்னுடைய பதிவில் சொல்லியிருக்கிறேன் சென்று பாருங்கள், மேலும் கீழ்கண்ட என்னுடைய வலைப்பதிவையும் பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும், பார்த்து படித்துவிட்டு உங்களின் சந்தேகங்களை கேட்கலாம்.
i am living in chennai.

www.ekmravi.blogspot.com

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ஹாய் ரவி நலமா இந்த லிங்க் ரொம்ப நல்லா இருந்தது ரவி
thenku..

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

நான் நலமே.....மேலும் உங்களுக்கு இந்த iron folic இணை உணவுடன் மேலும் இரண்டு இணை உணவுகளை உட்கொள்ள வேண்டும். அது உங்களுடைய உடல் நலத்திற்கும் மற்றும் கர்பம் தரித்தால் அதை தாங்கும் சக்தியை உங்கள் உடலுக்கு தரவல்லது. மேலும் இந்த இணையதளத்தை பாருங்கள் iron folic - ன் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும். இது ஒரு அமெரிக்க அரசின் இணைய தளமாகும்.

http://cdc.gov/ncbddd/folicacid/about.html

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

இந்த லிங்க்கு சூப்பரா இருக்கு ரவி thenku.

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

இந்த மாதிரியான தரமான இயற்கையான அனைத்து இணை உணவுகளுக்கு நாங்கள் தான் வினியோகஸ்தர்கள். இவை அனைத்தும் 100% இயற்கையானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது, இவை மருந்துகள் அல்ல, அன்றாடம் நமது உணவில் கிடைக்காத உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களும் புரத சத்துக்களும் கொடுக்கவல்லது. உஙக்ளுக்கு வேண்டுமெனில் என்னுடைய வலைப்பதிவில் உள்ள கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்....

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ஹாய் ஷிரின்

இந்த லின்க் போய் அட்மின் க்மென்டை படித்துப் பார்க்கவும்
http://www.arusuvai.com/tamil/node/16981?page=2
நன்றி

ஹாய் Rafaa,

எனக்கு அந்த Product வாங்க idea இல்ல. விழிப்புணர்வு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.

Thanks a lot from
Shirin

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

I married last year my Semen test result is very good 98 million per Ml. And also Follicular Study is done by my Mrs but she is not consive Dr told me there is no problem in eachother. But she has irregular periods. please help me.

kalaiselvi

மேலும் சில பதிவுகள்