சாப்பிட மறுக்கும் குழந்தை.தயவு செய்து ஆலோசனை கூறுங்கள் தோழிகளே

ஹாய் தோழிகளே,

என் அண்ணா மகளுக்கு இப்பொழுது 7 மாதம் ஆகிறது.தாய்ப்பால் தவிர வேறு என்ன கொடுத்தாலும் விழுங்க மறுக்கிறாள்.எவ்வளவு நேரமானாலும் வாயில் வைத்திறுந்து துப்புகிறாள்.டாக்டர் எப்படியாவது கொடுங்கள் என்கிறார்.பாலாடையிலும் try பண்ணியாச்சு.அவளை எப்படி சாப்பிட வைப்பது?தெரிந்தவர்கள் உதவுங்களேன் please.

Thanks,
Meiporul.

பொறுமையாக இருங்க..சில குழந்தைகள் முழுங்க பழக எட்டு மாதமெல்லாம் ஆகும்..தினசரி வற்புறுத்தினால் பிறகு கஷ்டம்..சாப்படடி கண்டாலே கத்த தொடங்குவார்கள்..விட்டு பிடிங்க..
மடியில் உட்கார வைத்து நீங்க சாப்பிடுங்க....வித்யாசமாக கொடுத்து பாருங்க..ராகி கூழ்,அரிசி கஞ்சி,தானிய கஞ்சி இப்படியெதாவது கொடுங்க..முதலில் தண்ணி போல கொடுங்க மெல்ல மெல்ல கட்டியாக்குங்க.
சூடா கொடுத்து பாருங்க இல்ல கொஞ்சம் குளிர்ச்சியா கொடுங்க..சில சமயம் இனிப்பு கூட பிடிக்காமல் இருக்கலாம்..எதாவது மாற்றம் செய்து பாருங்க..வெறும் விரலால் எடுத்து வாயில் வச்சு பாருங்க..
கண்டிப்பா மெல்ல சாப்பிட பழகும் வற்புறுத்த வேண்டாம்..ஆனால் ட்ரை பன்னிகிட்டே இருங்க அழுவ டொடங்கினால் அல்லது இரண்டு வாய் துப்பினால் நிறுத்திடவும் இல்லைன்னா அதுவே பழக்கமாகிடும்

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி தளிகா.என் அண்ணி ஒவ்வொரு முறை உணவளிக்க குறைந்தது 2 மணி நேரம் முயற்சி செய்றாங்க.ஆனா no use.இப்ப பிரச்சினை என்னன்னா அவளுக்கு infection ஆகி இருக்கு.டாக்டர் food மூலமா தான் சரி செய்ய முடியும்னு சொல்லிடார்.1 montha a loose motion.ஆனா குழந்தை எதுவும் சாப்பிட மாடேன்கிறா.இப்படி இருந்தா சரி ஆக இன்னும் நாள் ஆகும்னு டாக்டர் சொல்றார்.ஆப்பிள்,கஞ்சி,கூழ் எல்லாம் ட்ரை பண்ணியாச்சு.என்ன செய்வதென்று குழப்பமாகவே உள்ளது.

தளிகா சொல்வது சில குழந்தைகள் கொஞ்சம் பெரிதானதும் சாப்பிடுவார்கள். என் குழந்தையும் சேர்த்து தான். அவள் ஒரு பத்து மாதம் ஆன பின் தான் கொஞ்சமேனும் சாப்பிடுவாள். இப்பொழுதும் அவள் அதிகம் சாப்பிட மாட்டாள். நீங்கள் குழந்தையை ஒரு இடத்தில உட்கார செய்து அவர்களையே சாப்பிட சொல்லுங்கள். அதவாது தோசையை சின்ன சின்னதாக புட்டு போட்டு பாருங்கள். நீங்கள் குழந்தை பால் குடித்து முடித்த கொஞ்சம் நேரம் சென்று ட்ரை பண்ணி பாருங்க. சில குழந்தைகளுக்கு தானாகவே சாபிடுவது ரொம்பவே பிடிக்கும். எப்பொழுதுமே குழந்தைகளுக்கு அதிகம் வற்புறுத்தினால் பிடிக்காது. கொஞ்சம் விட்டு பிடிங்க. நம் ஊரில் மருத்துவர் அப்படி தான் சொல்லுவார்கள்.....நீங்கள் தான் செய்ய வேண்டும்....அது என்னவோ நாம் செய்யாதது போல்....நீங்கள் எப்பொழுதும் போல் ட்ரை பண்ணிடே இருங்க....தானாகவே சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பசி எடுத்தால் தானாகவே சாப்பிடும்.

என்ன மாதரியான இன்பெக்ஷன்? அது பாக்டீரியல் இன்பெக்ஷன் என்றால் நீங்கள் குழந்தைக்கு (தாராளமாக) தயிர் கொடுக்கலாம். ஆப்பிள் (கொஞ்சம் வேகவைத்து) வாழைப்பழம் கொடுத்து பாருங்கள். ஜூஸ் கொடுக்காதீர்கள். சூப் எதாவது செய்து கொடுத்து பாருங்கள். கஞ்சி காய்ச்சி கொடுக்கும் போது ஒரு துளி உப்பு போட்டு கொடுக்கவும். முதலில் குழந்தைக்கு சர்க்கரையை பழக்க படுத்தாதீர்கள். எல்லாம் சரியாகி விடும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு..அழகா பதில் சொல்றீங்க..
என் மகனும் அதே பத்து மாதம் எடுத்தான்..முன்னயெல்லாம் தண்ணியாவே தான் சாப்பிடுவான்..அது லேசா கட்டியா இருந்தாலும் வாந்தி தான்..எனக்கு உள் மனசில் இவனையெல்லாம் சாப்பிட வெக்க முடியுமா இனின்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்தது..அந்தளவுக்கு அவன் சரியா சாப்பிடாமலே எது போட்டாலும் வாந்தி எடுத்துட்டிருந்தான்.ரொம்பவே கஷ்டபட்டு மெல்ல தான் மாறினான்.
நீங்கள் எதுக்கும் வேறொரு மருத்துவரிடம் குழந்தையை காட்டி பாருங்க..சாப்பிடாத குழந்தையை நீங்க தான் சாப்பிட வைக்கனும்கிறது எனக்கென்னமோ எப்படியோ இருக்கு...

நான் குவைதில் இருக்கிறேன் என் மகனுக்கு 1வயது ஆகிறது அவனும் எதுவும் சாப்பிட மாட்டேன்ங்குறான் நானும் கொஞ்ச நாள் ஆன சரியாகி விடும் என்று நினைத்தேன் இப்பொழுது மருத்துவர் அவனுக்கு hemoglobin,iron கம்மிய இருக்கு எதாவது சாப்பாடு கொடுங்க எப்படியாவது கொடுங்க அப்படின்னு சொல்லுறார் ஆன இவன் சாப்பிட மாட்டேன்குறான் நான் எல்லாம் பாலடைல் அமுக்கி பிடித்துதான் வைக்கிறேன் தண்ணீர் கூட அப்படிதான் வைக்கிறேன் யாரவது வழி சொல்லுங்கலேன்

alaudeen

ஹாய் சம்ஷு,
நலமா? குழந்தைக்கு வாழைப்பழம் கொடுத்துப்பாருங்கள்.மிக நல்லது.நான் என் குழந்தைகளுடன் விடுமுறைக்காக குவைத் வந்துள்ளேன்.இங்கே கிடைக்கும் பழக்கூழ் வாங்கி கொடுத்துப் பாருங்கள்..நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்.நான் ஹவலீயில் தற்சமயம் தங்கி உள்ளேன்.மீண்டும் சந்திப்போம்.
வித்யாவாசுதேவன்.

anbudan

vidyavasudevan எப்படி இருகிங்க நானும் ஹவாலியில் தான் இருக்கிரேன் என் நம்பர் அனிதாவிடம் இருக்கிறது முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்

பிரியா,
நலமா? நான் கடந்த 4 ஆம் தேதி இங்கு வந்தேன்.ஹவாலி பார்க் இருக்கும் ஏரியாவில் இருந்து சிறிது தூரத்தில் எங்களோட வீடு இருக்கிறது.அனிதாவிடம் உங்கள் தொலைபேசி எண் பெற்று உங்களிடம் பேசுகிறேன்.சந்திப்போம்.
வித்யாவாசுதேவன்

anbudan

கண்டிப்பாக நாங்கள் அல்பாஹார் சென்டர் பக்கத்தில் இருக்கிரோம் நான் போன் பண்ணும்போது அனிதா தூங்கிகொண்டிருந்தார் அதனால் அடுத்து நான்போன் பண்னும்போது உங்கள் நம்பர் வாங்கி பேசுகிரேன்

வாழ்க வளமுடன்

I had also 7 months baby he is also acting like this. Some times he eat solid foods and only spicy which time he avoid that time I gave a food feeding bottle in liquid form, try it. give mutton soup (mutton boiled water + pinch pepper - pepper is cool so no problem + Pinch half salt) Navadhaniyam mix solid or liquid form without sugar or half sugar. Try it. This is my experience. Take care of your Child

மேலும் சில பதிவுகள்