பன் ஸ்வீட்

தேதி: May 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

ப்ரெட் துண்டுகள் - 10
சீனி - ஒன்றரை கப் (சுமார் 350 மில்லி)
தண்ணீர் - ஒன்றரை கப்
டின் பால் - 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
பசு நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கரூர் நெய் - 50 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
ரோஜா பன்னீர் - அரை ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10


 

முதலில் ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி நீக்கிவிட்டு, (பொரித்தெடுக்க வசதியாக) இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
சீனியை கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரைவிட்டு சற்று பிசுபிசுப்பான பதம் வரை பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
வாணலியில் பசு நெய்யை விட்டு முந்திரிப்பருப்புகளை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் கரூர் நெய்யும் எண்ணெயும் சேர்த்து, ப்ரெட் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறத்தில் வறுத்து, சீனி பாகில் போட்டு மூழ்க வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இப்படியே எல்லா ப்ரெட் துண்டுகளையும் வறுத்து, பாகில் போட்டு எடுத்த பிறகு, மீதமுள்ள பாகில் டின் பால், பன்னீர், வறுத்த முந்திரி பருப்புகள், ஊறிய ப்ரெட் துண்டுகள் அனைத்தையும் சேர்த்து குழைந்து விடாத அளவு மெதுவாக பிரட்டி எடுக்கவும்.
இது கிச்சடி மற்றும் பிரியாணிக்கு ஒரு நல்ல சைட் டிஷ்.


பின் குறிப்பு:- கூடுதல் சுவைக்காக, முன்பு கொடுக்கப்பட்டிருந்த செய்முறையிலிருந்து தற்போது சற்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும் சில குறிப்புகள்


Comments

கரூர் நெய், பசு நெய் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? கரூர் நெய் என்று கேட்டால் எல்லா கடைகளிலும் கிடைக்குமா? கிடைக்காதபட்சத்தில் என்ன செய்யலாம்? இதில் சீனியே சேர்க்கப்படவில்லையே! இனிப்பு சுவை எப்படி வரும்?

"கரூர் நெய்" என்பது டால்டாவுடன் சில பொருட்கள் சேர்த்து செய்து விற்பார்கள். பார்ப்பதற்கும், use பண்ணுவதற்கும் டால்டா போன்று இருக்காது.கரூர் நெய் என்று கேட்டாலே எல்லா கடைகளிலும் நிச்சயம் கிடைக்கும்.
பசு நெய் என்பது வெண்ணெயிலிருந்து உருக்கி வரக்கூடிய நெய். நல்ல வாசனையாக இருக்கும், ஆனால் costly!
டின் பாலில் இனிப்பு சுவை இருந்தாலும் சீனி இதற்கு சேர்க்கவேண்டும். சீனி போட்ட ஞாபகத்தில் சீனியை விட்டுவிட்டேன்,sorry ragaa! ரொம்ப நிதானமாக பார்த்துதான் குறிப்பு கொடுப்பேன், ஏதோ தவறு நடந்துவிட்டது. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி!

நன்றி மேடம். கனடாவில் கரூர் நெய் கிடைக்குமா என்று தெரியவில்லை. அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்கி வரவேண்டும். சீனியை தேவையானப் பொருட்களில் சேர்த்து விட்டீர்கள். செய்முறையில் விட்டு விட்டீர்களே...... (ரொம்ப கஷ்டப்படுத்துறேனோ.....?)

உங்களுடைய பக்கத்தில் உங்களைப் பற்றிய details இல்லாததால், நீங்கள் கனடாவில் இருப்பது எனக்கு தெரியவில்லை. france - ல் வசிக்கும் நாங்கள் கரூர் நெய்யை ( முறைப்படி எப்படி செய்யவேண்டும் என்று தெரியாவிட்டாலும்) நாங்களே செய்துக் கொள்வோம். அதை இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.
butter கட்டிகள் அங்கு கடைகளில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதில் 250 கிராம் உள்ள 5 கட்டிகளுடன், 1/2 லிட்டர் sun flower oil சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள்! கிண்டிக்கொண்டே இருக்கவேண்டாம்!butter-ல் உள்ள கசடுகள் மேல்புறமாக வந்து பொன்னிறத்தில் முறுக ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து, ஆறியவுடன் வடிகட்டி ஒரு மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை கரூர் நெய்யாக use பண்ணலாம்!ok?

கரூர் நெய் செய்ய இரன்டு 200 கிராம் கட்டிகளூக்கு எவ்லோ எண்னை சேர்க்கலாம்?

sajuna

நீங்கள் ஐரோப்பாவில் இருப்பதால் உங்களூக்கு தெரியும் என்று நினைக்கிரேன்.நான் இங்கு சில ஏசியன் கடைகளில(East End product.pure butter ghee for cookingஎன்று இருக்கிரது.அதை நான் உபயோகித்து பார்ததில் டால்டா போல் தெரிகிரது.அது பார்ப்பதர்க்கு நம்மவூர் டால்டா போல் கெட்டியாக இல்லை.எண்னை போல் இருக்கிரது.சுவையில் டால்டா டேஸ்ட் தெரிகிறது.உங்களூக்கு தெரிந்தால் சொல்லுங்கலேன்

sajuna

நீங்கள் சொல்லும் அந்த butter, pure வெண்ணெய்தான். அதை காய்ச்சாமல் அப்படியே டேஸ்ட் பண்ணி பார்த்தால் டால்டா போல்தான் இருக்கும். ஆனால், டால்டா அல்ல! அவை 200 கிராம் கட்டிகளாக கிடைத்தால், 2 கட்டிகளுக்கு சுமார் 150 மில்லி எண்ணெய் வீதம் சேர்த்து (தீயவிடாமல்) காய்ச்சி, சற்று ஆறியவுடன் வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
உடனே use பண்ண தேவைப்பட்டால், அதில் சிறிது வெட்டி போட்டு, அத்துடன் சிறிது எண்ணெய் சேர்த்து தாளிக்கலாம். சில கேக் வகைகளுக்கு உருக்காமல் அப்படியே சீனியுடன் பிசைந்து செய்வோம்.

TESCO AND DUNNES போன்ற கடைகளில் கிடைப்பது தான் வெண்னை கட்டிகளாக இருக்கிரது.

ஏசியன் கடைகளில் விற்க்கும் பட்டர் பார்ப்பதர்க்கு எண்ணெய் போலவே இருக்கிரது.நீங்கள் சொல்வது போல அதை காய்ச்சி பார்க்கிரேன்.மிகவும் நன்றி.

sajuna

எண்ணெய் போல இருந்தது காய்ச்சிய பின்பு உறைந்து விட்டது.

sajuna

thank you very much for these ideas.

sajuna

காய்ச்சிய பிறகு உறைந்தது நெய் போன்று இருந்ததா? use பண்ணுவதற்கு எப்படி உள்ளது?

வேலையின் காரணமாக பதில் அளிக்க இயலவிலை.மன்னிக்கவும்.
ஏசியன் கடையில் வாங்கிய எண்ணெய் போன்ற பட்டர் காய்ச்சிய பின்பு உறைந்து விட்டது.
நெய் போன்று இல்லை.நெய் வாசனையும் இல்லை.உபயோகிப்பதற்க்கு டால்டா போல தெரிகிரது.anaal peyar mattum pure butter
endru irukkirathu.nandri

sajuna

kandippaha karur ney serkka venduma
pls reply soon

kandippaha karur ney serkka venduma
pls reply soon

kandippaha karur ney serkka venduma
pls reply soon

கரூர் நெய்தான் சேர்க்கவேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக பட்டரும் எண்ணெயும் கலந்து நீங்கள் உருக்கி வைத்திருந்தால் கூட அதை பயன்படுத்தலாம். விளக்கம் போதுமா? இல்லையென்றால் மீண்டும் கேளுங்கள். நன்றி.