கீரை போண்டா

தேதி: April 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

பாலக் - ஒரு பிடி
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சோடா மாவு - ஒரு சிட்டிகை
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். பாலக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு, சோடா மாவு சேர்த்து கலக்கவும். இதனுடன் மிளகாய் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
தண்ணீரை சிறிது, சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கொஞ்சம் கெட்டி தயிர் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். உப்பு சரிப் பார்க்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்ததும்,பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து மெதுவாக எண்ணெயில் விடவும்.
போண்டா கொஞ்சம் உப்பி வரும். இரு பக்கமும் சிவந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
எளிதில் செய்யக் கூடிய, சுவையான பாலக் கீரை போண்டா தயார்.

கீரை போண்டாவை “காசிமி கீரை” கொண்டு தான் செய்வார்கள். அதனால் காசிமி கீரையை, போண்டா கீரை என்றும் அழைப்பார்கள். பாலக் சேர்த்து செய்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும். பாலக் கீரையை தனியே வேக வைக்க தேவையில்லை. எண்ணெயில் பொரிக்கும் போதே வெந்துவிடும். குழந்தைகளுக்கு கொடுப்பதானால் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டாம். கீரைக்கும், மிளகாய்கும் வித்தியாசம் தெரியாது. இந்த போண்டாவில் கீரை சேர்த்து இருப்பதால் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவில்லை. நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஹர்ஷா அஸ்ஸலாமு அலைக்கும் நலமா இப்ப என்ன பண்ரதுன்னு யோசித்து கொன்டெ இருந்தென் சூப்பரா இருக்கு இப்பவே போய் பன்னிர்ரேன்....

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

பாலக் ந என்ன கீரை யாராது சொல்லுங்கள்

சூப்பர். எனக்கு ரொம்ப பிடிக்கும். நிச்சயம் செய்துட்டு மீண்டும் வருவேன் சுவையா இருந்ததுன்னு சொல்ல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hello mam, your recipe is superb and healthy too.. ganelaya mam palak means pasalai keerai in thamil..

என் கணவருக்கு ரொம்ப பிடித்த உணவு கண்டிப்பாக செய்து பார்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு என் நன்றிகள்.

ஷிரின் பானு,
முதலாவதாக வந்து பதிவு போட்டதற்கு ரொம்ப நன்றி.கீரை போண்டா செய்துட்டீங்களா?

இளையா,
பாலக் கீரையை பசலைக்கீரை என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் ஸ்பினாச் என்பார்கள்.

வனிதா,
எனக்கும் இந்த போண்டா ரொம்ப பிடிக்கும்.நீங்க செய்தால் நிச்சயம் சுவையாக தான் இருக்கும்.செய்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்காக காத்துட்டு இருப்பேன். ;-)

ஹேமா,
உங்க பதிவுக்கு நன்றி.இளையாவுக்கு உடனே பதில் கொடுத்ததற்கும் நன்றி.

கவிதா,
கண்டிப்பா உங்க ஆத்துக்காரருக்கு செய்து கொடுங்க.சுவையும் நல்லா இருக்கும்.உங்க பதிவுக்கு நன்றி.

வந்துட்டோம்ல... இப்ப தான் சூடா டீயோட சாப்பிட்டேன். அம்மா கை பக்குவமும் உங்க காம்பினேஷனும்... சும்மா சொல்ல கூடாது... போண்டா சூப்பர். :) இதுக்காகவே இன்னைக்கு வெளிய போய் இந்த கீரையும், இன்னொரு குறிப்பு செய்ய கிர்னி பழமும் வாங்கிட்டு வந்தேன். சுவையான குறிப்புக்கு நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
நீங்க கண்டிப்பா செய்து பார்ப்பீங்கனு எனக்கு தெரியும்.என் நிறைய குறிப்புகளை செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தவங்க நீங்க.ரொம்ப நன்றி.

thx for reply mam.நானும் செய்து பார்த்துவிட்டு சொல்றேன் எப்படி இருந்ததுன்னு by elaya.G

அன்பரசி,

நேற்றுதான் செய்து பார்த்தேன்.ரொம்ப சுவையாக இருந்தது.என் பொண்ணு விரும்பி சாப்பிட்டாள் கொத்தமல்லி,சட்னியோட செம combination .

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் ஹர்ஷா கீரைபோண்டா பார்க்கவே நல்லா இருக்கு செய்து பார்கிறேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கவிதா,
கீரை போண்டா செய்துட்டீங்களா?
சாஹித்யாவுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.இனி அடிக்கடி செய்து கொடுங்க.உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.

குமாரி,
இது ரொம்ப ஈசி தான்.செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.