தேதி: April 18, 2011
டிஸ்யூ ரோல் - ஒன்று
பேப்பர்தட்டு - ஒன்று
ரோஸ்நிற க்ரேப் பேப்பர்
ஆரஞ்சு வண்ண பேப்பர்
க்ளூ
கத்தரிக்கோல்
கறுப்புநிற மார்க்கர்
ஸ்டிக்கர்ஸ்
பொம்மை கண்கள்
க்ளே
ஃபாயில் பேப்பர்
டிஸ்யூ வண்ணத்துப்பூச்சி செய்வதற்கு மேற்கூறிய அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

முதலில் பேப்பர் தட்டில் கறுப்புநிற மார்க்கரால் வண்ணத்துப்பூச்சியின் இடது, வலது இறக்கைகளை பூ இதழ் போன்ற வடிவத்தில் வரையவும்.

வரைந்த இடது இறக்கைகளையும், வலது இறக்கைகளையும் தனியாக வெட்டி எடுக்கவும். நடுவில் உள்ள பகுதியை வண்ணத்துப்பூச்சியின் உடம்பிற்காக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.

ரோஸ்நிற க்ரேப் பேப்பரின் மீது பேப்பர் தட்டில் நறுக்கிய இடது, வலது இறக்கைகளை வைத்து அதன் வடிவத்திற்கு வரைந்து வெட்டி எடுக்கவும்.

வெட்டிய க்ரேப் பேப்பர் இறக்கைகளை பேப்பர் தட்டு இறக்கைகள் மேல் சரியாக பொருந்துமாறு க்ளூ தடவி ஒட்டவும்.

உடம்பு பகுதியில் ஆரஞ்சு வண்ண பேப்பரை ஒட்டவும். டிஸ்யூரோலில் ஆரஞ்சு வண்ண பேப்பரை சுற்றி ஒட்டவும்.

இப்போது டிஸ்யூ ரோலில் உடம்புப் பகுதியை ஒட்டவும்

அதில் இடது மற்றும் வலது ரோஸ்நிற இறக்கைகளை ஒட்டவும்

பிறகு உடம்புப்பகுதியின் மேல் உள்ள வட்டத்தில் பொம்மைகண்களை ஒட்டவும். வாய்பகுதிக்கு ஒரு சிறு சிவப்புநிற க்ளேயை எடுத்து மெல்லியதாக திரட்டி வளைவாக ஒட்டவும்.

பிறகு இரண்டுவிரல் நீள ஃபாயில்பேப்பரை திரிப்போல் மடித்து சுருட்டவும். அதில் கறுப்புகலர் தீட்டப்பட்ட ரோஸ்நிற பேப்பரை ஃபாயில் தெரியாவண்ணம் சுற்றவும்.

இரண்டு ஆண்டெனாக்களையும் தலைப்பகுதியில் க்ளே கொண்டு தூக்கினாற் போல் ஓட்டவும்.

இறக்கைகளில் விரும்பிய வண்ணம் ஸ்டிக்கர் பொட்டுக்களை ஒட்டவும். உடம்புப்பகுதியில் மார்க்கரின் உதவியால் குறுக்கு கோடுகள் வரைந்து அதன் நடுநடுவே புள்ளிகள் வைக்கவும்.

ரோஸ்நிற வண்ணத்து பூச்சி தயார்.

அழகான இந்த டிஸ்யூ வண்ணத்துப்பூச்சியை இளவரசியின் ஏழுவயது மகளான சுஷாந்தி அறுசுவை நேயர்களுக்கு செய்து காட்டியுள்ளார்.

Comments
சுஷாந்தி
சம கியூட். ரொம்ப கஷ்டப்பட்டிருக்க.... இத்தனை அழகான பட்டாம்பூச்சியை உருவாக்க. அந்த உழைப்புக்கு முதல்ல வாழ்த்துக்கள். ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா உன்னைப்போலவே இருக்குடா கண்ணா :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஷாந்தி
ஹை! அழகு வண்ணத்துப் பூச்சி. பாராட்டுக்கள் குட்டிப் பெண்ணே.
- இமா க்றிஸ்
sushanthi
super butterfly .you done a super craft . keep it up. regards.g.gomathi.
sushanthi
super butterfly .you done a super craft . keep it up. regards.g.gomathi.
சுஷாந்தி
சுஷாந்தி ரொம்ப அழகாக இருக்கு உன்னுடைய வண்ணத்துப்பூச்சி. பேப்பர் தட்டு வைச்சு அழகான க்ராஃப்ட்டா செஞ்சு அசத்துரீங்க வாழ்த்துக்கள். இன்னும் நிறைய செஞ்சு எங்களுடன் பகிர்ந்துகோங்க. பேப்பர் தட்டுல வண்ணத்துப்பூச்சி ஐடியா நல்லா இருக்கு.
நன்றி
இந்த குறிப்பை தவறாமல் வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு நன்றி :-)
இந்த குறிப்பை செய்ய ஊக்கமும்,ஐடியாவும் கொடுத்து,பின்னூட்டமும் தந்துள்ள
இமாக்காவுக்கு மிக்கநன்றி.:-)
வனி இரண்டுமுறை செஞ்சா சுமாரா வந்ததுதான் இது..அவ ஸ்கூல்ல
கைவினை கண்காட்சிக்கு செய்ததுதான் இது..உங்க பாராட்டுக்கு நன்றி
கோமதி,வினோஜா உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி..
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
உன்ன மாதிரியே உன்
உன்ன மாதிரியே உன் வண்ணத்துப்பூச்சியும் ரொம்ப அழகா இருக்கு சுஷாந்தி .
வாழ்த்துக்கள்
by elaya.G
இளையா
இளையா உங்க பின்னூட்டத்திற்கு நன்றிங்க
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
சுஷு பட்டர்ப்ளை சூப்பர்ப்
சுஷாந்தி உன்னோட பட்டர்ப்ளை அழகா இருக்குடா. ரொம்ப நல்லா செய்து காட்டி இருக்க செல்லம். உனக்கு நிறைய இதுப்போல க்ராப்ட் தெரியுமா? keep it up சுஷு
வாழ்க வளமுடன்
அழகாக செய்து காட்டியிருக்கிறாய் சுஷாந்தி. அடுத்த முறை என்ன செய்யப்போகிறாய்?
அன்புடன்
சிவக்குமார்
வாழ்க வளமுடன்
தீபா
தீபா உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
சுஷாந்தி
சுஷாந்தி ரொம்ப அழகாக இருக்கு உங்களோட வண்ணத்துப்பூச்சி...இன்னும் நிறைய செய்ய வாழ்த்துக்கள்டா..