தேதி: April 18, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாகற்காய் - மூன்று
தக்காளி - இரண்டு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - நான்கு பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
ஆச்சி குழம்பு மசாலா - நான்கு தேக்கரண்டி
தாளிக்க - வடகம், எண்ணெய், கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
பாகற்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானவற்றை தயாராக வைக்கவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

பாகற்காய் நன்கு முறுகலாக சிவந்து வரும் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதில் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, ஆச்சி மசாலா, உப்பு போட்டு பிசைந்து கலந்து வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

குழம்பு கொதித்து கெட்டியானவுடன் அதை வறுத்த பாகற்காயில் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி வடகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு சிவக்க வதக்கவும்.

பாகற்காய் குழம்பை தாளித்ததில் ஊற்றி அடுப்பை நிறுத்தவும்.

சூடான சாதத்துடன் ஊற்றி சாப்பிட பாகற்காய் குழம்பு தயார்.

Comments
ருக்சனா
சூப்பரா இருக்குங்க. நல்ல சுலபமான குறிப்பு. வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நல்ல ஆரோக்கியமான குறிப்பு
நல்ல ஆரோக்கியமான குறிப்பு தந்தமைக்கு நன்றி sister by elaya.G
வெல்லம் சேர்த்தேன்
குழந்தைகளுக்காக கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.