கருவாட்டு குழம்பு

தேதி: April 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

கருவாடு - 3, 4
கத்திரிக்காய் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கியது)
இறால் - 5
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
சிறிய தக்காளி - 3
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகு - அரை தேக்கரண்டி
பூண்டு - ஒன்று
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
புளிக்கரைசல் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் கருவாட்டை ஒரு வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் மற்றும் புளிக்கரைசலை கலந்து வைக்கவும். தேங்காய்பால் கலவையில் தூள் வகைகள், உப்பு, கருவாடு சேர்த்து கலந்துக் கொள்ளவும். அரைத்த வெங்காய விழுதினையும் தேங்காய் பாலுடன் சேர்க்கவும்.
மிக்ஸியில் பூண்டு மற்றும் மிளகை போட்டு அரைத்து பாதியை தாளிப்பிற்கும் மீதியை தேங்காய்பால் கலவையிலும் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த பூண்டு, மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு ஆய்ந்த இறாலை சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன் கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் கலந்து வைத்திருக்கும் தேங்காய் பால் கலவையை தாளிப்பில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
கொதித்ததும் அடுப்பின் தணலை மிதமாக வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
சுவையான கருவாட்டு குழம்பு ரெடி. கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஹசீன், நலமா? கருவாட்டு குழம்பு எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த குழம்பு என் தோழிகளிடம் நான் அடிக்கடி சொல்லுவேன் நான் உங்க வீட்டுக்கு வந்தா சிக்கன், மட்டன் எல்லாம் வேண்டாம் எனக்கு கருவாட்டு குழம்பு மட்டும் வெச்சி தாங்கனு. அந்த அளவுக்கு எனக்கு பிடிக்கும். அதிலும் வித்தியாசம் வித்தியாசமா செய்து சாப்பிடுரது ரொம்ப பிடிக்கும். நீங்க இறால் சேர்த்து செய்து இருக்கிங்க. நல்லா இருக்கும் னு நினைக்கிரேன். கண்டிப்பா இந்த சண்டே செய்து சாப்பிட்டு சொல்லுரேன்.

அப்புரம் ஒரு சந்தேகம் இறால் கருவாடு சேர்க்கலாமா?அல்லது நீங்க சொன்ன மாதிரி பச்ச இறால் தான் சேர்க்கனுமா?

ரொம்ப நன்றி ஹசீன். வாழ்த்துக்கள்..............

உன்னை போல பிறரையும் நேசி.

கருவாடு எனக்கும் ரொம்ப விருப்பம். இறால் இல்லாம செய்து பார்க்கிறேன். நீங்க போட்டிருக்குறது என்ன கருவாடு?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

க்ருவடை வருக்க என்னை உபயொகபட்டுதலமா? அல்லது dry roasted? ஏரால் கர்யந்தது உபயொகபட்டுத்தலமா?

I love cooking, sharing eating and enjoying.

எனக்கு கருவாடு ரொம்ப ரொம்ப பிடிக்கும், நீங்க பண்ணி இருக்கறதா பாத்த உடனே சாப்பிடணும் போல இருக்கு, வாசனை சுண்டி இழுக்குது.... இறால் இல்லாம செய்யலாமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி....

ஹசீன்

தேவி நான் நலம்.நீங்க நலமா?
ஆஹா........அந்த அளவுக்கு பிடிக்குமா உங்களுக்கு...
இதில் இறால் கருவாடு சேர்க்கக் கூடாது..அதன் டேஸ்டெ மாறிவிடும்..
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தேவி.........

ஹசீன்

ஹாய் வனி நலமா....
நான் சேர்த்திருப்பது காரப்பொடி...துண்டுக் கருவாடுப் போட்டால் நல்லா இருக்கும்..இங்கு கிடைக்கவில்லை....
நன்றி...

ஹசீன்

ஹாய் ஸ்வர்ணா,
உங்கள் வாழ்த்துக்கு நன்றிமா...

ஹசீன்

கருவாடை எண்ணெய் இல்லாமல் வாசம் வரும் வரை வருக்க வேண்டும்..
காய்ந்த இறால் சேர்த்தால் டேஸ்ட் மாறிவிடும்.
நன்றி.....

ஹசீன்

உங்களுக்கும் ரொம்ப பிடிக்குமா....
நல்ல டேஸ்டா இருக்கும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
இறால் சேர்த்தால் இன்னும் நல்ல சுவைக் கிடைக்கும்...
நன்றி...

ஹசீன்