பச்சை வெங்காய சட்னி

தேதி: April 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

உரித்த சின்ன வெங்காயம் - 1 கப்
வரமிளகாய் - 8 அல்லது 10
புளி - கோலி அளவு
கல் உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உ.பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணை - 1 குழிக்கரண்டி


 

மிளகாய், உப்பு, புளி மூன்றையும் முதலில் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். 1 ஸ்பூன் தண்ணீர் விட்டு 2 நிமிடம் ஊர வைத்து மீண்டும் மிக்ஸியை ஓட்டவும். கடைசியாக வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும்.

கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணை விட்டு கடுகு, உ.பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து எண்ணையுடன் சட்னியில் சேர்த்து கலக்கவும்

சுவையான கார சட்னி தயார். கோதுமை தோசை, ரவா தோசை,மைதா தோசைக்கு செம காம்பினேஷன்.


இதே முறையில் அம்மியில் அரைத்தால் ஆஹா அதன் சுவையே தனி தான்

மேலும் சில குறிப்புகள்